சமீப பதிவுகள்

மேற்குலகிலுள்ள ஜனநாயக முறையின் குறைகள் வெளிப்படையாகிறது

செய்தி :
கடந்த இரண்டு வாரங்களாக வருகின்ற செய்திகள் இன்னும் தொடர்கின்றன சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தங்கள் நாடுகளில் நடந்த தேர்தல் விதிமுறைகளில் நடந்த அத்துமீறல்களை பற்றி விசாரணையை தொடங்கின. இந்த செய்தியின் மையத்திலுள்ள நிறுவனம் பிரிட்டனை சார்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிக்க, இந்த நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களும் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் வாக்காளர்களை சில வியூகங்கள் மூலம் தன்வசம் செய்துள்ளது.

ஊடங்கங்களில், அமெரிக்க மற்றும் பிரிட்டன் தேர்தல் நிதிகள் பற்றிய சிக்கலான சட்டங்களை பற்றி விவாதிக்கின்றனர், மேலும் எவ்வாறு இந்த நிறுவனங்கள் வாக்காளர்கள் பற்றிய செய்தியை அனுமதியின்றி சேகரித்தன என்றும் விவாதிக்கின்றனர். இந்த நிகழ்வின் மூலம், இந்த நிறுவனங்கள் எவ்வாறு போலியான செய்திகளை கொண்டு உலகிலுள்ள தேர்தல்களை தன்வசம் வைக்கின்றது என்பதும் வெளிப்படையாகியது .

கருத்து :

மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில், எவ்வாறு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா நுழைந்து அத்துமீறல்களை மேற்கொண்டது என்பதல்ல, எதற்காக தேர்தல்களில் மிகவும் எளிதாக புரிந்துகொள்ள முடியாத சிக்கலான தேர்தல் நிதி பற்றிய சட்டங்களும் அந்நிய நாட்டு நிதிகளை எதற்கு அனுமதிக்கின்றன என்பதே ஆகும்.

அமெரிக்க தேர்தல் வாக்கு சேகரிப்பு அனைத்தும் தேர்தல் நிதியை கொண்டே நடக்கின்றன என்பது தெரிந்தவையே. பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு ஆதரவான வேட்பாளருக்காக செலவு செய்து நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களுக்கு சாதகமான விஷயங்களை பெற்றுக்கொள்கின்றன. இறுதியில் அதிகமாக செலவு செய்தால் அதிகமாக தேர்தலை வசப்படுத்த முடியும். இதுவே பிரிட்டனிலும் நிகழ்கின்றது.

ஜனநாயக அரசியலின் வேத மந்தரம் ஒரு மனிதர் ஒரு வோட்டு என்பதாகும். உண்மையில், செல்வந்தர் பல வாக்குகளை விலைகொடுத்து வாங்க முடியும், இதற்க்கு பொருள் என்னவெனில், இவருடைய வோட்டு திறன் பிற மனிதர்களை விட அதிகம் என்பதாகும். ஹாலிவுட் திரைப்படங்களில், இதற்க்கு நேர்மாறாக ஜனநாயகம் என்பது நேர்மையானது போலவும், அதனை காக்க உயிர் திறக்கலாம் என்பது போலவும் சித்தரிக்கின்றனர் .

மக்கள் மத்தியிலுள்ள கனவு என்னவெனில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முடியும் எனவும் அவர்களை கேள்விக்குட்படுத்த முடியும் என்பதுமாகும். இந்த விஷயத்தை இன்னும் கீழ்தரமாக்கும் விஷயம் என்னவெனில், பெரும் ஊடகங்கள் மக்கள் மத்தியில் அரசியல் பற்றிய புரிதல்களை தங்கள் வசம் வைத்திருப்பதாகும். இத்தகைய ஊடங்ககளையும் கூட சில செல்வந்தர்கள் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கின்றனர். இதன் மூலம் தேர்தல்களை சுலபமாக வசப்படுத்தலாம் என்பது தெளிவாகிறது .

தேர்தல் நிதிகள் பற்றிய தெளிவற்ற சிக்கலான சட்டங்கள் உருவாக்கியதற்கான காரணம், பெரும் செல்வந்தர்கள் தங்களுடைய சக்திக்கு பங்கம் விளைவிக்க கூடிய அனைவரையும் கட்டுக்கோப்பில் வைப்பதற்காகவேயாகும். சாதாரண மனிதர்கள் மற்றும் அவர்களுடைய விருப்பங்கள் இதில் அடங்குவதில்லை .

ஏட்டில், ஜனநாயகம் என்பது பெரும் திறனான மக்கள் சிறு குழிவினர்களை கட்டுப்படுத்துவதாகும். ஆனால் உண்மையில், வசதிபெற்ற சிலர், பெரும் திரலான சாதாரண மக்களை கட்டுப்படுத்துவதாகும். அரசியல் வாதிகள் கேளிவிக்கணக்குக்கு உட்படுத்துவதென்பது மிகவும் கடுமையானதாகிவிட்டது. உண்மையில், இந்த அரசியல் வகுப்புக்கு கரணம், மக்கள் தேர்தலில் பங்கெடுத்து தங்கள் கடமைகளை செய்து விட்டதாக ஆறுதல்கொள்வதேயாகும். மேற்கத்திய மதச்சார்பின்மையினர், பெரும்பாலும் இஸ்லாத்தை கை நீட்டி, இங்குள்ள பெண்களுக்கு அரசியலில் பங்கேற்கும் உரிமையில்லை என கூறுகின்றனர். உண்மையில், ஆன் பெண் அனைவரும் அர்த்தமற்ற ஜனநாயக தேர்தலில் பங்கேற்பதிலிருந்து விலக்கப்படுகின்றனர்.

அதேவேலையை, இஸ்லாத்தில் அணைத்து ஆண்களும் பெண்களும் உண்மையாக பங்கேற்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இஸ்லாத்தில் அரசியல் சிந்தனை மற்றும் அதை பற்றிய புரிதல் அனைத்தை முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். மேலும் ஆட்சியாளர்களை கேள்விகேட்பதும், நல்லதை ஏவி, தீமையை தடுப்பதும் ஒத்து மொத முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.

ஜனநாயக விதிகள் நடைமுறையிலுள்ள காலம் வரை, பெரும் திரளான மக்களை சில செல்வந்தர்கள் அடிமைப்படுத்துவது தொடரும். இறை தூதர் காண்பித்த முறை படி கிலாஃபா ராஷிதா நிறுவப்பட்டு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே, உண்மையாக ஆட்சியாளர்களை கேள்வி கணக்குக்கு உட்படுத்தி, மக்களை குர்ஆன் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னா படி வழிநடத்த முடியும்

Comments are closed.