சமீப பதிவுகள்

செய்தி பார்வை 23.03.2018

இஸ்லாம் என்பது மிக விவேகமான, எளிமையான மார்க்கம். ஆனால் சிலரால் அது கடுமைப்படுத்தப் படுகிறது – சவூதி இளவரசர்

துருக்கி 5 மில்லியன் வலுவான இஸ்லாமிய(முஸ்லிம்) ராணுவத்தைக் கொண்டு யூதர்களை எச்சரிக்கை செய்கிறது

உயர் செயல்திறன் கண்காணிப்பு அமைப்பை பாக்கிஸ்தான் ஏவுகணைத் திட்டத்திற்கு சீனா வழங்கியுள்ளது.

1.இஸ்லாம் என்பது மிக விவேகமான, எளிமையான மார்க்கம். ஆனால் சிலரால் அது கடுமைப்படுத்தப் படுகிறது – சவூதி இளவரசர்

வாஷிங்டன் போஸ்ட்க்கு அளித்த நேர்காணலில் சவூதி இளவரசர் முகமத் பின் சல்மான் இஸ்லாம் ஒரு மிதமான மார்க்கம் ஆனால் அது சிலரால் இஸ்லாம் கடுமைப்படுத்தப் படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இஸ்லாம் என்பது மிக விவேகமான, எளிமையான மார்க்கம் என்று தான் நம்புவதாகவும். ஆனால் சிலரால் அது கடுமைப்படுத்தப் படுகிறது என்றும் கூறினார்.

மத குருமார்களுடன் நீண்ட நெடிய விவாதத்திற்கு பிறகு ஏற்பட்ட சாதகமான அணுகுமுறைகளையும், ஏன் மதம் சார்ந்த விசயங்களில் நாளுக்குநாள் மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வருகிறோம் என்றும் கூறினார். இளவரசர் ஒவ்வொரு வீட்டிலும் சமுதாயத்திலும் தான் மேற்கொண்ட சீர்திருத்தங்களைப் பற்றி கலந்துரையடினார்.

பெண்கள் வாகன ஓட்டுரிமை போன்ற பல உரிமைகள் வழங்கப்பட்டது உட்பட பல விஷயங்களை சுட்டிக்காட்டினார், பெண்கள் விஷயத்தில் அத்தகைய கட்டுப்பாடுகள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு பாதகமாக இல்லை என்றும் அது இஸ்லாமிய நம்பிக்கையில் ஒரு பகுதியாக இல்லை என்று பழமைவாதிகளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் நம்புவதற்கு கடினமாக உழைத்திருப்பதை கூறினார்.

மேலும் அவர் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் என்ன செய்யும் என்பதை உலகிற்கு அரண்மனை (அரசு) அறிவிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த காலத்தில் பள்ளிகள் மற்றும் கல்விகளில் (கல்விக்கொள்கையில்) இஸ்லாமிய மதத் தீவிரவாதத்தின் ஊடுருவலைப் பற்றி அவர் பேசினார், மேலும் கல்வி அமைப்பிலிருந்து இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்த ரீதியிலான கருத்துக்களை கல்விக்கொள்கையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார். தீவிரவாத கருத்தாக்கங்களைத் தக்கவைக்க முயல்கிறார். ஆதாரம் : அல் அரேபியா

இளவரசர் கூறுவது ஒரு விதத்தில் சரி. இஸ்லாத்திற்கு எதிரான ஷைத்தான்கள் சகோதரர்களான போலி தலைவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் லட்சியமாக இஸ்லாத்தை அதன் உண்மை நிலையிலிருந்து துடைத்தேறிய விரும்புகின்றனர்.

அல்லாஹ் (சுபு) கூறுகின்றான்,

﴿أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا﴾

(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? – (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் – அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான் (அல்குர்ஆன் : 4:60)

2.துருக்கி 5 மில்லியன் வலுவான இஸ்லாமிய ராணுவத்தைக் கொண்டு யூதர்களை எச்சரிக்கை செய்கிறது

துருக்கி உலகிலேயே சக்தி வாய்ந்த மிகப்பெரிய 5 மில்லியன் ராணுவ வீரர்களை கொண்ட 57 முஸ்லீம் நாடுகளின் கூட்டு ராணுவப் படையை (இஸ்லாமிய ராணுவம்) உருவாக்கி அதன் மூலம் யூதர்களின் நாட்டை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இங்கு 5 மில்லியன் ராணுவ வீரர்கள் என்பது தோரயமாக யூதர்களின் மொத்த மக்கள் தொகையாகும்.

டெல் அவிவ் நகரத்திலிருந்து அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீர்மானம் மூலம் ஜெருசலேம் நகரை அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா யூதர்களின் தலைநகராக அங்கீகரித்துள்ளது. இது முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தையும் வெறுப்பையும் விதைத்தது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பற்றி அதிகார பூர்வமற்ற தகவல் ஏணி சபாக் எனும் துருக்கி ஆங்கில செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. முஸ்லீம் உலகின் ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மூலம் தலைநகரான இஸ்தான்பூலில் 99 சதவிகித முஸ்லீம் நாடுகள் கலந்துக்கொள்ளும் உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்னர், துருக்கியின் அதிகாரபூர்வமற்ற பத்திரிகை யெனிய சபாக்கின் ஒரு அறிக்கையில் இந்த நடவடிக்கை விவாதிக்கப்பட்டது. இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச அரசாங்க அமைப்பு (ஐக்கிய நாடுகள் சபையின் பின்னால்), நான்கு கண்டங்களைச் சேர்ப்பதன் மூலம் அதனுடன் அங்கம் வகிப்பதுடன், இராணுவ மற்றும் பொருளாதார தடைகள் இரண்டையும் கையெழுத்திட அதிகாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சக்தியானது உலக மேலாதிக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

OIC இன் உறுப்பு நாடுகள் அதன் இராணுவத்தை ஒன்றினைத்தால் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான இராணுவத்தை உருவாக்குவோம்” என்று துருக்கிய நாளேடான டிசம்பர் 11 ம் நாள் “இஸ்ரேலுக்கு எதிராக கூட்டு முஸ்லீம் இராணுவம் தயாரானால் இஸ்ரேலின் நிலை என்ன?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. “உள்துறையின் பட்ஜெட் சுமார் 175 பில்லியன் டாலர்களை எட்டும் போது, ​​தீவிர செயல்பாட்டில் இருக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5,206,100 ஆக இருக்கும்.”

உண்மையில் துருக்கியும் OICயயும் இணைந்த வலிமையை இஸ்ரேலுடன் ஒப்பீடு செய்தால் இஸ்லாமிய ராணுவம் வலிமையானதாக இருக்கும். “ஒப்பீட்டளவில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மக்களின் எண்ணிக்கை 8.547 மில்லியனாகவும், இஸ்தான்புல்லின் மக்கள்தொகை மட்டும் 14 மில்லியனாகவும் உள்ளது,” என yen sabam தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் “160,000 தீவிர இராணுவ வீரர்கள் உள்ளனர், அவர்களது பாதுகாப்பு வரவுசெலவு $15.6 பில்லியன் எனவும் yeni sabak குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து, துருக்கிய செய்தித்தாள், OIC இன் $175 பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தையும், 5.2 மில்லியன் துருப்புக்களையும் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு இஸ்ரேலைச் சுற்றியுள்ள பகுதியில் தந்திரமான முறையில் செயல்படுகின்றன என்பதைக் காட்டும் ஒரு ஒப்பீட்டு வரைப்படத்தையும் காட்டியுள்ளது.

OIC உச்சிமாநாட்டிலிருந்து வெளிவரும் முடிவுகளில் ஒன்று, ஒரு சில நாடுகளில் புனித நகரத்தை பாதுகாக்கும் ‘jerusalam duty group (ஜெருசலேம் மீட்பு குழு’) ஒன்றை நிறுவுவதாகும்; இது சம்பந்தமாக இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது “என்று மாநாட்டில் அறிவித்த தினத்திற்கு முன்னர் வெளியிட்ட கட்டுரை.” சாத்தியமான ஒரு முஸ்லீம் இராணுவத்தை நிறுவுவது இஸ்ரேல் இராணுவத்தை சுற்றிவளைத்து சூழப்பட்டிருப்பதை உறுதி செய்யும்.”
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தந்திரம் ஒரு கனவு அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்ட இஸ்லாமிய நிலத்தை மீண்டும் கையகப்படுத்துதல் ஆகும்.

“2,50,000 சிப்பாய்கள் ஒரு இஸ்ரேல்க்கு எதிரான நடவடிக்கையின் முதல் கட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மேலும், மிக முக்கியமான பகுதிகள் அமைந்துள்ள உறுப்பு நாடுகளின் விமான மற்றும் கடற்படை தளங்கள் இதற்காகக பயன்படுத்தப்பட வேண்டும்,” என யானி ஷபாக் தெரிவித்துள்ளது. “ஒரு குறுகிய காலத்தில் கூட்டுப் தளங்கள் அமைக்கப்பட்டு இதன் மூலம் இஸ்ரேலுக்கு அருகிலுள்ள தரைத் தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு சாதகமான வழிகளை உருவாக்கலாம்.
தொலைதூர பகுதிகளிலிருந்து பயணிக்கும் விமானங்களை தக்கவைக்க கூடிய விமான தளங்களும் உள்ளன. மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலில் இருந்து வரும் பல கப்பல்களை இஸ்ரேல் பகுதியில் சந்திக்கக்கூடும்.இஸ்ரேல்க்கு எதிராக படைகளை திரட்ட 500 டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள், 100 விமானங்கள் மற்றும் 500 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 50 கப்பல்கள் ஆகியவை போதுமானதாகும்.. “

எர்டோகன் மீண்டும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளுடன் விளையாட தயாராகி உள்ளார். பாலஸ்தீனத்தை மீட்கவும் குபார்களால் அநியாயமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும் கிலாபாஹ் மறு உருவாக்கம் மட்டுமே சரியான வழியாகும். OIC மட்டுமல்ல இது போன்ற எந்த அமைப்புகள் வந்தாலும் முஸ்லிம்களின் ஒரு பிடி நிலத்தை கூட மீட்கமுடியது.

பல நாடுகளின் கூட்டமைப்புகள் போலல்லாமல் கிலாபாஹ் வின் கீழ் அனைத்து நாடுகளும் ஓரே தேசமாக பார்க்கப்படும். அவ்வாறு வரும் கிலாபாஹ் மூலமே உலகில் நல்ல ஆட்சியும் நீதியும் நிலைநாட்டப்படும்.

3.உயர் செயல்திறன் கண்காணிப்பு அமைப்பை பாக்கிஸ்தான் ஏவுகணைத் திட்டத்திற்கு சீனா வழங்கியுள்ளது.

சௌத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி

சீனா வரலாறு காணாத அளவில் பாகிஸ்தான் ஆயுதம் தாங்கிய ஏவுகணை திட்டத்திற்கு அதன் கட்டமைப்பை மேம்படுத்த (அதிகப்படுத்த) உயர் செயல்திறன் கண்கணிப்பு அமைப்பை பாகிஸ்தானுக்கு விற்பதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான செய்திகளும் ஆதாரங்களும் இஸ்லாமாபத்தில் வெளிவந்துள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்னாள் இந்தியா ஏவுகணை சோதசனை நடத்தியது. இலக்கு வைத்து தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டன. இந்தியாவிலிருந்து பெய்ஜிங் அல்லது ஷாங்காய் நகரை தாக்கும் அளவிற்கு திறன் பெற்றது. இதன் தொடர்ச்சியாக சீனா பாகிஸ்தான் ஏவுகணை திட்டத்திற்கு உதவுகிறது. சீன செய்தி நாளிதழ் இதனை மோப்பம் பிடித்துள்ளது. அதன் செய்தியின் படி கடந்த புதனன்று சீன அதிகாரிகள் புதன்கிழமை உடன்பாட்டைப் பற்றி அறிவித்தனர்.

சீன அறிவியல் அகாடமியின் (CAS) இணைய தளத்தில் வெளியான ஒரு அறிக்கை பாகிஸ்தானுக்கு இத்தகைய முக்கியமான உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் முதல் நாடு என்று சீனா கூறியுள்ளது.
சிங்வான் மாகாணத்தில் செங்டு நகரில் உள்ள ஒளியியல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன் சிஏஎஸ் நிறுவனத்துடன் ஒரு ஆராய்ச்சியாளரான செங் மெங்வெய், சௌத் சீன மார்னிங் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சீனாவில் இருந்து அதிகளவிலான அதிநவீன ஒளியியல் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு கருவிகளை பாக்கிஸ்தான் வாங்கியுள்ளது என்றார்.

நாட்டின் இராணுவம் சமீபத்தில் சீனவிலேயே (உள் நாட்டிலேயே) தயாரிக்கப்பட்ட தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. மேலும் அவற்றில் அபிவிருத்தியும் அடைந்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் அக்னி-வி ICBM இன் ஜனவரி 18-ஆம் தேதி, 5,000 கிமீ (3,100 மைல்) தொலைவு செல்லக்கூடிய ஏவுகணகளை சீனாவிற்கு எதிராக சோதனை செய்ததை சீனா அறியும். பெய்ஜிங் அதை எதிர்த்து நிற்க உறுதியாக உள்ளது.

ஹிந்து-பெரும்பான்மையான நாட்டின் ஒற்றை-போர் ஏவுகணைகள் பெரியதாக இருப்பதோடு நீண்ட தூரத்தை கடக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது, ​​தனியாக திறம்பட செயல்படும் பல்வேறு இலக்கு கொண்ட மறு-நுழைவு வாகனங்கள் (MIRV கள்), பல்வேறு இலக்குகளை நோக்கி இயக்கும் ஏவுகணை-ஏற்றி பல அணு ஆயுதங்களை தயாரிப்பதில் பாக்கிஸ்தான் அதன் முயற்சிகளை இலக்காக கொண்டுள்ளது.

2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானின் அணுசக்தி திறன் கொண்ட அபாபீல் ஏவுகணை முதல் சோதனை நடத்தப்பட்டது என்று அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. “தெற்கு ஆசியாவின் முதல் தனியாக திறம்பட செயல்படும் பல்வேறு இலக்கு கொண்ட மறு-நுழைவு வாகனங்கள் (MIRV கள்), பல்வேறு இலக்குகளை நோக்கி இயக்கும் ஏவுகணைகள். ஆதாரம் : தி எஸ்பிரஸ் ட்ரிபுனே

இப்பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை பிரகடனப்படுத்தவும் அமெரிக்காவின் பிராந்திய உத்தரவை முறியடிக்கவும் பாக்கிஸ்தான் தயாராக இல்லை என்றால், அத்தகைய ஆயுதங்களை பெற்றுக்கொள்வதால் என்ன பயன் ….?

Comments are closed.