சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

அமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்

செய்தி:

இளவரசர் முஹம்மது பின் சல்மானிற்கு (எம்.பி.எஸ்) அமெரிக்காவின் புகழாரம் தாறு மாறாக உயருகின்றது. அமெரிக்காவை திருப்தி படுத்துவதில் எம்.பி.எஸ் தனக்கு முன்னிருந்த ஆட்சியாளர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் என்பது போல தெரிகின்றது. பனிப்போரில் அமெரிக்க நலன்களை பாதுகாக்க சவூதி அரேபியா செய்த உதவியை வெளிக்காட்டுவதில் அவர் வெட்கப் படுபவராக இல்லை.

கருத்து:

சோவியத் விரிவாக்கத்தை தடுக்க மேற்கின் வேண்டுகோளிற்க்கு இணங்கவே வஹாபிய சிந்தனை வேண்டுமென்றே பரப்பப்பட்டது என அவர் வாஷிங்டன் போஸ்ட்டுடன் நடந்த ஒரு நேர்காணலில் கூறினார்[1]. எம்.பி.எஸ். இன் இந்த அசாதாரணமான ஒப்புதல் பனிபோரில் மேற்குலகம் கம்யூனிச சித்தாந்தத்தை எவ்வாறு எதிர்த்தது என்பதை தெளிவாக காட்டுகின்றது.
“இஸ்லாமிய உலகிலுள்ள மசூதிகள் மற்றும் மதரஸாக்களுக்கு நிதி அளிப்பது மிகப்பெரியதாக இருந்தது, இதனால் பின் வந்த சவூதி அரசுகள் இது சம்பந்தமான கணக்கு வழக்கை இழந்தனர்” என அவர் கூறினார்.
1980 களின் முற்பகுதியில் சோவியத் ஏகாதிபத்தியத்தை நிறுத்தி மேற்கின் நலன்களை பாதுகாக்க பாகிஸ்தான் உதவி அளித்ததையும் இதில் அவர் வெளிப்படையாக ஒத்துகொண்டார். சோவியத்திற்கு எதிரான ஆப்கான் போரில் ஜிஹாதிய போராளி படையை உருவாக்க பாகிஸ்தானின் மசூதிகளிலும் மதரஸாக்களிலும் சவூதி அரசு நிதியுதவி அளித்தது தெரிந்த ஒன்றே. எம்.பி.எஸ் இன் இந்த கருத்து பனிப்போரில், மேற்கின் திட்டங்களை நடைமுறை படுத்த சவூதி-பாகிஸ்தானுக்கு மத்தியில் இருந்த பரஸ்பர தொடர்பை குறிக்கின்றது.
அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbignew Brzezinski என்பவரே சோவியத்தை வீழ்த்துவதற்கான அடிப்படை திட்டத்தை வகுத்து யூரோசியா பிராந்தியத்தை பூலோக அரசியலின் முக்கிய மையமாக அங்கீகரித்தவர். எனவே சவூதி, ஈரான், ஆப்கான், பாகிஸ்தான் போன்ற பிராந்தியங்கள் சோவியத்தை எதிர்க்கும் போர்க்களமாக இருந்திருப்பது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் இல்லை.
ஷியா சன்னி இஸ்லாமிய பிரிவின் மூலம் யூரோசியாவில் ரஷிய ஆதிக்கத்தை எப்படி கட்டுபடுத்தலாம் என்ற ஆசையை Brzezinski தன்னுடைய ‘The Grand Chessboard’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை பார்க்க முடியும். அவர் கூறுகையில் “ஈரான் மற்றும் சவூதி ஆதரித்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி புதிய தேசிய வாதங்களை தூண்டக்கூடியதாக இருக்கின்றது. இது ரஷியாவின் ஆதிக்கத்தில் வரும் எந்த ஒரு மறுஒருங்கிணைப்பையும் எதிர்க்க கூடியதாக இருக்கின்றது”. என கூறியுள்ளார். [2]

சோவியத் ஒன்றியத்திற்கு பெரும் அடி கொடுக்கும் விதமாக, ஆப்கானில் இருக்கும் ரஷ்யாவின் படையை அமெரிக்கா ஆக்கிரமிக்க வேண்டும். ஆப்கானின் ஆட்சியாளர் முஹம்மது சாகிர் ஷாவை நீக்கி கொமேனியை அமர்த்த அமெரிக்கா முடிவெடுத்தது. அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் ட்ரேஃபுஸ்(Dreyfuss) தனது புத்தகமான Devil’s Game ல் இதன் விரிவான கணக்கைக் கொடுத்துள்ளார். (அதாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உருவாக்கி, கொமேனியையும் ஷியா பிரிவான இஸ்லாமையும் பயன்படுத்தி அமெரிக்கா எவ்வாறு ஆப்கானை சோவியத் படை எடுப்பதிலிருந்து தடுக்க முயற்சி செய்தது என்பதை விவரிப்பதாகும்)
சோவியத் ஆப்கனை ஆக்கிரமித்திருந்த பொழுதும், அமெரிக்காவுடனான அணு ஆயுத பந்தையத்தில் அதனால் நிற்க முடியவில்லை. அப்பொழுது சோவியத்தின் வீழ்ச்சி வெகு அருகில் இருந்தது.

சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசு நாடாக மாறியது. அப்பொழுது தாலிபானோ, அல்கொயிதாவோ அல்லது இதர ஜிஹாதி குழுக்களோ அமெரிக்க ஆய்வாளர்களுக்கு ஒரு பொருட்டாக தெரிய வில்லை.
ஆப்கான் போராளிகளின் எதிர்மறை வீழ்ச்சியை பற்றி Brzezinski கூறுகையில் “உலக வரலாற்றின் மிக முக்கியமானது என்ன? தாலிபானா அல்லது சோவியத்தின் வீழ்ச்சியா?அல்லது தூண்டப்பட்ட முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையும் பனிப்போரின் முடிவுமா?” என கூறியுள்ளார்.
மேற்கூறப்பட்டதிலிருந்து, சவூதி அரேபியா, ஈரான் மற்றும் பாகிஸ்தானின் தலைவர்கள் யூரேசியாவில் சோவியத்தை தோற்கடிக்கும் அமெரிக்காவின் திட்டத்தில் பெரும் உடந்தையாக இருந்தார்களா என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருகின்றது.

இம்மூன்று நாடுகளின் தலைமைத்துவமும் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு மட்டும் செய்ய வில்லை. மாறாக அதற்கு எந்த மறுவார்த்தையும் கூறவில்லை என்பது எம்.பி.எஸ். இன் கருத்தின்படி தெளிவாகின்றது.
செப்டம்பர் 11 2001, இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு வஹாபிய சிந்தனையை வெளியிலெடுத்து இஸ்லாமில்லாத சமூகத்தை உருவாக்க அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது என்பது மிக தெளிவான விஷயமே. அதே வேலையில் இந்நடவடிக்கைகள் இரு வேறு எதிர்வினைகளை உருவாக்கியது. குறிப்பாக சவூதி அரேபியாவில் மன்னர் பஹத் அவனுக்கு பிறகு வந்த அப்துல்லாஹ் போன்றவர்கள் வஹாபிய அமைப்பிற்கு வாய் வழியான ஆதரவை கொடுத்து வந்தனர் என்பது இதில் அடங்கும். பிறகு அரபு புரட்சி நடந்து அதன் பிறகு எம்.பி.எஸ் இளவரசனாக பதவி ஏற்றதற்கு பிறகு அமெரிக்காவின் இஸ்லாமில்லாத சமூகம் உருவாக்கும் திட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மதசார்பின்மை சமூகமாக சவூதியை மாற்றும் இளவரசர் எம்.பி.எஸ். இன் அதிவேக நடவடிக்கை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது உள்நாட்டு சீரமைப்பு நடவடிக்கையா அல்லது மேற்கு வழிகாட்டும் நடைமுறை திட்டமா !? இதற்கு பதில் அல்லாஹ் (சுபு ) தன் திருமறையில் கூறுகிறான்.

﴿أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُواْ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُواْ إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُواْ أَن يَكْفُرُواْ بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلاَلاً بَعِيدًا﴾
“(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? – (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் – அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்”.   [TMQ: அந்-நிசா :60]

References:
[1] https://tribune.com.pk/story/1672777/3-wahhabism-spread-behest-west-cold-war-mohammed-bin-salman/
[2] http://www.azquotes.com/quote/654880
[3] http://americanempireproject.com/devils-game/

Comments are closed.