சமீப பதிவுகள்

மொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக துனிசிய அரசு நாளுக்கு நாள் மேற்கொண்டுவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பது போன்றிருப்பதை அன்றாட துனிசிய அரசியலை கவனிக்கும் எவரும் ஒப்புக்கொள்வார்கள். “பொது நிறுவனங்கள் சீர்திருத்தம்” என்கிற பெயரில் நாட்டின் பெருநிறுவனங்களை தனியார் காலனியாதிக்க நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக விற்பனை செய்துகொண்டு வருகிறது துனிசிய அரசு. நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அவற்றை இயக்க பட்ஜெட்டில் போதுமான நிதி இல்லை என்றும் பொய்சாக்கு சொல்லி இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

இத்தகைய விற்பனை ஒன்றே ஒரே வழி என்று அனைத்து ஊடகங்களிலும் நியாயம் கற்பித்து விற்பனைக்கு அழைப்பு விடுத்து வருகிறது அரசு. பொருளாதார நிதிநெருக்கடியை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை பாராளுமன்ற உரையில் ஒப்புக்கொண்ட அந்நாட்டின் பிரதமர் யூசுப் சாஹித் அதற்கு காரணமாக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட “முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை” முடக்கியதுதான் காரணம் என்று குற்றம்சாட்டினார். தானும் தன்னுடைய அரசும் மேற்சொன்ன “முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை” எத்தகைய விலைகொடுத்தேனும் நிறைவேற்றியே தீருவோம் என்றும் சபதம் எடுத்துள்ளார் அவர். அரசின் இந்த முடிவும் அவர்கள் தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்து வரும் இவை சார்ந்த பிரச்சாரமும் சர்வதேச நிதி முனையம் (IMF) இவர்களுக்கு மேற்கொண்டு கடன் தருவதற்காக போட்ட நிபந்தனையான “பொதுநிறுவனங்களை கைவிடுதல்” என்னும் கட்டளையை நிறைவேற்ற நாசூக்காக பொதுமக்களின் வெகுஜன கருத்தை பெரும் ஒரு முயற்சியே! துனிசியாவின் நிதிநெருக்கடியை போக்க இது ஒன்று தான் தீர்வென்று அந்நாட்டின் அமைச்சர்களுக்கு தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக நியமிக்கப்பட்ட ஆலோசகர்களும் சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வாட்டும் பொருளாதார நிதிநெருக்கடி, அதிகப்படியான விலைவாசி, தினார் நாணயத்தின் மதிப்பிழப்பு, நம் சகோதர மக்களின் உழைப்பை உறிஞ்சியெடுக்கும் தீராத வரிச்சுமை ஆகிய இவையாவும் துனிசியாவில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் மக்களுக்கு வளமான வாழ்வையோ அல்லது தீர்வையோ தருவதற்கு திராணியற்ற முதலாளித்துவ பொருளாதார கொள்கையை பின்பற்றியதும் பிரச்சனைக்கான தீர்வை அந்த வழுவில்லாத சிந்தனைக்குள்ளாக தேடியதும் தான்.

இன்னும் குறிப்பாக, இவையாவும் சர்வதேச நிதி முனையம் (IMF) வகுத்துத்தந்த கீழ்வரும் விஷம கட்டளைகளுக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்ததே.

1. மானியங்களை நிறுத்துதல் – கல்வி, சுகாதாரம், உணவு மற்றும் மக்களின் அத்தியாவசியங்களில் செய்யும் செலவுகளை கணிசமாக குறைப்பது.

2.அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், குறிப்பாக லாபம்தரும் நிறுவனங்கள் – இதன் வாயிலாக காலனியாதிக்க நிறுவனங்கள் நாட்டின் அரிய வளங்களை கொள்ளையடிக்கும்.

சர்வதேச நிதி முனையம் (IMF) இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசிற்கு வட்டி அடிப்படையிலான கடன் தந்து, தனக்கு என்றும் அடிபணியும் கடன்காரனாக அந்நாட்டை வைத்துக்கொள்வதே அதன் முக்கிய குறிக்கோள்.

ஓ முஸ்லிம்களே!

காலனியாதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்ட எந்த அரசும் தன்னை உருவாக்கிய காலனியாதிக்க அரசிற்கு தன் முழு விசுவாசத்தை காட்டுவதுடன், நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் அவர்களின் பெருநிறுவனங்களை அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கும். நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிராகவும் போலியான சுதந்திரத்திற்கு எதிராகவும் பேசும் மக்களை அது அடக்கிவிடும். இத்தகைய ஒரு அரசு நாட்டின் பொது சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் எத்தகைய தயக்கமும் கொள்ளாது – சுதந்திரத்திற்கு முன்பு எப்படி வளங்களை கொள்ளையடித்ததோ அதேபோல் சுதந்திரத்திற்கு பின்பாக அதே தனியார் நிறுவனங்கள் அரசின் முழு அனுமதியுடன் வளங்களை கொள்ளையடிக்கின்றன. மேலும் இத்தகைய கைமாறுதல்களை நாட்டின் வளர்ச்சிக்காக சுயமாக எடுத்த முடிவு என்றும் இதில் அந்நிய-காலனியாதிக்க சக்திகளின் கை இல்லையென்றும் கபட நாடகம் போடுவார்கள் – இப்பொழுது யூசுப் சாஹித் செய்வது போன்று.

நாட்டின் பெருநிறுவனங்களை நடத்துவதற்கும், பொருளாதார சீர்திருத்தம் செய்து நிதிநெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் இன்னும் ஊழலை ஒழிப்பதற்கும் திராணியில்லாத ஒரு அரசு இறுதியில் தீராத கடனில் சிக்கி திவாலாகி தான் போகும்.

ஓ முஸ்லிம்களே!

நம்மீதும் நம்முடைய வாழ்வியல் விவகாரங்களின் மீதும் உண்மையான முறையில் அக்கறை கொள்ளும் ஒரு நேர்மையான அரசு இல்லாத நிலையில் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இஸ்லாமிய அகீதாவிலிருந்து பெறப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் உருவான, இன்னும் காலனியாதிக்க நாடுகளுடன் எத்தகைய உறவுகளையும் வைத்துக்கொள்ளாத, முஸ்லிம்களின் பிரச்னையை தன்னுடைய பிரச்சனையாக கருதும் இஸ்லாமிய அரசு ஒன்று தான் இன்று துனிசியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் சமூக-பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள முஸ்லீம் சமூகத்திற்கு தீர்வையும் வளமான வாழ்வையும் தரும்.

உலகெங்கிலும் தற்போது வாழும் முஸ்லீம் உம்மத்தின் நிலையை மாற்றியமைப்பதற்கும் வருங்கால தலைமுறையினரை எதிரிகளிடமிருந்தும் காலனியாதிக்க கைக்கூலிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும் முஸ்லிம்கள் யாவரும், குறிப்பாக, முஸ்லிம்களில் உள்ள திறன்மிக்க மற்றும் (அரசியல் மற்றும் ராணுவ) அதிகாரம் பெற்ற முஸ்லீம்கள் அல்லாஹ் (சுபு) நம்மீது விதித்துள்ள இந்த கட்டாய கடமையான இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு பாடுபட வேண்டும். இது ஒன்றே நம்மை நம்முடைய பிரச்னைகளிலிருந்து விடுவிக்கும் இன்னும் நமக்கு வாழ்வளிக்கும்.

Comments are closed.