சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

97 ஆண்டுகளில் இழந்த மரியாதையும் கண்ணியமும்!!!

1924க்கு பிறகு, அதாவது இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் முஸ்லீம் உம்மா பலவீனமடைந்தது. அதனால் ஏற்பட்ட அவமானத்தையும், நமக்கு எதிரான நாடுகளின் சதித்திட்டத்தையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மேலும் எதிரிகளின் மனங்களிலிருந்த நம்மைப் பற்றிய அச்சமும் அகன்று விட்டது.

இதைப் பற்றி நபி(ஸல்) கூறுகிறார்கள் :

“எதிரிகளின் மனங்களிலிருந்து உங்களைப் பற்றிய அச்சத்தை அல்லாஹ் (சுபு) அகற்றிவிடுவான்”.

இஸ்லாமிய உம்மத்தை பாதுகாப்பதற்கும் ,வழிநடத்துவதற்கும் ஒரு ஆட்சியாளர் (இமாம்) இல்லாமல் 97 ஆண்டுகள் கடந்து விட்டன, அவர் மூலம் தான் இஸ்லாமை மார்க்கமாக நடைமுறைப்படுத்த முடியும்.

இந்த 97 ஆண்டுகளில் நம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப்போனது. 1924க்கு முன்பு முஸ்லீம் உம்மத்தைக் கண்டு அன்றைய பேரரசுகளும்,வல்லரசுகளுமே பயந்து நடுங்கின. ஆனால், இப்பொழுதோ வலுவற்ற பர்மா போன்ற நாடுகள் கூட இந்த உம்மத்தையும், முஸ்லிம்களையும் பார்த்து சவால் விடுகின்றன.

“ஆரம்பமும் முடிவும்” என்ற புத்தகத்தில் இப்னு கஸிர் கூறும்போது, முஸ்லிம் படைகள் குத்தைபா பின் முஸ்லிம் அவர்கள் தலைமையில் சீனாவைக் கைப்பற்ற அதன் எல்லையை அடைந்தபோது, ​​ஹுபைரா அல்-கிலாபி தலைமையிலான ஒரு சிறிய படையை சீன அரசரிடம் தூது செய்தியோடு அனுப்பினார். அப்போது சீன அரசர் அவரிடம் கூறியதாவது “உடனடியாக உங்கள் தலைவரிடம் சென்று உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து திரும்பி போக சொல்லுங்கள். மிக சிறிய படையே அவரிடம் உள்ளது என்பதையும் நாம் அறிவோம். அவர் திரும்பச் செல்லாவிட்டால் நான் அனுப்பும் ஒரு படை உங்களையும் அவரையும் நரகத்திற்கு அனுப்பி விடுவார்கள்” என்றார்.

இதை கேட்ட ஹுபைரா, “எங்கள் படையில் இருக்கும் முதல் குதிரை உங்கள் நாட்டிலும், கடைசி குதிரை எங்கள் நாட்டின் மரத்தோட்டங்களில் இருக்கும் நிலையில் அவரை எப்படி படைபலம் இல்லாதவர் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள்?. உங்கள் படைகளை தோற்கடித்து வெற்றி கொள்ளும் திறன் அவரிடம் இருக்கும் போது உங்களைக் கண்டு பயப்படுவார் என்று நீங்கள் எவ்வாறு நினைத்தீர்கள்?! எங்களைக் கொல்லுவதன் மூலம் பயமுறுத்தி விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் வீணானது, ஏனென்றால் நாம் எல்லோரும் இறப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளோம், அதை நீங்கள் கொடுக்க விரும்பினால், வாருங்கள்!! எங்களைக் கொன்று கௌரவப்படுத்துங்கள்!!, நாங்கள் மரணத்தை வெறுக்கவும் மாட்டோம் அதைக் கண்டு அஞ்சி நடுங்கவும் மாட்டோம்”. என பதில் கூறினார்.

இதைக்கேட்ட அரசர்: “உங்கள் படைத்தலைவரை எது திருப்தி கொள்ளச் செய்யும்?” என்று கேட்டபோது, ஹுபைரா “அவர் உங்கள் நிலத்தில் காலடிவைக்கும் வரை, உங்கள் மீது ஜிஸ்யா வரியை கட்டளையிடும் வரை திரும்பி செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார்”. என பதிலளித்தார்

இதற்கு அரசர் கூறினார்: “அவரை நாம் உரிய மரியாதையுடன் அனுப்பிவைப்போம்,என் பிள்ளைகளில் சிலரை அவரிடம் பேச அனுப்புவோம், அவர் விரும்பும் வகையில் ஜிஸ்யாவை நாம் அனுப்பி வைப்போம்” என்று கூறி அடிபணிவதற்கு அடையாளமாக சிறிது மண்ணை தங்கப்பெட்டியில் வைத்து அதோடு பட்டு, தங்கம் போன்ற பரிசுகளையும் அனுப்பிவைத்ததோடு தன் பிள்ளைகளில் 4 பேரையும் அனுப்பி வைத்தார். அதை குத்தைபாவிடம் கொண்டு சென்றபோது அதை ஏற்றுக்கொண்டார். அவரது மகன்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அவர்களை அனுப்பிவைத்தார். பிறகு மண் அடங்கிய பெட்டியின் மீது ஏறி நின்றார்.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும்போது இஸ்லாமிய நிலம் வெகு விசாலமானது. அந்த காலம் போய், இப்பொழுது நம் நிலங்கள் எல்லைகளால் பிரிக்கப்பட்டுள்ளன.!!!

முந்தைய காலங்களில் எதிரிகளின் மீது நடவடிக்கை எடுத்த நாம், இந்த 97 வருடங்களாக ஐ.நா சபையின் Security Council, மற்றும் சர்வதேச சமூகங்கள் ஆகியவற்றிடம் அடைக்கலம் தேடுகிறோம், ஒடுக்குமுறையில் இருந்து விடுபட ஒடுக்குமுறையாளர்களிடமே உதவி கேட்கிறோம். எதிரிகளையே நாம் நீதிபதியாகவும் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

முதலில், ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டாலோ, சிறைபிடிக்கப்பட்டாலோ அல்லது ஒரு முஸ்லிம் பெண்மணி பிறரால் மோசமாக நடத்தப்பட்டாலோ, கிலாஃபாவின் தலைநகரத்திலிருந்து ஆரம்பித்து வரம்புமீறியவரின் இடம் வரை வலுவான இராணுவத்தை அனுப்ப முடிந்தது.ஆனால், இந்த 97 வருடங்களாக காலனியாதிக்க வாதிகளின் சூழ்ச்சிகளையும் எதிரிகளின் திட்டங்களையும் நிறைவேற்ற சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், லிபியா, ஈராக், பாகிஸ்தான் ஆகியவற்றில் நம்முடைய உம்மத்தின் இரத்தம்தான் சிந்தப்படுகிறது.

சிலைவணங்கிகளான பௌத்தர்கள் நம்மை பர்மாவில் உயிருடன் எரிக்கிறார்கள், ஆஃப்ரிக்காவிலுள்ள CAR நாட்டில் நம் மக்களை துண்டு துண்டாக வெட்டி வீசுகிறார்கள். பர்மா, ஈராக், சிரியா இன்னும் மற்ற முஸ்லிம் நாடுகளில் நம் கண்ணியம் சீர்குலைந்து போய் இருக்கிறது. நம்முடைய அழுகைச்சத்தம் வானத்தை நிரப்புகின்றன. ஆனால் செவிடர்களின் காதுகளில் அந்த அழுகைச்சத்தம் கேட்கவில்லை, நம்மை பாதுகாத்து உதவ யாருமில்லை, நம் அழுகைக்கு பதிலளிக்கவும் எவருமில்லை.

முன்பெல்லாம் இஸ்லாமிய ஆட்சி இருந்தபோது நபி(ஸல்) அல்லது குர்ஆனின் கண்ணியம் குலைக்கப்பட்டால் தலைகளை வெட்டுவதற்கும் நாடுகளை அச்சுறுத்துவதற்கும் அழைப்பு விடுத்தோம்.  ஆனால், இன்று
நாளுக்கு நாள் நபி(ஸல்)யின் கண்ணியம் சீர்குலைக்கப்படுகின்றது, திருக்குர்ஆன் எரிக்கப்படுகின்றது மற்றும் நம்முடைய புனிதஸ்தலங்கள் இடிக்கப்படுகின்றன, ஆனால் நாமோ பிற மதங்களுடன் இஸ்லாமை ஒப்பிட்டு மாநாடுகள் நடத்தி நபி(ஸல்)யின் நற்குணங்களை பற்றிய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறோம்!! கிலாஃபா இல்லாததால் ஏற்படும் அவமானம் மற்றும் பலவீனம் ஆகியவற்றின் பட்டியலில் இதுபோல சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் நாம் பட்டியலிட வேண்டுமென்றால், பக்கங்கள் போதாது.

எனவே, வாருங்கள் உலகத்திலும் மறுமையிலும் கண்ணியத்தை அடைவோம், நாடுகளுக்குள் நம்முடைய கண்ணியத்தையும் இடத்தையும் மீட்டெடுப்பதற்கு கடினமாக உழைப்போம்.

இஸ்லாமிய வாழ்க்கை முறையை மீண்டும் தொடங்குவதற்கு இரண்டாம் கிலாஃபா ராஷீதாவை நபி(ஸல்) முறையின்படி நிறுவும் பணியில் ஈடுபட முஸ்லிம்களாகிய உங்களை நாம் அழைக்கின்றோம்.

முஸ்லிம்களே!!! நீங்கள் பதிலளிக்க தயாரா?

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
[8:24]

Comments are closed.