சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 11.05.2018

தலைப்புச்செய்திகள் :

• போரின் விளிம்பில் யூத அரசும் ஈரானும்

• எண்ணையின் விலை அடுத்த ஆண்டு 100 டாலரை தொடும் அபாயம்

• அமெரிக்கா பாகிஸ்தானிய தூதர்கள் மீது விதித்த கட்டுப்பாட்டிற்கு பதிலடியாக அமெரிக்க தூதர்கள் மீது பாகிஸ்தான் கட்டுப்பாட்டை விதிக்கவுள்ளது

விளக்கம் :

போரின் விளிம்பில் யூத அரசும் ஈரானும்

யூத அரசு சிரியாவில் 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கிய நாளிலிருந்து இல்லாத அளவுக்கு ஈரானிய நிலைகளில் இப்போது அதி தீவிரமான தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளது, இது எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிராந்தியத்தின் இரு பெரும் சக்திகளும் நேரடியாக மோதிக்கொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிகாலையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 23 நபர்கள் கொல்லப்பட்டனர் என்று இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) கூறியது. யூத அரசின் பாதுகாப்பு படை (IDF) தமது படைகளின் மீது கோலன் ஹைட்ஸில் முதன்முதலாக ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது என்று கூறியதற்கு பதிலளிக்கும் வண்ணமாக இது வெளியிடப்பட்டது. இந்த மோதலானது அதிகமாகி வரும் இந்த பிராந்தியத்தின் பதற்ற பின்னணிக்கு மத்தியில் இது நாள் வரை இவ்விரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவ மோதலாகும். யூத பிரதம மந்திரி பெஞ்சமின் நெடான்யஹூ ஈரான் “சிவப்புக் கோட்டை மீறியதாகவும்” அதற்கு வான்வழி தாக்குதல்கள் மூலம் யூத (எமது) தாக்குதல் “சரியானது” என்று கூறினார். “நாம் நெடிய போர் ஒன்றுக்கு மத்தியில் இருக்கின்றோம் மேலும் எமது திட்டம் தெளிவானது: நாம் ஈரானை சிரியாவில் தன்னை இராணுவத்தை கொண்டு சூழ்ந்திருப்பதை அனுமதிக்க மாட்டோம்” எனக் கூறி எமது நடவடிக்கைகள் சிரிய அதிபர் பஷார் அல்-அசாதிற்கு ஒரு “தெளிவான செய்தியாகும்” என அவர் கூறினார். அதேவேளையில் ஈரானிய அதிபர் ஹசன் ரூஹாணி ஐரோப்பிய நாடுகளிடத்தில் “குறுகிய காலத்திலேயே அமெரிக்கா விலகிக்கொண்டதால் அதற்கு ஈடு செய்வதற்கான அவர்களுடைய செயல்களையும் நிலைப்பாடுகளையும் தெளிவாக அறிவிக்குமாறு” கேட்டுக் கொண்டார். “ஈரான் இந்த பிராந்தியத்தில் எப்போதும் பதற்றத்தை குறைப்பதையே விரும்புகிறது, பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்த முயற்சிக்கிறது,” என தொலைப்பேசி உரை ஒன்றில் ஜெர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கலிடம் கூறினார், அது அந்நாளில் அவர் தொடர்பு கொண்ட பல உலக தலைவர்களின் எண்களில் ஒன்றாகும். தெரசா மே மற்றும் பிரஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரன் ஆகிய இருவரும் “அனைத்து தரப்பிலும் அமைதியை மேற்கொள்ள” வேண்டினர். வெள்ளை மாளிகை ஈரானுடைய “ஆத்திரமூட்டும் வகையில் சிரியாவிலிருந்து இஸ்ரேலிய குடிமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்” தான் காரணம் எனக் கூறி கண்டனம் தெரிவித்தது, “அதனை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமையுள்ளது” என்றும் வலியுறுத்தியது. ரஷ்யாவும் இந்த தாக்குதல்களை “அபாயமான செயல்பாடு” எனக் கூறி மோதலை தணிக்குமாறு கேட்டுக்கொண்டது. அன்றிரவு நடைபெற்ற நிகழ்வுகள் கோலன் ஹைட்ஸ், டமாஸ்கஸின் கிராமங்கள் மற்றும் சிரியாவின் தென்பகுதியில் உள்ள மக்களை தாழ்வாக பறந்த இராணுவ விமானங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளின் சத்தத்தால் விழித்திருக்க செய்தது. ஈரானிய தாக்குதலை எதிர்பார்த்து சமீபகாலமாக யூத அரசு உச்சகட்ட எச்சரிக்கையை கடைபிடித்து வருகிறது: யூத இராணுவம் சிரியாவில் ஈரானிய குடிமக்களின் மீது குறிவைத்து நடத்திய இரு வேறு தாக்குதல்களில் 13 ஈரானியர்கள் கொல்லப்பட்டனர் அதற்கு பழிவாங்குவதாக ஈரான் உறுதிபூண்டிருந்தது. [ஆதாரம்: தி இண்டிபெண்டண்ட்]

யூத அரசுக்கும் ஈரானுக்கும் இடையேயான இந்த பதற்றங்களின் அதிகரிப்பானது 12வது மற்றும் 13வது நூற்றாண்டில் சிலுவை யுத்தங்கள் மூலம் வேரூட்டப்பட்ட காலனியாதிக்க திட்டத்தின் வெளிப்பாடே என்பது தெளிவாக தெரிகின்றது. சிலுவையுத்தக்கார தேசங்கள் முஸ்லிம் தேசங்களில் சதி செய்து லெவாண்ட்டில் தனது கட்டுப்பாட்டில் உள்ள சின்னஞ்சிறு தன்னுரிமை பெற்ற நாடுகளை உருவாக்கும் கலையில் தேர்ச்சியடைந்தன. இன்று, ஐரோப்பிய கூட்டமைப்பும் அமெரக்காவும் யூத அரசு எனக்கூறப்படும் அற்பமான அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வருகின்றன, அதேசமயம் இந்த யூத அரசு நிலைத்திருப்பதற்காக வெவ்வேறு முஸ்லிம் நாடுகளிடையே போர் நடத்துவதற்கு உதவி செய்து வருகின்றன. முஸ்லிம் நாடுகளிடையேயான போர் யூத அரசின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோற்றுப்போகும் போது, அந்த யூத அரசுக்கு முஸ்லிம் நாடுகளை தாக்குவதற்கு மேற்கு வெளிப்படையாக ஊக்குவிக்கின்றது. 800 வருடங்களுக்கு முன்னர், அஷ்-ஷாமில் சிலுவையுத்தக்காரர்களின் மேலாதிக்கத்தை சலாஹுத்தீன் மற்றும் மம்லூக்குகள் முடிவுக்கு கொண்டு வந்தனர். இன்று அதை யார் செய்வது?

எண்ணையின் விலை அடுத்த ஆண்டு 100 டாலரை தொடும் அபாயம்

எண்ணையின் விலையானது உடனடியாக இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் பீப்பாய் ஒன்றுக்கு தற்காலிகமாக 90 டாலர்களை தொடும் நிலையுள்ளது, புவி அரசியல் நிகழ்வுகள் மற்றும் இதர காரணிகளை பொறுத்து பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர்களை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பாங்க் ஆஃப் அமெரிக்காவின் மெரில் லிஞ்ச் ஆய்வாளர்கள் கூறினர். ஆனால் உடனடியாக பெரும் விலையேற்றம் இருக்கும் என அவர்கள் கருதவில்லை. இந்த வருடத்திற்கு அவர்கள் சர்வதேச அளவுகோலாக கருதப்படும் பிரண்ட் கச்சா எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு சராசரியாக 70 டாலர்கள் இருக்கும் என கணித்துள்ளனர். அடுத்த ஆண்டில் 75 டாலர்களாக இருக்கும் என கணித்துள்ளனர். 60 டாலர்கள் அவர்களுடைய முந்தய கணிப்பாக இருந்தது. இருந்தாலும் அடுத்த வருடம் குறிப்பிட்ட அளவுக்கு விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ன் இரண்டாவது காலாண்டில் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர்கள் தொடக்கூடிய அபாயத்துடன் பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களாக இருக்கும் என ஆய்வாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். வியாழனன்று பிரண்ட் 78 டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. “அடுத்த 18 மாதங்களை கணக்கிடுகையில் , வெனிஸ்வேலாவின் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்துள்ள இப்போதைய நிலையால் உலகளாவிய எண்ணை விநியோகம் மற்றும் அதற்கான தேவையின் சமநிலையில் இறுக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனோடு, ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறையும் அபாயமும் உள்ளது. அதனோடு 2019ல் ரஷ்யாவுடன் ஓபெக்கும் (OPEC) எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதற்கான தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை நாம் காண்கிறோம், என அவர்கள் எழுதியுள்ளனர். அந்த அறிக்கை குறிப்பிடுவது என்னவென்றால் அடுத்த ஆண்டு ஓபெக்கும் ரஷ்யாவும் சந்தையில் அவர்கள் நாளொன்றுக்கு வெளியிடும் 450,000 பீப்பாய் எண்ணையிலிருந்து படிப்படியாக குறைக்கக்கூடும் என குறிப்பிடுகிறது. ஆனால் அவர்கள் தற்போது கொண்டுள்ள ஒப்பந்தமான நாளொன்றுக்கு 1.8 மில்லியன் பீப்பாய் உற்பத்தி செய்வதிலிருந்து பின்வாங்கவில்லை என்றால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகமாகக்கூடும். மேலும் அவர்கள் அடுத்த 20 மாதங்களில் வெனிசுவேலாவின் உற்பத்தி நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்களாக குறைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள் தமது கணிப்பில் பெருமளவில் குறையப்போகும் ஈரானிய ஏற்றுமதியை கருத்தில் கொள்ளவில்லை. ஆறு மாதத்திற்குள் உள்ளாக அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவில்லை என்றால், உலகளாவிய எண்ணை வர்த்தக சந்தையில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது நாளொன்றுக்கு 3.8 மில்லியன் பீப்பாய்களை ஈரான் உற்பத்தி செய்து வருவதும் அதற்கு ஒரு காரணியாக அமைந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை, மேற்கு டெக்சாசின் இடைநிலை கச்சா எண்ணெயின் விலையானது ஷேல் கச்சா எண்ணெயை சந்தைக்கு கொண்டு செல்வதில் உள்ள போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் துளைப்பாளர்களிடத்தில் உள்ள மூலதன கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணத்தால் இந்த வருடம் பிரண்ட்டை விட 5 டாலர்கள் குறைவாக இருக்கும் எனவும் அடுத்த ஆண்டு 6 டாலர்கள் குறைவாக இருக்கும் எனவும் கணித்துள்ளனர். மேற்கு டெக்சாசின் இடைநிலை (WTI) வியாழன்று பீப்பாய் ஒன்றுக்கு 71 டாலர்கள் அளவில் வர்த்தகம் செய்தது. உலகளாவிய எண்ணை பயன்பாடு இந்த வருடம் 1.5 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கும் மற்றும் அடுத்த வருடம் 1.4 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கும் உயர வேண்டும். [ஆதாரம்: சி.என்.பி.சி நியூஸ்]

எண்ணெயின் தேவை மற்றும் விநியோகத்தில் சில பிரச்சனைகளை தவிர ஒப்புக்கொள்ளும் அளவில் வியக்கத்தகு அளவில் எண்ணெய் விலையை உயர்த்தும் அளவுக்கு வெளிப்படையான எந்த காரணமும் இல்லை. சந்தை உணர்வுகள் மற்றும் எண்ணெய் விலையேற்றத்திற்கான சூழல்களை ஏற்படுத்துவதன் மூலம் ஊடகவியலாளர்கள் தங்களுடைய பணியை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

அமெரிக்கா பாகிஸ்தானிய தூதர்கள் மீது விதித்த கட்டுப்பாட்டிற்கு பதிலடியாக அமெரிக்க தூதர்கள் மீது பாகிஸ்தான் கட்டுப்பாட்டை விதிக்கவுள்ளது

வெள்ளிக்கிழமை முதல் பாகிஸ்தானின் தூதர்கள் மீது பயணத்தடையை விதிக்க இருப்பதாக வாஷிங்டன் அறிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக பாகிஸ்தான் அமெரிக்க தூதர்களுக்கு தடைவிதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது என செய்திகள் வெளியாயின. இஸ்லாமாபாத், லாஹூர் மற்றும் கராச்சியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க தூதர்கள் மீது இந்த தடையை விதிப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் சாத்தியம் உள்ளதால் அதிலிருந்து அவர்களை காப்பதற்காக கூட்டாட்சி மூலம் நிர்வகிக்கப்படும் பழங்குடி பகுதிகள் (FATA) போன்ற உச்சகட்ட பாதுகாப்பு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அவர்கள் விஜயம் செய்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானிய தூதர்கள் அனுமதியின்றி வாஷிங்டனில் உள்ள தூதரகம் அல்லது மற்ற நகரங்களில் உள்ள தூதரகங்களில் இருந்து 40 கி.மீ தாண்டி பயணிக்க தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. நியூஜெர்சியை சார்ந்த ஜனநாயக கட்சியின் அமெரிக்க அரசவை உறுப்பினர் டொனால்டு நார்கிராஸ்: ” முக்கியமான விஷயம் என்னவெனில் பேச்சுவார்த்தை நடத்துவது தான். நாம் (இதுபோன்ற தடைகளை விதிப்பதன் மூலம்) பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு தடைவிதிக்கிறோம், என்னை பொறுத்தவரை இதுவொரு அறிவார்ந்த செயல் இல்லை” என கூறினார்.

வியாழனன்று, அமெரிக்காவுக்கான பாகிஸ்தானிய தூதர் ஏஜாஸ் சவுத்ரி வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிற்கு அளித்த பேட்டி ஒன்றில்: “என்னை பொறுத்தவரை இந்த முடிவு சரியானதல்ல” என கூறினார். பாகிஸ்தானிய அயலுறவு அமைச்சகம் இதை பதிலடி கொடுக்கும் ஒரு செயல் என்று கூறியுள்ளது ஏனெனில் அமெரிக்கா உட்பட பெரும்பாலான அயல்நாட்டு தூதர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ள தடை செய்யப்படுகின்றனர். [ஆதாரம்: கலீஜ் டைம்ஸ்]

அமெரிக்க தூதர்கள் மீது பயணத்தடையை விதிப்பதன் மூலம் பாகிஸ்தானுடைய பிராந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் அமெரிக்காவின் கொடிய திட்டத்தை அது நிறைவேற்றுவதிலிருந்து தடுத்துவிட முடியாது. கிலாஃபா ராஷிதா மட்டுமே பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முடிவுக்கு கொண்டு் வரும் மேலும் பாகிஸ்தானிலும் அதேபோல் முஸ்லிம் உலகிலும் ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படச்செய்யும்.

Comments are closed.