சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 09.05.2018

தலைப்புச்செய்திகள்:

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் அமெரிக்காவை விலகச் செய்தார்

சிரியாவில் சியோனிஸ்ட்டுகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்

 

விவரங்கள்:

ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் அமெரிக்காவை விலகச் செய்தார்

அதிபர் டொனால்டு டிரம்ப் மே 8, செவ்வாயன்று பி5+1 அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மீது நெடுங்காலமாக தனது கண்டனத்தை டிரம்ப் தெரிவித்து வந்தார் மேலும் மே 12ம் தேதித்துக்குள் இந்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கெடுவும் விதித்திருந்தார், அதை செய்ய தவறினால் அதிலிருந்து (ஒப்பந்தம்) வெளியேறுவதாகவும் அச்சுறுத்தினார். அதேவேளையில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியாக ஐரோப்பிய கூட்டமைப்பு எண்ணற்ற சலுகைகளை அவருக்கு வழங்கியது, அனாலும் இறுதியாக அவர் அதிலிருந்து வெளியறிக் கொண்டார். அவருடைய உரையில், இந்த ஒப்பந்தம் “ஈரானிய அரசு” தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான உத்திரவாதத்தை மட்டும் தான் அளித்திருக்கின்றது என்று குற்றம் சாட்டினார். அவர் இந்த ஒப்பந்தமானது “ஒரு குடிமகனாக எனக்கும் மற்றும் அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் மன உளைவை ஏற்படுத்தியுள்ளது” என கூறினார்.

அணுஆயுதத்தை தயாரிக்கும் நோக்கத்தை ஈரான் கொண்டிருப்பதாக யூத அரசு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகளை அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா இல்லாமல் இந்த ஒப்பந்தம் நிலைத்திருக்காது என்று சிலர் எச்சரித்துள்ள நிலையில் ஈரானும் பி5+1 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இதர நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் தாம் நிலைத்திருக்க போவதாக கூறினர். அமெரிக்கா மட்டும் தான் இதிலிருந்து வெளியேறியுள்ளது, உலகின் மற்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அது சிறப்பாக இருந்த நிலையில் அரைகுறையாக அளித்து வந்த அமெரிக்காவின் ஆதரவு தற்போது இல்லாத நிலையிலும் தங்களால் இயன்ற அளவு சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்த எத்தனித்துள்ளனர். இரண்டு வருடத்திற்கு முன்னால், ஈராக்கில் எங்கு குண்டு வீச வேண்டும் என்று அமெரிக்க விமான ஓட்டிகளுடன் ஈரானிய ஐ.ஆர்.ஜி.சி அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். தான் நாடியதை அடைந்து விட்ட அமெரிக்கா இப்போது இந்த பகுதியை ஈரானுடன் பங்கு போட்டுக்கொள்ள விரும்பவில்லை.

சிரியாவில் சியோனிஸ்ட்டுகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்

டமாஸ்கஸில் செவ்வாயன்று சியோனிஸ்ட்டுகள் நடத்திய ஏவுகனை தாக்குதலில் அரசுக்கு ஆதரவாக சண்டையிடும் 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். தலைநகரின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்வெஹ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய புரட்சிப்படை வீரர்கள் மற்றும் இதர ஈரானிய ஆதரவு பெற்ற வீரர்கள் கொல்லப்பட்டனர் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் கூறியது. இந்த கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் “புரட்சிப்படைக்கு சொந்தமான ஆயுத கிடங்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” எனக் கூறினார். செவ்வாயன்று ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த சிறிது நேரத்தில் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தை குறிவைத்து சியோனிஸ்ட்டுகள் ஏவுகணைகளின் தாக்குதல்களை நடத்தியது என சிரிய அரசு ஊடகம் கூறியது. சிரிய அதிபர் பஷார் அல் அசாதுக்கு ஆதரவான இந்த பிராந்தியத்தின் கூட்டணியின் படைத்தளபதி ஒருவர் கிஸ்வெஹ் இராணுவ தளத்தின் மீது யூத அரசு வான்படை தாக்குதல் நடத்தியது என்றும் ஆனால் அதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்றும் ராய்டர்ஸிடம் கூறினார். சிரியாவில் ஈரான் கொண்டுள்ள பங்கு குறித்தும் அது அங்கு தனது நிலையை வலுப்படுத்தி வருவது குறித்தும் சியோனிஸ்ட்டுகள் கவலை கொண்டுள்ளன. இதன் காரணமாக குறைந்த அளவிலான ஆதாரங்கள் அல்லது சரிபாக்கக்கூடிய ஆதாரங்களை விட்டுச்சென்ற நிலையில் அதன் இலக்குகளை நோக்கி முன்கூட்டியே தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

Comments are closed.