சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான பிரான்ஸின் அறிக்கையானது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அறிக்கையாகும்

செய்தி:

பிரான்சில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்புவாத அலைக்கு எதிரான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கும் அறிக்கை ஒன்றை லா பாரிஸியன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

சார்லீ ஹெப்டோவின் இணை நிறுவனர் பிலிப் வால் தயாரித்து, முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி, முன்னாள் பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் மற்றும் நடிகர் ஜெரார்டு டெபார்டியூ போன்ற அறிவுஜீவிகள் கையெழுத்திட்ட அறிக்கையானது சமீபத்தில் நடைபெற்ற யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான வன்முறை தாக்குதல்களை கோடிட்டு காட்டியது.

“யூத எதிர்ப்புவாதம் என்பது யூதர்களுக்கு மட்டுமே உரிய காரியமல்ல, அது எல்லோருடைய காரியமாக இருக்கின்றது,” என அந்த கடிதம் குறிப்பிட்டுள்ளது, மேலும் “யூதர்களாக இருக்கும் ஒரே காரணத்தால் சமீப காலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பதினோரு யூதர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் – சிலர் சித்தரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது”. (ஆதாரம்: யூரோ நியூஸ்)

கருத்து:

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களால் தூண்டப்பட்ட யூத எதிர்ப்புவாதத்தினால் யூதர்கள் பாதிப்படைந்துள்ளார்கள் எனவும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்த வேண்டும் என்று அழைப்பு விடும் இஸ்லாமிய சொற்றொடர்களை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மறுபரிசீலனை செய்து அதை காலாவதியானதாக அறிவிக்க வேண்டும் எனும் அறிக்கை ஒன்றை பிரஞ்சுடைய அறிவுஜீவிகளும் பிரபலமான நபர்களும் எழுதியும் கையெழுத்திட்டும் உள்ளனர்.

இந்த அறிக்கையானது 85 வயதுடைய யூத பெண்மணி மிரெய்ல் நால் என்பவர் முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ளது. அந்த குற்றத்தை நிகழ்த்தியவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியாத நிலையிலும், இந்த நிகழ்வை ஆரம்பத்திலிருந்து யூத எதிர்ப்புவாதத்தின் காரணமாக தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே ஊகிக்கப்பட்டு வருகிறது. யூத பேரழிவிலிருந்து தப்பிய ஒருவர் சில அரபு வாக்கியங்களை கூறிய முஸ்லிம்களால் கொல்லப்பட்டது என்பது அவர்களை பொறுத்தவரை ஒன்றை மட்டுமே குறிக்கின்றது; யூத எதிர்ப்புவாதம்.

மேலும் யூத அமைப்புகளுக்கு கீழ் இயங்கும் ஒரு யூத அமைப்பான சி.ஆர்.ஐ.எஃப் இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாபெரும் பேரணி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்த “வைட் மார்ச்” எனும் பேரணியில் கலந்து கொண்ட முக்கியமான பிரபலங்களில் பிரதம மந்திரி எட்வர்ட் பிலிப்பும் ஆவார், பிரஞ்சு அதிபரான இமானுவேல் மேக்ரன் அதன் இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்டார். ஆக இந்த பிரச்சனையானது முஸ்லிம்கள் இஸ்லாமிய நோக்கங்களை கொண்டு நிகழ்த்தப்பட்ட ஒரு யூத எதிர்ப்பு குற்ற நிகழ்வாக தேசிய அளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தை நிகழ்த்தியவர்களின் நோக்கம் யூத எதிர்ப்புவாதத்தின் காரணமாக உந்தப்பட்டு இருப்பதாக நாம் கருதினாலும், இந்த குற்ற நிகழ்வை பொதுப்படையாக இஸ்லாமிய சமூகம் அல்லது இஸ்லாம் ஒரு மதமாக நிகழ்த்தியது என்றல்லாமல் ஒரு தனி நபர் நிகழ்த்திய நிகழ்வாகவே நாம் அதை மதிப்பிட வேண்டும். ஆனால் இதற்கு மாறாக பிரஞ்சு அதிகாரிகளும் ஊடகங்களும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதான காழ்ப்புணர்ச்சியை தூண்டின. முஸ்லிம் சிறுபான்மையினருடன் ஏற்கனவே எளிதில் முறிந்து போகும் அளவுக்கு இருந்த உறவானது மேலும் சிதைந்து போகும் அளவுக்கு இது கொண்டு சென்றுள்ளது. ஆக யூத எதிர்ப்புவாதம் தொடர்பாக வெளிவந்த முந்தய அறிக்கைகளுக்கு முரணாக இருக்கும் வேளையிலும் அதற்கான வலுவான அடிப்படைகள் இல்லாதிருந்த போதிலும் பிரஞ்சு அதிகாரிகளால் இந்த யூத எதிர்ப்புவாத துருப்புச்சீட்டு வெற்றிகரமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.உதாரணமாக, புலம் பெயர்ந்தவர்களுக்கான “இஸ்ரேலிய” மந்திரிசபையால் தொகுக்கப்பட்ட அரசு அறிக்கை ஒன்றில் 2017 ம் ஆண்டில் பிரான்சில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 2015 மற்றும் 2016ஐ காட்டிலும் 63.6 சதவீதம் குறைந்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது!

யூத எதிர்ப்புவாதம் என்பது ஒரு பிரஞ்சு பிரச்சனையாகும்; பிரஞ்சு தேசியவாதிகளும் வலதுசாரிகளும் இதில் பெரும் பங்காற்றுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட கூடாது. அரசியல் கோணத்தின் அதீத இடது சாரியாகவும் வலது சாரியாகவும் இருக்கும் லா பிரான்ஸ் இன்ணூமைஸ் (அடி பணியாத பிரான்ஸ்) மற்றும் மரைன் லா பென்னின் தேசிய முன்னணி கட்சிகள் இந்த பேரணியில் பங்குபெறுவதை வரவேற்காதது யூதர்கள் மீதான பிரான்சின் உணர்வுகளை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. சி.ஆர்.ஐ.எஃப் தலைவர், பிரான்சிஸ் கலீஃபட்: “இவ்விரு இடதுசாரி மற்றும் வலதுசாரியில் அதிக அளவிலான யூத-எதிர்ப்புவாதிகள் இருப்பதன் காரணமாக இந்த கட்சிகள் (இந்த பேரணியில் கலந்து) கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்கிவிட்டது,” என கூறினார்.

ஆக பிரான்ஸ் ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனையான யூத எதிர்ப்புவாதத்தை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுடன் தொடர்பு படுத்துவதென்பது இந்த உணர்ச்சிமிக்க மனோபாங்கை முஸ்லிம் சமூகத்தை பிரஞ்சு கலாச்சாரத்திற்கு ஒத்திசைந்து செயல்படுத்துவதற்கான நம்பிக்கையில் விதிக்கப்படும் அழுத்தத்தை நியாயப்படுத்துவதற்கான தந்திரமான முயற்சியாகும்.

இதுவரையிலும், சமூகத்தின் அனைத்து மதங்கள் மீது “நடுநிலையான” நிலைப்பாடை கொண்டிருப்பதாக கூறவதென்பது எந்தவொரு யதார்த்தத்தையும் கொண்டிராத ஒரு மாயையை தவிர வேறெதுவும் இல்லை, அதேவேளையில் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வையும் அச்ச உணர்வையும் திட்டவட்டமாக பரப்பப்படுகிறது மேலும் பிரஞ்சு வீதிகளில் மஸ்ஜிதுகள் மற்றும் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பிரஞ்சு அரசாங்கம் இனவாதத்தை எதிர்ப்பதற்காக அதிலும் குறிப்பாக யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிராக 100 மில்லியன் யூரோக்களை செலவு செய்து யூதர்களுடைய கடைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சினகாகுகளை (வணக்கஸ்தலங்கள்) பாதுகாத்து வருகிறது.

அதேபோல் இந்த அறிக்கையின் முக்கிய கோரிக்கையாக அவர்களுடைய தீய எண்ணங்களின் அடிப்படையில் வன்முறைக்கு தொடர்பான குர்’ஆன் மற்றும் ஹதீஸிலுள்ள வாக்கியங்களின் அர்த்தங்களை மாற்ற வேண்டும் என்று முஸ்லிம் மார்க்க அறிஞர்களை நோக்கி விடுத்திருப்பதில் எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை. கருத்து மோதலை கொண்டு அல்லாமல் அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் திரித்துக் கூறுவது என்பவற்றை கொண்டு “பிரஞ்சு” இஸ்லாம் எனும் கருத்து வலுவாக பரப்பப்பட்டு வருகிறது.

ஒருகாலத்தில் தாம் புதியதாக ஏற்றிருக்கும் உலகின் மீதான பார்வையை தங்களுடைய அறிவார்ந்த கட்டமைப்பின் மூலம் வெகுஜனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனை வாதிகளையும் அறிவுஜீவிகளையும் உருவாக்கிய தாராளவாத மதசார்பின்மையின் தொட்டிலானது தற்போது பகுத்தறிதலை கைவிட்டுவிட்டு அதன் சிறுபான்மையினரை நசுக்குவதற்காக தந்திரமாக சூழ்ச்சிகளை கையாளும் யுத்தியை கையில் எடுத்துள்ளது.

மதசார்பின்மை மரணித்துவிட்டது, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அதன் மீது இப்போது நம்பிக்கையை கொண்டிருக்காத சிந்தனாவாதிகள் மற்றும் அறிவுஜீவிகளுக்கும் மதசார்பின்மை மரணித்துவிட்டது.

﴿قَدْ بَدَتِ الْبَغْضَاء مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ﴾

“…அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை.”
(அல்குர்ஆன் : 3:118)

Comments are closed.