சமீப பதிவுகள்

சிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்

செய்தி:

11 ஏப்ரல் 2018: சிரியா அரசுக்கு எதிரான அமெரிக்காவின் கருத்துக்கு ரஷ்யா எச்சரிக்கை தெரிவித்தது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா அரசு மேற்கொண்ட இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள முடிவை திரும்பபெறவேண்டுமென்று ரஷ்யா வலியுறுத்திவருகிறது.

அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அங்கு நடக்கும் ‘ராணுவ அத்துமீறல்கள்’ அனைத்திற்கும் அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டுமென்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. இரசாயன ஆயுதம் பயன்படுத்தும் சிரியா இராணுவத்திற்கு நாங்கள் வலிமையான பதிலடி கொடுப்போம் என்று டிரம்ப் இதற்குமுன்னர் உறுதியளித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விளக்கம்:

நடிகர் 1: இஸ்லாமை நிலைநாட்ட துடிக்கும் முஸ்லீம் மக்களை வேட்டையாடி அவர்களின் இரத்தத்தை குடித்துக்கொண்டிருக்கும் இரத்தக்காட்டேரி பஷார் அல் அசாத் அரசு.

நடிகர் 2: விடியலின் சூரிய ஒளியில் இரத்தக்காட்டேரி பஷார் அழிந்துவிடாமல் இருக்க உறுதியான கோட்டையை கட்டி பாதுகாக்கும் இரத்தக்காட்டேரியின் நண்பன் ரஷ்யா

நடிகர் 3: அமெரிக்கா – இந்த மொத்த நாடகத்திற்கும் கதை வசனம் எழுதி நாடகத்தை இயக்கி கொண்டிருக்கும் கதாநாயகன். ISIS ஐ இரத்தக்காட்டேரியின் எதிரியாக பாவித்து அவனை கொள்வதை போல் நாடகமாடி இஸ்லாமிற்காக போராடும் மக்களை கொள்ளும் இராஜதந்திரி.

நடிகர் 4: துருக்கி – துணை நடிகராக தோன்றும் இவர், பெருவாரியான முஸ்லீம் மக்களின் ஆதரவை பெரும் விதமாக இந்த இரத்தக்காட்டேரியை சூரிய ஒளியில் கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டு திரிகிறவர்.

இவர்களின் இந்த நாடகத்தை நாம் 2011 லிருந்து தினம் தினம் பார்க்கவில்லையா? காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்வது போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் நடைபெறுகிறதல்லவா? இந்த ஏப்ரல் மாதத்தில் தூமாவில் நடந்தது போன்று எத்தனை இரசாயன தாக்குதல்கள் 2011 லிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன? இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை தடைவிதித்து அரசிடமிருத்த இரசாயன ஆயுதங்களை இத்தாலிக்கு எடுத்து சென்று ஜூலை 2014ல் அழித்து விட்டதாக சொன்ன ஐ. நா. அதனை செய்யவில்லையா?

அப்படியென்றால், 2014 ல் அழிக்கப்பட்ட பிறகு பஷார் அரசுக்கு இரசாயன ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது? எப்படி இவர்களால் அதை கொண்டு முஸ்லீம் மக்களை கொல்ல முடிகிறது?

இப்போது பஷார் அரசுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக வீரவசனம் பேசும் அமெரிக்காவின் கருத்து நகைப்புக்குரிய ஒன்றுதான். ஏனென்றால் நிச்சயமாக அமெரிக்கா பஷார் படையின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக சொல்லிக்கொண்டு அப்பாவி பொதுமக்கள் மீதும் போராளிகளின் மீதும் குண்டுமழை பொழியும் – இதற்கு முன்னாள் அவர்கள் என்ன செய்தார்களோ அதேபோல். இன்னும் சொல்ல போனால் அமெரிக்காவிற்கு இந்த நாடகத்தின் கதாநாயகன் நான்தான் என்று அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு இதனை பயன்படுத்தி கொள்ளும்.

முஸ்லீம் சகோதர சகோதரிகளே! முழித்துக்கொள்ளுங்கள்.

நொறுக்கு தீனிகளை தின்றுகொண்டு ஒய்யாரமாய் சாய்ந்தமர்ந்து பார்க்கவேண்டிய நாடகமல்ல இது!

சிரியாவில் உள்ள முஸ்லிம்கள் கொல்லப்பட்டுக்கொண்டும், உயிருக்கு உத்தரவாதமில்லாத அச்ச நிலையிலும், உண்ண உணவில்லாமல் பசியிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்லிபிலும், அலிபோவிலும், ஹோம்ஸிலும், கவ்தாவிலும், இன்னும் சிரியாவின் மற்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் மறந்துவிட்டோமா? இதே நேரத்தில், பாலஸ்தீனில் முஸ்லிம்கள் இராணுவ வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எர்டோகனும் முஹம்மத் பின் சல்மானும் இன்னும் மற்ற ஆட்சியாளர்களும் இதற்கெதிராக என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

நிச்சயமாக இந்த ஆட்சியாளர்கள் இந்த பிரச்சனைகளை தீர்த்துவைக்க போவதில்லை, இத்தகைய பிரச்சனைகளும் ஓயப்போவதில்லை – எதுவரையெனில் தூய இஸ்லாமை தாங்கிப்பிடிக்கும் கலீஃபா தன்னுடைய முஸ்லீம் இராணுவத்திற்கு ஜிகாத் செய்யுமாறு அழைப்புவிடுத்து, அந்த இஸ்லாமிய இராணுவம் துன்பத்தில் வாடும் முஸ்லீம் மக்களை மீட்டெடுக்கும் காலம் வரும் வரை – இன்ஷா அல்லாஹ் அது வெகு தொலைவில் இல்லை!

Comments are closed.