சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 25.04.2018

சவுதியில் ஆட்சி கவிழ்ப்பா?

ஆண் அதிகாரிகளுடன் கை குலுக்க மறுத்ததால் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்

எர்டோகன் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

1.சவுதியில் ஆட்சி கவிழ்ப்பா?

கடந்த 21ம் தேதி சவூதி மன்னரின் அரண்மனையில் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இது ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என மன்னர் சல்மானின் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் போலியான ஆளில்லா விமானம் (toy drone) சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மன்னர் சல்மானுக்கும் அவரது மகன் முஹம்மது பின் சல்மானுக்கும் எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைதான் இது என்று ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஏனெனில் சல்மானும் அவரது மகனும் செய்த ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர் நடவடிக்கையாக இந்த சம்பவம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

2.ஆண் அதிகாரிகளுடன் கை குலுக்க மறுத்ததால் குடியுரிமை மறுக்கப்பட்ட பெண்

பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கும் விழாவில் ஆண் அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்த அல்ஜீரிய பெண்ணுக்கு அந்நாட்டின் (பிரெஞ்சின்) குடியுரிமை மறுக்கப்படுவதாக பிரெஞ்ச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பற்றி நீதிமன்றம் “குடியுரிமை விழாவில் முக்கியமான ஒரு தருணத்தில் நாட்டின் உயர் அதிகாரிகளிடம் இவ்வாறு நடந்து கொள்வது பிரான்ஸின் கலாச்சாரத்தோடு ஒன்றுபடாத தன்மையையே வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளது. அடையாளம் தெரியாத அந்த பெண் அல்ஜீரியாவில் பிரான்ஸ் குடிமகனை 2010ல் திருமணம் செய்திருந்தார் பின்பு 5 வருடங்கள் கழித்து பிரெஞ்ச் குடியுரிமைக்காக விண்ணப்பித்தார். 2016ல் தென்கிழக்கு பிரான்சில் அமைந்துள்ள கிரினோப்ளேவில் நடைபெற்ற பிரெஞ்சு குடியுரிமை விழாவில் உள்ளூர் அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரி ஆகிய இருவரும் ஆணாக இருந்ததால் அப்பெண் அவர்களோடு கை குலுக்க மறுத்து விட்டார். அவர் தன்னுடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் இதை செய்ததாக கூறியுள்ளார். இந்த காரணத்தினால் அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் நீதி மன்றம் சென்றார். 2 ஆண்டுகள் கழித்து நீதிமன்றமும் அவருக்கு குடியுரிமையை மறுத்தே தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்றம் இந்த தீர்ப்பை சட்டப்பூர்வமானது என்று உறுதியாக கூறியுள்ளது. பிரான்ஸின் கலாச்சாரத்தோடு ஒன்றிணையாத தன்மையே இந்த தீர்ப்புக்கு அடிப்படை என்றும் கூறியுள்ளது.

3.எர்டோகன் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

ஏப்ரல் 18 அன்று துருக்கி அதிபர் ரெசிப் தய்யப் எர்டோகன் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஜூன் 24 அன்று தேர்தல் நடக்கவிருப்பதாக கூறியுள்ளார். முன்னதாக தேர்தல் அடுத்த வருட இறுதியில் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நாளில் நடப்பதாக அறிவித்துள்ளார். எர்டோகனுக்கும் தேசியவாத இயக்கத்தின் தலைவருக்கும் இடையேயான நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தேர்தலானது எர்டோகனுக்கும் எர்டோகனின் Justice and Development Party (AKP)க்கும் ஒரு முக்கியப் பரீட்சையாக அமையும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், அதன் புகழை அழிக்கக்கூடிய சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எர்டோகன் பிரதான சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடிந்தது, இது ஜனாதிபதியின் அதிகாரத்தில் திருத்தங்களைச் செய்து பாராளுமன்றத்தில் அதிகாரத்தை குறைத்தது, அதே நேரத்தில் ஜனாதிபதிக்கு உச்சபட்ச அதிகாரம் அளித்தது. இவை அனைத்தும் ஜனாதிபதியின் அடுத்த பொதுத் தேர்தலுடன் நடைபெறுகின்றன.

ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் எர்டோகன் இன்னும் பல சவால்களை எதிர்கொள்வதற்கு முன் தனகிருக்கும் புகழையும் செல்வாக்கையும் பயன்படுத்த முனைகின்றார்.

Comments are closed.