சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…!?

செய்தி :

காபூல் நகரில் ஏப்ரல் 30 அன்று நடந்த இரு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 9 பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் உடபட 26 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கான் ஊடகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதல்கள் குறித்த விசாரணையை ஐ.நா வின் பாதுகாப்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அதே நாளில், மற்றொரு பத்திரிகையாளர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

கருத்து:

ஆஃப்கானில் அமைதியை நிலைநாட்டுவதாக கூறி அமெரிக்கா அங்கு வன்முறையையும் துயரங்களையும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தாக்குதலை அதிகப்படுத்தியதற்கான காரணம் தாலிபானை வீழ்த்தி அவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழிப்பதற்காகவே. உண்மையில் அமெரிக்கா அமைதியை நிலைநாட்டுவதை விட தாக்குதலை அதிகப்படுத்தவே நாடுகிறது. இதன் மூலமாக அமெரிக்கா, ஆஃப்கானில் தன்னுடைய ராணுவ இருப்பை நியாயப்படுத்தவதோடு மற்றொரு விதத்தில் சீன ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராக திட்டங்களை தீட்டுகிறது. தாலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்பின் பெயர்களை உபயோகப்படுத்தியது போல் இப்போது அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ். பெயரை உபயோகிக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மர்மமான நடவடிக்கைகள் அமெரிக்காவால் நிதி கொடுத்து வலுப்படுத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக துறையை சார்ந்த மக்களை தீவிரவாத எதிர் நடவடிக்கை, அமெரிக்காவின் உண்மையான நிலையை உணர்த்தியுள்ளது. ஏனெனில், சில சமயத்தில் ஆஃப்கான் ஊடகத்தின் ஆய்வுகள் மற்றும் கட்டுரைகள் அமெரிக்காவின் கொள்கைகளை வெளிக்காட்டுகிறது.

சமீபத்தில் அமெரிக்க தூதர் ஜான் ஆர். பாஸ் அவர்களிடம் காபூல் தூதரகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் ஆஃப்கான் பத்திரிகையாளர், “ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகளின் விளைவாக ஆஃப்கான் மக்கள் இந்த அமைப்பு அமெரிக்காவின் திட்டம் என நம்புகிறார்கள். இதனை நீங்கள் மறுத்து கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக, எந்த திருப்திகரமான ஆதாரபூர்வமான பதிலை ஆஃப்கான் மக்களுக்கு கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்?”. அமெரிக்க தூதர் பாஸ், இதற்க்கு முன் துருக்கி நாட்டிற்கான அமெரிக்க தூதராக இருந்தவர், மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் சூத்திரதாரியாக அறியப்படுகிறார். இவர் இந்த கேள்விக்கு துல்லியமான பதிலளிக்காமல் சிரித்தார்.

தற்போதைய பேச்சுரிமை அமெரிக்காவிற்கு திருப்தி அளிக்கவில்லை என்ற நிலையில் ஊடகத்துறையின் ஊக்கத்தை குறைக்க வன்முறை மற்றும் பயங்கரமான கொள்கையை ஆஃப்கானில் மேற்கொள்கிறது. மேலும், இத்தகைய தாக்குதல்களும் அதனை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்போடு இணைக்கப்படும் இந்த அமைப்புக்கு சமூகத்தை பிரபலத்தை உண்டாக்கும். ஏனெனில் ஊடகத்தின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் ஒளிபரப்பப்படும்.

இந்த வகையில், இந்த கொடூர தாக்குதல்களுக்கு பிறகு ஜுன்பேஷ் -எ- ரோஷனே என்ற அமைப்பு கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் அஹ்மத் பெஹசாட் இந்த அமைப்பின் தலைவர், வெளிப்படையாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு என்பது ஆஃப்கான் தேசிய பாதுகாப்பு துறையின் மற்றொரு பெயர் என அறிவித்தார். சமீபத்தில் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்காவின் குற்றங்கள் எனும் அறிக்கையை வெளியிட்டார்

மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்கள் என கூறப்படும் சிலவற்றில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அதிகார பூர்வ நிலைப்பாடை அறியமுடியவில்லை. ஆஃப்கானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகமே ஊடகங்களிலுள்ள தன்னுடைய கங்காணிகள் மூலம் இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை குற்றம் சாட்டுகிறது, இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது மக்களின் கோபம் ஏற்படுகிறது. மேலும் அரசாங்கம் பொய்யான திருத்தப்பட்ட புகைப்படங்களை ஊடகத்தில் பரப்பியது. ஒத்துப்போகும் விதமாக ரஷ்ய ஊடகமும், ஆஃப்கான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் கூடி பல பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை வலுப்படுத்தி ஹெலிகாப்டர் மூலமாக குடியேற்றியுள்ளதாக செய்தியை வெளியிட்டுள்ளது

எனவே, உத்திகள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆஃப்கானுடன் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்கா தன்னுடைய படையை பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டுவந்து, ஆஃப்கான் படைகள் மூலம் மறைமுகமாக ஆஃப்கான் மக்களுக்கு எதிரான போரை தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களை ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கூட இன்று இதற்கு முடிவை நாடுகின்றனர்.

முடிவாக, நாட்டை ஆக்கிரமித்துள்ள இறைமறுப்பாளர்களுடன் நட்பு பாராட்டினால் இத்தகை விளைவுகளே ஏற்படும். எனவே ஆஃப்கான் ஊடகம் இத்தகைய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் நிறுவனங்களான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு துறையிடம் விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடக்கூடாது. மாறாக அவர்களே உண்மையான வக்கீல்களாக செயல்பட்டு மக்களுக்கு திரைக்கு பின்னாலிருக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்தவேண்டும். இதன் மூலம் இஸ்லாமிய சிந்தனையை தூண்டி மக்கள் இஸ்லாமிய பணியை மேற்கொண்டு அமெரிக்காவின் போர் ஆயுதமாக மாறாமல் இருக்க செய்யவேண்டும். இதுவே துணிந்த நேர்மையான மக்களின் வேலையாகும்.

ஹிஸ்புத்தஹ்ரீர்
சைபியுல்லாஹ் முஸ்தானிர்
விலாயா ஆஃப்கானிஸ்தான்

Comments are closed.