சமீப பதிவுகள்

செய்தி பார்வை 17.03.2018

ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்கடி

பாகிஸ்தானிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கும் அமெரிக்கா

ஜி தனது சீனாவின் தலைமையை பலப்படுத்திகொண்டே இருக்கிறார்.

1.ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்கடி

ரூட்டர்ஸ் (செய்தி நிருவணம்) அறிவிப்பின் படி: ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றது. பாலிஸ்டிக் ஏவுகணை காரணமாகவும் சிரியா போரில் அதிக பங்கு கொண்டதன் காரணமாகவும் ஈரானுக்கு ஐரோப்பிய ஐக்கிய நாடுகளில் பொருளாதார தடை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி நாடுகள் உத்தேசத்து உள்ளன. இது அமெரிக்கா ஈரானுடன் 2015 ல் கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்காக என ஒரு ரகசிய ஆவணம் குறிப்பிட்டுள்ளது.

ரூட்டர்ஸ்சால் பார்க்கப்பட்ட இந்த கூட்டறிக்கை ஆவணம் ஐரோப்பிய ஐக்கியத்தின் தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டது. இதில் கூறப்பட்டிருப்பதாவது- இவ்விஷயத்தில் பரிட்சையமிக்க இரு நபர்கள் பெருளாதார தடை விதிப்பதற்காக அனைத்து ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை திரட்டப்போவதாக கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை தடுக்கும் விதமாக உலக சக்திகளால் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாயமாகவே இத்திட்டம் உள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற ஜனவரி 12 ம் தேதி அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை ஒன்றை அளித்தார். அதாவது “அணு ஒப்பந்தத்தில் உள்ள முக்கியமான குறைகளை நிவர்த்தி செய்தாக வேண்டும்” இல்லையெனில் ஒபாமா நீக்கிய ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் பொருளாதார தடையை மீண்டும் கொண்டுவருவதாக எச்சரிக்கை விடுத்தார். வரும் மே 12 அண்று அதிபர் டிரம்ப் புதிதாக தள்ளுபடிகள் (waivers) கொண்டு வரவில்லையெனில் இப்பொருளாதார தடை மீண்டும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனவே வரவிருக்கும் நாட்களில் யாரெல்லாம் பொது மக்களின் முக்கிய அந்தஸ்தை பெற்றுள்ளார்களோ அவ்வாறான நபர்களிடமும் குழுக்களிடமும் இதனை நாம் பரப்புவோம்” என அந்த ஆவணத்தில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை பற்றியும் சிரியாவின் போரில் சிரிய அரசுக்கு ஆதரவான அதன் பங்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளின் ஆதரவை பெற விரைகின்ற முஸ்லீம் ஆட்சியாளர்களுக்கு இந்த நிகழ்வுகள் ஒரு நல்ல பாடமாகும். ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய பங்கேற்பு தேவை என்பதால் இதற்கு முன்னர் அமெரிக்கா ஈரானுடனான உறவில் இயல்பான தன்மையைக் கொண்டுவருவதற்கான (NORMALISATION) முயற்சிகளை மேற்கொண்டது. தற்போது ஈரானின் பங்கு அங்கே முடிவுக்கு வருகிறது என்பதனால், அமெரிக்கா தன்னுடைய கவனத்தை சவுதியின் பக்கம் திருப்பிக்கொண்டு, ஈரானை அதன் வளர்ந்து வரும் பிராந்திய பங்கை குறைக்க முற்பட்டு வருகின்றது.. முஸ்லீம்களின் நலன்களுக்கு எதிராக மேற்கத்திய ஆட்சிகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளுவதில் எந்த பயனும் இல்லை. அவர்கள் தங்கள் நலன்களைத் தவிர வேறெதற்கும் விசுவாசம் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் தலைவர்கள் இவர்களுடன் உறவு வைத்து கொள்வது இம்மையிலும் மறுமையிலும் பேரழிவை உண்டாக்க கூடியதாக இருக்கின்றது.

ஐரோப்பாவின் தற்போதைய சகிப்புத்தன்மை- ஐரோப்பாவின் பலவீனமாக இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும். குறிப்பாக எரிசக்தி மூல ஆதாரங்களுக்கு தன் பிராந்தியத்திற்கு வெளியே சார்ந்திருப்பது இதன் காரணமாகும். ஈரானின் எண்ணை வளம் மிக விசாலமானது என்பதற்காக மட்டுமே ஐரோப்பிய சக்திகள் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் சேர்வதற்கு விரைந்தன. உண்மையான பொருளாதார வலிமை என்பது பொருளாதார வெளியீட்டை பொருத்து அல்ல, மாறாக பொருளாதார உள்ளீடுகளில் உள்ளது குரிப்பாக இயற்கை வளங்களை அணுகுவதற்கும் கட்டுபடுததுவதிலுமே உள்ளது. ஏராளமான இயற்கை வளங்களையும் எரிசக்தி பொருட்களையும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் (சுபு) அருளியிருக்கின்றான்.

2.பாகிஸ்தானிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் ஆப்கான் மீதான படையெடுப்பில் பாகிஸ்தான் விரிவான ஒத்துழைப்பை கொடுத்திருந்தும்,பாகிஸ்தான் இன்னும் அதிகம் செய்ய வலியுறுத்தப்படுகின்றது. ரூட்டர்ஸ் (செய்தி நிருவணம்) அறிவிப்பின் படி,
ஆப்கானிய தலிபான் மற்றும் ஹக்கானி குழுக்களை ஒடுக்க பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு தீர்க்கமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக அமெரிக்கா காணவில்லை என மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் கடந்த வெள்ளிகிழமை கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நிர்வாகம் பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவி தொகை கொடுப்பதை நிறுத்தியது. ஆப்கான் போரில் வாஷிங்டன் கேட்டது போல தீர்க்கமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க தவறி விட்டதாக ஒரு அதிகாரி பத்திரிக்கையாளர்களுக்கு கூறினார்.
ஆப்கானிய தலிபான் மற்றும் அதன் தொடர்புடைய ஹக்கானி நெட்வொர்க்குக்கு எதிராக செயல்பட பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருவதக அமெரிக்கா கருதுகிரது எனவே இது அமெரிக்க நிர்வாகத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுக்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு பாக்கிஸ்தானை ஒரு பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தி வருகின்றதென அமெரிக்கா நம்புகின்றது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது.

கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா ஆப்கானின் மீது போர் தொடுத்து வருகின்றது. இது அமெரிக்காவின் மிக நீளமான போராகும். சென்ற ஆகஸ்ட் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் தாலிபனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்த ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அதிக உதவி செய்ய வேண்டும் என வற்புறுத்தல் அதிகரித்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் கூறுகையில் ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிய இராணுவ நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட சில சாதகமான அறிகுறிகளைக் இஸ்லாமாபாத்தில் கண்டதாக’ தெரிவித்தார். இதனை பாக்கிஸ்தானின் மூத்த பாகிஸ்தானிய நிர்வாகி ஒருவரும் ஒப்பு கொண்டார்..
‘பாகிஸ்தானியர்கள் நம் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நான் சொல்வது என்னவென்றால், அவர்கள் எங்கள் வேண்டுகோளுக்கு குறைந்த அளவிளெயெ செயலற்றியுள்ளனர்’ என பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தற்கொலைக்கு சமம் என்பது பாகிஸ்தானிய தலைமைக்கு நன்கு தெரியும். பாகிஸ்தான் அமெரிக்காவுடன் தொடர்பை மேற்கொண்டும் அதேவேளையில் தன் நலனையும் பாதுகாத்து கொள்ளலாம் என்றும் கணக்கு போடுவது தவறாகும். ஆப்கானில் தனது பலவீனமான பிடியையாவது தக்கவைத்துக் கேள்ள அமெரிக்கா போராடி வருகிறது. அதிருப்தி மற்றும் அராஜகத்தின் விளைவாகாவே அமெரிக்கா பாகிஸ்தானை மிரட்டி வருகின்றது. இனிமேல் வெறும் குறைந்த பட்ச நடவடிக்கைளை பாகிஸ்தான் எடுப்பது மூலம் மட்டும் அமெரிக்கா திருப்தி கொள்ளாது.

ஒன்று அமெரிக்காவுடன் அடிபணிந்து கிடப்பதா அல்லது பாகிஸ்தானின் சொந்த மக்களின் நலனுக்காக நிற்பதா என்பதை பாகிஸ்தானின் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும். தங்களுடைய சொந்த விவகாரங்களை தாங்களே பார்த்து கொள்ளும் பொறுப்பை முஸ்லிம் உம்மத்தே ஏற்று இது போன்று தீனுக்கு துரோகம் செய்யும் தலைவர்களை வெளியேற்றுவது அவசியமாக இருக்கின்றது.

3.ஜி தனது சீனாவின் தலைமையை பலப்படுத்திகொண்டே இருக்கிறார்

நியூ யார்க் டைம்ஸ் ன் படி :

ஜி ஜின்பிங் இரண்டாவது முறையாக சீனாவின் அதிபராக கடந்த வியாழகிழமை பதவியேற்றார். அவரை தொடர்ந்து துணை அதிபராக வாங் கிஷான் Wang Qishan பதவியேற்றார். இவரைபொருத்தவரை எந்த உயர் பதவியும் (தலைப்பும்) பெற்றிடாத இவர் அதிபர் ஜி யின் சக்திமிக்க துணை அதிபராக உருவாகியுள்ளார். இவர் டிரம்ப் நிர்வாகத்தின் வியாபார பிரச்னையை கடுமையாக கையாண்டு வருகிறார்.

அதே கட்டுரையில் கூறியிருப்பதாவது:
“அதிபர் ஜி யின் நெருங்கிய மிக முக்கியமான நபர்களில் ஒருவரானவர் இந்த வாங் கிஷான். இப்பதவி அவரை ஒரு அதிகார தகுதியில் தக்கவைக்க அனுமதிக்கிறது.” என சின்குவா பல்கலைகழகத்தின் முன்னால் ஆசிரியரும் தற்போதைய ஆய்வாளருமான “வு கியாங் “கூறினார்.

“அமெரிக்காவில் கூட வழக்கமாக துணை அதிபர் வெறும் சம்பிர் தாயத்திற்காகவே இருப்பார். அது ஒரு அவசர தேவைக்கு தான் (backup). ஆனால் வாங் கிஷான் துணை அதிபர் பாத்திரத்திற்கு உயிரேட்டம் கொடுத்துக் கோன்டிருக்கிறார். எப்படி அரசியல் அமைப்பு திருத்தம் அதிபரின் தரத்தை உயர்த்துகின்றதோ அது போலவே துணை அதிபரின் தரமும் உயரும்.” என “வு” கூறினார்.

மேற்கத்திய ஊடகங்கள் கூறுவது போல இது ஜி ஜின்பிங்கின் அதிபர் பதவி வெறும் தனிநபர் அதிகார மைய்யப்படுத்துதல் (coup) அல்ல. மாறாக சீனாவின் ஆட்சி அதிகாரிகள் ஒருமித்தமாக ஜி ஜின்பிங்கை பலப்படுத்த எடுக்கப்பட்ட முடிவாகும். தற்போதைய காலங்களில் சீனா உள்நாட்டிலும் அமெரிக்காவிடமிருந்து வரும் சவால்கள் உள்ளிட்ட வெளியிலிருந்தும் சந்திக்க கூடிய பல பிரச்சனைகளே அதிபரை பலப்படுத்தகூடிய முடிவை எடுத்ததற்கு காரணாமாகும்.

இன்னும் சொல்ல போனால், கொள்கைகள் ஒத்துழைப்பின் வளர்ச்சிக்காகவும் விரைவான செயல்பாட்டை உறுதிசெய்தலுக்காகவும் மட்டும் வலிமையான தனி ஆட்சியாளர் தேவையில்லை,மாறாக வெளிப்படையான (Transparency) ஆட்சி முறைக்கும் தான் வலிமையான தனி ஆட்சியாளர் தேவை. அப்பொழுதுதான் அவரின் செயல்பாடுகள் எல்லாரும் தெரியும் அளவிற்கு இருக்க முடியும். இஸ்லாமிய ஆளும் முறையில், கலீஃபாவை (கலிப்) ஒட்டு மொத்த அரசின் அதிகாரங்களையும் ஒப்படைப்பதன் மூலம், வெளிப்படையான ஆட்சி முறையை காண முடியும். இதன் மூலம் அரசின் இயலாமை ஏற்படும் பட்சத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கலிபாவே பதிளளிக்க கடமைப்பட்டவராவார். கம்யூனிஸ சித்தாந்தத்தின் “கூட்டு தலைமை” சிந்தனையும் மேற்கின் “அதிகாரத்தை பிரித்தல்” என்பதற்கும் இது முற்றிலும் மாற்றமானதாகும். மேலும் தனிநபர் ஆட்சி செய்யும் சர்வாதிகாரத்திற்கும் இது மாற்றமானதாகும். இது ஏனெனில் வலுவான சட்ட கட்டமைப்பால் கட்டுபடுத்தப்படும் தனி நபர் ஒருபோதும் சர்வாதிகாரியாக முடியாது.

இன்ஷா அல்லாஹ், இஸ்லாமிய ஆட்சி முறை விரைவில் நேர்வழி பெற்ற கிலாபா நபி(ஸல்) அவர்களுடைய வழி முறைப்படி கொண்டு வரப்படும். இதன் மூலம் இஸ்லாமை நடை முறை படுத்தி முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களையும் உண்மையாக கவனித்து ஒட்டு மொத்த உலகத்திற்கு இஸ்லாம் என்ற ஒளியை கோண்டு சேர்க்கும்.

Comments are closed.