சமீப பதிவுகள்

கண்ணோட்டம்

நக்பா – 70 ஆண்டு கால துரோகம்

ஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய இரண்டு நகரங்களையும் வெறும் 75 கி.மீ தொலைவு பிரித்து வைத்திருந்தாலும் நக்பாவின் 70ம் ஆண்டு நினைவு தினமான மே 14ல் இவ்விரு இடங்களில் நிகழ்பெறும் நிகழ்வுகளுக்கான வேறுபாடு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்க்கு மாற்றும் செயலை அமெரிக்க மற்றும் யூத அதிகாரிகள் துவக்கி வைத்த வேளையில், யூதப்படை வீரர்கள் காஸாவின் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது, இறந்தவர்களின் எண்ணிக்கை நாள் முழுக்க அதிகரித்த வண்ணம் இருந்தது. புதிய தூதரகத்தின் வெளியேயும், ஜெருசலேத்தில் யூதப்படை வீரர்களால் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மிருகத்தனமான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். “அவர்களை தீயிட்டு கொளுத்துங்கள்”, “அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்”, “அவர்களை கொல்லுங்கள்” என யூதர்கள் கோஷமிட்டனர். 70 ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்களிடத்தில் அவர்களுக்கென பாலஸ்தீனத்தில் தனி நாடு ஒன்றை உருவாக்கித் தருவதாக போரின் போது பிரிட்டன் அளித்த தனது உறுதிமொழியை மே 14, 1948 அன்று நிறைவேற்றியது. அதற்கு மறுதினம் அங்கு வாழ்ந்து வந்த உள்நாட்டு மக்களை வெளியேற்றி யூதர்கள் அவர்களுடைய புதிய தேசத்தை பிரகடனப்படுத்தினர்.

கருத்து:

அன்று 1948ல் எவ்வாறு 40 மில்லியன் அரபுகள் 6,00,000 சியோனிஸ்டு வீரர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பது சிந்தனைக்கு எட்டாத காரியமாக இருக்கின்றது. இன்று 8.5 மில்லியன் சியோனிஸ்டுகளை 400 மில்லியன் முஸ்லிம்கள் சூழ்ந்திருக்க அதே கேள்வி இன்றும் நிலைத்து நிற்கிறது. 1948ன் எதார்த்தம் என்னவென்றால் எகிப்திய முடியாட்சி, ஜோர்டானிய முடியாட்சி மற்றும் ஈராக்கிய முடியாட்சியை பிரிட்டன் நிலைநிறுத்தியது, அவர்களோ யூதர்களுக்கு எதிராக போர் புரிவதை விட தமது அரியணையை காப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். பிரிட்டன் அவர்களை நியமித்து அல்லது காத்து வருவதன் காரணமாக அவர்கள் தங்களுடைய எஜமானனுக்கு எதிராக செயல்பட போவதில்லை.

அன்வர் சாதாத் தனது சுயசரிதையில் எகிப்திய முடியாட்சியை 1952ல் அகற்றிய ஃப்ரீ ஆபிசர்ஸ்களை எதற்காக வேண்டி உருவாக்கப்பட்டது என கோடிட்டு காட்டினார். யூத அமைப்பின் (இஸ்ரேல்) உருவாக்கமும் பாலஸ்தீனத்தின் இழப்பும் ஃப்ரீ ஆபிசர்ஸ் என்று அறியப்படும் கலகக்காரர்களை கொண்ட சிறு குழுக்களை கொண்ட படையை ஒன்று திரட்டியது. அப்போதைய பிரதம மந்திரி நக்ரஷி பாஷா கைவசம் இருந்த இராணுவப் பிரிவுகளை பயன்படுத்தாமல் அதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தன்னார்வக்குழுவை அனுப்பி வைத்து யூத அரசுக்கு எதிரான தாக்குதலை எகிப்திய அரசாங்கம் பலவீனப்படுத்தியது.

பாலஸ்தீனத்தை விடுவிக்கும் பொறுப்புக்கு எகிப்தின் நாசர் தலைமையேற்று இருந்தாலும், 1956ல் நடைபெற்ற சூயஸ் பிரச்சனையின் போதும் 1967ல் நடைபெற்ற ஆறு நாட்கள் போரின் போதும் அவர் சந்தித்த சிரமங்களின் காரணமாக பாலஸ்தீனத்தின் விஷயத்தில் குறைந்த அளவிலான உதவியையே பங்களிக்க செய்தது. 1960களின் மத்திய காலகட்டத்தில், நாசர் நிரந்தரமாக இருக்கக்கூடிய அளவிலான சமாதான தீர்வை ஒன்றை எட்டுவதற்காக தத்தமது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளின் மூலமாக யூத அதிகாரிகளுடன் ஒரு தகவல் தொடர்பு தடத்தை திறந்து வைத்தார். அவருடைய தோழர் அன்வர் சாதாத், 1979ம் ஆண்டு யூத அரசுடன் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த இரு அரசுகளுக்கு இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது மேலும் பாலஸ்தீனத்தை விடுவிக்கும் காரியத்தை அரசு சாரா மக்கள் தங்களது கையிலெடுக்கும் நிலையை ஏற்படுத்தியது.

அரபுலக அரசுகள் அனைத்தும் பாலஸ்தீனத்தின் காரியத்தை கைவிட்டன, இது கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று குவைத்தில் பொறியாளராக பணியாற்றிய யாசர் அராஃபத் ஃபத்ஹ் (வெற்றி) அமைப்பை துவக்கிய நேரத்தில் நடைபெற்றது. அந்த அமைப்பு முதலில் ஆயுதம் ஏந்தி போராடியது ஆனால் யூத அரசின் பலம்பொருந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் வெகு சீக்கிரத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதின் பக்கம் திரும்பியது. பாலஸ்தீன பிரச்சனையில் எந்தவொரு தீர்வையும் ஏற்படுத்த முடியாமல், பி.எல்.ஓ வானது பாலஸ்தீன தேசத்தை பெற்று விடலாம் எனும் நம்பிக்கையில் சமரசம் செய்து அதிகப்படியான நிலப்பரப்பை விட்டுக்கொடுத்தது. யூத அரசுடைய அப்போதய பிரதம மந்திரியான யிட்ஜா(Z)க் ராபினுக்கு 1993ல் அராஃபத் எழுதிய கடிதம் ஒன்றில்: “அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் நிலைத்திருப்பதற்கான உரிமையை இஸ்ரேல் பெற்றிருப்பதாக பி.எல்.ஓ அங்கீகரிக்கின்றது” என்று அராஃபத் கூறினார். பேச்சுவார்த்தையில் நுழைந்ததன் மூலமும் அதுவரையில் அது நிலைகொண்டிருந்த அனைத்து விஷயத்திலும் சமரசத்தை மேற்கொண்டதன் மூலம் யூத அரசை வலுப்படுத்தியது பி.எல்.ஓ. யூத அரசை அது அங்கீகரித்ததின் மூலம், யூதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விட்டுக்கொடுக்க சம்மதித்தது. இறுதியில், பாலஸ்தீன மக்களை விடுவிப்பதற்கு பதிலாக அம்மக்களை அது விற்றுவிட்டது.

முதலாம் இன்திஃபாதா போராட்டம் வெடித்ததை தொடர்ந்து அஹமது யாசீன் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் உள்நாட்டு அரசியல் கிளையாக 1987 ஆம் ஆண்டு ஹமாஸை தோற்றுவித்தார். அதற்கு அடுத்த வருடம், யூத அமைப்பை வீழ்த்துவதற்கும் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீன நகரத்தில் இஸ்லாமிய சமூகத்தை நிறுவுவதற்குமான அழைப்பை விடுக்கும் சாசனத்தை ஹமாஸ் வெளியிட்டது. ஹமாஸின் அசலான தலைமையானது ஆயுதம் ஏந்தி போரிடுவதை அரசியல் தீர்வு அடைவதற்கான ஒரு கருவியாக பார்த்தது. ஷேக் அஹமது யாசின், ஹமாஸ் என்பது யூத அமைப்பை அப்புறப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ள ஒரு அரசியல் இயக்கம் எனவும் பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக போராடக்கூடியது எனவும் வாதிட்டு வந்தார். அதனுடைய முக்கிய பிரச்சனை என்னவென்றால் இந்த பகுதியில் யூத அமைப்பை கட்டுப்படுத்தவும் அதனுடன் போட்டியிட்டு வரும் நோக்கத்தை கொண்ட ஈரானிடமிருந்து அது ஆயுதங்களையும், பயிற்சியையும், நிதிஉதவியையும் பெற்றது தான். ஹமாஸ் துவக்கப்பட்டதிலிருந்து பாலஸ்தீனத்தில் அரசு ஒன்றை நிறுவுவதற்கான அரசியல் நோக்கத்தை கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தன்னை வெளிப்படுத்த முயற்சித்து வந்தது ஆனால் அதைவிட மிகப்பெரிய அளவிலான மற்றும் ஆயுத பலமிக்க யூத அமைப்புக்கு எதிராக வன்முறையை பிரயோகப்படுத்தியது அதன் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களை அரசியல் அங்கீகாரம் கிடைத்தால் போதும் எனும் அளவுக்கு சமரசம் அடையச் செய்தது. இதுபோன்ற எண்ணற்ற சமரசங்கள் ஹமாஸை இந்த பகுதியில் வெறுமனே நடைமுறைக்கு ஏற்ப செயல்படக்கூடிய ஒரு இயக்கமாக நீர்த்து போக செய்தது மேலும் இந்த யூத அமைப்பை நியாயப்படுத்தியது. ஹமாஸின் போலிட்பியூரோ (அரசியல்) தலைவராக 2017 வரை இருந்த காலீத் மஷால், பல தருணங்களில் 1967ல் வரையப்பட்ட எல்லைகளையும் இரு நாடுகள் உருவாக்கம் எனும் தீர்வையும் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.

நக்பாவின் 70 வது ஆண்டு நினைவு நாளில் பாலஸ்தீனத்தின் உம்மத் இந்த பகுதியின் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுள்ளனர். அனைத்து வல்லமையையும் கொண்டிருந்தும் அவர்கள் பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்காக வேண்டி ஒரு அடியையும் எடுத்து வைக்கவில்லை. ஆனால் இதுவரையிலான முஸ்லிம் உலகின் கொந்தளிப்பான வரலாற்றில், பாலஸ்தீனத்து போராட்டத்தை விட வேற எந்த போராட்டமும் மக்கள் மனதில் ஆட்கொள்ளவில்லை. யூத அமைப்பின் இருப்பை சரிசெய்வதற்காக எண்ணற்ற சதித்திட்டங்களை மேற்கோள்ளப்பட்டு வரும் நிலையில், ஆட்சியாளர்களின் செயல்முறை எதுவாக இருந்தாலும் பாலஸ்தீனம் 1.6 பில்லியன் மக்களின் பிரச்சனையாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

Comments are closed.