சமீப பதிவுகள்

TILLERSON: நீங்கள் தீர்த்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை, உங்களின் தீய முதலாளித்துவ சித்தாந்தம் உங்களின் தேசத்தையும் ஒட்டுமொத்த உலகையும் அழித்துக் கொண்டிருக்கின்றது

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் 7 மார்ச் 2018 முதல் எதியோபியாவில் ஆரம்பித்து மொத்தம் 5 ஆப்ரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் தீவிரவாதத்தை ஒழிக்க வியூகங்களை வகுக்கவும் பாதுகாப்பு, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த அமைந்திருந்தது.

நாங்கள் கீழே சில விஷயங்களை கூற விரும்புகிறோம்.

முதலாளித்துவ பேராசையால் மற்ற நாடுகளில் படையெடுத்து மக்களை கொன்று அதன்மூலம் ஏற்பட்ட பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் பொழுது டில்லர்சனோ அவருக்கு முன்பு இருந்தவர்களோ ஆப்ரிக்காவிற்கு பயணங்கள் மேற்கொள்கின்றனர். இச்சூழ்நிலை டிரம்ப்-யின் நிர்வாகத்தை அமெரிக்கா சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை ஒத்துக்கொள்ள வைத்துள்ளது. சில முக்கியமான நடவடிக்கைகளின் மூலம் தனது பொருளாதார நலன்களை தனது போட்டியாளர்களுக்கு முன் முன்னிலை படுத்தும் அவசியத்தில் அமெரிக்கா இருக்கிறது. 2017 டிசம்பரில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு வியூக அறிக்கை இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பயணம் தொழில் மற்றும் முதலீடுகள் பற்றிய கலந்துரையாடளுக்கே என்று கூறுகின்றனர். ஆப்ரிக்க நாடுகளை மேம்படுத்துகிறோம் என்ற போர்வையில் அதன் வளங்களை கொள்ளையடித்து அதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். பலமான நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆப்ரிக்காவிற்கு கடனும் உதவியும் தருகிறோம் என்று கூறி ஆப்ரிக்காவை என்றென்றும் தங்களின் பொருளாதார காலனித்துவ நாடாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஆப்ரிக்க நாடுகள் கடும் கடன் சுமையில் மூழ்கிகொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

தற்போதைய நிலவரத்துக்கு, கென்யா தன்னுடைய பாதி அளவிலான GDP-யை கிட்டத்தட்ட 5.4 ட்ரில்லியன் கென்யா நாணயத்தை சேவை கடனாக கட்டுகிறது. ஆச்சிரியப்படும் வகையில், இந்த தேசத்தின் தலைமை இன்னும் இந்த முதலாளித்துவ காலனியாதிக்கவாதிகளின் கைப்பாவையாகவும் பாதுகாப்பாளராகவும் இருந்து வருகிறது. மேலும் ஆப்ரிக்காவை உலகளவில் மிகவும் ஏழ்மையான கண்டமாகவும் காட்டிவருகின்றனர்.

பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களை பொறுத்தவரை, ஹிஸ்புத் தஹ்ரிர் கென்யாவில் இருக்கும் நாங்கள் கூறுவது என்னவென்றால் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தீவிரவாதத்தை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது ஏனென்றால் அவர்களே உலகளவில் பெரும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கத்திய இராணுவங்கள் சிரியாவின் அலெப்போவிலும் கூட்டாவிலும் வான்வழி மூலமாகவும் தரைவழி மூலமாகவும் மக்களை கொன்று வருகின்றனர். மேலும் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் அமெரிக்கா ஆப்ரிக்காவின் பல நாடுகளின் இராணுவங்களை பயன்படுத்தி, அவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஆப்ரிக்காவில் ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டனின் இராணுவ தளவாடங்களை அகற்றி தங்களின் தளவாடங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆப்ரிக்காவில் அடிக்கும் கொள்ளைகளில் தான் பெரும் பங்கு எடுத்துகொள்வதற்காக. இதன் அடிப்படையில் மாற்றம் செய்கிறோம் என்று கூறி நிறைய கொலைகள் அமெரிக்காவின் ஆதரவில் நடந்து வருகிறது.

கடைசியாக நாங்கள் கூறுகிறோம், இந்த முயற்சிகள் யாவும் அமெரிக்கா தன்னுடைய முதலாளித்துவ சித்தாந்தத்தின் அவமானங்களை மறைக்கவே செய்கின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆப்ரிக்காவின் நலனை விரும்புகிறோம் என்று கூறுவது உண்மையல்ல மாறாக அனைவரும் ஆப்ரிக்காவை அதிகம் கொள்ளையடிக்கவே விரும்புகின்றனர். நாங்கள் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்,இஸ்லாத்திற்கு மட்டுமே ஆப்ரிக்காவின் துன்பங்களை கிலாபத்தின் மூலம் போக்க வல்லமை இருக்கிறது. கிலாபத்தின் வெளியுறவு கொள்கை காலனித்துவத்தின் மீதோ முதலாளித்துவத்தின் மீதோ கட்டமைக்கப்பட்டதன்று மாறாக மனிதகுலம் முழுவதையும் நீதியின் வழி வாழ வைக்கும் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.