சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

செய்திப்பார்வை 12.05.2018

தலைப்புச்செய்திகள்

• சிரியாவிலிருந்து ஈரானை வெளியேற்றுவதற்கு அமெரிக்காவும் யூத அரசும் ஒருங்கிணைந்துள்ளன

• அரசு வழங்கியதின் அடிப்படையில் தற்கொலை தாக்குதல்களுக்கு எதிரான ஃபத்வா

• மலேசிய அதிகாரத்திற்கான அரசியல் நீதித்துறையை கேலிக்குறியதாக ஆக்கியுள்ளது

விளக்கம்

சிரியாவிலிருந்து ஈரானை வெளியேற்றுவதற்கு அமெரிக்காவும் யூத அரசும் ஒருங்கிணைந்துள்ளன

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில்:

“மத்தியகிழக்கு முழுவதிலும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் விஷயங்களை ஏற்றுமதி செய்கின்றது” என குற்றம்சாட்டி ஈரானுடைய “பொறுப்பற்ற செயல்களுக்கு” வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியா மற்றும் சவூதி அரேபியாவில் அதன் செயல்களை குறிப்பிட்டு வெள்ளைமாளிகையின் செய்தி தொடர்பாளர் சாராஹ் ஹக்கபீ சாண்டர்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் “பொறுப்புள்ள தேசங்களிடம்” ஈரான் மீது “இந்த ஆபத்தான நடத்தையை மாற்றிக்கொள்ளுமாறு” அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோலன் ஹைட்ஸில் இஸ்ரேலிய நிலைகளின் மீதான அதிதீவிர ஈரானிய ராக்கெட் தாக்குதலானது வியாழனன்று சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த தூண்டியது. ரியாதை நோக்கி யமனிய கிளர்ச்சியாளர்கள் செலுத்திய ஏவுகணைகளை ஈரான் வழங்கி வருவதாக சவூதி அரேபியா குற்றம் சாட்டியது.

பிரித்தானிய பிரதம மந்திரி தெரேசா மேவுடன் வெள்ளியன்று டிரம்ப் உரையாடினார். இருவரும் இந்த ராக்கெட் தாக்குதல்களை கண்டித்ததாக வெள்ளைமாளிகை கூறியது.

டிரம்ப் இந்த வாரத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்த ஈரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக மே வலியுறுத்தினார் என்று டவுனிங் ஸ்ட்ரீடும் கூறியது.

ஆனால் அமெரிக்கா கூறுவதற்கு மாறாக, ஈரானிய அணுசக்தி ஒப்பந்தித்திலிருந்து அமெரிக்கா வெளியேறியவுடன் ஈரானிய அதிபர் ரூஹாணி முன்பு மெர்க்கலிடம் முறையிட்டதை போன்று ஈரானிய தலைமையானது மத்திய கிழக்கின் மீது மேற்கு கொண்டுள்ள நோக்கங்களுக்கு உதவும் வண்ணமாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, பிரஸ் டிவியின் செய்தியின் படி:

“மத்திய கிழக்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஈரானின் நடவடிக்கைகள் உலகை ஒரு பாதுகாப்பான இடமாக ஆக்கியுள்ளது என ஈரானிய அதிபர் ஹசன் ரூஹாணி ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலிடம் கூறினார்.

இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் காப்பதற்காக வேண்டி ஈரான் இந்த பிராந்தியத்தில் எப்போதும் பதற்றத்தை குறைக்கவே முயற்சித்து வருகிறது மேலும் எக்காரணத்தை கொண்டும் அதிகப்படியான பதற்றத்தை ஏற்படுத்த அது விரும்புவதில்லை” என வியாழனன்று ஜெர்மானிய தலைவருடன் நடத்திய தொலைபேசி உரையாடல் ஒன்றில் ரூஹாணி கூறினார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் மேற்கொண்ட இராணுவ ஆலோசனை முயற்சிகளை உதாரணமாக சுட்டிக்காட்டி, இஸ்லாமிய குடியரசு வெற்றிகரமாக மேற்கொண்ட பயங்கரவாத இஸ்லாமியத்திற்கு எதிரான செயல்களால் ஐரோப்பாவும் பலனடைந்துள்ளது என ஈரானிய அதிபர் கூறினார்.

“தாயிஷ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈரான் மற்றும் ஈராக்குடைய மற்றும் சிரியாவுடைய மக்கள் மேற்கொண்ட போரின் காரணமாக சிரியா மற்றும் ஈராக்கில் குறிப்பிடத்தக்க அளவிலான பாதுகாப்பு கிடைக்க செய்தது, மேலும் இதனால் இந்த பிராந்தியமும் ஐரோப்பா உட்பட இந்த உலகும் பலனடைந்தது,” என அவர் வலியுறுத்தினார்.”

நிஜத்தில் ஈரானுடைய தவறு என்னவென்றால் ஈராக் மற்றும் சிரியாவில் மேற்குக்காக அது ஆற்றிவரும் சேவைகளின் மூலம் அது பலனடையக்கூடும் என எண்ணுகிறது. எனினும், ஈரானுடைய வேலை இப்போது முடிவடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகிறது, அமெரிக்கா ஈரானிய படைகளை இந்த பகுதியிலிருந்து வெளியேற்றுகிறது. ஈரானுடைய தற்போதய விதியானது அயல்நாட்டு இறைநிராகரிப்பாளருக்கு சேவைபுரிவது என்பது இந்த உலகத்தில் இழிவைத் தவிர வேறு எதையும் தராது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாகும், ஆயினும் மறுமையில் தண்டனையோ இதை விட மிகக் கடுமையாக இருக்கும்.

அரசு வழங்கியதின் அடிப்படையில் தற்கொலை தாக்குதல்களுக்கு எதிரான ஃபத்வா

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்றில்:

“தாலிபானின் வன்முறை செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேண்டி அதை சமாதானப்படுத்தும் முயற்சியாக, மூன்று நாடுகளை சார்ந்த முஸ்லிம் அறிஞர்கள் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட வன்முறையான தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களானது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிராக உள்ளது என வெள்ளியன்று ஃபத்வா ஒன்றை வெளியிட்டனர்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவை சார்ந்த எழுபது பிரபலமான முஸ்லிம் அறிஞர்கள் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக வேண்டி நடத்தப்பட்ட மாநாடு ஒன்றில் இந்த ஃபத்வா அல்லது ஆணையை பிறப்பித்துள்ளனர்.

இந்த ஒருநாள் சந்திப்பை தொடங்கி வைத்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ “ஜோகோவி” விடோடோ, போரினால் அழிந்து போன நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவ இந்தோனேசியா உறுதிபூண்டுள்ளது என வலியுறுத்தினார்.

இந்த மாநாடானது ஆப்கானிஸ்தானில் அமைதியை ஊக்குவிப்பதற்கான இஸ்லாமிய அறிஞர்கள் அல்லது உலமாக்களின் பங்கை ஊக்கமூட்டுவதற்கான இந்தோனேசியாவின் முயற்சிகளில் ஒன்றாகும் என ஜோகோவி கூறினார்.

“உலமாக்களின் பேச்சுக்களின் மூலம், குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவை சார்ந்த உலமாக்களின் மூலம், முன்கூட்டியே ஆப்கானிஸ்தானில் அமைதிக்கான சகோதரத்துவ மனநிலையை வலுப்படுத்த முடியும்,” என ஜோகோவி கூறினார்.

“உலமாக்கள் அமைதிக்கான முகவர்களாவர்… அமைதியான மக்களை உருவாக்கும் சக்தி அவர்களிடம் உள்ளது,” என ஜோகோவி கூறினார்.”

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு சம்மந்தமான அஹ்காமை அதற்கு முற்றிலும் வேறுபட்ட அஹ்காம் தேவைப்படும் சூழல் ஒன்றுக்கு காபி-பேஸ்ட் செய்யும் இதுபோன்ற அரசு வழங்கியதின் அடிப்படையிலான ஃபத்வாக்கள் பலவற்றை இதற்கு முன்னர் முஸ்லிம்கள் கண்டுள்ளனர். உண்மையான ஃபத்வாக்களானது எப்போதும் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு எவ்விதமான சட்டவிதிமுறைகள் பொறுந்தும் என்பதை பார்ப்பதற்கு முன்பு அந்த சூழல் குறித்த விரிவான ஒரு விவாதத்தின் மூலம் தொடங்கும். நிச்சயமாக, இஸ்லாம் தாருல் இஸ்லாம் அல்லது தாருல் குஃப்ர் எதுவாக இருக்கட்டும் சமூகத்தின் அமைதியை குலைக்கும் விதத்திலான வன்முறை செயல் அல்லது தற்கொலை தாக்குதலையோ அனுமதிப்பதில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் சூழல் எவ்வாறு இருக்கின்றது என்றால் அங்கு ஒரு பெயர் தாங்கி அரசின் ஆதரவுடன் கூடிய அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அங்குள்ள சூழலுக்கு தேவை ஜிஹாதின் சட்டதிட்டங்களாகும் அமைதியான சமூகத்தில் வாழ்வதற்கான சட்டதிட்டங்கள் அல்ல. போரில் சண்டையிடுவது என்றால் என்ன, அது ஒரு வகையான தற்கொலையை தவிர வேறில்லை, அதில் ஒருவர் ஒரு உயரிய நோக்கத்திற்காக தனது உயிரை தியாகம் செய்கிறார்? முஸ்லிம்களிடத்தில் தற்கொலை மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி, கைப்பாவை அரசுகள் முஸ்லிம்களை ஜிஹாதிற்கு எதிராக முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக திருப்ப நாடுகிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் அனுமதியோடு, அவர்கள் காலம் தாழ்த்தியுள்ளனர், ஏனெனில் ஜிஹாது மற்றும் கிலாஃபத்தை மறுநிர்மாணம் செய்தல் போன்ற ‘மறந்துபோன’ அஹ்காம்களை மீண்டும் தழுவ தொடங்கி முஸ்லிம்கள் அவர்களுடைய தீனை நோக்கி ஏற்கனவே திரும்ப தொடங்கிவிட்டனர்.

மலேசிய அதிகாரத்திற்கான அரசியல் நீதித்துறையை கேலிக்குறியதாக ஆக்கியுள்ளது

ராய்டர்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றில்:

நாஜிப் ரசாக் நிறுவிய அரசு முதலீட்டு நிதி நிறுவனத்தில் பல பில்லியன் டாலர்கள் அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஊழலுக்கு எதிரான விசாரணையை அரசு மீண்டும் துவக்கவிருப்பதாக செய்தி வெளியானதற்கு மத்தியில் சனிக்கிழமை அன்று மலேசிய அதிகாரிகள் நீக்கப்பட்ட பிரதம மந்திரி நாஜிப் ரசாக்கும் அவருடைய மனைவியும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்தனர்,

முகநூல் பதிவு ஒன்றில் தானும் தனது மனைவி ரோஸ்மாஹ் மன்சூரும் புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்த பிறகு வெளிநாட்டில் ஒய்வெடுப்பதற்காக வேண்டி ஒரு வார கால விடுமுறையாக செல்லவிருப்பதாக பதிவு செய்த சில நிமிடங்களில் குடியேற்ற அதிகாரிகளின் இந்த ஆணை வெளியானது.

முந்தய இதர பிரித்தானிய காலனிகளை போன்று மலேசியாவின் நீதித்துறையானது இங்கிலாந்தின் பொது சட்ட அமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு, பிரிட்டனுக்கு உள்ளாக அல்லது வெளிநாடுகளில், நீதியை வழங்குவதற்காக அல்லாமல் மாறாக ஆட்சியாளர்களின் நிலைத்தன்மையையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை நிலையில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கு மாறாக அது ஒரு விதமான நடுவராகவும் மோதலை தீர்த்து வைக்கக்கூடியதாகவும் அதாவது மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடத்தில் தீர்ப்பு வழங்கக் கூடியதாகவும் செயல்படுகிறது.

இந்த மலேசிய நீதித்துறை ‘1MDB’ வழக்கில் ஊழல் மேற்கொள்ளப்பட்டதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் இருந்த நிலையிலும் அதை புதைப்பதில் பிரதம மந்திரி நாஜிப் ரசாகுடன் முழுமையாக ஒத்துழைத்தது. எனினும், அதிகாரத்திலிருந்து அவர் வெளியேறிய உடனேயே, அதே அமைப்பு அவரை நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதித்தும் விசாரணையை மீண்டும் துவக்குவது குறித்தான பேச்சை எழுப்பியும் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.

இதேதான் 2015 முதல் சிறையிலிருக்கும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் விஷயத்திலும் நடந்தது மேலும் இப்போது அவருடைய கட்சி வெற்றி பெற்றுள்ள காரணத்தால் அவருக்கு முழுமையான அளவில் மன்னிப்பு வழங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி மஹாதிர் முஹம்மது கூறியதாக ராய்டர்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றில்:

மலேசிய பிரதம மந்திரி மஹாதிர் முஹம்மது வெள்ளியன்று நாட்டின் மன்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல்வாதி அன்வர் இப்ராஹிமுக்கு முழு மன்னிப்பு வழங்க விரும்புவதாக சுட்டிக்காட்டினார் எனக் கூறினார்.

நிஜத்தில், அன்வர் இப்ராஹிமின் தண்டனையானது அரசியல் ரீதியிலானது மேலும் அவருடைய விடுதலையும் அரசியல் ரீதியிலானதே. மலேசிய அரசியலை பிரிட்டன் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது மேலும் நாஜிப் ரசாக் பலவீனம் அடைந்ததை தொடர்ந்து அவரை மாற்றும் தேவை அதற்கு ஏற்பட்டது. அதன் விளைவாக, நாஜிப் ரசாக்கை மாற்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிமை பதவியில் அமர்த்த பிரிட்டன் மீண்டும் தனது விசுவாசமான சேவகரான, வயது முதிர்ந்த மஹாதிர் முஹம்மதிடம் திரும்பியுள்ளது.

முஸ்லிம்கள் தங்களுக்கு நீதியை பெறுவதற்காக இஸ்லாமிய ஷரீ’ஆவான இறைச்சட்டத்தின் பால் திரும்ப வேண்டும் மற்றும் அந்நிய இறைமறுப்பாளனின் பெயரளவில் மட்டுமே இருக்கும் நீதியை நிராகரிக்க வேண்டும். இஸ்லாத்தில் மட்டுமே ஆட்சியமைப்பானது உண்மையில் சட்டத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்தது. அல்லாஹ் سبحانه وتعالى வின் அனுமதியை கொண்டு இந்த உலகம் மீண்டும் நபி ﷺ அவர்களுடைய வழிமுறையின் அடிப்படையிலான இஸ்லாமிய கிலாஃபத் நிறுவப்படுவதை வெகு சீக்கிரத்தில் கண்டுகளிக்கும் அது மனிதகுலத்திற்கு உண்மையான நீதியை மீண்டும் வெளிப்படுத்தும்.

Comments are closed.