சமீப பதிவுகள்

அணு குண்டுக்கான சவுதி அரேபியாவின் தேடல் மற்றும் முயற்சி மேற்கத்திய மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது

செய்தி:

கடந்த வாரம், இளவரசர் முகம்மது பின் சல்மான் (MBS) பேட்டியில் கூறும்பொழுது, ஈரான் அணுகுண்டை வைத்திருந்தால் சவூதி அரேபியா ஒரு அணு குண்டைப் பெறும் என்று கூறினார்.

MBS இன் அறிக்கை 2015 ஆம் ஆண்டில் நீண்டகாலத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்தின் விஷயத்திற்கு (CBS News) எந்த பெரும் தாக்கங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் மேற்கத்திய மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இஸ்லாமிய உலகின் முயற்சிகளை அது பலவீனப்படுத்துகிறது.

கருத்து:-

கிரௌன் பிரின்ஸ் முஹம்மத் பின் சல்மானின் கருத்துக்களும், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைக்கான திருத்தங்களை மேற்கொண்ட அமெரிக்க வெளிவிவகார செயலாளர் தில்லர்ஸனின் நீக்கமும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது. மேலும் வெள்ளை மாளிகையில் இருந்து வந்த செய்தி படி டிரம்ப் உடன்பாட்டிற்கு சில மாற்றங்களை தேடும் சமயத்தில் முஹம்மத் பின் சல்மானின் கருத்து வெளியாகியுள்ளது. டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் மத்திய கிழக்கில் உண்மையில் சமாதானத்தை விரும்பினால், அவர்கள் கென்னத் வால்ட்ஸ் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கலில் இருந்து பிரிந்த முதல் அமெரிக்க அறிஞர்களில் ஒருவரான கென்னத் வால்ட்ஸ்
மத்திய கிழக்கிற்காக அணு ஆயுதங்களை பெருகுவதற்காக வாதாடியவர் நவீன-யதார்த்தவாதத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். {Foreign Affairs, 91(4), pp.2-5.}.

இஸ்ரேலுக்கு அனு ஆயுதங்கள் பயன்படுத்த அனுமதியளித்த விஷயம், அதை சுற்றி இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் மீது அதை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த வழிவகுக்குகிறது. மேலும் மத்திய கிழக்கை ஒரு நிலையற்ற தன்மையில் வைத்திருக்க இஸ்ரேல் எண்ணுகிறது என்று வால்ட்ஸ் கூறுகிறார். ஆகையால் ஈரான் அனு ஆயுதங்களை வைத்திருப்பது இஸ்ரேலை தாக்குதல் நடத்துவதிலிருந்து அதை தடுக்கும். குறிப்பாக லெபனான் மற்றும் சிரியாவில் ஏனென்றால் அங்குதான் அதிகமான அளவில் இரான் ஆயுதங்களை வைத்துள்ளது என்பதாக எண்ணுகிறார்.

வால்ட்ஸின் இந்த வாதம், எதை மையப்படுத்தி இருகிறது என்றால் மத்திய கிழக்கு பகுதிகளில் அனு ஆயுதங்களின் பெருக்கமானது மற்ற எதிரி நாடுகளை போர் செய்வதிலிருந்து தடுக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் மேலாதிக்கம் மற்றும் உறுதியற்ற தன்மைக்கு பதிலாக அமைதி நிலைபெறும் என்ற விஷயத்தின் அடிப்படையில் வால்ட்ஸ் தன்னுடைய கருத்தை அமைத்துள்ளார்.

வால்ட்ஸின் மதிப்பீட்டில் உள்ள உட்குறிப்பு என்பது, அணு ஆயுதங்கள் பற்றி மேல் கூறிய இந்த கருத்து மாநிலங்கள் சித்தாந்த ரீதியாக பல வேறுபாடுகளை கொண்டிருக்கும் பிராந்தியங்களில் ஸ்திரத்தன்மையை ஒருங்கிணைக்கிறது;

வல்ட்ஸ் தான் கூறிய இந்த கருத்தின் மூலம்தான் பனிப்போரில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டதாக கருதுகிறார். மேலும் இந்த கருத்தின் அபிப்படையில் தான் இஸ்ரேல் ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிடையே ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று கூறிகிறார்.

அணுசக்தி குண்டுவீச்சிற்கான MBS இன் தேடல் மற்றும் முயற்சி வால்ட்ஸ் ஆய்வறையை எதிர்க்கிறது, மேலும் ஈரானின் தரைப்படைகளின் மேலதிக மேன்மையைக் தடுத்து அதை முந்த நினைக்கும் விருப்பத்தால் சவுதி ஈரானுக்கு எதிராக இதன்மூலம் செயல்படுகிறது.

ஏமனில் நடக்கும் போருக்கு சவூதி பாகிஸ்தானிய துருப்புகளிடம் சமீபத்தில் கேட்ட உதவி,
அதேபோல் ராஜ்யத்தின் உள் பாதுகாப்பை அழிக்கும் செயல் இதை உண்மையாகுகிறது.{kaaleej Times}

ஈரானும் சவூதி அரேபியாவும் நிச்சயமாக வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன, ஆனால் அவை சித்தாந்த ரீதியான வேறுபாடு இல்லை. வஹாபிஸமும் ஷியாயிஸமும் இஸ்லாமிய சட்டத்தின் அடிபடையில் இரண்டு பிரிவுகளாக உள்ளன தவிர அகிதாவில் பிரிவு இல்லை.மேலும், ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் யூத அரசுடன் சித்தாந்த வேறுபாடுகளை விட அதிகமாக வேறுபாடுகள் உள்ளது.

இரு நாட்டு மக்களும் யூத அரசை ஒரு அன்னிய அரசாங்கம் என்று கருதுகின்றனர், இது 12 ஆம் நூற்றாண்டில் சிலுவை போரிலிருந்து வெடித்துச் சிதறும் திட்டத்தின் தொடர்ச்சி ஆகும்.

யூத அணுசக்தி மேலாதிக்கத்தை எதிர்ப்பதர்காக அணுவாயுதங்களை முஹம்மத் பின் சல்மான் (MBS) பெருக்க முயற்சித்தார் என்றால் இது மிகவும் சிறந்ததாக இருக்கும். மத்திய கிழக்கின் அனைத்து மக்களாலும் இந்த செயல் மிகவும் நன்று என்று பாராட்டப்பட்டிருக்கும், ஈரானில் இருந்து ஆட்சேபனைகள் வந்திருந்தாலும் கூட மக்களால் இது அங்கிகரிக்கப்பட்டிறுக்கும்.

இந்த வாதத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால், மக்கள் ஆதரவின் அடிப்படையிலும், முஸ்லீம் உலகத்தை சிலுவை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஈரானிய அணுசக்தி அபிலாஷைகளுக்கு பதிலளிப்பதற்காக, அணுசக்தி குண்டு தயாரிப்பதில் MBS இன் கவனம், பாலஸ்தீனில் உள்ள யூத ஆட்சியின் ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குகிறது. மேலும் ஈரானை எதிர்த்து சவூதி அரேபியா யூத அரசாங்கத்துடன் இணைந்திருப்பதைக் இது காட்டுகிறது, மேலும் இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தை பலவீனப்படுத்துகிறது.

சவூதி அரேபியாவோ அல்லது ஈரானோ அணு ஆயுதங்களின் மீது சரியான தலைமைத்துவத்தை வைக்கவில்லை, மேலும் மேற்குலகின் ஆதரவு யூத அரசாங்கத்திற்கு இருக்கும் விஷயத்தில் அதை எதிர்த்து அதிக அழுத்தத்தை இந்த இரண்டு நாடுகளும் கொடுக்கவில்லை என்பது தெளிவாகுகிறது.

கிலாஃபத்தால் மட்டுமே மேற்குடன் அணுஆயுத விஷயத்தில் ஒரு சமநிலையை கொண்டுவந்து, மத்திய கிழக்கில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிலும் மேற்கு மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

Comments are closed.