சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

கார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா ?

செய்தி:

இந்த மாதத்தின் 5-ஆம் தேதி, அறிவியல் சோஷியலிசத்தை உருவாக்கிய அறிவியலாளர்களில் ஒருவரான கார்ல் மாக்ஸின் 200 வது பிறந்த நாளைக் குறித்து, கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களுக்கிடையில் “மார்க்ஸிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏதாவது இன்னும் உள்ளதா” என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஏற்பட்டது.

கருத்து:

வழக்கம்போல் ஆச்சரியமின்றி இந்த விவாதத்திலும் சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் பேசக்கூடிய மக்கள் இருந்தனர். சிலர் மார்க்ஸின் கருத்துக்கள் அழிந்துவிட்டன என்றும், அவருடைய சிந்தனைகள் கொடூரமான, அழிவுகரமான சர்வாதிகாரத்தையும், தோல்வியுற்ற நாடுகளையும் மட்டும் தான் விட்டுவிட்டு சென்றுள்ளன என்று கூறினர். மற்ற சிலர், இன்றைய தினமும் மக்கள் கற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படை கருத்துக்களும முதலாளித்துவத்தின் விமர்சனங்களும் மார்க்ஸின் சிந்தனைகளில் இருப்பதாக கூறினர்.
மார்க்ஸ் பல்வேறு கோட்பாடுகளில் தவறாக இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால், அவரிடம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. முதலாளித்துவ முறையின் அனைத்து பலவீனங்களையும் மற்றும் அதன் உள்ளார்ந்த குறைபாடுகளையும், உறுதியற்ற தன்மையையும் சரியான முறையில் மார்க்ஸ் சுட்டிக் காட்டினார், ஆனால் இந்த விஷயத்திலும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது. மார்க்ஸ் அறிவு ரீதியாக ஒரு சராசரியான மனிதரை விட உயர்தரப்பில்  இருந்தார் என்பதில் சந்தேகமில்லை, மேலும், அவருடைய எண்ணங்கள் இன்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.முதலாளித்துவத்தை விமர்சித்து ஒரு வித்தியாசமான மாற்று சிந்தனையை அவர் கூறியது ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது, ஆனால் அவருடைய சிந்தனைகளிலும் தவறுகள் உள்ளன, இது நமக்கு மிக முக்கியமான பாடமாகும். என்னதான் சுவாரஸ்யமான மற்றும் விரிவான சிந்தனையை கொண்டுவந்தாலும், மனித அறிவு வரையறுக்கப்பட்டது (limited) மற்றும் அதனுடைய எல்லைகளை நாம் தெரிந்து கொள்ளுவது அவசியாக உள்ளது.

ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் இவரைப்பற்றிக் கூறும்போது: “அனைத்து தரங்களிலும், பல்வேறு விஷயங்களிலும் மார்க்ஸ் முந்தியுள்ளார், எனவே நீங்கள் அவரை ஒரு தரமான அறிஞராக கருதி அவருடைய சிந்தனைகளை படிக்க வேண்டும்.சமூகம் மற்றும் வரலாற்றின் ஒருங்கிணைந்த ஒரு முக்கியமான பகுதியாக பொருளாதாரம் இருக்கின்றது என்பதில் அவர் மிக கவனமாக இருந்தார், அவரது பெரிய தாடியை வைத்து அவரை ஒரு தீர்க்கதரிசியாக நாம் நினைக்க கூடாது, அவ்வாறாக இருக்கவும் முடியாது. இவர் காட்டித்தந்த விஷயங்கள் நம் காலத்தின் பொருளாதாரச் செல்வந்தர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்று.” மனிதனால் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் எப்போதும் இயல்பாகவே குறைபாடுகளை கொண்டதாக இருக்கும், மேலும் சில கட்டங்களில் தோல்வியடையும். ஏனென்றால், மனித அறிவு வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவோ ​​அல்லது கணிக்கவோ முடியாது. வானங்கள் மற்றும் பூமியின் இறைவனிடமிருந்து அனுப்பப்படும் முறை மட்டுமே இதற்கு சரியான தீர்வாகும். இவ்விஷயத்தில் மனித அறிவை புதிய வாழ்க்கை முறைகளை உருவாக்க பயன்படுத்தாமல், இறைவனின் முறையை புரிந்து கொண்டு அதை நிலைநாட்ட பயன்படுத்த வேண்டும். இஸ்லாம் நம்மிடம் உள்ளது.  நாம் செய்ய வேண்டியவை, அதன் கருத்துக்கள் மற்றும் சட்டங்களை உலகத்திற்கு காண்பித்து, மக்களின் ஆதரவைப் பெற்று அதை நிலைநாட்டுவது தான்.மார்க்ஸிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்.

Comments are closed.