சமீப பதிவுகள்

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் விடமாட்டான்

ஏப்ரல் 5, 2018 அன்று தாஷ்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) பிராந்திய பயங்கரவாத–எதிர்ப்பு குழுவின் 32 வது கூட்டத்தின் முடிவில் , ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவையின் முதல் துணைத்தலைவரான ஜனரல் செர்ஜி ஸ்மிர்னவ், “நமது கண்ணோட்டத்தில் இருந்து, இஸ்லாமிய ஹிஸ்புத் தஹ்ரிர் அதன் செயல்களாலும் கோட்பாடுகளாலும் மிகவும் ஆபத்தானது, எனவே, அது ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது,அதனால் தான் குறிப்பாக அது உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது” என்று கூறினார். கூட்டத்தின் போது இஸ்லாமிய ஹிஸ்புத் தஹ்ரிர் கட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்க முடிவு எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அனைத்து உறுப்பின நாடுகளும் இந்த செயல்திட்டத்தை நிறுவ வேண்டும் என்று கூறினார்.

வளர்ந்து வரும் இஸ்லாமிய அழைப்பு பணியை ஒடுக்க ரஷ்யாவின் ஸ்டாலினிய ஆட்சிமுறை தோல்வியடைந்ததை அறிந்த இவர் இப்படி பேசுகிறார் என்பதில் ஆச்சரியமில்லை. நன்மையின் செய்தியை (அல்-க்ஹைர்) உலகிற்க்கு கொண்டுசெல்லும் ரஷ்யாவிலுள்ள முஸ்லிம்களின் இதயங்களில் இந்த அழைப்பு பணி ஊடுருவியுள்ளது, மேலும், இதனால் குஃப்ரின் இருளில் இருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிமல்லாதவர்கள் அல்லஹ்வுடைய தீனில் நுழைகின்றனர்.

தெய்வீக சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய கொள்கையின் சூரிய ஒளியை மறைக்க ரஷ்ய ஆட்சியின் முயற்சிகளில் பெரிய ஆயுதங்களால் கொலை செய்வது, அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு ஆகியவற்றை கொண்டு இந்த இராணுவத் தளபதி கையாழ்வது வேடிக்கையாக உள்ளது.

கடந்த காலத்தில் பெரிய இராணுவ கூட்டணிகளை இந்த உலகம் கண்டுள்ளது, உதாரணமாக நாட்டோவிற்கு எதிராக வார்சா ஒப்பந்தம். ஆனால், இவர் ஹிஸ்புத் தஹ்ரிர் தன் கொள்கையால் மிகவும் ஆபத்தானது என்று கூறும்போது, சிலந்தி வலையை விட பலவீனமான கம்யூனிசத்தின் இருளிலிருந்து ஒழுக்கக்கேடான முதலாளித்துவத்தின் கொள்கைக்கு மாறிய இவரும் இவருடைய ஸ்டாலினிய அரசாங்கமும் வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் மனிதனைப் பற்றிய சரியான கோட்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று தெளிவாக தெரிகிறது. இவர்களின் கொள்கைக்கு சரியான காரணம் மற்றும் சிந்தனை ஒரு அணு அளவிலாவது இருந்திருந்தால், நம்முடைய வாதத்தை இவர்களுடைய வாதத்துடன் எதிர்கொள்ள ஒப்புக்கொண்டிருப்பார்கள், ஆனால் முன்சென்ற கொடுங்கோலர்கள் போல் இவர்களின் வாதமும் கொலை, ஒடுக்குதல், துன்புறுத்தல் ஆகியவை தான் கொண்டுள்ளது. இஸ்லாமிய நேர்வழிப்பட்ட மகன்களாக இருக்கும் நம் உம்மத்தை ஏமாற்றுவதற்கும், சதி செய்வதற்கும் இந்த மனிதர்கள் அழைப்பு விடுகின்ற நம்முடைய உண்மையான இஸ்லாமிய அகிதாவை அல்லாஹ் அருள் புரியட்டும்.

குற்றஞ்சாட்டப்பட்ட இந்த அமைப்பு உலக மக்கள் தொகையில் 60% க்கும் மேலானதைக் கொண்டிருப்பதாக நாம் அறிந்தால், உலக நாடுகளின் அனைத்து சக்திகளும் அணிதிரண்டு ஒடுக்க நினைக்கும் இந்த இஸ்லாமிய கொள்கை உண்மையில் ஆபத்தானதா? என்று நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். ஆனால், உண்மையில் ஹிஸ்புத் தஹ்ரிரிடம் இராணுவப் படைகள், விமானக் தாங்கிகள் அல்லது நூற்றுக்கணக்கான அல்லது பில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்ட இராணுவ பட்ஜெட்கள் இல்லை என்பது நமக்கு தெளிவாகத் தெரியும். ஹிஸ்பின் நேர்மையான தாயிக்களின் உண்மையான ஆயுதம் பிரபஞ்சத்தின் இறைவனான அல்லாஹ் மீது நம்பிக்கையும், தம் இரத்தம் மற்றும் உயிர்களை விலைக்கொடுத்து மார்க்கத்தை வாங்குவது தான். அப்படி இருந்தும் ஏன் இவர்கள் ஹிஸ்புக்கும் அதனுடைய நேர்மையான மகன்களுக்கு எதிராக மக்களுக்கு அழைப்பு விடுகிறார்கள்?.

ஆனால், இதை விட மிக மோசமான கசப்பான விஷயம் என்னவென்றால், முஸ்லிம் ஆட்சியாளர்களாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் (கிர்கிஸ்தானிலிருந்து கஜகஸ்தான் வரை அதிலிருந்து பாகிஸ்தான் வரை ஜூன் 2017 ல் குஃபார்களுடன் அமைப்பில் இணைந்தவர்கள்)
“பயங்கரவாதத்தை எதிர்த்து போராட” தங்களின் ஆர்வத்தை உறுதிப்படுத்த விரைவாக உள்ளனர்!!

கடந்த நூற்றாண்டுகளின் கொடுங்கோலர்களிடமிருந்து அவர்களைப் பின்தொடர்ந்தவர்களின் தலைவிதிகளிலிருந்து பாடங்களைப் பெறாத இந்தக் கோழையர்கள் தான் உண்மையில் துரதிருஷ்டவசமானவர்கள்.

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் – எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
[40:12]

ஆகவே, இஸ்லாமிய உம்மத்தே !!

வானங்களும் பூமிகளும் சார்ந்த உங்கள் அகிதாவுக்கு எதிராக இந்த குஃப்ரின் தலைவர்களுக்கு ஆற்றலில்லை என்பதை நீங்கள் இப்பொழுது பார்த்துவிட்டதால் இதை நல்லதாக எண்ணிக் கொண்டாடுங்கள், எனவே, இந்த தீனை நிலைநாட்ட நபி(ஸல்) முறையின் மீதான கிலாஃபா ராஷீதா அரசை (நீதியுள்ள கிலாஃபாத்தை) நிறுவும் பணியை புரிகின்ற ஹிஸ்புத் தஹ்ரிரின் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். இதைக்கொண்டு தான் மனிதக்குலம் மீது நீண்டக்காலமாக இருக்கும் இரவுக்கு சூரிய ஒளியை நுழைத்து, அல்லாஹ்வின் அனுமதியுடன் இந்த புதிய விடியலைக் கொண்டு உலகிற்கு இஸ்லாத்தின் நீதி மற்றும் கருணையின் கீழ் வரவைக்க முடியும்.

அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் – ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
[12:21]

Comments are closed.