சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மிஸ்டர் மக்ரான் அவர்களே! தேசிய வாதத்தில் பாதுகாப்பானது என்று எதுவும் இல்லை அனைத்துமே பேரழிவை தரக்கூடியதுதான்

செய்தி:

பிபிசி அறிவிப்பதாவது அமெரிக்க காங்கிரசின் கூட்டு இல்லங்களில் தேசியவாதத்தையும் தனிமைவாதத்தையும் (isolationism) கண்டனம் செய்யும் விதமாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் தனது உரையை நிகழ்த்தியுள்ளார். அவர் கூறுகையில் “தேசியவாதம் தனிமைவாதம் விலகி கொள்ளுதல் போன்றவைகள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பயத்தினால் எடுக்கப் படக்கூடிய தற்காலிக தீர்வாகும். ஆனால் உலகை விட்டும் தங்களை தாங்களே தடுத்து கொள்வது உலக வளர்ச்சியை ஒருபோதும் தடுக்காது. அது மக்களின் பயத்தை தணிக்காது மாறாக அது இன்னும் பயத்தை தூண்டிவிடும்.” என அவர் கூறியுள்ளார்.

“மிகுந்த செல்வச் செழிப்பான பாதையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற தீவிரமான தேசியவாதம் (மக்கள் மனதில்) ஊடுருவும் செயலை ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம். ” என அவர் கூறினார்.

கருத்து:

தஞ்சம் புகுவதற்கான கடுமையான புதிய குடியேற்ற சட்டத்தின் (immigration law) மசோதாவை பிரஞ்சு தேசிய சட்டமன்றம் நிறைவேற்றிய அதே வாரத்தில்தான் பிரான்ஸ் அதிபர் இது போன்ற உரையை நிகழ்த்தியுள்ளார். புகலிடம் கேட்போரின் விண்ணப்பத்தின் கால அளவை குறைப்பது சட்ட விரோதாமாக குடியேறியவர்களின் சிறை காலத்தை இருமடங்காக கூட்டுவது பிரான்சிற்கு சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு ஓர் ஆண்டு கால சிறை தண்டனை போன்றவைகள் இம்மசோதாவின் அம்சமாகும். எங்கெல்லாம் மனித மூலையிலிருந்து சட்டங்களும் நல்லதும் தீர்மானிக்கப் படுகின்றதோ அங்கெல்லாம் இது போன்ற முரண்பாடுகளை காண முடியும்.

மனிதர்களின் விவகாரங்களை நிர்வகிக்க மேற்கத்தியர்களால் எடுக்க பட்ட ஒரு மோசமான தீர்வுதான் இந்த தேசிய வாதம். இதன் மூலம் குடியுரிமை என்பது ஒரு நாட்டின் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் குடியுரிமை உள்ளவர்கள் தங்களுக்கென்று ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்கி பிறகு புதிதாக குடியேறுபவர்களை தங்களிடம் சேர்க்கலாமா வேண்டாமா என்ற முடிவையும் எடுக்கின்றனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதனை நாம் காண முடியும். இதனால் புதிதாக குடியேறிவர்களை விட தங்களுக்கு அதிக உரிமை இருப்பதாக குடியுரிமை பெற்றவர்கள் நினைகின்றனர் எனவே புதிதாக குடியேறிவர்கள் ‘சிறுபான்மையினர்’ என்று வரையறுக்கப் படுகின்றனர்.

தனது மக்களிடேயும் பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதுபோன்ற வெறித்தனமான தேசியவாதம் வளர்ந்து வருவதை கண்டிக்க கூடிய அதிபர் மக்ரான் தொல்லை தராத தேசியவாத பிடிப்பு மக்களிடம் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்க கூடாது. அனைத்து மேற்கத்திய நாடுகளிலும் குடியுரிமையின் அடிப்படையாக தேசிய வாதம் உள்ளது. இதில் நன்மை இருக்கின்றது என்று நினைக்கும் காலமெல்லாம் இதனுடைய தீங்கின் வளர்ச்சியை கட்டுபடுத்த முடியாது. இது பேரழிவாக வெளியில் வந்து சிறுபான்மையின மக்களை அழிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருக்கும்.

இதே பிரான்சில் தான் பாஸ்கு (Basque) மற்றும் ப்ரேடன் (Bretons) போன்ற ஐம்பது லட்ச குடிமகன்களுக்கு தங்களின் மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் மறுக்க படுகின்றன. இதே பிரான்ஸ் தான் சிறுபான்மையின் உரிமை தேசிய வாதம் போன்றவைகளை உஸ்மானிய கிலாபத்தில் புகுத்தியது. ‘குடியேறியவர்கள்’ ’சிறுபான்மையினர்’ என்பவை எல்லாம் உருவாக்கபட்ட பிரச்சனைகளாகும். இதற்கு தீர்வை மதசார்பற்ற ஜனநாயக அரசால் கொடுக்க முடியாது. இது ஏனெனில் பிரச்சனயை உருவாக்கிய அரசியல் அமைப்பே பிரச்னையை தீர்க்க முடியாது.

உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் அநியாயக்கார ஆட்சியாளரிடமிருந்து தப்பிக்க தஞ்சம் கோரும் இடமாக மேற்கத்திய நாடுகள் சென்ற நூற்றாண்டில் கருதப்பட்டன. இது ஏனென்றால் அவர்களுக்கு இவ்வநியாக்காரர்கள் மேற்குலகின் கைப்பாவைகள் என்பது தெரிந்திருந்தது. அனால் இன்று மேற்குலகம் இவர்கள் அனைவரையும் அல்லது பெரும்பான்மை யானவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றது. அடைக்கலம் கோரி தேர்வு பெற்ற விண்ணப்ப தாரர்கள் கூட இரண்டாம் அல்லது மூன்றாம் தர குடிமக்களாகவே நடத்தப் படுகின்றனர்.

மேற்குலகம் பார்ப்பது போல இஸ்லாம் குடியேறுபவர்களை பிரச்சனையாக பார்ப்பதில்லை. இஸ்லாமிய அரசில் வாழும் சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்று கூட இஸ்லாம் பார்ப்பதில்லை. முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருமே இஸ்லாமிய அரசில் சம குடிமகன்களாக கருதப்படுவர். சட்டத்தின் முன்னர் அனைவருமே சமமானவர்கள். மொழி இனம் ஜாதி போன்ற விஷயங்களை வைத்து பாகுபாடு பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றது.

குடியேற்றம் சிறுபான்மை உரிமைகள் போன்ற பிரச்சனைகளுக்கு கிலாபா அரசை தவிர வேறெதிலும் தீர்வு இல்லை. இது ஏனெனில் கிலாஃபா மட்டுமே மக்களை இஸ்லாம் என்ற ஒரே உலையில் மக்களை உருக்க (இணைக்க) முடியும். வரலாறு இதற்கு அத்தாட்சி. கிலாஃபா மட்டுமே முஸ்லிம் அல்லாத மற்றும் முஸ்லிம் குடிமகன்களின் விவகாரங்களை நீதமாக சந்தோசமாக பாதுகாப்பாக வழி நடத்த முடியும்.

Comments are closed.