சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 18.04.2018

லிபியாவில் அமெரிக்காவிற்கு மேலும் சிக்கல் நீடிக்கிறது

அமெரிக்கா சிரியாவில் (அமெரிக்காவிற்கு சாதகமான) அரபுசக்தியை (ராணுவத்தை) உருவாக்க முற்படுகிறது

பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு 4000 ராணுவ வீரர்களை கொடுத்துள்ளது

1.லிபியாவில் அமெரிக்காவிற்கு மேலும் சிக்கல் நீடிக்கிறது

இந்தவாரம் லிபியாவின் தேசிய இராணுவத்தின்தளபதி 75 வயதான பீல்ட் மார்ஷல் கலீஃபா ஹெஃப்டர் பக்கவாதம் அல்லது மாரடைப்பு காரணமாக, இப்போது பிரான்சில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

ஹெஃப்டர் முதலில் 1966ல் லிபியமன்னர் இத்ரிஸ்ஸின் ராணுவத்தில் சேர்ந்தார். 3 வருடங்கள் கழித்து மன்னராட்சிக்கு எதிரான சதியில் மம்மர்கடாபியுடன் இணைந்தார். அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஹெஃப்டர் லிபியராணுவத்தின் உயரிய பதவிகளை வகித்தார். இருந்தபோதிலும் 1980 களில் சாட்-லிபிய மோதலின் சூத்திரகாரியாக இருந்தார், அதனால் சாட் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். எவ்வாறு இருப்பினும் 1987ல் இவரும் மற்ற லிபியபடைவீரர்களும் சாட் ராணுவத்தை தோற்கடித்தனர்.

மம்மர் கடாபியை வீழ்த்துவதற்கு அவர் மீது குற்றங்களை சுமத்தி அவருக்கு எதிராக செயல்படும் CIA மற்றும் சவுதி அரசுக்கு விசுவாசமான அதரவைக் கொண்டிருந்தார். சவூதி அரேபியாவை பின்புலமாக கொண்டு இயங்கும் National Salvation Front for Libya (NSFL),ல் அங்கம் வகித்தார்.

ஹெஃப்டர் மிகக் குறுகிய காலத்தில் லிபிய ராணுவத்தில் NSFLன் ராணுவ அணிகளின் மூலமாக உயர்ந்த பதவிகளை அடைந்தார். இவர் லிபிய ராணுவத்தில் உயரிய நிலையை அடைந்த வெகு விரைவில் கிட்டத்தட்ட உடனடியாக 2011ல் லிபிய புரட்சி தொடங்கியது, அமெரிக்கா ஹெஃப்டரை லிபியவிற்கு அனுப்பி கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து புது ஆட்சியை கட்டமைக்கும் பணியை மேற்கொண்டது.

ஐரோப்பிய பின்புலத்தால் இயங்கும் லிபியாவில் திரிப்பொலி அரசாங்கம் பலவீனமாக இருந்த சமயத்தில் ஹெஃப்டர் தப்ருக்கில் வலிமையான அரசை அமைக்க முனைந்தார்.

ஹெஃப்டர் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வலிமையான ஸ்திரமான லிபிய ராணுவத்தை கட்டமைக்க முயற்சித்தார். ஆனால் அங்கு நடந்தது என்னவோ அவரது எண்ண ஒட்டத்திற்கு முற்றிலும் முரணானது. ராணுவத்திலுள்ள ஒவ்வொரு அணியும் தனக்கென சில நோக்கங்களை வைத்துக் கொண்டு அதற்க்காக போராடுகின்றன. ஹெஃப்டர் உண்மையில் எண்ணெய் வளமிக்க ஆப்பிரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் பிடியை மேலும் தளர்த்தி உள்ளார்(அமெரிக்காவின் நிலையை/வலிமையை மேலும் குறைத்துள்ளார்.)

2.அமெரிக்கா சிரியாவில் (அமெரிக்காவிற்கு சாதகமான) அரபுசக்தியை (ராணுவத்தை) உருவாக்கமுற்படுகிறது

அமெரிக்கா, வடகிழக்கு சிரியாவில் தனது ராணுவத்திற்கு பதிலாக ஒன்றுபட்ட அரபு ராணுவத்தை நிறுவி அதன் மூலம் அந்த பகுதியை (வடகிழக்கு சிரியா) வலுப்படுத்த முயல்வதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஏப்ரல் 17ல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்துள்ள செய்தியின் படி அதிபர் டொனால்ட் டிரம்ப்ன் அரசு இயந்திரம் வடகிழக்கு சிரியாவை மீள் உருவாக்கம் செய்ய பில்லியன் கணக்கான டாலர்களை சவூதி அரேபியா, கத்தார் மற்றும் அரபு ஐக்கிய நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்கா சிரியாவில் தெற்கில் ஜோர்டான் எல்லையிலும், வடகிழக்கு சிரியா ஆகிய இரண்டு இடங்களில் தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. வடகிழக்கு சிரியாவை Kurdish Syrian Democratic Force (SDF) என்று சொல்லக்கூடிய குர்திஷ் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்துள்ள செய்தியின் படி ட்ரம்ப் வடகிழக்கு சிரியாவை மேம்படுத்தும் முயற்சி எனக் கூறிக்கொண்டு தன்னுடைய சுமையை அரபு நாடுகளின் தலையில் வைக்கும் வேலையை செய்கிறார்.

ட்ரம்ப்ன் புதிய செயலாளரான ஜான் போல்டன் எகிப்தின் உள்துறை உயர் அதிகாரியான அப்பாஸ் காமாலை அழைத்து அரபு ராணுவத்தை அதிகப்படுத்தி வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவத்திற்கு மாற்றாக அரபு ராணுவத்தை நிறுவ கேட்டுக் கொண்டுள்ளார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் முந்தைய இஸ்லாமிய நிலப்பரப்பில் ஈரானை பின்புலமாகக் கொண்ட ராணுவத்தை வளரவிடாமல் தடுப்பதும் அரபு படைகள் உள்நாட்டு குர்திஷ் இன ராணுவம் மற்றும் அமெரிக்க ஆதரவு படைகளுடன் இணைந்து இஸ்லாமிய தேசத்தை ( ISIS) வர விடாமல் தடுப்பதும் ஆகும் என அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறுவதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

3.பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு 4000 ராணுவ வீரர்களை கொடுத்துள்ளது

பாக்கிஸ்தான் தேசிய பொறுப்பு பணியகம் National Accountability Bureau (NAB) தலைவர் மற்றும் அதிபர் செயல்படாத நிலையில் தேசிய செயல்படுத்தப்படும் ஆணையத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜாவித் இக்பால் திங்கள் 17 ஆம் நாள் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவி காலத்தில், 4000 பாகிஸ்தானிய வீரர்களை வெளிநாட்டவர்கள் பணத்திக்காக அனுப்பியுள்ளதாக உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

மேலும் ஆழமாக மனித உரிமைக்கான தேசிய நாடாளுமன்ற நிலைக் குழு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவி காலத்தில், உள்துறை அமைச்சர் அப்தாப் சேர்பொ 4000 பாகிஸ்தானிய வீரர்களை வெளிநாட்டிற்கு பணத்திக்காக அனுப்பியுள்ளதாக ஜாவித் இக்பால் கோடிட்டு காட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் நாடாளுமன்றத்தில் இவர்களுக்கு (உள்துறை அமைச்சர் மற்றும் அதிபர்) எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை.
இக்பால் எந்த சட்டத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தானியர்கள் கொண்டு செல்லப்படுகிறரர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.