சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மின்சார பற்றாக்குறை என்பது இஸ்லாம் ஏவிய படி மின்சாரத்துறையை பொது சொத்தாக கருதினால் மட்டுமே தீர்க்க முடியும்

செய்தி:

17 ஏப்ரல் 2018 ஆம் தேதி அன்று தேசிய மின்சார சக்தி கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு கராச்சியில் நிகழும் மின் தட்டுப்பாட்டுக்கு கராச்சி எலக்ட்ரிக் எனும் நிறுவனத்தை குற்றம் சாட்டி அரசாங்கத்திடம், எரிவாயுவை அதிகமாக்குமாறு கட்டளையிட்டு மக்களின் பிரச்னையை தீர்க்க கூறியுள்ளது. இந்த ஆணையம் மின்தட்டுப்பாடு சம்பந்தமான அறிக்கையை அளித்து, அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உள்ளது.

கருத்து:

ஏப்ரல் தொடக்கம் முதல் கராச்சி மக்களுக்கு இரு இன்னல்கள் உள்ளது, முதலாவது இந்த கோடையின் கடுமையான வெயிலின் தாக்கம் மற்றொன்று கராச்சி நகரத்துக்கு மின்சாரம் வழங்கும் கராச்சி மின்சார நிறுவனம் தொடர்ந்து சில வாரங்களாக குறைந்த மின்சாரத்தை உற்பத்தியை மேற்கொள்வது. மின்சார நிறுத்தம் என்பது 3 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை சில பகுதிகளிலுள்ளது. மக்களின் கோபத்தை திசைதிருப்ப இந்நிறுவனம் எஸ்.எஸ்.ஜி.சி நிறுவனம் தங்களுக்கு கூடுதல் எரிவாயுவை தேவைக்கேற்ப தராததே இதற்க்கு கரணம் என்று குற்றம் சாட்டியது. இதற்கு எஸ்.எஸ்.ஜி.சி நிறுவனம் முதலில் கராச்சி மின்சார நிறுவனம் தங்களுக்கு கொடுக்கவேண்டிய எட்டாயிரம் கோடி ரூபாய் பாக்கியை செலுத்த வேண்டும் என்றது. இவர்களின் பிரச்சனைக்கு மத்தியில் கராச்சி மக்களே அவலத்திற்குள்ளாகின்றனர்.

எஸ்.எஸ்.ஜி.சி என்பது அரசாங்கம் கட்டுப்படுத்தும் நிறுவனம் என்ற போதிலும் இது கராச்சி மின்சார நிறுவனத்திடம் ஒரு தனியார் நிறுவனம் போல் செயல்படுவதால் இதற்க்கு கராச்சி மின்சார நிறுவனம் மீது எந்த அதிகாரமுமில்லை. அங்குள்ள நிலவரம் படி கராச்சி மின்சார நிறுவனம் தன்னுடைய முழு திறனை பயன்படுத்தவில்லை காரணம் செயல்படுத்தப்படட இயந்திரங்கள் எரிசக்தி எண்ணெய்யால் இயங்க கூடியது மேலும் அதன் விலையதிகமாகும் எனினும் இந்நிறுவனம் தங்களுடைய லாபத்தை அதிகமாக்கி செலவை குறைக்க எண்ணையை பயன்படுத்தாமல் எரிவாயுவை அதிகமாக்க கோருகிறது.

நெப்ரா அறிக்கையின் மூலம் தெரியவருவதென்னவெனில் மின்சாரத்தை தனியார் மயமாக்குதலென்பது பொது மக்களின் நலன்களையும் பொருளாதாரத்தையும் பெருமளவு பாதிக்கும். இன்றைய உலகில் மின்சாரம் மற்றும் எரிவாயு என்பது மக்கள் மற்றும் நிறுவனங்களின் அத்தியாவசிய தேவையாகும். இந்த வளங்களை தனியாரிடம் கொடுப்பதென்பது அவர்களின் லாபத்தை கூட்டவே தவிர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையாது. அதாவது மக்களின் சேவை என்பது தனியார் நிறுவனத்தின் லாபத்தை சார்ந்துள்ளது லாபம் குறைய நேரிட்டால் மக்களின் சேவைகளில் கராச்சி நகரத்தில் நிலவுவதுபோல் பிரச்சனைகளும் துயரங்களும் உருவாகும். கராச்சி நகரத்தின் மின்சார தட்டுப்பாடென்பது திறனற்ற நிர்வாகத்தினாலோ அல்லது பொருளாதார பற்றாக்குறையினாலோ ஏற்பட்டதல்ல இது பொது மக்களுக்கான சேவைக்குரிய வளங்களை தனியார் முதலிகளிடம் ஒப்படைக்கலாம் எனும் தவறான கொள்கையாலேயாகும். முதலாளித்துவத்தின் அக்கறை மக்களின் மீது எந்தளவு உள்ளதென்பது கராச்சி நகரத்தின் துயரத்தை காணும்போது அறியலாம்.

இஸ்லாம் இயற்கை வளங்களை பொது சொத்தாக அங்கீகரித்து ஆட்சியாளர்களை அதன் நலன்களை மக்கள் அனைவரின் மீதும் பங்களிக்க நிர்பந்திக்கிறது. இஸ்லாம் இந்த வளங்களை பொது சொத்தாக ஆக்கியுள்ளதன் மூலம் இதன் நிர்வாகம் என்பது அரசின் மீது கடமையே தவிர எந்த தனியார் நிறுவனமும் இதனை கையகப்படுத்த முடியாது. எனவே கிலாஃபா நிறுவப்படுமானால் நேர்வழிப்பெற்ற கலிஃபா மின்சாரம் எரிவாயு போன்ற வளங்களை பொது சொத்துக்குள் கொண்டுவந்து இத்தகைய பிரச்சனைக்கான மூல காரணத்தை நீக்கி குறைந்த செலவில் மின்சாரத்தை கிடைக்க வழி செய்வார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

«الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلاَثٍ فِي الْمَاءِ وَالْكَلإِ وَالنَّارِ»

முஸ்லிம்கள் மூன்று விஷயங்களில் பங்குதாரர்கள் அவை நீர், உணவுவளங்கள் மற்றும் நெருப்பு (எரிசக்தி வளம்). [அபூ தாவூத் ]

Comments are closed.