சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 27.04.2018

பிரான்ஸில் யூத எதிர்ப்புக்கு இஸ்லாத்தை இணைக்கும் திறந்த கடிதம்  முரண்பாட்டை தூண்டிவிடுகிறது

 சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான் நகரில் ‘பொழுதுபோக்கு நகரம்’ துவக்கத்தை தாமதபடுத்துகிறார்

 பாகிஸ்தானுடன்  ரஷ்யா உயர் நிலை பாதுகாப்பு பேச்சுவார்த்தை

– – – –

பிரான்ஸி் யூத எதிர்ப்புக்கு இஸ்லாத்தை இணைக்கும் திறந்த கடிதம்  முரண்பாட்டை தூண்டிவிடுகிறது

நடிகர் ஜெரார்டு டிபர்டியு தொழிலதிபர் பிரான்சுவா பினோல்ட் அத்துடன் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் அவரது மனைவி கார்லா ப்ரூனி உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கையெழுத்திட்டிருந்த  கடிதம் பிரெஞ்சு நாளேடான லீ பாரிசியன் (Le Parisien) இன் ஞாயிறன்று வெளியிடப்பட்டது. இது பிரான்சில் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் யூதர்களின் “அமைதியான இனவெறி” க்காக இஸ்லாமிய தீவிரவாதத்தை குற்றம்சாட்டியது யூத-விரோத மற்றும் இஸ்லாமிற்கும் இடையேயான ஒரு நேரடி தொடர்பை (இணைப்பை) உருவாக்கியது.

“எங்கள் சமீபத்திய வரலாற்றில் 11 யூதர்கள் கொல்லப்பட்டனர் மேலும் சிலர் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சித்திரவதை செய்யப்பட்டனர் ஏனெனில் அவர்கள் யூதர்களாக இருந்தனர்”. இது கடந்த மாதம் நடந்த ஒரு யூத எதிர்ப்பு தாக்குதல் என கருதப்படுகிறது. முஸ்லீம்களைவிட யூத சமூகம் மீதான வெறுப்புணர்வால் அது ஆபத்தில் உள்ளது என்று கூறி இஸ்லாமிய எதிர்ப்பை விட பிரான்சில் யூத-விரோதம் அதிகமாக உள்ளது என்று வாதிடுவதாக அந்த கடிதம் உள்ளது.

“பிரஞ்சு யூதர்கள் தங்கள் முஸ்லீம் சக குடிமக்களைவிட 25 மடங்கு அதிகமானவர்கள் ஆவர்” பல்லாயிரக்கணக்கான யூதர்கள் அச்சுறுத்தப்பட்டு பாரிஸ் பகுதியிலுள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர்;  அந்த கடிதத்திற்கு கிட்டத்தட்ட உடனடி பின்னடைவு ஏற்பட்டது அது இஸ்லாத்தின் மீதான சீரமைப்பிற்கு விமர்சனமாக அமைந்தது. “எல்லாவற்றிற்கும் மேலாக சமகால முஸ்லிம்களுடைய யூத-விரோதம் மிகவும் ஆபத்தானது இதற்கு காரணமானவர்கள் இஸ்லாமிய முஸ்லீம்களே” என்ற கருத்தை அது முன்மொழிகிறது “என மைக்ரல் வைவாரோகா என்ற சமூக அறிவியலில் மேம்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதாக பள்ளியில் சமூக அறிவியலாளரான மைக்கேல் வைவோகார்கா தெரிவித்தார்.

கடிதத்தில் கையெழுத்திட்ட வரலாற்றாசிரியர் அனெட் வைவோர்கியவின் சகோதரி வைவோர்கியா “பிரஞ்சு யூதர்கள் அனுபவிக்கும் கொடுமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அதற்காக பாரபட்சமாக இஸ்லாத்திற்கு எதிராக இதை திருப்பமுடியாது” என கூறியுள்ளார். பிரான்சின் பிரதான யூத ராபி ஹைம் கோர்சியா இந்த கடிதத்தில் கையெழுத்திட்டார் “யூதர்களின் அச்சுறுத்தலையும் முஸ்லீமாக வாழ்பவர்களின்

அச்சுறுத்தல்களுக்கு இடையிலான ஒப்பீட்டை” அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.  இதைப் பற்றி எனக்கு ஒரு விதமான தயக்கம் உள்ளது “இது நடப்பில் ஒருவிதமான போட்டியை உருவாக்கியுள்ளது. என்று கோர்சியா பிரான்சின்ஃபோ வானொலியில்தெரிவித்தார் .

இதற்கிடையில் பாரிஸின் கிராண்ட் மசூதியைச் சேர்ந்த தலில்புபூக்கௌர் கடிதத்தின் சாராம்சம் பிரிவினைவாதத்தை துண்டுவதாக அமைந்துள்ளதாக எச்சரித்தார். “முஸ்லீம்களின் நம்பிக்கை மற்றும் பிரான்ஸில் இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஆகியவற்றில் பிரஞ்சு இஸ்லாமிய குடிமக்களை நியாயமற்ற முறையில் கொண்டுவரும் இந்த கடிதம் மதவாத சமுதாயத்தை பிளவுபடுத்துவதற்கான தெளிவான ஆபத்துக்களை வழங்குகிறது” என்று தலில்புபூக்கௌர் அறிக்கையில் தெரிவித்தார்.

பிரான்ஸில் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது முதல் தடவை அல்ல. ஆயினும்  அந்தோனி கல்லிமர்ட் ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அறிவித்தபின் சர்ச்சைக்கு ஆளானார் அதனால் நாவலாசிரியரான செலின் செருமானிய-யூத இனவாத எதிர்ப்பு மூலம் அவர் நாவலை வெளியிடுவதில்லை – ஏனெனில் “யூத-விரோதம் என்பது கிறிஸ்தவர்களின் பிரத்தியேக வேலை அல்ல மாறாக முஸ்லிம்களுக்கே அது உரித்தானது; ஹோலோகாஸ்ட் வரலாற்றாசிரியரான டால் ப்ரூட்மேன் எழுதிய கருத்துக்கள் அவருடைய கருத்தை நிராகரித்தன.  [ஆதாரம் : பிரான்ஸ் 24]

யூதர்கள் சிந்தும் கண்ணீரை துடைத்தெறிய பிரான்ஸ் கவலை படுவது போல் தன்னை காட்டி கொள்கின்றது.  ஆனால் இஸ்லாம் யூதர்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த அதே நேரத்தில் யூதர்கள் பல நூற்றாண்டுகளாக எவ்வாறு நடத்தபட்டார்கள் என்பதை அவர்கள்  மறந்துவிட்டார்களா? பிரான்சும் பிரிட்டனும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக தன்னுடைய பகைமையை வெளிபடுத்தி காட்டின. க்ரூஸேடர் போர் மூலம் யூத அரசை நிறுவி முஸ்லிம்களின் மீது தற்போது வரை அவர்கள் தங்களுடைய போரை தொடர்கின்றனர். விரைவில் கிலாஃபா ராஷிதா அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் மீண்டும் நிறுவப்பட்டு எதிரிகளின் தவறான எண்ணங்களையும் திட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவரும்.

 

சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான்   கிடியா நகரில் ‘பொழுதுபோக்கு நகரம்’ (Disney World) துவக்கத்தை தாமதபடுத்துகிறார்

சவூதி அரேபியா செவ்வாயன்று ரியாத் அருகே “பொழுதுபோக்கு நகரம்”, துவங்குவதை மூன்று நாட்கள்  தாமதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. பல-பில்லியன் டாலர் முதலிட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக, எண்ணெய் வளமிக்க அரசாங்கம் தன்னை பன்முகத்தன்மையுடையதாக கட்டிக்கொள்ள முற்படுகிறது

ரியாத்தின் தென்மேற்கில் உள்ள கிடியாவில் 334 சதுர கிலோமீட்டர் திட்டத்தைத் தொடங்க புதன்க்கிழமையன்று மன்னர் சல்மான் திட்டமிட்டிருந்தார்,   மனமுவந்து டிஸ்னிலேண்டிற்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக இருந்ததது. இந்த திட்டம் சவூதி அரசின் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தின் இலக்காக இருக்கும் திட்டமாகும். இந்த திட்டம் தாமதமில்லாமல் அடுத்த சனிக்கிழமையன்று மன்னர்  சல்மானால் தொடங்கப்படுகிறது, “என அரசு நடத்தும் சவூதி  பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ளதாக உயர்நிலை பூங்காக்கள், மோட்டார் விளையாட்டு வசதிகள் மற்றும் சஃபாரி பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய முதல் கட்ட வளர்ச்சிக்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல நேரடி மற்றும் மறைமுகமான பொருளாதார வருவாய்களை அடைவதற்கு உதவும் திட்டங்களை உருவாக்குவதற்கு இடைவிடாது  முயற்சி மேற்கொள்ளப்படுவதாக திட்ட அலுவலர் பஹத் பின் அப்துல்லா டவுனி திங்களன்று ஒரு அரசாங்க அறிக்கையில் கூறியதாக மேற்கோளிட்டுள்ளார்.

கிடியா தலைமை நிர்வாகி மைக்கேல் ரேனிங்கர் பொழுதுபோக்கு-பயன்பாட்டிற்கான அரசின் திட்டம் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்நோக்கியுள்ளது. ஆனால் கிடியா திட்டத்திற்கு எதுவும் வரவில்லை என்று கூறினார், NEOM திட்டத்திற்கு சவூதி அரசு வரைவு திட்ட முன்மாதிரியை வெளியிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள, செங்கடல் திட்டத்துடன் கூடுதலாக, பிராந்திய சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயரிடப்பட்ட ஒரு மெகா திட்டத்தை கிளிடியாவில் இருந்து அரசு உருவாக்குகிறது. இத்தகைய திட்டங்கள் இளவரசர் முகம்மது பின் சல்மானின் சிந்தனையாகும், “விஷன் 2030” என்றழைக்கப்படும் மிகப்பெரிய சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். [ஆதாரம் : அரேபியன் பிசினஸ்]

தாமதத்திற்கு காரணம் எதுவாக இருந்தாலும் சவூதிக்கு தனது  ஆட்சியின் வீழ்ச்சியிலிந்து நிவாரணம் பெற மேற்கத்திய பாணியை கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை. உண்மையான தொழில்துறை முன்னேற்றத்தை தன்னுடைய நாட்டின் வளங்களிலிருந்து தொடங்க வேண்டும் மாறாக மேற்கிலிருந்து (காப்பியடிக்க) கடன் பெறக் கூடாது. பிரிட்டனிலிருந்து அதன் போலி சுதந்திரம் பெற்றதிலிருந்து, சவூதி அதன் செல்வத்தை வீணடிக்கிறது, இது ஒருபோதும் மாறாது. அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா ஸ்தாபிக்கப்படுவது மட்டுமே சவுதி அரேபியாவின் நிலைமையை மாற்றியமைக்கலாம். இது கனரக தொழிற்துறையை நிலைநிறுத்துவதோடு, மேற்குடன் பிணைக்கப்படாத ஒரு தன்னிறைவுடைய பொருளாதாரத்தையும் உருவாக்குகிறது.

 

பாகிஸ்தானுடன், ரஷ்யா உயர் நிலை பாதுகாப்பு பேச்சுவார்த்தை

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு, விண்வெளி, சைபர் பாதுகாப்பு, அணுசக்தி, உளவுத்துறை-பகிர்வு மற்றும் வணிகம் ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை மையமாகக் கொண்டு, மாஸ்கோவில் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள்-அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின.  பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் ஜன்ஜுவூ மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பாட்ரஸ்ஹேவ் ஆகியோர் இரு நாள் கூட்டத்தில் திங்களன்று முடிவுக்கு வந்தனர்.

பாகிஸ்தானிய பிரதிநிதிகள் குழுவில் மூத்த இராணுவம், குடிமக்கள், உளவுத்துறை மற்றும் நாட்டின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்களை மேற்பார்வையிடும் திட்டப் பிரிவுகளின் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்த பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.  இருதரப்பு மற்றும் பன்முக நிலைகளில் பரஸ்பர உறவுகளின் “நேர்மறையான போக்கு மற்றும் முன்னேற்றத்தை” இரு தரப்பும் திருப்தி அடைந்தது என தெரிவித்தன.

திங்கட்கிழமை மிகப்பெரிய உயர் மட்ட விவாதங்கள் நடந்துள்ளன. வங்கி, ரயில்வே மற்றும் தொலைத் தொடர்பு, அரசாங்கம் மற்றும் இராஜதந்திர ஆதாரங்கள் உட்பட பல துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்த வாரம் பாகிஸ்தானில் வருகை தர ரஷ்ய வர்த்தகத் தூதுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது அரசாங்க தூதுவர்கள் வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் தெரிவித்துள்ளனர்.

சந்திப்பு நடக்கும்போது அது நம்பிக்கயற்றதாக இருந்தது. ஆனால், இஸ்லாமாபாத்தின் பல தசாப்தங்களுக்குப் பின்னர் இருதரப்பு உறவுகளில் மாற்றம் ஏற்பட்டது, வாஷிங்டனுடன் உறவு மீண்டும் சமீப ஆண்டுகளில் மோசமடைந்துள்ளது.  இந்த பதட்டங்களுக்கு பிரதானமான காரணமாக கூறப்படுவது பாகிஸ்தானிய பாதுகாப்பு நிறுவனங்கள், இராணுவம் துறைமுகங்களில் இருந்தும் தாலிபான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவும் புகலிடமும் அளிப்பதுதான். இதனால் அமெரிக்கா  ஆப்கானிஸ்தானில் மற்ற அண்டை நாடுகளுடன் இணைந்ததும் கூட தான் நினைத்ததை சாதிக்க முடியவில்லை.

பாகிஸ்தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது மற்றும் வாஷிங்டன் ஆப்கானிய பாதுகாப்பு மோசமடைந்து வரும் நிலையில் நாட்டை பலப்படுத்த அது  வலியுறுத்துகிறது.  பாகிஸ்தானுக்கு அமெரிக்க பொருளாதார உதவிகள் குறைந்து வருவதால், இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவு, அதன் பிராந்தியத்தில் போர்க்குணமிக்க திட்டங்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க முயல்கிறது

கடந்த வாரம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாகிஸ்தானிய தூதர்களுக்கு புதிய பயண தடைகளை அறிவித்தது. அமெரிக்கா பாகிஸ்தானுடனான உறவுகளை குளிர்ச்சியாகக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர், ரஷ்யா போன்ற பிராந்திய சக்திகள் மற்றும் பாரம்பரிய நட்பு நாடான சீனா ஆகியவை பாகிஸ்தானை நாடி வருகின்றன.   [ஆதாரம் : வாய்ஸ் ஆப் அமெரிக்கா]

ஒவ்வொரு முறையும் அது அமெரிக்கா தலைமையிடமாகக் கொண்டிருக்கும் சக்தியாக இருந்தாலும் மற்ற நாடுகளின் தலைமையின் கீழ் இருந்தாலும் வெவ்வேறு பிரதான சக்திகளுக்கு ஓடி ஓடி வேலை செய்யும் (அடிமை) குழந்தை போல் பாகிஸ்தான் நடந்து வருகிறது. உலகின் நான்காவது மிகப்பெரிய விவசாய பொருளாதாரத்துடன் பாகிஸ்தானுடனான ஒரு நாடு மற்றும் 250 பிளஸ் அணுவாயுதங்களை வைத்திருப்பது குழந்தைத்தனமாக நடந்து கொள்ளும் என்று பிச்சைக்காரர்களின் நம்பிக்கை. பாகிஸ்தானிய தலைமை பிரதான சக்திகளுக்கு இயங்குவதை நிறுத்தி எப்போது மேலாதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்?

Comments are closed.