சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 21.03.2018

அமெரிக்க கடன் 21 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது

சவுதி அரேபியா தன் நாட்டில் அணுசக்தி திட்டத்தை தொடங்க உள்ளது

கடாஃபியிடம் பணம் வாங்கியதற்க்கு சார்க்கோசி கைது செய்யப்பட்டர்

1)அமெரிக்க கடன் 21 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது

தன் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க தேசியக் கடன் இந்த மார்ச் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 21 டிரில்லியன் டாலர்களை கடந்ததுள்ளது என்று அமெரிக்க கருவூல துறை கூறியது. டிரம்ப் பதவியேற்ற ஜனவரி 20, 2017 அன்று இதே தேசியக் கடன் $19.9 டிரில்லியன் டாலராக இருந்தது. அந்நாளிலிருந்து GOP (grand old party) தலைமையிலான காங்கிரஸ் சபை 1.5 டிரில்லியன் டாலர் வரி குறைப்பு மசோதாவை வழங்கியதோடு இரண்டு வருட செலவின மசோதா போட்டது, இந்த இரு நடவடிக்கைகலால் கடன் மேலும் உயரும் என்று எதிர்பார்கப்படுகிறது. மத்தியரசு பட்ஜெட்டுக்கு பொறுப்புள்ள குழு வருடாந்திர பற்றாக்குறை வருடத்திற்கு $ 2.1 டிரில்லியனாக உயர்ந்து தேசிய கடனை மேலும் உயர்த்தும் என மதிப்பீடுகிறது. இந்த நிலை அடுத்த பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்று அன்த குழு கனித்துள்ளது. ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ், தேசிய கடன் 10.6 டிரில்லியனிலிருந்து 19.9 டிரில்லியனாக உயர்ந்தபோது, குடியரசுக் கட்சியினர் கண்டனம் செய்தனர், ஆனால், டிரம்பின் கட்சியினர் Capitol Hill மற்றும் White House யை தன் கட்டுபாட்டிற்குள் வைத்துள்ளதால் தற்போதைய நிலையை குறித்து சிலர் மட்டுமே குரல் கொடுத்துள்ளனர். கடந்த மாதம் Sen. Rand Paul மற்றும் RKentucky ஆகியோர் செலவின மசோதாவை செனட் சபையில் விவாதித்தபோது ஒபாமா நிர்வாகத்தில் எதை குரைக்கு கூரிக்கோண்டிருந்தீர்களோ அதையே நிங்களும் செய்துக் கோண்டிருக்கிரிர்கள் என்று குடியரசு கட்சியை கண்டனம் செய்தனர்.

2)சவுதி அரேபியா தன் நாட்டில் அணுசக்தி திட்டத்தை தொடங்க உள்ளது

“சந்தேகமின்றி, ஈரான் ஒரு அணு குண்டை உருவாக்கினால் நாமும் உடனுக்குடனே அதை பின்பற்றுவோம்” என சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் தனது 60 நிமிட பேட்டியில் சிறப்பித்துக் கூறினார். சவூதி அரேபியாவின் அமைச்சரவை, நாட்டின் அணுசக்தி கொள்கையை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்கு பின் இந்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது, இதிலிருந்து சொந்தமாக அணுசக்தி நடவடிக்கைகளை வளர்ப்பதற்கான ரியாத்தின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. தன் பாலைவன ராஜ்யத்தில் அணுசக்தி இலட்சியங்களை நிறைவேற்றுவதில் தனக்கு உதவ அமெரிக்க நிறுவனங்களை நாட்டில் அனுமதிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனுக்கும் ரியாத்துக்கும் இடையில் நடந்து கோண்டிருக்கும்போதும், அமெரிக்காவுக்கு இளவரசரின் பயணம் மேற்கொள்ளும் தருணத்தில் இந்த அறிவிப்பு இளவரசரிடமிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதிக மின் உற்பத்தி தேவை மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு பிரதான அம்சங்கள் சவூதி அரேபியாவை அணுசக்தி திட்டத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. ரியாத் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கொண்டிருந்தும், அந்நாட்டில் மின் பற்றாக்குறை பிரச்சினை உள்ளது. கடந்த காலத்தில், பருவகால நேரங்களின் போது மின் உற்பத்திக்கு சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் எண்ணெயை செலவழித்தது . நாட்டை மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு மரபு சாரா மற்றும் அணுசக்தி வளர்ச்சியை இலக்காகக் சவுதி அரசு கொண்டுள்ளது. இதனால், மற்ற நாடுகள் போல் மின்சாரம் உற்பத்திக்கும், நீரின் உப்பு நீக்குவதற்கும் கச்சா எண்ணெயை செலவிடாமல் அணுசக்தி மூலம் இவை பெற்றுக்கொள்ள நினைத்துள்ளது. 2032 ஆண்டளவில், 16 அணு உலைகள் மூலம் 17.6 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரியாத் முற்பட்டுள்ளது.

3)கடாஃபியிடம் பணம் வாங்கிய புகாரில் சார்க்கோசி கைது செய்யப்பட்டர்

AFP செய்தி நிறுவனத்தின் படி, முன்னாள் பிரான்ச் ஜனாதிபதியான நிக்கோலாஸ் சார்க்கோசி செவ்வாய்க்கிழமை அன்று காவலில் வைக்கப்பட்டார். மறைந்த லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் அரசாங்கத்திடம் மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமான முறைகளில் நிதிகளை பெற்றார் என்ற வழக்கில் அவர் விசாரணை செய்யப்பட்டர்.
சார்க்கோசி பாரிசுக்கு மேற்கிலுள்ள நன்டெர் போலிஸ் நிலையத்தில் ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கில் சந்தேகத்திற்குரிய முன்னாள் பிரான்ச் தலைவர் முதலில் விசாரணையின் அழைப்பை மறுத்தார், கடந்த நவம்பரின் ஆய்வில் ஜனாதிபதி தேர்தலுக்கு பங்களிப்புகளாக பண-பொருத்தப்பட்ட மூன்று பெட்டிகளை லிபியத் தலைவரிடமிருந்து இவருக்கு வழங்கியதாக தொழிலதிபர் ஒருவர் ஒப்புக் கொண்டப்பின், இவர் மீதான சந்தேகம் அதிகரித்தது.

பிரான்ஸ் -லெபனானின் தொழிலதிபரான Ziad Takieddine லிபியாவிலிருந்து சார்க்கோசிக்கும் அவரது முன்னாள் தலைமை ஊழியர் கிளாட் காய்ன்டுக்கும் 5 மில்லியன் யூரோக்களை ($ 6.2 மில்லியன்) பணமாக கொடுத்ததாக கூறியப்பின், இவரது ஜனாதிபதியின் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக தடை போடப்பட்டது. மேலும், சார்க்கோசி உள்துறை அமைச்சராக இருந்த 2006 இன் பிற்பகுதியில் மற்றும் 2007 இன் முற்பகுதியில்,உள்துறை அமைச்சகத்தில் மூன்று பண கையொப்பங்கள் நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு பயணத்திலும் Takieddine 200 மற்றும் 500 யூரோ பணத்தாள்களில் சுமார் 1.5 மில்லியனிலிருந்து 2 மில்லியன் யூரோக்கள் வரை பெட்டியில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது

சார்க்கோசி பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி எற்றவுடன், லிபியத் தலைவரை பிரான்ஸுக்கு அரசாங்க முறைப் பயணம் வருமாரு அழைத்து சிவப்பு கம்பளத்தை விரித்தார். பிறகு, சார்க்கோசி நாட்டோ தலைமையிலான வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதில் கடாஃபியின் படைகளுக்கு எதிராக பிரான்ஸை முன்னிலையில் வைத்தார், இது கிளர்ச்சி போராளிகளை 2011 ல் கடாஃபி அரசாங்கத்தை வீழ்த்த உதவியது. சார்க்கோசி சட்டரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டது இது முதல் முறை அல்ல. மீண்டும் அதிபராக போட்டியிட்டு தோல்வியடைந்த 2012ன் தேர்தல் பிரச்சாரத்தில் சட்டவிரோதமாக செலவினங்கள் அதிகளவில் செய்ததாக பிப்ரவரி 2016 ல், பிரான்ஸ் நீதிபதிகளால் குற்றம்சாட்டப்பட்டு அவரை விசாரணைக்கு வர உத்தரவிட்டார்.

Comments are closed.