சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 08.06.2018

“நானே இந்த ராணுவத்தை எடுத்து செல்வேன்” இம்ரான் கான்.

விமர்சகர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக தன்னுடைய அரசு இஸ்லாமை பாதுகாக்கும் என மலேசியா பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

முஸ்லிம்கள் மது குடிப்பதற்கும் சீனாவின் ‘மறு-கல்வி’ முகாம்களில் பன்றி சாப்பிடுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்

 

“நானே இந்த ராணுவத்தை எடுத்து செல்வேன்” : இம்ரான் கான்
பிரபல்யமான முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதய எதிர்க்கட்சித் தலைவருமான இம்ரான் கான் புதியதோர் நம்பிக்கையில் காத்திருக்கின்றார். வருகின்ற ஜூலை மாதம் பொது தேர்தல் இருக்கும் நேரத்தில், சென்ற வாரம் அரசியலின் முக்கிய நகரமான லாஹூரில் தான் ஆட்சிக்கு வரப்போவதாக அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு ஆர்வமூட்டி உரை நிகழ்த்தியுள்ளார். தேர்தல் காலம் என்பதால் மற்ற கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழல் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மூலமாக பதவி விலகிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் முக்கிய எதிர்கட்சி தலைவராக இம்ரான் கான் உள்ளார். இவருடைய பிரச்சாரங்களில் அமெரிக்க எதிர்ப்பே முக்கிய அம்சம் வகிக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டிற்கு பிறகு ஷெரீஃப் பொது அலுவலகத்தின் பொறுப்பில் (பிரதமராக) இருப்பதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற மாதம் இதன் தீர்ப்பும் வெளிவர உள்ளது. நவாஸ் ஷெரிஃப் சிறை செல்வார் என்ற நிலை இருப்பதாலும், அவருக்கு பின்னர் அக்கட்சியில் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்) பல தலைவர்கள் இருப்பதாலும் தன்னுடைய நேரம் வந்து விட்டதாக இம்ரான் கான் கூறியுள்ளார். ஊழல் மிக்க அரசியல் வாதிகளுக்கு மத்தியில் தன்னை ஒரு மாற்று வழியாக அவர் காட்டிக்கொள்கிறார். மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் முன்னேற்றம் கொண்டு வரப்போவதாக அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் பல சகாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ராணுவத்துடன் இவருக்கு செல்வாக்கு வளர்ந்து வருவது அரசியலில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்பதையே குறிக்கின்றது. சென்ற தேர்தலில், இவர் இராணுவம் மீது பொதுமக்களின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் ராணுவ வட்டாரத்தில் இவருக்கு அதிக வெறுப்புணர்வு இருந்து வந்தது. அதே சமயத்தில் இராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றுவதில் இவருக்கு எந்தவித மனசங்கடமும் இல்லை. “தார்மீக அதிகாரத்தில் இருந்து ஒரு ஜனநாயக அரசு ஆட்சி புரியும் என்று நான் நினைக்கிறேன், “என லாஹூரில் உள்ள தன் கட்சி அலுவகத்தில் ஓர் நேர்காணலில் அவர் கூறினார்.மேலும் அவர் கூறுகையில் “தார்மீக அதிகாரம் இல்லையெனில், பிறகு யாரிடம் வலிமை அதிகாரம் இருக்கின்றதோ அவர்கள் அதனை எடுத்து கொள்வார். என்னுடைய கருத்து படி பாகிஸ்தான் ராணுவம் எதிரி ராணுவம் அல்ல. நானே இந்த ராணுவத்தை எடுத்து செல்வேன்”. சில மாதங்களாக ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவித் பஜ்வா தன்னுடைய செல்வாக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் நாட்டின் எதிர்ப்பு குரல்களும் ஊடகமும் கடும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த படுகின்றன. தன்னை பதவியிலிருந்து தூக்கவும், வருகின்ற தேர்தலில் தன்னுடைய கட்சியின் பலத்தை குறைக்கவும் ராணுவம் மற்றும் நீதித்துறையும் ஒன்றாக சேர்ந்து செயல்படுகின்றது என நவாஸ் ஷரிப் கூறியுள்ளார். சென்ற வார தேர்தல் பிரச்சாரத்தில் நவாஸ் ஷரிப் இதனை திரும்ப திரும்ப கூறியுள்ளார். இதனை ராணுவமும் நீதித்துறையும் மறுத்து வருகின்றன. [Source: Gulf News].
இம்ரான் கானை தாங்கி கொண்டிருப்பது ராணுவம் தான். கானின் வெற்றிக்காக அரசியல் சூழலை மாற்ற ராணுவம் ரகசியமாக முற்படுவது கணிக்கப்பட கூடிய ஒன்றே. பாகிஸ்தானின் அரசியல் முகம் மாறலாம் ஆனால் அதன் அமைப்பு மாறவில்லை.!!

 

விமர்சகர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக தன்னுடைய அரசு இஸ்லாமை பாதுகாக்கும் என மலேசியா பிரதமர் மகாதிர் கூறுகிறார்.
புதிதாக பதவியில் வந்துள்ள பகதன் ஹரப்பன் (PH) கட்சி இஸ்லாமிய சிந்தனைகளுக்கு செவிகொடுக்குமா என்று விமர்சகர்கள் கேட்ட கேள்விக்கு இஸ்லாம் தன் நாட்டில் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹாதீர் கூறினார். புதிய அட்டர்னி ஜெனெரலாக மலாய் முஸ்லிம் அல்லாதவரை இரண்டு வாரத்திற்கு முன்புதான் அரசு நிர்ணயித்தது. இதனையொட்டிதான் விமர்சகர்கள் தங்களுடைய வருத்தங்களை வெளிப்படுத்தினர். மலேசியாவின் முக்கியமான இஸ்லாமிய நிறுவனமான Jakim ன் செயல்பாடுகளை சீர்திருத்தபோவதாக புதிய அரசு கூறியுள்ளது.
“இந்த அரசாங்கம் இஸ்லாமிய மதத்தை பாதுகாக்காது என்று கூறுபவர்கள் சிலர் இருக்கின்றன , நமது நாட்டின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாமாகும்” என திங்கட்கிழமை புத்ரஜெயா என்ற இடத்தில் நோன்பு திறக்கும் போது டாக்டர் மஹாதீர் கூறினார். “நாட்டை இஸ்லாத்திற்கு முரணாக நடத்தாமல் பார்த்து கொள்வது எங்களுடைய கடமை அதனால் இது (இவர்கள் கூறுவது) தவறாகும்.” என அவர் கூறினார்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி முன்னாள் அட்டர்னி ஜெனரல் முஹமது அபண்டி அலியை மாற்றும் விதமாக மலாய் அல்லாத டாம்மி தாமசை மலேசிய அரசர் நியமனம் செய்தார். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 44 ஆண்டுகளுக்கு பிறகு நியமனம் செய்யபட்ட முதல் மலாய் அல்லாத அட்டர்னி ஜெனரல் இவரேயாகும். இதற்கு முன்னர் அதி நாஹப்பன் என்பவர் 1974 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். மலாய் மற்றும் இஸ்லாமிய அரசு சாரா நிறுவனங்கள் , Umno மற்றும் Parti Islam SeMalaysia போன்ற கட்சிகளின் தலைவர்கள் போன்றவர்கள் ‘ மலாய் அல்லாதவர்கள் பதவிக்கு வருவது இஸ்லாமிற்கும், முஸ்லிம்களுக்கும் எந்த உணர்வையும் தூண்டாது’ என வருத்தம் தெரிவித்துள்ளனர். புது அட்டர்னி ஜெனரல் நியமனம் செய்தது மட்டுமல்ல, 44 வருடத்திற்கு பிறகு புதிய நிதி அமைச்சராக ஒரு சீன இனத்தவரை அரசு நியமனம் செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்க பட்டுள்ளது. 1957ல் மலேசியா சுதந்திரம் வாங்கியதற்கு பிறகு முதல் இரண்டு நிதி அமைச்சர்கள் சீன இனத்தவர்கள் தாம் ஆனால் 1974 ற்கு பிறகு அப்பதவியில் மலாய் மக்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை டாக்டர் மஹாதீர் கூறுகையில் “இஸ்லாமை பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் பலர் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்தை அமைக்க விரும்புகின்றோம் என்றும் கூறுகின்றனர் ஆனால் அவர்களுடைய செயல்களோ இஸ்லாம் கூறிய போதனைகளுக்கு முரண் படக்கூடியதாக இருக்கின்றது.” மேலும் அவர் கூறியதாவது “நாட்டினுடைய சட்டங்களையும், அரசியலமைப்பையும் ஆதரிக்கும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம், இஸ்லாமிற்கு முரணாக எதையும் செய்ய மாட்டோம்.” [Source: The Straits Times]
மகாதீர் ஒருபோதும் இஸ்லாமிற்கு பாதுகாவலனாக இல்லை. மலேசியாவில் மேற்குலகம் மக்களின் வளங்களை சுரண்டக்கூடிய மதச்சார்பற்ற அமைப்பை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவருடைய முக்கிய நோக்கமாகும்.

 

முஸ்லிம்கள் மது குடிப்பதற்கும் சீனாவின் ‘மறு-கல்வி’ முகாம்களில் பன்றி சாப்பிடுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்
மறுகல்விக்காக முஸ்லீம்களை சீன அரசாங்கம் சிறை வைத்து பன்றி கறியையும் மதுவையும் குடிக்க கட்டாயப்படுத்தியுள்ளது என கைதிகள் முகாமில் இருந்த முன்னாள் கைதி கூறினார். லட்சக்கணக்கான மக்கள் மறுகல்வி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் ஓமிர் பெகாலி என்பவர். இவர் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் கைது செய்யப்பட்டார், பிறகு இவருக்காக வாதாட வக்கீல்கள் மறுக்கப்பட்டன. இவர் தன்னுடைய நம்பிக்கையை கைவிட்டு கம்யூனிச கட்சியை புகழ் வற்புறுத்தப்பட்டுள்ளார். பெகாலி ஒரு கஜகஸ்தான் குடிமகன். 20 நாட்கள் அந்த முகாமில் இருக்கும் பொழுது தனக்கு தற்கொலை எண்ணம் வந்தது என்றும் பிறகு அவர்கள் தன்னை ஏழு மாதம் சிறையில் அடைத்ததாக அவர் கூறினார். கடந்த வருடம் வசந்த காலத்திலிருந்து சின்ஜியாங் பகுதியில் உள்ள அதிகாரிகள் பத்து அல்லது நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை முகாம்களில் அடைத்து உள்ளனர், இதில் சில வெளிநாட்டவர்களும் அடங்கும். மற்றொரு மதிப்பீட்டின்படி பத்து லட்சம் அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கை என கூறப்படுகிறது.
“உலகின் ஒரு சிறுபான்மை மக்களின் மிகப்பெரிய வெகுஜன சிறைவாசம்” என இதனை ஒரு அமெரிக்க கமிஷன் அழைத்துள்ளது. ஒரு பிரபல வரலாற்று ஆய்வாளர் இதனை “கலாச்சார சுத்திகரிப்பு “ என அழைத்துள்ளார். “தி இன்டிபென்டன்ட்” என்ற செய்தி நிறுவனம் சீன வெளியுறவு துறை அமைச்சரிடம் இதனை பற்றி விசாரிக்கையில் அப்படி ஒன்றை தான் கேள்விப்படவில்லை என்றார். பிறகு ஏன் சீனா அல்லாதவர்களை சிறையில் அடைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, வெளிநாட்டவர்களின் உரிமையை அரசு பாதுகாக்கிறது என்றும் மேலும் அவர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சீன அதிகாரிகள் இதனை பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
பெகாலி அவர்களின் கட்டளையை மறுக்கும்பொழுது தினமும் 5 மணி நேரம் சுவற்றில் நிக்க வைத்திருகின்றார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து தனி சிறையில் அடைக்கப் பட்டார். அங்கு அவருக்கு 24 மணி நேரம் உணவு வழங்கப் படவில்லை. 20 நாட்கள் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர் தன்னை தானே கொல்ல நினைத்துள்ளார். “உளரீதியான அழுத்தம் அங்கு நிறைய உள்ளது. நீங்கள் உங்களை நீங்களே குறை சொல்ல வேண்டும் என்றால், உங்களுடைய சிந்தனைகளையும் உங்களுடைய சொந்த இனத்தையும் தான் குறை சொல்ல வேண்டும்“ என பெகாலி கூறினார். அவர் அந்த முகாம்களை பற்றி விவரிக்கும் பொழுது அவர் அழ ஆரம்பித்து விட்டார். “ஒவ்வொரு இரவும் நான் அதனை பற்றி நினைத்து கொண்டே இருகின்றேன், என்னால் இரவில் தூங்க முடியவில்லை. அதன் நினைவு எந்நேரமும் என்னிடம் இருக்கின்றது” என அவர் கூறினார்.
இந்திய பரப்பளவில் பாதி இருக்கும் ஜிஞ்சியாயங் மாகாணம் முழுக்க இந்த சிறை முகாம்கள் போடப்பட்டிருகின்றன. சீன அதிகாரிகள் இதனை பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். சிலர் சித்தாந்த மாற்றம் (ideological change) தேவை எனவும் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக போராட வேண்டும் எனவும் அரசு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் தீவிர உய்கூர் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான வர்களை கொலை செய்துள்ளனர் என்றும் ஹான் இன மக்கள் அதிகமாக வாழும் அவ்விடம் சீனாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என சீனா கருதுகின்றது. [Source: The Independent]
முஸ்லிம்கள் உலகம் முழுக்க இன்னல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஒரு தலைவருக்கு கூட இதற்கு எதிராக போராட விருப்பம் இல்லை. சலாஹுத்தின் போன்ற நபர் எங்குதான் வருவாரோ?!

Comments are closed.