சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

தாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா

மார்ச் மாதம் 27 ஆம் தேதி TASS.ru என்ற ரஷிய நிறுவனம் அறிவிப்பதாவது: ஆப்கானின் “அமைதி செயலாக்கம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய இணைப்பை“ பற்றிய சர்வதேச மாநாடு தாஷ்கெண்டில் தொடங்கியது. உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி ஷவாகாட் மிர்சியோவ் இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். இம்மாநாடு ஆப்கானிஸ்தானின் நிலைமையைத் தீர்க்க சர்வதேச சமூகம் மேற்கொண்ட முயற்சிகளின் தர்க்கரீதியான தொடர்ச்சி ஆகும். இதில் 20 திற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரநிதிகளும் சர்வதேச அமைப்புகளும் பங்கு கொண்டதாக மாநாட்டை வழிநடத்திய ஷவாகாத்தின் அமைப்பாளர்கள் கூறினர்.

தொடக்க விழாவில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவாகத் மிர்சியோவ், ஆப்கானிஸ்தானின் தலைவர் அஷ்ரப் கானி, வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி Federica Mogherini வரவேற்புரையை வழங்கினர். ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu, ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி, நேட்டோ மற்றும் சி.எஸ்.டி.ஓ உட்பட கிட்டத்தட்ட 24 நாடுகள் மற்றும் அமைப்புகளின் உயர்மட்ட பிரதிநிதிகள், இக்கூட்டங்களில் பங்கேற்றனர்.

கடந்த சில வருடங்களாகவே மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய இணைவைப்பாளர்கள் தாலிபான் முஜாஹிதீன்களை பேச்சுவார்த்தைக்கு உட்கார வைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதய மாநாடே இதற்கு உதாரணம். என்னதான் காலனியாதிக்க நாடுகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். அதுதான் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில்.

மத்திய ஆசிய மக்கள் சுமார் 13 நூற்றாண்டுக்கு முன்னரே இஸ்லாமை ஏற்று கொண்டனர். இறையச்சத்திற்கும், அறிவுத்திறனுக்கும், தைரியத்திற்கும் இவர்கள் பேர்போனவர்கள்.  கிலாஃபா வீழ்த்தப்பட்டதற்கு பிறகு மத்திய ஆசிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சோவியத் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது. சோவியத் வீழ்ந்ததற்கு பிறகு இந்நாடுகள் புதிதாக உருவான ரஷியாவின் கட்டுபாட்டிற்குள் வந்தது. வளம் மிக்க இயற்கை வளங்களும் முக்கியான புவி அரசியல் நிலங்களை கொண்டதனால், மத்திய ஆசிய நாடுகள் மேற்கத்திய காலனியாதிக்க வாதிகளால் குறிப்பாக அமெரிக்காவால் ஈர்க்கப்பட்டனர். 2000 த்தின் முற்பகுதியில், அமெரிக்கா அந்த நாடுகளில் நுழைந்து அதன் செல்வாக்கை உறுதிப்படுத்தியது, உஸ்பெகிஸ்தானிலும் கிர்கிஸ்தானிலும் கூட இராணுவ தளங்களை நிறுவினர், ஆனால் இறுதியில் இவர்கள் இப்பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இன்றும், ரஷ்யாவின் பலவீனம் மற்றும் அதன் வலிமை ஆகியவற்றைப் பயன்படுத்தி, அமெரிக்கா இப்பகுதியில் மீண்டும் நுழைந்து அதன் மேலாதிக்கத்தை இங்கே நிறுவ முயல்கிறது. இதனை அடைவதற்காக அது பல வழிகளை கையாண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் ஆப்கான் பிரச்சனையில் உஸ்பெகிஸ்தானை ஈடுபடுத்துவது. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்ததும் பிறகு ஆப்கான் அதனிடம் கட்டுப்படக்கூடிய நாடாகவும் மாறியதை நாம் நன்கு அறிவோம்.

ஆப்கான் எல்லையை உள்ளடக்கிய உஸ்பெகிஸ்தானிடம் அமெரிக்க, இதனை ஒரு சாக்காக வைத்து, அதனுடன் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களை செய்து, பிறகு அதற்கு கட்டுபட்ட நாடாக உஸ்பெகிஸ்தானை ஆக்க அமெரிக்க முயற்சிகளை மேற்கொள்கின்றது.  ரஷியாவை பொருத்தவரை “பிராந்திய பாதுகாப்பின் தீர்வு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிறுவுதல்” போன்ற மிக முக்கியமான சர்வதேச பிரச்சனைகளை தாம் வழி நடத்துவதாக கருதுகின்றது. இது ரஷியா அரசியலில் அப்பாவியாக இருப்பதனாலேயே ஆகும். மேலும் அது அமெரிக்காவை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து தன்னுடைய அடிமையான உஸ்பெகிஸ்தானை அமெரிக்காவுடன் பணிந்து போக ரஷியா கட்டளை இடுகின்றது.

ஆனால் உண்மையில் “பிராந்திய பாதுகாப்பின் தீர்வு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சமாதானத்தை ஸ்தாபித்தல்” என்பது போன்ற கோஷங்கள் அமெரிக்கா மற்ற நாடுகளை காலனியாதிக்கம் செய்ய பயன்படுத்தக் கூடிய கோஷங்ககளாகும். அமெரிக்க தன்னுடைய இலக்கை அடைந்து விட்டால் உடனே அது ரஷியாவை கைநீட்டி விட்டு சென்று விடும் எப்படி அது சிரியாவில் செய்ததோ அது போல. பிறகு ரஷியா வழக்கம்போல் உடைந்த பானையாகவே இருக்கும். இறைமறுப்பாளர்கள் தலிபான் முஜாஹிதீன்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வெகு காலமாக முயற்சி செய்வதை பொறுத்தவரை, இது ஒரு அபாயகரமான சிந்தனையாகும். தாலிபான்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்கள் அனைவருக்கும் தான். இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் இருக்க கூடிய அரசியல் கல்வியும் அரசியல் சிந்தனையும் இல்லாததுமே, முஜாஹிதீன்கள் இதற்கு முன்னரும் தற்பொழுதும் தோற்பதற்கு முக்கிய காரணாமாகும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சிரியாவாகும். ஆப்கானிஸ்தானிற்கான ரஷ்ய ஜனாதிபதியின் சிறப்பு தூதரும், இரண்டாம் ஆசிய துறையின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனருமான ஜாமர் காபுலோவ் மாநாட்டில் பேசுகையில்: “ஆப்கானிய அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் தாலிபான்களை- உண்மையான பேச்சுவார்த்தைகளை தொடங்கிய அவர்களை விலக்குவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இடப்பட்டிருக்கும் தடையை தற்காலிக இடைநீக்கம் செய்ய மற்ற ஐ.நா.பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுடன் தாம் சேர தயார்” என அவர் கூறினார்.

இதேபோன்ற ஒர்அறிக்கையை அமெரிக்க துணை செயலாளர் டி. ஷானோனால் கூறினார் : “முக்கிய விஷயம் என்ன வேனில் தலிபான் பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான் தலைமையுடன் பேச்சுவார்த்தை மேஜையில் உட்கார்ந்துள்ளனர், மேலும் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்” என அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 28 ம் தேதி காபூலில் நடந்த “காபூல் செயல்முறை” யின் இரண்டாம் சர்வதேச மாநாட்டு திறப்பு விழாவில் அதிபர் அஷ்ரப் காணி கூறுகையில், தாலிபானுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்தார் மேலும் அதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் படையாக அமைக்க தாயராக இருப்பதாக அவர் கூறினார்.

எனவே, மத்திய ஆசியாவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் செல்வாக்கு மண்டலத்திற்கு போட்டியிட்டு கொண்டிருந்தாலும், முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து திசை திருப்புவதிலிருந்தும் முஜாஹிதீன்களை ஜிஹாதை விட்டும் வெளியேற்று வதிலிருந்தும் அவர்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றார்கள்.

தாலிபான் முஜாஹிதீன்களுக்கு நினைவூட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்,

அல்லாஹ் (சுபு) கூறுவது போல்:

(وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ)

“மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.”

ஆப்கானிஸ்தானை சோவியத் அரசு தாக்கியதை நினைவு கூறுங்கள், காலனியாதிக்க குஃபார்களுடன் அமெரிக்க மற்றும் இதர நாடுகளுடன் ஆயுதத்திற்காக நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது? சிரியாவில் கொடியன் பாஷாறிற்கு எதிராக போராடிய முஜாஹிதீன்களை நீங்கள் பாருங்கள். அவர்களுக்கு வரலாற்றிலிருந்து எந்த படிப்பினையும் கிடைக்க வில்லை, சவூதி துருக்கி கத்தார் போன்ற அடிமை நாடுகளுடனும் குஃபார்களுடனும் அவர்கள் ஒப்பந்தம் வைத்து கொண்டனர். அதனால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? தோல்வியை தவிர வேறதுவும் இல்லை.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடன் சுருக்கி கொண்ட உங்களுடைய போராட்டம், காலனியாதிக்க குஃபார்களின் எல்லைகள் இதனைவிட பெரியது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்!. நீங்கள் தொடுத்திருக்கும் போராட்டம் இஸ்லாமுடைய போராட்டமாகும். எனவே யாரெல்லாம் இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்களோ அவர்களுடைய எல்லைகள் மோரோக்கோ விலிருந்து இந்தோனிசியா வரை உள்ள எல்லைகளாகும். காலனியாதிக்க குப்பார்கள் உங்களை திசை திருப்ப நினைக்கிறார்கள், வெற்று வாக்குறுதிகளை கொண்டு உங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இறுதியாக உங்களை ஆயுதத்தை கீழிறக்கி மதசார்பின்மையை ஏற்றுகொள்ள வற்புறுத்துவார்கள். உங்களின் இஸ்லாத்தை நிராகரிக்க அவர்கள் வற்புறுத்துவார்கள். பிறகு உங்களை அறியாமையில் வாழவைப்பார்கள்.

ஜாக்கிரதை! அவர்களின் ஏமாற்றத்திற்கும் வெற்று வாக்குறுதிகளுக்கும் ஏமாந்து விடாதீர்கள். ஆப்கானிஸ்தான் நீண்ட ஆக்கிரமிப்பை நீங்கள் மறக்க வேண்டாம்! பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பல ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டதை மறக்க வேண்டாம்! அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக !

«لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா அறிவிக்கிறார்கள்:
“ஒரு மூமின் இருமுறை ஏமாற மாட்டான் ” (புஹாரி)

Comments are closed.