சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது

செய்தி

‘மாற்றத்திற்கான நேரம் இது’ : இஸ்லாமிய விவாகரத்து செயல்முறை குறித்தான மறு ஆய்வை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என  அரசியல்வாதிகளும் மற்றும் ஆர்வலர்களும் அழைப்பு விடுகின்றனர் – ஏபிசி நியூஸ்

ஆண்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலவந்தமான திருமண உறவுகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்று ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புலனாய்வு அறிக்கையை தொடர்ந்து முஸ்லிம் சமூக தலைவர்களும்  அரசியல்வாதிகளும் ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து செயல்முறை தொடர்பாக ஒரு அவசர பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுள்ளனர்.

வன்முறையை கட்டவிழ்த்துவிடும்  கணவர்களிடமிருந்து விவாகரத்து கோரும் பல முஸ்லிம் பெண்களுக்கு குடும்ப வன்முறையின் தீவிரம் குறித்து அறியாத அல்லது அதன் அபாயங்களை பொருட்படுத்தாத மற்றும் குடும்ப வன்முறையில் தலையிடும் ஆணையின் சட்ட நிபந்தனை குறித்தும் அறிந்திராத ஆண் இமாம்களால் மறுக்கப்பட்டுள்ளனர். இமாம்களும் மற்ற இஸ்லாமிய சமூக தலைவர்களும் அனைத்து விதமான குடும்ப வன்முறை குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ள வேளையில், சமீப வருடங்களில் பிரபலமான சில அறிஞர்களால் உடல்ரீதியில் அல்லாத வன்முறையில் ஈடுபடுவதற்கும் பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்துவதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றதா இல்லையா என்பது பற்றி முரண்பாடான செய்திகளை கொண்டு பிரசங்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

http://www.abc.net.au/news/2018-04-19/islamic-divorce-advocates-call-for-urgent-review/9676258?pfmredir=sm

கருத்து

ஆண் மற்றும் பெண்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் விவாகரத்து போன்ற சமூக விஷயங்களில் தொடர்புடைய சட்டங்கள் போன்ற குறிப்பிட்ட சில இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் சட்ட குறிப்புகள் மீதான தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குதல் என்பது நூற்றாண்டு காலமாக மேற்குலகம் இஸ்லாத்தின் மீது நடத்தி வருகிறது. முஸ்லிம் உலகு மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம் சமூகங்களின் இஸ்லாமிய குடும்ப சட்டங்களையும் குறிவைத்து மதசார்பற்ற தாராளவாத இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் மேற்கொள்ளப்படும்  சர்வதேச பிரச்சாரமானது இன்றைய காலகட்டத்தில் மிகுதியாக காணப்படுகிறது.

ஆஸ்திரேலிய அரசின் ஊடக நிறுவனமான ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனம் (ABC) விவாகரத்து போன்ற முஸ்லிம் சமூக நடைமுறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கி வருவது “இஸ்லாமிய  விவாகரத்து நடைமுறையை” அவசரமாக  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரும் அளவுக்கு  கோபமூட்டும் வகையிலான பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏபிசி மேற்கொண்டுள்ள இதுபோன்றதொரு விசாரணையானது ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தவறான பழைய வாதங்களை கொண்டு இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களின் தொடர்ச்சி என்பது முஸ்லிம்கள் நன்கறிந்ததே.

இந்த விசாரணையின் முடிவில் “இந்த விவாதத்தின் முக்கிய அம்சமாக, அறிஞர்கள் கூறுவது, என்னவென்றால் இஸ்லாமிய விவாகரத்து தொடர்பாக  ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களானவை ஆழ்ந்த பழமைவாத, ஆணாதிக்க சிந்தனையை கொண்டு  இஸ்லாத்தைப்பற்றிய அதாவது பெண்களின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கும் வகையிலான விளக்கங்களை அளித்ததன் அடிப்படையாகக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் இவர்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற பழைய மற்றும் பொய்யான கூற்றுக்களை மேற்கோடிட்டு  காட்டுகிறது.

இந்த மதச்சார்பற்ற தாராளவாத சித்தாந்தத்தின் நிலைபாடு தான் ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகம் நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய  நடைமுறையானது பெண்களின் மீது  ஆணாதிக்க மற்றும் அடக்குமுறை தன்மையுடையதாக இருப்பதாக அவதூறுகளை பரப்ப செய்கிறது மேலும் இது தான் அதற்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கின்றதே தவிர இந்த விசாரணையில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப வன்முறை அல்ல. இந்த விஷயத்தை இஸ்லாமிய விவாகரத்து சட்டங்கள் குறித்தான உரை குறிப்புகளை (ஆதாரங்களை) அர்த்தம் கொள்வதற்கு “முற்போக்கான அணுகுமுறை” யை மேற்கொள்ள வேண்டும் எனவும் “புதிய பொருள்விளக்கத்தை” அளிக்க வேண்டும் எனவும் பெண்ணியவாதிகளின் கோரிக்கை குறித்து ஏபிசி வெளியிட்ட ஒரு சார்பு நிலை கொண்ட குறிப்புகள் மூலம் காணலாம். நிச்சயமாக மதசார்பற்ற தாராளவாத ஆஸ்திரேலிய சமூகத்தில் நிலவும் குடும்ப வன்முறை எனும் நோய் குறித்தான கவலை தீவிரமடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன, அங்கு சராசரியாக (ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு நிறுவனத்தின் அறிக்கையின் படி) ஒரு வாரத்திற்கு ஒரு பெண் தன்னுடைய தற்போதய அல்லது முன்னாள் வாழ்க்கை துணையால் கொல்லப்படுகிறார் மேலும் கொடூரமான வாழ்க்கை துணைகளினால் மேற்கொள்ளப்படுகின்ற குடும்ப வன்முறையினால் 25-44 வயதுடைய பெண்களுக்கு ஆபத்தை வளைவிக்கக்கூடிய மற்ற காரணிகளை விட அதிகளவு உடல்நலக்குறைவு, இயலாமை மற்றும் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது! ஆகவே, குடும்ப வன்முறை தொடர்பான எந்தவொரு விசாரணையும் குடும்ப வன்முறை மற்றும் இதர திருமணம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பொதுவாக  திருமணமான பெண்களை பெருமளவில் பாதிக்கும் தவறாக நடத்துதல் எனும் பிரச்சனை அதனுடன் குடும்பத்தில் ஏற்படும் முறிவு மற்றும் விவாகரத்து போன்றவைகளை உற்பத்தி செய்யும் மேலாதிக்கம் கொண்டுள்ள மதசார்பற்ற தாராளவாத சமூகத்திலிருந்து தொடங்க வேண்டும். மேலும் சமூகத்தில் குடும்ப வன்முறை ஏற்படுவதற்கான காரணங்களானது நிச்சயமாக சமூகத்தில் உணர்வுகள் ஒத்திருக்கும் திருமணங்களை ஏற்படுத்துவதற்கு தவறிய மதசார்பற்ற சட்டங்களுடன் தொடர்புடையதே தவிர இஸ்லாம் கிடையாது.

இது தாராளவாத பாலின சுதந்திரம் உட்பட பல காரணிகளால் ஏற்பட்டுள்ளது, அது திருமணத்திற்கு அப்பாற்பட்டு ஏற்படுத்திக் கொள்ளும் உறவின் கலாச்சாரத்தை வளர்த்துள்ளது, அத்துடன் ஆண், பெண் சமத்துவம் போன்ற பெண்ணியவாத சிந்தனைகளானது திருமண வாழ்வில்  ஆண்கள் மற்றும் பெண்களுடைய  பொறுப்புகள் மற்றும் உரிமைகள் குறித்து குழப்பத்தையும் இருபாலருக்கும் இடையே ஒத்துழைப்பை

ஏற்படுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய காரியங்களில் பரஸ்பரம் உதவி புரிவதற்கும் தமது துணையின் உரிமைகளை வழங்குவதற்கும் பதிலாக அவர்களுக்கு இடையே போட்டியை  ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, முஸ்லிம் சமூகங்களில் குடும்ப வன்முறையின் காரணமாக அதிகரித்துள்ள விவாகரத்து வழக்குகளானது மதசார்பற்ற தாராளவாத சமூகத்தின்  தாக்கமும் ஆதிக்கமும் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள காரணத்தினால் உருவானதே தவிர அவர்களுடைய இஸ்லாத்தின் காரணமாக கிடையாது.

திருமணம் குறித்தான இஸ்லாமிய ஆதாரங்களில் உள்ள நன்கு விளக்கப்பட்ட பெண்களின் உரிமையை பாதுகாப்பதற்கான ஒரே பயனுள்ள வழி  அது இஸ்லாமிய அரசியல் அமைப்பிற்கு உள்ளாக இருப்பதன் மூலம் மட்டுமே தவிர மதசார்பற்ற தாராளவாத மற்றும் முதலாளித்துவ அமைப்புகளுக்கு உள்ளாக இருப்பதன் மூலம் கிடையாது.

இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தேசத்திலும் மற்றும் பெண்கள்  தங்களுக்கு இஸ்லாம் அளித்திருக்கும்  திருமணத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத்தரும் நீதித்துறையை கொண்டுள்ள சமூகத்தில் மட்டும் தான் இது நடைபெறும்.

இன்று முஸ்லிம் உலகில் இல்லாமல் இருக்கும் நபித்துவ வழிமுறையிலான கிலாஃபத் தான் அந்த அமைப்பு, அது நிலைகொண்டிருந்த பல நூற்றாண்டு கால ஆட்சியில்,  தங்களுடைய திருமண உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான வழக்குகளை பெண்கள் சுயமாக கொண்டு வந்த அதில் வெற்றியும் பெற்றுள்ள விவரங்கள் குறித்து நீதித்துறையின் பதிவேடுகளில் பதியப்பட்ட எண்ணிலடங்கா உதாரணங்கள் காணக் கிடைக்கின்றன. மதசார்பற்ற தாராளவாதம் தோற்றுப்போயுள்ள காரணத்தால் முஸ்லிம் பெண்களுக்கு அவர்களுடைய இறைவன் வழங்கிய உரிமைகளை பாதுகாக்கவும் அதை அவர்களுக்கு வழங்குவதற்கும் உடனடியாக கிலாஃபத்தை நிறுவுவதற்கான தேவை ஏற்பட்டிருப்பதை இது மேலும் வலியுறுத்துகிறது.

ஆக, பெண்ணுரிமைக்கு இஸ்லாம் எவ்வாறு எதிரியாக இருக்கின்றது எனும் காலாவதியான அற்பமான பொய்யை கூறும் வழக்கமான வழிமுறையை மேற்கொள்வதும் அவற்றை தவறாக பயன்படுத்துவதும், அதீதி இழைக்கப்படுவதும் மற்றும் தவறாக நடத்துவது என்பது புதியதல்ல. மேற்கில் இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் சட்டங்களை பூதாகாரப்படுத்தும் வழக்கமான செயல்பாடானது அவர்கள் வாழும் மதசார்பற்ற சமூகங்களில் உள்ள முஸ்லிம்களை அவர்களுடைய தீனிலிருந்து விலக்கி வைப்பதற்கும்  இஸ்லாத்தின் மீது வெகுஜனங்களிடத்தில் ஐய உணர்வு மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி  இரக்கமற்ற முறையில் எழுப்பப்படும் பின்னணி சப்தத்தை போன்றதாகும்.

(يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ)

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

(அல்குர்ஆன் : 61:8)

Comments are closed.