சமீப பதிவுகள்

முஸ்லிம் பெண்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் விலையாக கொடுத்து அமெரிக்காவின் பட்டத்து இளவரசர் முஹம்மதை அமெரிக்க மதசார்பற்ற வெகுஜனங்களிடம் சந்தைபடுத்துவது

செய்தி:

32 வயதில், ஏற்கனவே இந்த தலைமுறையின் மிகவும் சக்தி வாய்ந்த அரபுலக தலைவராக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் விளங்குகிறார். தமது தேசத்தின் மீது சந்தேகப் பார்வையை கொண்டிருக்கும் அமெரிக்க வெகுஜனங்களுக்கு அவருடைய இராஜ்ஜியத்தை அறிமுகப்படுத்துவதற்காக இந்த வாரம் அவர் அந்நாடு முழுக்க பயணம் மேற்கொள்கிறார்.(ஆதாரம் cbsnews)

Norah O’Donnell ( பத்திரிக்கையாளர்) : நீங்கள் “சவூதி அரேபியாவை மீண்டும் அது முன்பிருந்த நிலைக்கு அதாவது மிதவாத இஸ்லாத்திற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளீர்கள்.” அது எதை குறிக்கின்றது?

முஹம்மது பின் சல்மான்: “இருபாலினரும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் கலப்பதை தடுக்கும் மற்றும் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் ஒன்றாக இருப்பதற்கும் அவர்கள்பணியிடத்தில் ஒன்றாக இருப்பதற்கும் வேறுபடுத்த தெரியாத அடிப்படைவாதிகளை நாங்கள் கொண்டுள்ளோம். இதுபோன்ற பல கருத்துக்கள் இறைத்தூதர் மற்றும் கலீஃபாக்கள் காலத்தில் இருந்த வாழ்க்கை முறைக்கு முரணாக உள்ளது. இது தான் உண்மையான உதாரணமும் உண்மையான முன்மாதிரியுமாகும்”.

இது நாள் வரை தங்களது உடலை மறைத்துக் கொள்ள தவறிய பெண்களை கைது செய்து வந்த நாட்டின் “மத காவல் துறை” என அறியப்படுவதின் அதிகாரங்களை அவர் கட்டுப்படுத்தியுள்ளார். இது இஸ்லாமிய சட்டத்தின் அங்கமில்லை என அவர் கூறுவதை கவனமாக கவனியுங்கள்.

முஹம்மது பின் சல்மான்: “இது குறித்த சட்டங்களானது மிகத் தெளிவானவை அவை ஷரீ’ஆவின் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது பெண்கள் ஆண்களை போன்று கண்ணியமான, மதிப்பளிக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். எனினும் இது குறிப்பாக கருப்பு நிறத்திலான அபாயாவையோ அல்லது கருப்பு திற தலை முந்தானைகளையோ குறிப்பிடவில்லை. எந்தவிதமான கண்ணியமளிக்கக்கூடிய மற்றும் மதிப்பளிக்கக்கூடிய வகையிலான ஆடையை அணிவதற்கான தேர்வு செய்யும் முடிவை எடுப்பதற்கு பெண்களிடமே விடப்படுகிறது”.
அவருடைய வார்த்தைகள் மிகவும் குறிப்பிடத்தக்கது, மேலும் இது நாள் வரை, இந்த ராஜ்ஜியத்தின் மதத் தலைவர்கள் இந்த விஷயத்தில் தங்களது நாவுகளை அடக்கிக் கொண்டுள்ளனர் மேலும் அவர்களுடைய விசுவாசத்தை இளம் இளவரசருக்கு வழங்கியுள்ளனர்.

கருத்து:

இதுபோன்ற கெடுகெட்ட செயல்களை இந்த உம்மத் ஒருமுறை அல்ல பல முறை கண்டுள்ளது; நேர்மையற்ற சவூதியின் ஆளும் குடும்பத்திலிருந்து அரியணைக்கு வாரிசாக இருக்கும் ஒரு சவூதி அரேபியர் அமெரிக்காவுக்கு பயணத்தை மேற்கொண்டு
“மிதவாத இஸ்லாம்’ எனும் பெயரில் பரிவர்த்தனைகள் செய்தும் மதசார்பற்ற, தாராளவாத மதிப்புகளை கடைபிடித்தும் இஸ்லாத்தின் தீவிர, பழமைவாத மற்றும் சர்வாதிகார தோற்றத்தை உடையதாக கருதப்பட்டு வரும் பிரச்சனையை சரிசெய்வதாக உறுதியளித்து அவர்களை சமாதானப்படுத்துவதற்கும், மகிழ்விப்பதற்கும் பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள் சந்திப்பில் பல்லை இளிப்பதும் புதிதல்ல.

சவூதி சமூகத்தை அனைத்து நிலைகளலும் மதசார்பற்ற நிலையை ஏற்படுத்தும் முயற்சியானது பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டமாகும், அவர் சவூதி அரேபியாவின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை குழப்பம் மற்றும் சீர்கேட்டை நோக்கி இட்டுச் செல்ல தயாராக இருக்கிறார். ஆரம்பமாக முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களுடைய கௌரவம் மற்றும் கண்ணியத்தை மீறும் விதமாக அமெரிக்காவின் மதசார்பற்ற தாராளவாத விழுமியங்களுக்கு ஏற்றவாறு பெண்களுடைய “கிமார்” மற்றும் “ஜில்பாபை” அகற்றுவதில் தொடங்கியுள்ளார். 60 நிமிடங்கள் எனும் நிக்ச்சியில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, “இருபாலினரும் ஒருவரோடு ஒருவர் பரஸ்பரம் கலப்பதை தடுக்கும் மற்றும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியே ஒன்றாக இருப்பதற்கும், அவர்கள் பணியிடத்தில் ஒன்றாக இருப்பதற்கும் வேறுபடுத்த தெரியாத அடிப்படைவாதிகளை நாங்கள் கொண்டுள்ளோம். அதுபோன்ற பல கருத்துக்கள் இறைத்தூதர் மற்றும் கலீஃபாக்கள் காலத்தில் இருந்த வாழ்க்கை முறைக்கு முரணாக உள்ளது. இது தான் உண்மையான உதாரணமும் உண்மையான முன்மாதிரியுமாகும். மேலும் அவர் “இது குறித்த சட்டங்களானது மிகத் தெளிவானவை அவை ஷரீ’ஆவின் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது பெண்கள் ஆண்களை போன்று கண்ணியமான, மதிப்பளிக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.எனினும் இது குறிப்பாக கருப்பு நிறத்திலான அபாயாவையோ அல்லது கருப்பு திற தலையுறையையோ குறிப்பிடவில்லை. எவ்விதமான கண்ணியமளிக்கக்கூடிய மற்றும் மதிப்பளிக்கக்கூடிய ஆடையை அணிவதற்கான தேர்வு செய்யும் முடிவை எடுப்பதற்கு பெண்களிடமே விடப்படுகிறது” எனக் கூறினார்.

இருபாலினத்தவர்களுக்கிடையேயான பரஸ்பர தொடர்புகள் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை மீதான இந்த தாக்குதலானது மூத்த அறிஞர்கள் சபையின் உறுப்பினரான அப்துல்லாஹ் அல்-முத்லக் எனும் ஒரு சவூதி ஷேக் 2018, பிப்ரவரி 9ம் நாள் நிதா அல்-இஸ்லாம் எனும் வானொலி நிலையத்தில் வெள்ளிதோரும் ஒலிபரப்படும் அவருடைய வானொலி நிகழ்ச்சியில் அவர் அளித்த கருத்துக்கு சல்மானின் இந்த அரிவிப்பு ஒத்திருக்கிறது. அபாயா அணிவதன் சட்டம் குறித்து பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “முஸ்லிம் உலகிலுள்ள 90 சதவீதத்தினருக்கும் மேலான இறையச்சமுள்ள முஸ்லிம் பெண்கள் அபாயாவை அணிவதில்லை,” “ஆகவே நாம் மக்களை அபாயாவை அணிவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது” என அந்த ஷேக் பதிலளித்தார்.

இந்த சீர்கேடான செயல்திட்டமானது புனித குர்’ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதை “அடிப்படைவாதம்” என்று முஹம்மது பின் சல்மானாலும் அவருக்கு ஆதரவாக இருக்கின்ற சீர்கெட்டு போயுள்ள அப்துல்லாஹ் அல்-முத்லக் போன்ற அறிஞர்களும் கருதுவதென்பது குர்’ஆனுக்கு எதிராக செல்வதாக இருக்கின்றது. ஆகவே, முஹம்மது பின் சல்மான் இஸ்லாத்தின் சீர்திருத்தம் என்று கூறி மிதவாதத்தை தினிப்பதென்பது இஸ்லாத்தை கைவிட செய்வதைத் தவிர வேறெதுவும் இல்லை அது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டதும் அவர்களுக்கு பின் வந்த கலீஃபாக்கள் உறுதியுடன் பின்பற்றிய கருத்துக்களுக்கு முற்றிலும் எதிராகவும் மற்றும் முரணாகவும் இருக்கின்றது.

சூரா அல்-அஹ்(z)ஸாப் (சதிகார அணியினர்) எனும் அத்தியாயத்தில் இருக்கும் கீழ்வரும் வசனம் ரசூலுல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடப்பட்டதாவது:

﴿يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا﴾

“நபியே! நீங்கள் உங்களுடைய மனைவிகளுக்கும், உங்களுடைய பெண் மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ளும்படி நீங்கள் கூறுங்கள். அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 33:59)

“வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது ஜில்பாப். இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் «لتلبسها صاحبتها من جلبابها» ” உங்களது தோழிகளிடமிருந்து ஓர் ஜில்பாப்பை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர்.” அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி). நூல்: புகாரி.

உம்மு சலமா [ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மனைவி] அறிவித்ததாவது: “அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில்) இறக்கிக் கொள்ள வேண்டும்” என்கிற வசனம் இறக்கியறுளப்பட்ட பின்னர் அன்சாரி பெண்மணிகள் (மதீனாவின் வசித்து வந்தவர்கள்) தங்களுடைய தலைகளின் மீது காகம் அமர்ந்திருப்பதை போன்ற நிலையில் வெளியே நடமாடினர். (சுனன் அபூ தாவூத்)

ஆயிஷா [ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மற்றொரு மனைவி] அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்து கொண்டிருந்தபோது ரிஃபா அல்-குர(z)ஜியின் மனைவி ரசூலுல்லாஹ்வை நோக்கி வந்தார்… மேலும் அவர் தனது ஜில்பாபின் விளிம்பை வெளிக்காட்டினார். (புஹாரி)

ஆகவே, பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவூதியின் முஸ்லிம் பெண்களை விடுவிப்பவர் அல்லர் மாறாக அவர் அமெரிக்காவுக்கு கிழ்ப்படிந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் சமூகத்தின் இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் கடமைகளுக்கு எதிராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் அதிருப்தியடைந்து அமைதியற்ற நிலையில் இருக்கும் இளைஞர்களை உலகம் இப்போது சந்தித்து வரும் துனீசியா, எகிப்து மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அரபு புரட்சியை போன்று தங்களுடைய சீர்கெட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடாமல் தடுக்கும் எண்ணத்தில் செயல்படும் அமெரிக்காவின் அறிவற்ற கைப்பாவையே அன்றி வேறில்லை.

Comments are closed.