சமீப பதிவுகள்

அலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா

செய்தி:

ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா (Staffan de Mistura) சிரியாவின்  இத்லிப்  மாகாணத்தில் மனிதாபிமானற்ற ஒரு புதிய பேரழிவு நடக்கவிருப்பதை தடுக்க உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார். போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரம், சிரியா அரசின் அடுத்த இலக்காக இருக்கும் என்று டி மிஸ்டுரா பெல்ஜியமில் நடந்த ஒரு நன்கொடை கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

 அலெப்போவும் கிழக்கு கூத்தாவும் எதிர்கொண்டது போன்று சிரியா அரசின் மிகப்பெரிய இராணுவமும் ரஷ்யாவின் விமானங்களும் இத்லிப் நகரை சூழத்தொடங்கியுள்ளது.

 

கருத்து:

இந்த எச்சரிக்கையை தெரிவிக்கும் இந்த நபருக்கு அலெப்போவிலும் கூத்தாவிலும் இதற்கு முன்னாள் நடந்ததை குறித்தோ அல்லது இத்லிபில் இனி நடக்க போவதை குறித்தோ கவலை இல்லை.  சிரியா மக்களை கொன்று குவித்து கொண்டிருக்கும் சிரியாவின் பஷார் அல் அசாத்  மற்றும் அவனது கூட்டாளிகள் அமெரிக்கா ரஷ்யா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ. நா. வின் ஒரு அதிகாரி. நிச்சயமாக எச்சரிக்கை விடுக்கும் இந்த நபருக்கு தெரியும் தனது இந்த எச்சரிக்கை உலக நாடுகளையோ அதன் ஆட்சியாளர்களையோ அதன் மக்களையோ எந்த விதத்திலும் பாதிக்காது என்று. சிரியாவில் 2011 இல் போராட்டம் வெடித்த நாளிலிருந்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான உயிர்சேதங்கள் நடந்துவிட்ட போதிலும் எந்தவித எதிர்ப்புமின்றி ஆட்சிக்கட்டிலில் பஷார் அமர்ந்திருப்பதற்கு இதே உலகநாடுகளும் அதன் ஆட்சியாளர்களுமே சாட்சியாக இருக்கின்றனர். ஈவிரக்கமின்றி பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படும்போதெல்லாம் மௌனம் சாதித்த இந்த நாடுகள் பல நூறு உயிர்களை ஏவுகணைகள் துழைக்கும்போது மட்டும் சடங்கிற்கு சில கண்டனங்களை தெரிவிக்கின்றன. சிரியா அரசிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்காவின் குண்டுகள் ஒரு சிரியா படை வீரரை கூட இதுவரை கொல்லவில்லை. இவர்களின் இந்த எச்சரிக்கை எல்லாம் உலகநாடுகளுக்கு கொடுக்கப்பட்டதல்ல; மாறாக இவை சிரியாவில் சரணடையாமல் போராடி கொண்டிருக்கும் மக்களை அலெப்போ மற்றும் கூத்தா போன்று இத்லிபும் மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று எச்சரித்து அமெரிக்க அடிவருடி பஷாரின் ஆட்சிக்கு அடிபணிய வைப்பதே ஆகும்.

நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதெல்லாம் இவர்களின் இந்த எச்சரிக்கைகளும் இவர்கள் போடும் நாடகங்களும் நம்மை வழிபிறழ செய்துவிட கூடாது. உலக நாடுகள் முன்மொழிவது போன்று பஷாரின் அரசுக்கு கட்டுப்படுவது என்பது வெளிப்படையாக தங்களின் சவக்குழிகளை தாங்களே தேடிக்கொள்வது போன்றதுதான். தன்னை எதிர்த்தவர்கள் மீது அரசும் அதன் அதிகார அமைப்பும் எந்தவித கரிசனமும் கொள்ளாது. போராடும் மக்களை பயமுறுத்தி, அவர்களை வென்றதற்கு பின்னால் இந்த கோழை பஷார், போராடிய இந்த மக்களை பழிவாங்குவதோடல்லாமல் நாட்டின் மற்ற பகுதிகளில் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களையும் பழிதீர்க்கும் செயலில் ஈடுபடுவான். இவர்கள் தங்களின் வார்த்தைகளில் எவ்வளவு  உத்தமர்களாக இருப்பார்கள் என்பதை இவர்கள் உள்ளங்களில் கொண்டுள்ள குரூரத்தை கொண்டே கணித்துக்கொள்ளலாம்.

சிரியாவில் வாழும் மக்களுக்கும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கும் விடுதலை என்பது சிரியா இராணுவத்தின் உயர்பதவிகளில் உள்ளவர்கள் தங்களின் பதவிகளை அல்லாஹ் (சுபு) விடம் உயர்த்திக்கொள்வதில் – ஹிஸ்புத் தஹ்ரீரை அரசியல் தலைமையாக அதன் ஆலோசகராக ஏற்று இஸ்லாமை நிலைநாட்ட உதவி புரிந்தால் – தங்களின் குண்டுகளை அப்பாவி மக்களின் மீதல்லாமல் டமாஸ்கஸ் நகரில் உள்ள அதிகாரத்தின் மீது வீசி இத்லிபையும் ஒட்டுமொத்த சிரியாவையும் பாதுகாப்பதில் தான் உள்ளது. அவர்கள் அதனை செய்யாதபோது, உடலாலும் உயிராலும் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சிரியா மக்களுக்கு நாம் சொல்வதெல்லாம் அவர்களின் உயிர்தியாகங்கள் அனைத்தும் ஹிஸ்புத் தஹ்ரீரின் இந்த அழைப்பை பெற்றுக்கொள்ள தகுதியுடைய அந்த அதிகாரம் படைத்த மக்களின் கழுத்துகளில் தொங்கிக்கொண்டிருக்கும்.

 

فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَـكُمْؕ وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ بَصِيْرٌۢ بِالْعِبَادِ

“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் – நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்)  [அல் குர்ஆன் 40:44]

 

Comments are closed.