சமீப பதிவுகள்

புனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்!

அல் ஜசீரா ஆங்கில சேனல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஐ.நா. அதிகாரிகள், புனித நிலப்பகுதியின் (பாலஸ்தீனத்தின்) குழந்தைகளை யூத அமைப்பு தொடர்ச்சியாக முடக்கிவைத்திருப்பதை கண்டித்து கூறியது-“இந்த குழந்தைகளை முடக்கி வைப்பது, அங்கு முறையாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டு மேலும் மிகப்பரவலாகவும் உள்ளது”. மனித உரிமை கழகம் என்ற வெரும் பெயர் மட்டும் தாங்கும் கழகத்திற்கு ஐ.நா.வின் தொடர் அரிக்கைகளில் – பாக்கியம் நிறைந்த நிலப்பகுதியான பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா (Gaza) பகுதி வாழ் மக்களின் வாழ்வாதார நிலை கடந்த ஆண்டில் மிகவும் மோசமடைந்துள்ளது என்றும், யூத அமைப்பின் ஆக்கிரமிப்பின் பெரும் அடியையும், வலியையும் தாங்கிக் கொள்வது ‘அங்குள்ள குழந்தைகள் ஆகும்’ என்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் துணை உயர் ஆணையர் கேட் கில்மோர் கூறுகிறார்.

அவர்கள் குடும்ப உறுப்பினர் சாட்சியமளித்தில், யூத அமைப்பு அரசாங்கம், பாக்கியம் நிறைந்த பாலஸ்தீன் நில குழந்தைகளை தொடர்ந்து காவலில் அடைக்கிறது, இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நிர்வாக ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் – எந்தவித குற்றச்சாட்டு இல்லாமல், மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஏற்கனவே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச உடன்பாடுகள் என்று அழைக்கப்படுவதன் படி குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், என்பதன் அனைத்து மீறல்களுக்கும் எதிராக அக்குழந்தைகள் வீட்டு காவல் மற்றும் இன்னபிற ஒருங்கமைக்கப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடூரமான செயல்களுக்கு ஆழ்த்தப்படுகின்றனர். இவ்வாறு, சிறுவர்களை இராணுவ நீதிமன்றங்களில் கைதுசெய்வதும், சிறையில் அடைப்பதும், பெரியவர்கள் போல் நடத்தி சிறைச்சாலைகளில் மனிதாபிமானமற்ற நடைமுறைகளுக்கு அவர்களை உட்படுத்துவதும், பல துஷ்பிரயோகங்கள், உரிமை மீறல்கள், பலவிதமான சித்திரவதைகள் மற்றும் வன்முறைகளுக்கு உட்படுத்தி அவர்களை சீர்குலைத்து சீரழிக்கும் உலகின் ஒரே “அரசாக” இது உள்ளது.

இந்த அறிக்கைகள் எல்லாம் இருந்தும் கூட, சர்வதேச சமூகம் மற்றும் “மனித உரிமைகள் அமைப்புக்கள்” மௌனமான பார்வையாளர்கள் போலவே இருந்து, மீண்டும் மீண்டும் நிரூபிப்பது அவர்கள் சொல்வது போல், சத்தியத்தையோ அல்லது ஒடுக்கப்பட்டோரையோ அவர்கள் பாதுகாப்பதில்லை என்றும், மனித உரிமைகளுக்கும் அல்லது குழந்தைகளின் உரிமைகளுக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதேயாகும். எழுத்து மற்றும் அறிக்கைகளை வழங்குவதற்கு மேல் இவர்கள் செல்லமாட்டார்கள், இன்னும் இஸ்லாமும் அதன் விவகாரங்களும் என்று வந்தால் காதடைத்து அமைதி கொள்கின்றனர். எனினும், அதே இஸ்லாத்தில் எதையாவது குழந்தைகளின் உரிமை மீறல்!!! என்று அவர்களே கருதி எக்காளங்களை ஊதி, கைகள் உயரத்தி தாக்குகிறார்கள், இதற்கு பல சான்றுகள் உள்ளன… இதே குழந்தைகளுக்கு எதிரான மீறல்கள் மற்றும் தடுப்புக்களை தூக்கி வீழ்த்துவதில் நாம் இப்படிப்பட்ட வீர வேக நடையை பார்க்க முடியாது, குறிப்பாக யூத நிறுவனத்தை பாதுகாக்கும் ஒருங்கிணைப்பு
படையினர் அதனை நிகழ்த்தி இருந்தால்.

ஓ! பாக்கியம் நிறைந்த பூமி (பாலஸ்தீன) மக்களே:

இந்த சம்பவங்கள் எல்லாம் மீண்டும் மற்றும் எப்போதும் நிருபிப்து, ஆக்ரமிப்பாளர்களை நீக்கி, உங்களையும் உங்கள் குழந்தைகளும் அநீதிகளிலிருந்து பாதுகாக்க கூடியது – நீதியை பரப்பி, இஸ்லாத்தை கொண்டு நிர்வகிக்கப்படும் ஓர் சக்திவாய்ந்த அரசு, நபி வழியிலான (நேர்வழி கிலாஃபா) “கிலாஃபா இராஷிதத்தை” தவிர வேறெதுவும் இல்லை. எனவே, நெஞ்சங்களுக்கு பாரமான முட்டாள் ஆட்சிகளை நிராகரித்து இதற்காக உழைப்போருடன் உழையுங்கள்.

﴿إِنَّ اللّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللّهُ بِقَوْمٍ سُوءًا فَلاَ مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ﴾

” ….. நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களை தாங்களே அவர்கள் மாற்றிக் கொள்ளாதவரை – அல்லாஹ் ஒரு கூட்டத்திற்கு தீங்கை நாடினால்; அதனை தடுப்பவர் எவருமில்லை; அவர்களுக்கு அவனை அன்றி எந்த உதவியாளரும் இல்லை. “

அர் ரஃது (13) :11

Comments are closed.