சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

காஸா: “நாட்டை திரும்பகோரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்” நாட்டின் விடுதலை பட்டங்களின் (காத்தாடிகள்) மூலமா அல்லது இராணுவத்தின் மூலமா?

செய்தி:

கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதியில் திட்டமிட்டு ஆரம்பித்த 6 வார போராட்டம் வரும் மே-15 யில் முடிவடைகிறது. இந்த நாள் (மே-15) பாலஸ்தீன வரலாற்றில் நடந்த 1948 அரபு-இஸ்ரேலிய போரின்போது “நாக்பா” என்ற பேரழிவில் 750,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளால் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு அகற்றப்பட்டனர். அதை நினைக்கும் விதத்தில் 70 வது ஆண்டுவிழாவாக இந்த போராட்டத்தை முடிக்க உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட 30-ஆம் மார்ச் முதல் இன்று வரை இஸ்ரேலிய படைகளால் 37 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு 4300 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி கிடைத்த தகவல். பாலஸ்தீனிய சிறைச்சாலை தினம் என்ற நாளில் ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளியன்று தங்களின் ஆர்ப்பாட்டத்தை “ஷஹீதுகள் மற்றும் கைதிகளுக்கு” ஆதரவாக ஏற்பாடு செய்தார்கள். ஆதாரம்

(http://www.middleeasteye.net/news/demonstrators-gather-west-bank-gaza-mark-palestinianprisoner-day-119480138).

ஆனால் சமூக ஊடகங்களில் சில பாலஸ்தீனியர்கள் அந்த தினத்தை “காத்தாடிகளின் வெள்ளிக்கிழமை” என்று பெயரிட்டனர்.

பட்டங்கள் உலகம் முழுவதும் சமாதானத்திற்கான அடையாளமாக உள்ளன என்று இளைஞர் ஒருவர் MEE யிடம் கூறினார். “சுதந்திரத்திற்கான எங்கள் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் பட்டங்களை விடுகின்றோம்” என்றார்

(http://www.middleeasteye.net/gaza-greatmarch-return-4th-friday-israel-palestine).

கருத்து:

கடந்த 70 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு குறிப்பாக காஸா தனிமைப்படுத்தப்பட்டு குண்டுகளாக தாகப்பட்டு கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த ஆர்ப்பாட்டத்தால் மனிதர்கள் தங்கள் உயிர்களாலும் உடல்களாலும் கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களையும், பார்வையாளர்களையும் நேரடியாக துப்பாக்கிச் சூடுகளால் காயப்படுத்திய யூதப் படைகளின் சக்தியைத் திசைதிருப்பவும் அதை தடுக்கவும் பொதுமக்கள் வாகன டயர்களை எரித்து தங்களை தற்காத்துக்கொண்டனர்.

பாலஸ்தீனிய மக்களுக்கும் தனக்கும் துரோகத்தை இழைப்பவர்களை சுட்டுக் கொல்லும் இந்த யூத தலைமையோடு இயல்பான நடைமுறைகளைத் தொடர விரைவாகச் செயல்படும் காஸாவின் முஸ்லிம் தலைவர்களைவிட அங்குள்ள மக்கள் தைரியமாக யூத ஆக்கிரமிப்பை எதிர்த்து தங்களுடைய எதிப்பை காட்டுகின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு திரும்புவதற்கான அகதிகளின் உரிமையை சில போராட்டக்காரர்கள் பட்டங்களை கட்டியெழுப்பி உம்மதிலுள்ள இராணுவ சக்திக்கு அவமானத்தை சேர்க்கும் விதத்தில் அமைதியான முறையில் செய்திகளை தெரிவிக்கின்றனர். முஸ்லிம் நாடுகளின் இராணுவங்களில் சக்திவாய்ந்த ஆள் பலம் மற்றும் பிரமாண்டமான தொழில்நுட்ப கருவிகள் இருந்தும் அவை வெறுமென சர்வதேச காட்சிகளில் அணிவகுக்கப்ட்டுள்ளன. அதே நேரத்தில் பாலஸ்தீன மக்களோ தங்களை தற்காத்துக்கொள்ள டயர்களை எரித்தும் யூத படைகளால் சுடப்படும் விஷ வாயுக்களிலிருந்து தங்களை காப்பாற்றுவதற்காக கச்சா வாயு முகமூடியை உருவாக்குவதிலும் திரும்பியுள்ளனர்.

முஸ்லிம் படைகளை சேர்ப்பதன் மூலம் தான் அகதிகள் மற்றும் தாங்கள் வாழும் இடத்தை விட்டு அகற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் பாலஸ்தீனத்திற்கு கொண்டு சேர்க்க முடியும். மேலும் அங்குள்ள எதிரியான யூத ஆக்ரமிப்பை ஒழித்துகட்டி பாலஸ்தீனிய ஆணையிடம் (Palestinian Authority) அதன் உரவுகளை நீக்கி அதற்கு பதிலாக கிலாஃபா ராஷிதாவை நிறுவதன் மூலம் தான் இப்பிரச்சனையை தீர்க்க முடியும்.

மலிவான போராட்டம் போதும்!

மலிவான இரத்தம் சிந்துதல் போதும்!

வண்ணமயமான பட்டங்களை விடுவதன் மூலம் அல்லது டயர்களை எரித்து தற்காத்துக்கொள்ளுவதன் மூலம் முஸ்லீம் உயிர்கள் சூதாடுவதற்கு மலிவான பொருட்கள் அல்ல அவை கண்ணியமிக்கவை ஆகும்.

Comments are closed.