சமீப பதிவுகள்

பெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்

செய்தி
டான்சானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தார் அஸ் சலாம் பகுதியின் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பாக குழந்தைகளை பராமரிப்பில் அலட்சியமாக இருக்கும் கணவன்மார்களுக்கு எதிரான கோரிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் கூடினர் என்று செய்தி வெளியிட்டன. மார்ச் 8 ம் தேதி, ஆர். சி. பால் மாகோண்டா, இந்த பகுதியில் உள்ள தமது கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள் சட்ட உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதனோடு தங்களுடைய திரு மாகோண்டா அவர்கள் தனக்கு பிறக்காத பிள்ளைகளை வளர்த்து வருவதாக கருதுகின்ற ஆண்களையும் உதவி பெற்றுக்கொள்வதற்காக தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

கருத்து
முதலாளித்துவத்தின் துயரங்களில் ஒன்றாக பெண்களை கைவிடுதலும் ஆகும். பல்வேறு விஷயங்கள் அதற்கு காரணமாக இருக்கின்றது, அவையாவது ஜனநாயக பாலியல் சுதந்திரம், பலதாரமணத்தை எதிர்த்தல் மற்றும் முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்கள் ஆகியவை ஆகும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு செல்வத்தை சில செல்வந்தர்களின் கைகளில் மட்டும் சுழலும் வகையில் செயல்படுகின்றது அது சில ஆண்களை தமது குழந்தைகளை வளர்க்கும் சுமையை ஏற்றுக்கொள்ள தவறி தங்களுடைய வாழ்க்கைத் துணைகளை கைவிட நிர்பந்திக்கும் அளவுக்கு சுயநலத்தையும் பொருளாதார கஷ்டங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இந்த தீங்கு விளைவிக்கும் செயலாக்க முறை தன்னை மக்களிடமிருந்து பொருளாதாரத்தை சுரண்டுவதோடு மட்டும் திருப்திப்படுத்தி கொள்ளாது; மாறாக, அது அவர்களின் தார்மீக நடவடிக்கையையும், நேர்மையையும், நாணயத்தையும் மற்றும் பொறுப்பையும் அழிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் இருந்த போதிலும் பலதார மணத்தை சாத்தியமான அனைத்து வகையிலும் எதிர்த்து வரும் நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்று மக்கள் தங்களுடைய இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள தூண்டப்படுகின்றனர். முன்பு எப்போதும் இல்லாதிருந்ததை போன்று வரவிருக்கும் கிலாஃபத்தில் இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகள் எப்போதும் நடைபெறாது.

அல்லாஹ்வுடைய செயலாக்க அமைப்பான இஸ்லாத்தில் விபச்சாரம் ஹராமானதாகும், பலதார மணம் என்பது அவமரியாதைக்குரியதாக இருக்காது மற்றும் கிலாஃபத்தானது அனைத்து வளங்களையும் நியாயமான முறையிலும் நீதமான முறையிலும் விநியோகம் செய்து பொருளாதார சிக்கலை ஒரு அற்புதமான முறையில் சமாளிக்கும். மேலும், கிலாஃபத் குடிமக்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் முதலாளித்துவ செயலாக்க அமைப்பை போன்று லாபம் மற்றும் இச்சையின் அடிப்படையில் அல்லாமல் ஹலால் மற்றும் ஹராம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவதற்கு தூண்டும்.

Comments are closed.