சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 02.05.2018

தலைப்புச் செய்திகள்:

முஹம்மது பின் சல்மான் : டிரம்ப்புடைய திட்டத்தை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்

ஈரானும் செப்டம்பர் பதினொன்றாம் தேதியும்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி

 

முஹம்மது பின் சல்மான் : டிரம்ப்புடைய திட்டத்தை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்

சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் (எம்பிஎஸ்) அமெரிக்காவை சார்ந்த யூத குழுவின் தலைவர்களிடம் பாலஸ்தீனத்தின் தலைமைத்துவம்  அமெரிக்க அதிபரின் நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட அமைதிக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார் என்று சியோனிச ஊடகம் வெளிப்படுத்தின. நியூயார்க்கில் கடந்த மாதம் இந்த அமைப்புகளின் தலைவர்களை மூடிய கதவுகளுக்கு பின் நடந்த சந்திப்பின் போது பின் சல்மான் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை கடுமையாக விமர்சித்தார். “கடந்த சில தசாப்தங்களில் பாலஸ்தீன தலைமை ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவறவிட்டுள்ளது மேலும் அமைதிக்காக அதற்கு முன் வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் அது நிராகரித்துள்ளது,” என பின் சல்மான் கூறியதாக சானல் 10ன் மூத்த பத்திரிக்கையாளர் பாரக் ரேவிட் ஆக்ஸியோஸால் வளைத்தளத்தில் வெளியிடப்பட்டது. “இது தான் இந்த திட்டங்களை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்காக அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய காலம் இல்லையேல் அவர்கள் தங்களுடைய வாயை மூடிக்கொண்டு முறையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

 

ஈரானும் செப்டம்பர் பதினொன்றாம் தேதியும்

அமெரிக்காவின் நீதிபதி ஒருவர் 3,000 நபர்களை கொன்ற செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 பில்லியன் டாலர்களை ஈரான் வழங்க வேண்டும் எனும் தீர்ப்பை வழங்கியுள்ளதாக நீதிமன்ற பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.

 

தாமஸ் பர்னெட் சீனியர் மற்றும் ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கும் இடையேயான  இந்த வழக்கின் தீர்ப்பு கூறுவது என்னவென்றால் “ஈரானிய இஸ்லாமிய குடியரசும், இஸ்லாமிய அதிரடிப்படையும் மற்றும் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் மத்திய வங்கியும்” செப்டம்பர் 11 தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதற்கு பொறுப்பாளிகள் என்று நியூயார்க்கின் தென் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஜார்ஜ் பி டேனியல்ஸ் தீர்ப்பு எழுதினார். கடத்தல்காரர்களுக்கு ஈரான் பயிற்சி மற்றும் இதர உதவிகளை வழங்கியதாக இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், இந்த தாக்குதல்களில் ஈரான் எந்த வகையிலும் ஈடுபட்டிருப்பது தெளிவற்றதாகவே உள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக “அதை சுற்றி நிலவிய சூழல்கள் குறித்து  முழுமையான அறிக்கையை” தயார் செய்வதற்காக நியமிக்கப்பட்ட செப்டம்பர் 11 கமிஷன், செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்தியவர்களில் சிலர் அவர்களுடைய பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்படாமல்  ஆப்கானிஸ்தானிற்கு ஈரான் வழியே பயணித்ததை தவிர்த்து ஈரான் நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் காணவில்லை.

 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி

காபூலில் 31 நபர்களை கொன்ற மற்றும் பலரை காயப்படுத்திய இரட்டை தற்கொலை தாக்குதல்கள் நடைபெற்றதற்கு மறுதினம் அமெரிக்க இராணுவத்தின் கண்காணிப்பகம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஈடுபாடு குறித்து உற்சாகமற்ற புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் முன்வைக்கும் நம்பிக்கை நிலைக்கு முரணாக உள்ளது. அமெரிக்க உதவித்தொகையாகவும் மறுகட்டமைப்புக்கு முதலீடாக இருபது வருடங்களில் 126 பில்லியன் டாலர்கள் பெற்றிருந்த பிறகும், ஆப்கானிஸ்தான் “வர்த்தகம் மேற்கொள்வதற்கான” நாடுகளின் வரிசையில் 183 வது இடத்தை பெற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே மின் இணைப்பை பெற்றிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்கா கொண்டு வந்த ஒரு சில பொருளாதார நலன்களும் அது நேரடியாக செலவு செய்ததன் மூலம் வந்ததாகும் அது பொதுவாக தொடர்ச்சியான அயல்நாட்டு உதவியில்லாமல் அதை அடைய இயலாது என கருதப்படுகிறது.

Comments are closed.