சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

ஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது

செய்தி

ஹிஜ்ரி 1439-யின் ரமழானை முன்வைத்து, உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பல ஃபித்னாகளை (துன்பங்களையும் சோதனைகளையும்) சந்தித்து வருகின்றனர். ஜெருசேலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்து, இந்தோனீசியாவில் பயங்கரவாத குண்டுவீச்சு தாக்குதலை வைத்து அங்குள்ள முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் எதிராக செயல்பட,பயங்கரவாத-எதிர்ப்பு மசோதாவை உண்டாக்கியது வரை உம்மத் பல கஷ்டங்களை சந்தித்துள்ளது.

 

கருத்து

நாம் சந்தித்து வரும் சோதனைகள்,பேரழிவுகள் மற்றும் முஸ்லீம்கள் மீதுள்ள ஒடுக்குமுறை இதற்கிடையில் நமக்கு பெரும் நம்பிக்கை எப்பொழுதும் உள்ளது. இஸ்லாமிய எழுச்சியின் பலத்தை நிறுத்துவதற்காக பல்வேறு தீய திட்டங்களிலிருந்து நம்மை பாதுகாக்ககூடிய கவசமாக நம்முடைய ஈமான் (இறைநம்பிக்கை) இருந்து வருகிறது. மேலும், முஸ்லிம்களாகிய நாம் ஒரு வெற்றி வாய்ந்த நிலையை கொண்டுள்ளோம், ஏனெனில் அல்லாஹ் (சுபு) நமக்கு சிறந்த சமுதாயம் (க்ஹைரு உம்மத்) என்ற தலைசிறந்த தலைப்பைக் கொடுத்துள்ளான். இஸ்லாமின் ஆரம்ப காலத்திலிருந்தே, முஸ்லிம்கள் போராளிகளாக பழக்கப்பட்டு வெற்றிகளை கண்டார்கள்.இதற்கு காரணம், இஸ்லாம் ஒரு உயர்ந்த மார்கமாக இருந்ததும் அதைவிட வேறு எதுவும் உயர்வான விஷயம் இல்லாததே ஆகும். நபி(ஸல்)யின் வாயிலாக ஜுன்னாஹ்(கேடயம்)  என்கின்ற வார்த்தை இரண்டு விஷயங்களில் வந்துள்ளது – நோன்பு மற்றும் தலைமைத்துவம்.  நோன்பை கேடயம் என்று நபி(ஸல்) கூறிய ஹதீஸ்:   “நோன்பு கேடயமாகும்” (புகாரி மற்றும் முஸ்லிம்) இவ்வுலகிலும் மறுமையிலும் நம்மை பாதுகாக்கும் கேடயமாக நோன்பு உள்ளது. இந்த நோன்பானது இவ்வுலகிலுள்ள அழியக்கூடிய இச்சைகளிலிருந்து நம்மை காப்பாற்றி, மறுமையில் நரக நெருப்பிலிருந்தும் நம்மை காப்பாற்றும். மேலும், சமூக அளவில், இச்சையை விட்டு தவிர்த்துக்கொள்ள நமது சமூதாயத்தை இந்த நோன்பு வலியுறுத்துகின்றது, இன்னும் பொறாமை, அகம்பாவம் ஆகியவற்றிலிருந்தும் தவிர்த்து அனைத்து முஸ்லிம்களை ஒரு உம்மத்தாக ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த ரமழான் மாதம் உம்மத்தின் ஒற்றுமை மற்றும் இஸ்லாமின் எழுச்சிக்கான ஒரு காரணமாக அமைகின்றது. எனவே, ரமழானின் ஒவ்வொரு தினத்தையும் நமது ஒற்றுமைக்கான கல்வி கருவியாக பயன்படுத்த வேண்டும், ஏனெனில் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களின் அழுகை மற்றும் நெருக்கடிகளைப் பற்றி அறிய நமது உணர்திறனை கூர்மைப்படுத்தக்கூடிய கருவியாக இந்த ரமழான் இருக்கிறது. பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, ரோஹிங்யா மற்றும் ஏனைய முஸ்லீம் நாடுகளிலுள்ள நமது சகோதர சகோதிரிகளின் நிலைமையைக் கவனித்து அதை உணரவேண்டும்.
மேலும் இரண்டாவது கேடயம் அதாவது,உம்மத்தின் உண்மையான தலைமையிலிருந்து வரும் கவசம், கிலாஃபாவின் முக்கியத்துவத்தையும் நாம் இந்த ரமழானின் மூலமாக உணர வேண்டும். துன்பம், பிரிவு, பயங்கரவாதம் மற்றும் வறுமை ஆகியவை 97 ஆண்டுகளாக நாம் சந்தித்து வருவதற்கு முக்கிய காரணம் உண்மையான கேடயமான கிலாஃபா இல்லாததே ஆகும். நபி(ஸல்) கூறிய “அமீர் கேடயம் ஆவார்” என்ற ஹதீஸை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்: “இமாம் மட்டுமே கேடயம் ஆவார், அவர் பின்னால் தான் நீங்கள் போரிடுவீர்கள் மேலும் அவரைக்கொண்டு தான் உங்களை பாதுக்காத்துக் கொள்வீர்கள். எனவே அவர் தக்வாவை கொண்டு உங்களை கட்டளையிட்டு நீதியாக நடந்தால் அதற்காக அவருக்குப் நன்மை கிடைக்கும். அப்படியில்லாமல் வேறு எதையாவது கொண்டு கட்டளையிட்டால் அது அவருக்கே எதிர்த்து நிற்கும்.” (முஸ்லிம்) எங்களுடைய ரப்பே! ஃபித்னாவின் புயல்களிலிருந்து முஸ்லிம் உம்மத்தை காப்பாற்றக்கூடிய கேடயமாக இந்த ரமழானை நமக்கு ஆக்கித் தருவாயாக! எங்களுடைய அணிகளையும் ஒற்றுமையும் வலுப்படுத்தி, எங்களுடைய பாதங்களை தீனில் உறுதிப்படுத்தி, காஃபிர்கள் மீது எங்களுக்கு வெற்றி அளிப்பாயாக!  கிலாஃபத்தின் கேடயமில்லாத கடைசி ரமழானாக இந்த மாதம் இருக்க நீ விரும்புவாயாக.  ஆமீன் ஆமீன்! யா ரப்புல் ஆலமீன் …

Comments are closed.