சமீப பதிவுகள்

ஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …!!!

சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் سبحانه وتعالى விடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்

 

(شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ)

 

“ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!”
(அல்குர்ஆன் : 2:185)

 

எல்லா புகழும் அல்லாஹ் سبحانه وتعالى ஒருவனுக்கே மற்றும் அவனுடைய சாந்தியும் சமாதானமும் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மீதும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள், சத்திய சஹாபாக்கள் மற்றும் இஸ்லாமிய அகீதாவை தங்களது சிந்தனைக்கு அடிப்படையாகவும் மற்றும் அஹ்காம் ஷரீ’ஆவை (சட்ட விதிமுறைகள்) தங்களுடைய செயல்களுக்கு அளவுகோலாகவும் அவர்களுடைய தீர்ப்புகளுக்கு ஆதாரமாகவும் எடுத்துக்கொண்டவர்கள் மீதும் நிலவட்டுமாக.

 

முஹம்மது பின் ஜியாத் கூறியதாக சஹீஹ் புஹாரியில் பதியப்பட்ட ஹதீஸில்: “ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீதும் சாந்தி உண்டாவதாக அல்லது அபூ அல் காசிம் ﷺ அவர்கள் கூறியதை தான் செவியுற்றதாக அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள்:

 

«صوموا لِرُؤيتِهِ وأَفْطِرُوا لرؤيتِهِ فإنْ غُـبِّيَ عليكم فأَكْمِلُوا عِدَّةَ شعبانَ ثلاثين»

 

“பிறையை கண்ட பின் நோன்பு பிடிக்க தொடங்குங்கள் [ரமலானின் பிறை], மற்றும் அதை கண்டவுடன் விட்டு விடுங்கள் [ஷவ்வாலின் பிறையை கண்டவுடன்], ஒருவேளை வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டால் (உங்களால் பார்க்க முடியாமல் போனால்), ஷா’பானின் முப்பது நாளை பூர்த்தி செய்யுங்கள்.”

 

நேற்று (செவ்வாயன்று) ரமழான் மாதத்திற்கான பிறை தென்படுவது குறித்தான விசாரணை மேற்கொண்டதில், ஷரீ’ஆவின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பிறை தென்பட்டது என்று உறுதி செய்யப்படவில்லை, ஆகவே நாளை, புதன்கிழமை இன்ஷாஅல்லாஹ் ஷா’பான் மாதத்தின் இறுதி நாளாகும், மேலும் நாளை வியாழக்கிழமை புனிதமிகு ரமழான் மாதத்தின் முதல் நாளாகும்…

 

நேசமும் பாசமும் மிகுந்த முஸ்லிம்களே:

 

இந்த புனிதமிகு மாதமானது, நம்மை தாக்குவதற்காக (அதற்காக அழைப்பு விடுப்பதற்கும்) குஃப்ரு நாடுகளும் இஸ்லாத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராக அவை செய்யும் சூழ்ச்சிக்கு உதவி புரிவதற்காக விரையும் நமது மக்களை சார்ந்த தீமையான ஆட்சியாளர்களும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைவதை நாம் கண்டுவரும் வேளையில் நம்மை அடைந்துள்ளது. இது நமக்கு சஹீஹான ஹதீஸ் ஒன்றை நினைவூட்டுகிறது:

 

«يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا» فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ» فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ قَالَ: «حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ»

 

“நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

 

“உணவுத்தட்டை நோக்கி விருந்தாளிகள் அழைக்கப்படுவது போல் சமுதாயங்கள் (தேசங்கள்) உங்களுக்கெதிராக அணிதிரளும் ஒரு நாள் விரைவில் வரும்.

 

அப்போது கேட்கப்பட்டது : “அந்த நாளில் நாங்கள் எண்ணிக்கையில் குறைந்திருப்போமா?” அதற்கு நபி ﷺ கூறினார்கள் : “இல்லை, அந்நாளில் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் அப்போது நீங்கள் நீரில் மிதக்கும் நுரையை போன்றிருப்பீர்கள். உங்கள் எதிரிகளின் உள்ளங்களில் இருந்து உங்கள் மீதான அச்சத்தை அல்லாஹ் நீக்கி விடுவான்.

 

மேலும் உங்கள் உள்ளங்களில் “வஹ்ன்” என்ற நோயை அவன் ஏற்படுத்தி விடுவான்.” அப்போது கேட்கப்பட்டது அல்லாஹ்வின் தூதரே “வஹ்ன்” என்றால் என்ன? அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : அது உலக ஆசையும் மரண பயமும் (முஸ்னது அஹ்மது, அபூதாவூத்)

 

ஆனாலும் ரமழான் என்பது பொறுமையின் மாதம் எனவும்; மேலும் பொறுமையே நிவாரணத்துக்கான (துயரங்களிலிருந்து) திறவுகோலாகும் எனவும் நாம் அறிந்துள்ளோம். புஹாரி (அல்லாஹ் அவரின் மீது கருணையை பொழியட்டுமாக) அவர்கள் அறிவித்த அறிவிப்பை நாம் இங்கு மீண்டும் நினைவுகூர்கிறோம்: அபூ அப்த் அல்லாஹ் கப்பாப் இப்னு அல்-அரத் (அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

 

«شَكَوْنَا إِلَى رسولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُو مُتَوسِّدٌ بُردةً لَهُ في ظلِّ الْكَعْبةِ، فَقُلْنَا: أَلا تَسْتَنْصرُ لَنَا أَلا تَدْعُو لَنَا؟ فَقَالَ: قَد كَانَ مَنْ قَبْلكُمْ يؤْخَذُ الرَّجُلُ فيُحْفَرُ لَهُ في الأَرْضِ فيجْعلُ فِيهَا، ثمَّ يُؤْتِى بالْمِنْشارِ فَيُوضَعُ علَى رَأْسِهِ فيُجعلُ نصْفَيْن، ويُمْشطُ بِأَمْشاطِ الْحديدِ مَا دُونَ لَحْمِهِ وَعظْمِهِ، مَا يَصُدُّهُ ذلكَ عَنْ دِينِهِ، واللَّه ليتِمنَّ اللَّهُ هَذا الأَمْر حتَّى يسِير الرَّاكِبُ مِنْ صنْعاءَ إِلَى حَضْرمْوتَ لاَ يخافُ إِلاَّ اللهَ والذِّئْبَ عَلَى غنَمِهِ، ولكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ»

 

“கப்பாப் பின் அல் அரத்(ரழி) அறிவிக்கிறர்கள், நாங்கள், கஃபாவின் நிழலின் கீழே தனது புர்தாவில் (போர்த்தும் துணியில்) சாய்ந்து அமர்ந்திருந்த முஹம்மத் ﷺ அவர்களிடம் சென்று (முஷ்ரிக்குகள் எங்களுக்கு செய்து வருகின்ற கொடுமைகள் பற்றி) முறைப்பாடு செய்து, எங்களுக்காக அல்லாஹ் سبحانه وتعالى விடம் நீங்கள் உதவி தேடக்கூடாதா என வினவினோம். அதற்கு அவர்கள் ﷺ, “உங்களுக்கு முன்பிருந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவருக்காக தோண்டப்பட்ட குழியில் நிறுத்தப்பட்டு அவரது தலையில் ஒரு வாள் வைக்கப்பட்டு அவர் இரண்டு துண்டாக துண்டாடப்படும் வரையில் அறுக்கபடுவார், எனினும் அது அவரை தனது மார்க்கத்தை விட்டுவிடத் தூண்டவில்லை. அவரது சதை அவரது எழும்புகளிலிருந்தும், நரம்புகளிலிருந்து வேறாகப் பிடுங்கியெடுக்கப்படும் வரையில் அவரது உடல் இரும்புச்சீப்பூகளால் விராண்டி எடுக்கப்படும். எனினும் அது அவரை அவரின் மார்க்கத்தை கைவிட தூண்டவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! சன்ஆவிலிருந்து ஹதரல்மௌத்திற்கு அல்லாஹ்வைத்தவிர வேறொன்றுக்கும் அஞ்சாத நிலையில் ஒருவர் பயணம் மேற்கொள்ளும் வரையில் இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். தனது செம்மறி ஆடுகளை ஓநாய்கள் காவிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் ஒன்றைத் தவிர. (வேறெந்த அச்சமும் அவருக்கு இருக்காது) ஆனால் நீங்கள் அவசரப்படக்கூடியவர்களாக இருக்கின்றீர்கள்.” (புஹாரி)

 

இது அல்லாஹ் سبحانه وتعالى சிறிது காலம் கழித்து அவனுடைய மார்க்கத்துக்கு தரப்போகும் அதிகாரம் மற்றும் வெற்றியை குறித்து அளித்த வாக்குறுதியாகும், ஆக நாம் அல்லாஹ்வுக்கு உண்மையாகவும் பொறுமையுடனும் அவனை வழிபடுவதில் உறுதியுடனும் இருக்க வேண்டும் மேலும் அல்லாஹ் سبحانه وتعالى வின் வாக்குறுதியை அடைவது குறித்து எவ்வித தயக்கமுமின்றி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் அல்லாஹ் سبحانه وتعالى அவனுடைய வாக்குறுதியிலிருந்து மீறுபவன் அல்லன், அவனே உண்மையாளன், அவனுடைய வாக்குறுதி உண்மையானது.

 

ஹிஸ்புத்தஹ்ரீரில் நாங்கள் இந்த உம்மத்தை சார்ந்த அனைவரிடத்திலும் அவர்களுடைய இறைவனை மகிழ்விக்கக்கூடிய மற்றும் இந்த மாபெரும் பாவமான நிலை மற்றும் சூழ்ச்சியை துடைத்தெரிந்து அதிலிருந்து விடுவிக்கக்கூடிய மாபெரும் நிலையை கையில் எடுப்பதற்காக அழைப்பு விடுக்கிறோம், இந்த நிலையானது அவர்களுடைய தோல்களிலிருந்து அருவருப்பான நிலையை அகற்றும், மேலும் அதன் நிலப்பரப்புகள் முழுவதிலும் அதன் மகிமையை மீண்டும் உண்டாக்கும்…
நாங்கள் முஸ்லிம்களிடத்தில் அவர்களுடைய கரங்களை (உழு செய்ததன் காரணமாக தூய்மைபடுத்தப்பட்ட) சிந்தனை ரீதியிலான ஒரு அறிவார்ந்த மற்றும் அரசியல் போராட்டத்தில் உற்காகமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் ஹிஸ்புத்தஹ்ரீரில் உள்ள எங்களுடைய கரங்களுடன் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். இது கபடமிகுந்த மேற்கினது திட்டங்களை அம்பலப்படுத்துவதோடு உங்களுக்கு இஸ்லாமுடைய நேரான பாதயையும் காட்டுகிறது. ஒருவேளை அல்லாஹ் உங்கள் மூலமும் உங்களுடைய கரங்களின் மூலம் நபித்துவத்தின் அடிப்படையின் வழிமுறையிலான கிலாஃபா ராஷிதாவை (நேர்வழி பெற்ற கிலாஃபத்) நிறுவுவதன் மூலம் வெற்றியும் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என ஆணையிட்டிருக்கலாம். அல்லாஹ் سبحانه وتعالى ஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்-ரஷ்தாஹ் அவர்களுடைய கரங்களின் மூலமாக வெற்றியை வழங்கி அருள்புரிவானாக, அதன் மூலமாக உங்களுடைய கலீஃபாவாக இருப்பதற்கும் உங்கள் மீது அல்லாஹ் سبحانه وتعالى வுடைய வேதம் மற்றும் அவனுடைய திருத்தூதரின் வழிமுறையில் ஆட்சி செய்வதற்காக உங்களுடைய பைஆ (விசுவாசத்தின் உறுதிமொழி) வை அவருக்கு வழங்கலாம், மேலும் நீங்கள் ஷரீ’ஆவை நடைமுறைப்படுத்தும் கிலாஃபத்துடைய தேசத்தில் வாழலாம், மேலும் மனிதசமூகம் அனைவருக்கும் வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக திகழும் இஸ்லாத்தின் அழைப்பை நீங்கள் மேற்கொள்ளலாம்…

 

ஓ முஸ்லிம் இராணுவங்களிலுள்ள அதிகாரிகளே, தெரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய கரங்களின் மூலம் இல்லையென்றாலும் அல்லாஹ் سبحانه وتعالى கண்ணியத்தை கொண்டு கவுரவிக்கும் உண்மையான மற்ற ஆண்களின் கரங்களின் மூலம் நிச்சயமாக அல்லாஹ் سبحانه وتعالى இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்தே தீருவான், ஆக மாபெரும் இந்த கவுரவத்தை தவிர விட்டுவிடாதீர்கள் மேலும் அல்லாஹ் سبحانه وتعالى வுடைய திருப்பொருத்தத்தை அடைவதற்கும் இந்த வாழ்க்கையிலும் மறுமை வாழ்க்கையிலும் பெரும் சிறப்பை அடைவதற்காக வேண்டி இந்த உம்மத்திற்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள்.

 

அதேபோல இந்த அருள்புரியப்பட்ட மாதத்திற்காக ஹிஸ்புத்தஹ்ரீரின் மத்திய ஊடக அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதில் செயலாற்றும் அனைவருடைய வாழ்த்துக்களையும் ஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும், சிறந்த அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தா அவர்களுக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பரிமாறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் இந்த கருணை மற்றும் மன்னிப்பின் மாதத்தில் நம் அனைவரையும் நரகத்திலிருந்து விடுவிக்க பிரார்த்திக்கிறோம் மற்றும் அவனிடம் سبحانه وتعالى லைலத்துல் கத்ருடைய இரவை அடையச்செய்து அதன் நற்கூலிகளை வழங்குமாறு வேண்டுகிறோம்…

 

யா அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே, வெகுவிரைவில் நபித்துவ வழிமுறையிலான இரண்டாவது நேரிய கிலாஃபத்தின் முஸ்லிம்களுடைய கலீஃபாவிடம் ஒப்பந்தம் (பைஆ) செய்யும் கண்ணியத்தை எங்களுக்கு வழங்குவாயாக… அல்லாஹும்ம ஆமீன் ஆமீன் ஆமீன்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

 

Comments are closed.