சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

மழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது

செய்தி :

கென்யாவில் தொடர் மழையால் குறைந்தது 15 நபர்கள் இறந்துள்ளனர். கென்யாவின் செஞ்சிலுவை அமைப்பு மக்களை பாதுகாப்பான உயர்ந்த நிலப்பரப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இரண்டு அணைகளில் நீர் நிரம்பியுள்ளதால் அணைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய அறிக்கையின் படி இரண்டு லட்சம் மக்கள் பள்ளிகளில்  மட்டும் திறந்த வெளியில்  வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல சாலைகள் முழுவதுமாக மூழ்கியுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சியில் மாய் மஹியூவிற்கு (பிரேதசங்களில்) தென்மேற்கில் ஆப்பிரிக்காவை எதிர்காலத்தில் இரண்டாக பிளவுபடுத்த கூடிய பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தானா கரையோரத்தில்  உள்ள 50000 நபர்கள் கரை பிளவு அடைந்ததால் வீடுகளை விட்டு வெளியேறினர்.

 

கருத்து :

பெரும் வெள்ளம் இந்த மழை காலத்தில் ஏற்படுவதும் பல உயிர் மற்றும் பொருட்சேதங்களை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகிறது. குறைந்த மழை காலமான (அக்டோபர் முதல் டிசம்பர்) மாதங்களிலும் இது ஏற்படுகிறது. கென்யாவின் வானிலை மையம் கடும் மழை பொழியக்கூடும் என்று எச்சரித்த போதிலும், அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் , இப்போது உயிர் சேதங்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது.

 

விசித்திரமாக , நடந்து கொண்டிருக்கும் ஐந்தாவது வருட இழிதல் (அதிகாரப் பகிர்வு) மாநாட்டில், 6000 பிரதிநிதிகளில் பல அதிகார சபையினர் மற்றும் ஆளுநர்கள் ஜனாதிபதி உஹுருவின் பெரும் நான்கு தீர்மானங்களை விவாதிக்கின்றனர், அவைகளில்  நகர்ப்புற மேம்பாடு, நிலம் மற்றும் வீடுகள் அடங்கும். இன்னும் விசித்திரமான விஷயம் என்னவெனில், இந்த மாநாடு தொடங்கி ஐந்தாண்டுகளில், இந்த அரசு பல மைல்கற்களை நீர் மற்றும் சாலைகளை உள்ளடக்கிய பல செயல்பாடுகளில் அடைந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இத்தகைய மழையை தொடர்ந்து அந்த மழை நீரை அப்புறப்படுத்த நைரோபி சிட்டி கழிவு நீர் நிறுவனம் மூலமாக சரி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக தெருக்களில்  குறைந்த மழைக்கே நீச்சல் குளமாக மாறுகிறது.

மக்கள் மத்தியில் உள்ளவை என்னவெனில், இயற்கை அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்குண்டான தயார் நிலைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முன், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பல பேரழிவுகள் உள்ளன. உள்ளூர் அதிகாரிகளின் அங்கீகாரத்தோடு பல வீடுகள் மின்சார கம்பிகளுக்கு கீழும் பெட்ரோல் குழாய்களுக்கு அருகிலும் கட்டப்பட்டுள்ளது. அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் பிறகு மக்கள் மீது குற்றச்சாட்டை வெளியிடுகிறது மேலும் மக்களை இதற்கான பொறுப்பாளிகளாக கூறி தங்களை பாதுகாக்க நினைக்கிறது.

இத்தகைய அழிவுகள் ஏற்படும்போதெல்லாம் முதலாளித்துவ அரசின் உண்மை முகம் வெளிப்படுகிறது. இத்தகைய அரசு மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது. தங்கள் சொந்த மக்களின் நலன்களை கூட இந்த முதலாளித்துவ அரசுகள் கண்டுகொள்வதில்லை. இஸ்லாம் ஒரு சித்தாந்தமாக மக்களின் நலன்களை மேற்கொள்வது அரசின்  கடமையாகவும் ஆக்கியுள்ளது. அதே சமயம் இத்தகைய செயல்பாட்டிற்காக தனி நபரிடமோ,தனியார் நிறுவனத்தினரிடமோ இஸ்லாமிய அரசு ஒப்படைக்காது. இஸ்லாமிய அரசான கிலாஃபா, மக்களின் நலன்களை காப்பதில் முழுத்திறனை மேற்கொள்ளும். இத்தகைய பேரழிவுகளில் அரசாங்க கஜானாவை அரசு பயன்படுத்தி கலீஃபா இன்னல்களை கலைவார். இது மக்களின் மீது அவருக்குண்டான கடமையாகும். அரசாங்க கஜானாவில் பற்றாகுறை ஏற்பட்டால் வசதியுள்ளவர்கள் மீது குறைந்த வரி விதிக்கப்பட்டு இந்த பிரச்சனைகளை தீர்ப்பார். இத்தகைய செயல்பாட்டை எந்த வேறுபாடுமின்றி அனைத்து மக்கள் மீதும் மேற்கொள்வதே கலீஃபாவின் கடமையாகும் .

ஷபானி  முவலிமு

ஹிஸ்புதஹ்ரீர் கென்யா

Comments are closed.