சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 06.05.2018

தலைப்புச்செய்திகள்

  • பாலைவனத்து மணலை விவசாய நிலமாக மாற்றும் கண்டுபிடிப்பு

 

  • சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் மீதான தடை தகர்க்கப்பட்டு அவைகள் மீண்டும் உருவாவதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

 

  • இப்போது எடுக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவு குறித்து அமெரிக்கா வரலாறு நெடுகிலும் வருத்தமடையும் என்று ஈரானுடைய ரூஹாணி டிரம்ப்பை எச்சரித்துள்ளார்

 

 பாலைவனத்து மணலை விவசாய நிலமாக மாற்றும் கண்டுபிடிப்பு

ஃபைசல் முஹம்மது அல் ஷிம்மாரி 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலையை கொண்ட உலகின் தீவிரமான சூழலை கொண்ட சில இடங்களில் ஒன்றான அரபு அமீரகத்தில் உள்ள பாலைவன சோலையான அல் அய்னில் பயிரிட்டு வருகிறார். “இந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக தொடர்ச்சியாக தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால் அதிக செலவாகிறது” என அவர் கூறினார். விவசாயிகள் டாங்கர்கள் மூலம் தண்ணீரை கொண்டு வருகின்றனர், மேலும் இந்த பாலைவனத்தில் விவசாயம் செய்வதற்கு சாதாரண சீதோஷ்ன நிலையை கொண்ட இடங்களை விட ஏறக்குறைய  மூன்று மடங்கு தண்ணீர் அதிகமாக  பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது பாலைவனத்தில் விவசாயம் செய்வதை சாத்தியமற்றதாக ஆக்கிவிடுகிறது இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் தனது 80% உணவை இறக்குமதி செய்கிறது. இந்நிலை இருந்தாலும் பலருக்கு இதுவே எதிர்காலத்தில் விவசாயம் செய்வதற்கான வழியாக இருக்கக்கூடும். வறட்சி அதிகமாகி வருவது, காடுகளை அழிப்பது மற்றும் தீவிரமான விவசாய முறைகளானது வருடந்தோரும் பிரிட்டனின் பாதி அளவுக்கான நிலத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது. சீதோஷ்ன நிலையின் மாற்றத்தை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் கூட்டம் ஒன்று பாலைவனமாக்குதலின் காரணமாக 2045ல் 135 மில்லியன் மக்கள் தங்களுடைய வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடும் என கூறியுள்ளது. இது எதிர்வினை ஏற்படுத்துகின்ற சூழல் அதிகரித்து வரும் இடங்களில் எவ்வாறு உணவை உற்பத்தி செய்வது எனும் சவாலை எழுப்பியுள்ளது, ஆனால் விஞ்ஞானி ஒருவர் பாலைவனங்களை மீண்டும்  பசுமையாக்குவதற்கான புதியதொரு கண்டுபிடிப்புடன் வந்துள்ளார். நார்வேயின் விஞ்ஞானி கிறிஸ்டியன் மார்டென் ஒலிசென் என்பவர் பாலைவன மணல்களை பதப்படுத்துவதற்காக நானோ துகள்களை களிமண் மற்றும் தண்ணீருடன் சேர்த்து அதை மணல் துகள்களுடன் பிணைக்கும் வழிமுறை ஒன்றிற்கு காப்புரிமையை (patent) பெற்றுள்ளார் – அவர் திரவ நானோ களிமண்ணை (Liquid Nanoclay – LNC) உருவாக்க 2005ம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகிறார். “இந்த செயல்முறையானது மணற் துகள்களுக்கு ஒரு களிமண் மேற்பூச்சை வழங்குகிறது அது அவற்றுடைய  பண்புகளை முழுமையாக மாற்றி அவற்றை தண்ணீருடன் பினைவதற்கு அனுமதிக்கின்றது,” என அவர் கூறினார்.  “இந்த செயல்முறையில் எந்தவொரு இரசாயன செயலிகளும் ஈடுபடவில்லை. நாம் எந்தவொரு தரமற்ற மணலையும் வெறும் ஏழு மணிநேரத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய விளைச்சல் நிலமாக மாற்ற முடியும்.” கிறிஸ்டியனுடைய மகனும் அவர்கள் நிறுவிய நிறுவனமான டெசர்ட் கன்ட்ரோலின் தலைமை செயல் அதிகாரியுமான, ஓலே மார்டென் ஒலிசென்: “நாங்கள் வெறுமனே தண்ணீரில் இயற்கையான களிமண்ணை ஒன்றாகச் சேர்த்து  அதனை பாலைவன மணலுக்குள் உட்புகுத்தி வைக்கிறோம் அது அரை மீட்டர் அளவுக்கான அடுக்கை உருவாக்குகிறது அது அந்த மணலை ஒரு  வளமான மண்ணாக மாற்றி விடுகிறது.” என கூறினார். சாதாரண மணற் துகள்களானது மிகவும் தளர்வாக இருக்கும், அதாவது அது குறைந்த அளவு நீரை மட்டுமே தேக்கிவைத்துக்கொள்ளும் திறனை உடையதாக இருக்கும். ஆனால் நீங்கள் அந்த மணலுடன் திரவ நானோ களிமண்ணை சேர்க்கும் போது அது அந்த மணற்துகள்களை ஒன்றாக இணைத்து விடுகின்றது என கிறிஸ்டியன் கூறினார், அதாவது அதனால் தண்ணீரை நீண்ட நேரத்துக்கு தேக்கி வைக்க முடியும் என்றும் “விளைச்சலை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது” என்றும் குறிக்கின்றது. திரவ நானோ களிமண்ணின் வெற்றியை கண்டு நான் வியப்படைந்துள்ளேன ” என கூறினார் ஃபைசல். “இது தண்ணீரின் உபயோகத்தை 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துள்ளது, அதாவது இனி நான் இதே அளவு நீரை கொண்டு இரு மடங்கு நிலத்தை பசுமையாக்க முடியும்.” என அவர் கூறினார். [ஆதாரம்: பிபிசி)

 

ரசூலுல்லாஹ் (ஸல்) கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தாவது:

«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا»

“அரபுகளுடைய நிலப்பரப்புகளில் பசுமை நிலங்களும் ஆறுகளும் திரும்ப வராதவரை…. (மறுமை) நாள் ஏற்படாது.” (ஸஹீஹ் முஸ்லிம்).

 

சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் மீதான தடை தகர்க்கப்பட்டு அவைகள் மீண்டும் உருவாவதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

சவூதி அரேபியாவில் கிறிஸ்தவ வழிபாட்டாளர்களுக்கு சர்ச்சுகள் அமைக்க அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை வாடிகனுடன் சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளதாக எகப்தின் ஆங்கில இணையத்தளமும் அல் ஜசீராவும் செய்தி வெளியிட்டுள்ளன.

எகிப்தின் இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் ரோமன் கத்தோலிக்க கார்டினல் ஜான்-லூயிஸ் டாரனுக்கும் முஸ்லிம் உலக லீகின் முஹம்மது பின் அப்துல் கரீம் அல்-இஸ்ஸாவுக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டது. சவூதி அரேபியாவில் சர்ச்சுகள் கட்டுவது தொடர்பான கோரிக்கை குறித்து வாடிகனிடமிருந்தோ அல்லது சவூதி அதிகாரிகளிடம் இருந்தோ உறுதி செய்யப்படவில்லை. கார்டினல் இந்த வருடம் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்ததாகவும் மன்னர் குடும்பத்தை சந்தித்ததாகவும், அப்போது சவூதி ஆட்சியாளர்களிடத்தில் அவர்களுடைய ஜனநாயக சீரமைப்பில் மதச்சுதந்திரத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார் எனவும் அந்த செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. சவூதி அரேபியா கிறிஸ்தவர்களை தற்காலிக பணிகளுக்காக அயல்நாட்டு பணியாளர்களாக நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கின்றது, ஆனால் அவர்களை  அவர்களுடைய மதநம்பிக்கையை வெளிப்படையாக கடைபிடிப்பதற்கு  அனுமதிப்பதில்லை. சவூதியின் இளம் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் பெண்களுக்கு விடுதலை அளித்தது, இசை மற்றும் சினிமாவை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தது உட்பட ஏற்கனவே ஒரு வரலாற்று சீரமைப்பு முயற்சியை கட்டவிழ்த்துள்ளார்.

முஹம்மது பின் சல்மானால் வேகமாக மதசார்பின்மை  மற்றும் மேற்கத்திய விழுமியங்களை ஏற்று செயல்படுத்துவது 1400 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஹிஜாஸில் சிலுவையானது தன்னை மீண்டும் நிலை நிறுத்துவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விஷயம்  தடுக்கப்பட்டது என ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய வார்த்தைகளின் மூலம்  யாக்கப்பட்டு பல அறிஞர்களால் விளக்கப்பட்ட விஷயத்தை  மாற்றியமைப்பதாக உள்ளது. இப்னு குதாமா கூறினார்கள், “அவர்களில் (குஃப்பார்) எவர் ஒருவரும் ஹிஜாஸில் வாழ்வதற்கு அனுமதி கிடையாது”. இதுவே இமாம் மாலிக் மற்றும் இமாம் அஷ்- ஷாஃபியின் கண்ணோட்டமாக இருந்தது, மேலும் “அவர்கள் அரபு நிலப்பரப்புகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன் என்று இமாம் மாலிக் கூறினார்கள், ஏனெனில் ரசூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள்:

 

«لاَ يَجْتَمِعُ دِينَانِ فِي جَزِيرَةِ الْعَرَبِ»

“அரபு தீபகற்பத்தில் இரண்டு மார்க்கங்கள் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது.” ரசூலுல்லாஹ் (ஸல்) கூறியதை செவியுற்றதாக உமர் (ரலி) அவர்களுடைய சங்கிலித்தொடர் வழியாக அபூ தாவூத் அறிவித்ததாவது:

 

«لَأَخْرِجَنَّ اَلْيَهُودَ وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ اَلْعَرَبِ، حَتَّى لَا أَدَعَ إِلَّا مُسْلِماً»

“அரேபிய தீபகற்பத்திலிருந்து யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நிச்சயம் நான் வெளியேற்றுவேன் மேலும் அங்கு முஸ்லிம்களை தவிர வேறு எவரையும் குடியேற விடமாட்டேன்.” அத்- திர்மிதி இதை ஸஹீஹ் ஹசன் ஹதீஸ் தரத்தை சார்ந்தது என கூறியுள்ளார்கள். மேலும் இப்னு அப்பாஸ் கூறியதாக அறிவிக்கப்பட்டதாவது,

 

«دَعُونِي فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ، اُوصِيكُمْ بِثَلاَثٍ: أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ، وأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ قَالَ وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَهَا فَاُنْسِيتُهَا»

“ரசூலுல்லாஹ் (ஸல்) மூன்று கட்டளைகளை இட்டுச் சென்றுள்ளார்கள்.

அரேபிய தீபகற்பத்திலிருந்து முஷ்ரிகீன்களை வெளியேற்ற வேண்டும், (அயல்நாட்டு) பிரதிநிதிகளிடம் நான் நடந்து கொண்டதை போன்று நடந்து கொள்ள வேண்டும், மேலும் மூன்றாம் விஷயத்தை குறித்து அவர்கள் மவுனம் காத்தார்கள்.” [ஆதாரம்: IslamQA, அபூதாவூத், அல் முஃனி, 9/285, 286.]

 

இப்போது எடுக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவு குறித்து அமெரிக்கா வரலாறு நெடுகிலும் வருத்தமடையும் என்று ஈரானுடைய ரூஹாணி டிரம்ப்பை எச்சரித்துள்ளார்

ஈரானிய அதிபர் ஹசன் ரூஹாணி டெஹ்ரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் விலகிக் கொண்டால் அதுகுறித்து அமெரிக்கா “வரலாறு நெடுகிலும் வருத்தமடையும்” காரியமாக அது அமையும் என்று எச்சரித்துள்ளார்.  ரூஹாணியின் கருத்தானது மே 12 காலக்கெடுவுக்குள் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் முடிவு செய்யவிருக்கும் வேளையில் வெளிவந்துள்ளது. டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை “பைத்தியக்காரத்தனமானது” எனக் கூறி  கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே 2015ல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமானது ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுவதற்கு பகரமாக ஈரான் மீதான தடைகளை தளர்த்தியது. தற்போதய ஒப்பந்தமானது ஈரானை அணுஆயுதம் தயாரிப்பதிலிருந்து ஈரானை தடுப்பதற்கான சிறந்த வழியாகும் என பிரான்சும், இங்கிலாந்தும் ஜெர்மனியும் அமெரிக்க அதிபரை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.  இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்று ஐநாவும் டிரம்ப்பை எச்சரித்துள்ளது. இருப்பினும் அவர் அமெரிக்க அரசவையும் ஐரோப்பிய சக்திகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள “பேரழிவை உண்டாக்கும் குறைபாடுகளை” சரிசெய்யாவிடில் இந்த ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு விதிக்கப்பட்ட 120 நாட்கள் முடிவடையும் நாளான மே 12ம் நாளோடு அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து “வெளியேறும்” என அச்சுறுத்தினார். ஞாயிறன்று ஈரானிய அரசு தொலைக்காட்சியில் நேரலையாக கருத்து தெரிவிக்கையில் அதிபர் ரூஹாணி: “ஒருவேளை அமெரிக்கா இந்த ஒப்பந்ததில் இருந்து வெளியேறினால், வரலாற்றில் வருத்தமடையக்கூடிய செயலாக அதற்கு இது கட்டாயம் அமையும்” என கூறினார். ஈரானிடம் “டிரம்ப் எடுக்கும் எந்தவொரு முடிவையும் எதிர்கொள்வதற்கான திட்டம்” உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டமானது முழுவதிலும் அமைதியானது என்றும் இந்த ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடமே இல்லை என்று வலியுறுத்தியுள்ளது. [ஆதாரம்: பிபிசி]

ஈரானுடைய தலைவர்கள் ஒன்று அமெரிக்காவின் குருட்டு கைப்பாவைகளாக இருக்க வேண்டும் அல்லது மிகவும் அப்பாவிகளாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பிலிருந்து அவர்கள் பாடம் படிக்கவில்லையா? அணுஆயுதம் வைத்திருப்பதன் காரணமாக தான் வடகொரியா மீது அமெரிக்கா படையெடுப்பதிலிருந்து தடுத்து வைத்துள்ளது இப்போது பியோங்யாங் ஒரு வலுவான நிலையிலிருந்து அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதேவேளையில் ஈரான் சிந்திய பாலுக்காக அழுது கொண்டிருக்கிறது மேலும்  அமெரிக்காவுக்கு சேவை செய்யும் விதமாக அணுஆயுதத்தை கொண்டிருக்கும் யூத அரசு தன் மீது தாக்குதல் தொடுப்பதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றது. தனது அணுசக்தி திட்டத்தை சரண்டையச்செய்யும் இழிவான இந்த  முடிவை எடுத்த காரணத்தால் டெஹ்ரான் தான் வருந்தப்போகிறது…

Comments are closed.