சமீப பதிவுகள்

அமெரிக்கா துப்பாக்கி கலாச்சாரம் – மனித உயிரை விட பணம் மதிப்பாக கருதப்படுகிறது

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தை மாற்றியமைக்கக்கோரி வரும் அழைப்புகள் செவிட்டு அரசாங்கத்திடம் வைக்கப்படுகிறது, காரணம் மனித உயிரை விட பனம் மதிப்பாக கருதப்படுகிறது.
(நியூ யார்க் டைம்ஸ், மார்ச் 24)

செய்தி:

சனிக்கிழமையன்று வாஷிங்டன் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் குவிந்தனர்.

மார்ட்டின் லூதர் கிங் ;- இதுவரை நடந்தது போதும் இனிமேல் இதை அனுமதிக்க கூடாது என்று கூறினார்.
ஜே ஆரின் பேத்தியான யோலாணடா ரெனி கிங் , துப்பாக்கி வன்முறைக்கு எதிராக, “நம் உயிருக்கான போராட்டம்” என்ற பெயரில் குரல் குடுத்த இளைஞர்களில் இவரும் ஒருவர்.

கருத்து:

உலகெங்கிலும் வசிக்கும் மக்களை விட அமெரிக்கர்கள் அதிகமான துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள்.உலக சுகாதார அமைப்பின் படி
துப்பாக்கி கொலை விகிதங்கள், மற்ற உயர் வருவாய் நாடுகளைவிட 25.2 மடங்கு அமெரிக்காவில் அதிகமாக உள்ளது (CNN).

உலகில் மிக வளர்ந்த நாடுகளில், மிக காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடுகள் மற்றும் இதுப்போன்ற குற்றங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது மிக அதிர்ச்சியாக உள்ளது. நிச்சயமாக, அமெரிக்கர்களின் வாதங்கள் இது குறித்து என்னவென்றால், துப்பாக்கி வைத்திருப்பது அவர்களுடைய தற்காப்புக்காக வழங்கப்பட்ட சட்ட உரிமை. இது அவர்களுடைய அரசியலமைப்பின் இரண்டாம் திருத்தத்தில் நிறைவேற்றப்பட்டு வழங்கப்பட்டட உரிமை என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது இது தங்கள் சொந்த நிலப்பரப்பில் சுய தீங்கு மற்றும் பரந்த பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பலர் பொதுவிதிக்கு வர அஞ்சுகிறார்கள். மேலும் பள்ளிகளில் நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் இப்போது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது.பள்ளிகள் அவசர பாதுகாப்பு பயிற்சிகளை தருகிறார்கள், அதே சமயம் வெளிப்படையான மற்றும் புத்திசாலித்தனமான தடுப்பு நடவடிக்கையை அப்பட்டமாக புறக்கணிகிறார்கள்.

அமெரிக்காவின் கேபிடல் ஹில்லில் துப்பாக்கி வன்முறையை புறக்கணித்து ஆயிரக்கணக்கில் மாணவர்கள் போராடுகிறார்கள்.
குழந்தைகளை முக்கிய பேச்சாளர்களாக கொண்ட ஆயிரக்கணக்கானவர்கள் வீதியில் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்கள் பாதுகாப்பு மற்றும் தங்கள் உரிமைக்காக துப்பாக்கி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பணம் குடுத்து அவர்களுடைய அழுகைகள் மற்றும் போராட்டங்களை துப்பாக்கிக்காக விலை குடுத்து அதை மூழ்கடித்துவிட முயற்சிக்கிறார்கள் துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனங்கள். முதலாளித்துவ சுறாக்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், அவர்களது காங்கிரசார் பிரதிநிதிகளின் உதவியுடன் தங்கள் சம்பளத்தை ஊக்குவிப்பதை ஆதரிப்பதர்காக துப்பாக்கிச் சீர்திருத்த சட்டங்களை தடுப்பதில் இருந்து தங்கள் வாய்க்கால்களை விலக்கி கொள்கிறார்கள்.

சில அமெரிக்க மாநிலங்களில் முறையான சட்டபூர்வமான பின்னணி பாதுகாப்பு விதிமுறை இல்லாமல், வழக்கமான குடிமக்கள் தானாகவே தானியங்கு மற்றும் அரை தானியங்கி ஆயுதங்களை உள்நாட்டு மண்ணில் சுமந்து செல்ல அனுமதிக்கும் ஒரே முக்கிய நாடு அமெரிக்கா என்று சொல்வதை நிதர்சனமான உண்மையாகும். 2017 பெப்ரவரியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நடவடிக்கையில் கையெழுத்திட்டார், அது சில கடுமையான மனநிறைவுள்ள மக்களுடைய கைகளில் துப்பாக்கிகள் வைத்திருப்பதை தடுக்கும் சம்பந்தமாக ஒபாமா போட்ட சட்டத்தை மாற்றியமைத்தார்.

உறுதியற்ற அல்லது கோபமடைந்த நபர்களுக்கு தங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு ஆயுதத்தை வாங்குவதற்கும், அவர்களது சக குடிமக்களுக்கு மீது அதை பயன்படுத்துவதற்கும் அனுமதி கொடுத்தால் அது நாட்டு மக்களுடைய இரத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பல்வேறு அரசு துறைகள் அமெரிக்க சந்தைகளிலிருந்து இத்தகைய ஆயுதங்களை தடை செய்யவில்லை, இதன் விளைவால் பொது இடங்களில் பிரச்சனைகள் அதிகரித்தன. எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான சூழலில் இருக்கவேண்டிய பள்ளிகள் உட்பட பிரச்சனையில் உள்ளன. மீடியாக்களில் வெளிவந்த செய்திகளின் படி, ஒரு “தனித்த ஓநாய்” அவரது வகுப்பு தோழர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக துப்பாக்கியை கொண்டு சுடுவது அவர்களுக்கு மகிழ்ச்சியை தூண்டுகிறது, ஆனால், தடுப்பு நடவடிக்கைகளில் உண்மையான நடவடிக்கைகள் எதுவும் அந்த அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.

இப்போது வயது வந்தவர்கள் மட்டுமே இந்த பிரச்சனையை உணரந்தனர், அதேபோன்று 11 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் கூட பாதுகாப்புப் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், மற்றும் போர்க்கால ஆயுதங்களை சந்தைகளில் இருந்து தடை செய்வதற்காக சீர்திருத்தம் செய்ய போராடுகின்றனர்.அவர்களுடைய சிந்தாந்தம், அதன் குடிமக்களை துப்பாக்கிகளிலிருந்து அல்ல மாறாக துப்பாக்கிகளிலிருந்து இலாபம் ஈட்டும் நபர்களிடமிருந்து பாதுகாக்க முடியாமல் போயுள்ளது. இதிலிருந்து அவர்களுடைய சிந்தாந்தத்தின் தோள்வியை நாம் காணலாம். மக்கள் துப்பாக்கி நிறுவனங்களுக்காக இல்லாமல் தங்கள் சார்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை அழைக்கின்றனர். பரிதாபகரமான அரசாங்கம், முன்னாள் செனட்டர் மாணவர்களை துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு போராட்டம் தெரிவிப்பதற்கு பதிலாக CPR கற்க வேண்டும் என்று கூறுகிறது.

மனித உயிரை விட பணம் பெருசாக இருக்கிறது. என்ன ஒரு சோகமான சமூகத்தில் வாழ்கிறோம். யார் லாபம் அடைவார்கள்?. யார் நஷ்டம் அடைவார்கள்?

Comments are closed.