சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 09.06.2018

தலைப்பு செய்திகள்

G7 அமைப்பை பழிவாங்கும் விதமாக ரஷ்யாவை உள்ளிழுக்க அழைப்பு விடுக்கும் டிரம்ப்.

ஆப்கான் விஷயத்தில் நம்பிக்கை தளர்ந்து வரும் அமெரிக்கா:

ஏமன் நாட்டின் ஹொதேய்தா மாகாணத்தில் மிகப்பெரிய திடீர் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் ஐ.நா:

பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து மிருகத்தனமாக நடந்துகொள்ளும் யூத வந்தேறி அரசு:

மேற்குலக சிந்தனைகளை பிரச்சாரம் செய்யும் அமெரிக்கா தான் இவ்வுலகின் மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடு!

 

G7 அமைப்பை பழிவாங்கும் விதமாக ரஷ்யாவை உள்ளிழுக்க அழைப்பு விடுக்கும் டிரம்ப்.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தி குறிப்பில், G7 அமைப்பிற்குள் ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று டிரம்ப் அழைப்புவிடுதிருப்பதாக செய்தி வெளியானது.

2014 இல் கிரிமீயா நாடு மீது போர் தொடுத்ததன் விளைவாக ரஷ்யா G8 அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு இப்பொழுது அவ்வமைப்பு G7 என்று அழைக்கப்படுகிறது. உலகின் முன்னணி ஏழு பெரிய பொருளாதாரநாடுகளின் கூட்டமைப்பே G7. டிரம்ப்பின் இந்த கருத்தென்பது இக்கூட்டமைப்பின் மற்ற நாடுகளிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்ப்பின் இந்த கருத்து அவர் G7 மாநாட்டிற்கு வருகை தருவதற்கு சற்று முன்பாக கனடாவில் வெளியிட்டிருக்கிறார். வெளிநாட்டு பொருட்கள் உள்நாட்டில் இறக்குமதி செய்வதற்கான வரியையும் முறைகளையும் கடினமாக்கி சட்டமியற்றி இருக்கும் விவகாரத்தில் ஏற்கனவே G7 இன் பொருளாதார நாடுகள் அமெரிக்கா மீது கொதிப்பில் உள்ள நிலையில், டிரம்ப் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்ற முறை நடந்த G7 மாநாட்டில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவ் மஞ்சினுக்கு எதிராக மற்ற நாடுகள் கண்டனத்தை தெரிவித்தன. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாகவும் டிரம்ப்பின் கருத்து பார்க்கப்படுகிறது.

ஆனால் டிரம்ப்பின் இந்த கருத்து வெறுமனே தன் நிதி அமைச்சருக்காக கொடுக்கப்பட்ட கருத்தல்ல. மாறாக, ஈரானுடன் அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, சீனாவுடன் வர்த்தக போர் நிகழ்த்துவது என்று அமெரிக்கா சமீப காலத்தில் தன் வெளியுறவு கொள்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது G7 இல் உள்ள மற்ற மேற்குலக நாடுகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக விடிந்துள்ளது. இதற்கு ஈடு செய்யும் விதமாக அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளை இவ்வமைப்பில் உள்ளிழுக்கும் நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாகவே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் கடந்த மாதம் ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து புதிய ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டார்.

அமெரிக்கா இந்த நகர்வுகளை நோட்டமிட்டு நரித்தனமாய் இப்போது ரஷ்யாவும் சீனாவும் மற்ற நாடுகளுடன் கூட்டணி அமைத்துவிடக்கூடாது என்பதற்காக முந்திக்கொண்டு ரஷ்யாவை ஆதரிக்கிறது. இதை அமெரிக்காவின் தந்திரம் என்றுதான் பார்க்கமுடியுமே தவிர, ரஷ்யா விஷயத்தில் அமெரிக்காவின் கொள்கை இதற்கு நேரமானது தான்.

இங்கு நமக்கு கிடைக்கும் பாடம் ஒன்று தான் – காஃபிர்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களின் சுய லாபங்களுக்காக சண்டையிட்டு கொள்வது என்பது அவர்களுக்குள் ஒற்றுமை என்பது சிறிதும் இல்லை என்பது விளங்குகிறது. அவர்களின் கூட்டமைப்பும் கூட்டணியும் அகழ் போரில் குறைஷிகளும் கைபர் வாசிகளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை போன்றது தான் – மிக சுலபமாக அவர்கள் பிரிக்கப்பட்டு வெற்றிகொள்ளபட்டார்கள். இன்று உலகில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் நேர்மையும் இறையச்சமும் கொண்ட உண்மையான ஒரே தலைவரின் கீழ் ஒருங்கிணையும் பட்சத்தில் எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு உலகின் மேன்மை மிக்க சமுதாயமாக மீண்டும் முஸ்லீம் உம்மத் மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆப்கான் விஷயத்தில் நம்பிக்கை தளர்ந்து வரும் அமெரிக்கா:

அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பகுதிகளில் ஆப்கான் முஜாஹிதீன்களின் தொடர்ச்சியான முன்னேற்றங்களின் விளைவாக, தாலிபான்களை அமைதி பேச்சுவார்த்தையில் அமரவைப்பதற்கு அமெரிக்கா புதிய வழிவகைகளை கையாள உள்ளது.

நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் படி:
சமீபத்தில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் வீரியத்துடன் சென்றுகொண்டிருக்கும் போரை தற்காலிகமாக நிறுத்துவதுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று அஷ்ரப் திட்டமிட்டுள்ளார்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவதாகவும் அவர் அறிவிதிக்கிறார். இந்த அறிவிப்பிற்கு ஒரு மாதம் முன்னதாகத்தான் இதை போன்ற இன்னுமொரு அமைதி ஒப்பந்தத்திற்கு அவர் அழைப்புவிடுத்திருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இத்தகைய அறிவிப்புகளை விடுவதன் மூலம் அமெரிக்காவை பின்புலமாக கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்கான் அரசு உலக அரங்கில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அரசாகவும் தன்னை காட்டிக்கொள்ள விழைகிறது. ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது. ஆப்கானில் மக்கள் அடையும் துயரங்களுக்கு காரணமாக இருக்கக்கூடிய அமெரிக்காவின் அட்டூழியங்களுக்கு துணைபோகும் அரசாகவே அது இருக்கிறது என்பதை உலகமே அறியும். இன்னும் இதனை அங்குள்ள அமெரிக்கா அதிகாரிகளே பல தருணங்களில் இவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த போர்நிறுத்த அறிவிப்பு குறித்து உண்மையில் அங்குள்ள முக்கிய இராணுவ அதிகாரிகளுக்கு செய்தி சென்று சேரவில்லை. 20 இராணுவ அதிகாரிகளிடம் நேர்காணல் செய்தபோது, வெறும் ஆறு நபர்கள் மட்டுமே தங்களுக்கு இந்த செய்தி கிடைத்ததாகவும் இன்னும் அவர்கள் இதனை தொலைக்காட்சி மூலமாக தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்தனர். இவர்களல்லாத மற்றவர்களுக்கு இந்த செய்தி குறித்து எது ஒன்றும் தெரியவில்லை.

போர் நிறுத்த அறிவிப்பு குறித்து பேசும் அதிகாரிகளில் சிலர், ஆப்கான் அரசு முதலில் தங்களுக்கு தர வேண்டிய பல மாத சம்பள பாக்கிகளை முதலில் தரட்டும், போர் நிறுத்தம் குறித்து பின்னர் பேசலாம் என்று வெளிப்படையாக அறிவிக்கின்றனர். இன்னும் ஆப்கான் அரசு போர்நிறுத்தம் அறிவித்தபோதிலும் தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். ஆப்கானில் 30,000 போர்வீரர்களுக்கு பல மாத சம்பள பாக்கி நிலுவை உள்ளது. சம்பள பணம் தவறானவர்கள் கைகளுக்கு செல்கிறது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இனியும் ஆப்கானில் நிலைபெறப்போவதில்லை. ஆப்கான் முஜாஹிதீன்கள் அமெரிக்காவின் பல்வேறு அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு செவிசாய்க்காமல் நிராகரித்து வருகின்றனர். தாலிபான்களை தன்வசப்படுத்துவதென்பது இனியும் முடியாத காரியம் என்று காஃபிர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். அங்கு உறுதியாக போராடிக்கொண்டிருக்கும் முஜாஹிதீன்கள் ஆப்கான் மண்ணிற்கான தங்களின் போராட்டம் என்பதை மாற்றி, இஸ்லாமிற்கான போராட்டமாக இதனை மாற்றினால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் இஸ்லாமிய அரசு அனைத்து அக்கிரமிப்பாளர்களையும் அநியாயக்காரர்களையும் இஸ்லாமிய இராணுவத்தை கொண்டு களைந்தெடுத்து, உலகெங்கும் அக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ள இஸ்லாமிய நிலங்கள் அனைத்தையும் மீட்டெடுக்கும்.

 

ஏமன் நாட்டின் ஹொதேய்தா மாகாணத்தில் மிகப்பெரிய திடீர் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் ஐ.நா:

ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட குறிப்பின் படி,
ஏமன் நாட்டின் ஹொதேய்தா மாகாணத்தில் சவூதி தலைமையிலான கூட்டு படை நடத்தும் மிகப்பெரிய திடீர் தாக்குதலில் 2,50,000 அளவிற்கு உயிர் சேதம் ஏற்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ஹௌதி வசமிருக்கும் ஹொதேய்தா துறைமுக நகரத்திற்கு இன்னும் 20 கி.மீ தொலைவே உள்ளது என்றார். எனினும் தங்களுடைய தாக்குதல் திட்டம் குறித்து அப்போது அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த துறைமுகம் வழியாக தான் பஞ்சத்திலும் காலரா நோயிலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏமன்வாசிகளுக்கு உணவும் மருந்தும் பிற நாடுகளிடமிருந்து வந்துகொண்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்குமென்று மனித உரிமை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஏனென்றால் இந்த நகரத்தை சுற்றி 6,00,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிலை மேலும் கவலைக்குரியதாக ஆகிவிடும்.

ஏமனுக்கான ஐ.நா அதிகாரி லிசி கிராண்ட் கூறுகையில், “இந்த நகரம் கைப்பற்றப்பட்டு இதே நிலை நீடித்தால், 2,50,000 மக்கள் அனைத்தையும் இழக்கும் நிலை வரலாம் – அது அவர்களின் உயிராகவும் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

சவூதி தலைமையிலான கூட்டு படை என்று அழைக்கப்படும் இந்த இராணுவம், உண்மையில் முழுக்க முழுக்க அமெரிக்காவால் ஏவப்பட்டு வழிநடத்தப்படும் இராணுவமே ஆகும். ஆப்கான் மற்றும் ஈராக்கில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, இனி முஸ்லீம் நாடுகளில் தன்னுடைய இராணுவத்தை இறக்குவது பயனளிக்காது என்று முடிவு செய்த அமெரிக்கா, அதற்கு பதிலாக தனக்கு விசுவாசமாக இருக்கும் நாடுகளை ஏவிவிட்டு தன் நோக்கத்தை அடைந்துகொள்ள நினைக்கிறது. ஏமன் விஷயத்தில் தனக்கு முழு விசுவாசியான சவூதியை பயன்படுத்தி தன் நோக்கமான ஏமனில் தன் கைப்பாவை அரசை நிறுவுவதை அடைந்து கொள்ள விரும்புகிறது. காலனியாதிக்க நாடுகளின் பாதுகாவலர்களான மேற்குலக விசுவாசிகளை புறக்கணித்து, முற்றிலுமாக இஸ்லாமிய தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த முஸ்லீம் உம்மத் நீதத்தையும் நிம்மதியான வாழ்வையும் அடையும். இன்னும் இதுவே நமக்கு வாழ்வளிக்க கூடியதாக இருக்கிறது.

 

பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து மிருகத்தனமாக நடந்துகொள்ளும் யூத வந்தேறி அரசு:

ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட குறிப்பின் படி,
காசா முனையில் வெள்ளிக்கிழமை யூத வந்தேறி அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் கண்ணீர் புகை குண்டுகளையும் தோட்டாக்களையும் கொண்டு பலஸ்தீன மக்களை தாக்கியதில் 386 நபர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

இராணுவம் மீது கற்களை வீசியது, டயர்களை எரித்தது மற்றும் நாட்டின் எல்லை வேலிகளை சேதப்படுத்தியது ஆகிய செயல்களில் ஈடுபட்ட 10,000 நபர்கள் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் விளக்கமளித்திருக்கிறது.

யூத ஆக்கிரமிப்பிற்கு எதிராக மார்ச் 30 முதல் நடந்துவரும் தொடர் போராட்டத்தில் இதுவரை 120 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
யூத ஆக்கிரமிப்பு அரசிற்கு பலஸ்தீனை முழுமையாக கைப்பற்றுவதை தவிர்த்து வேறெந்த கொள்கையும் கிடையாது. இன்னும் மேற்குலக நாடுகள் இவ்விஷயத்தில் இவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எனினும் இவர்களால் பலஸ்தீன மக்களிடமிருந்து யூத ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடும் போராட்ட உணர்வை (பல்வேறு இழப்புகளை சந்தித்த பின்னரும்) வெல்ல முடியவில்லை என்பது தான் உண்மை. காஷ்மீர், ஜின்ஜியாங் செச்சினியா போல் முஸ்லீம் உம்மத்தின் கண்ணீர் எப்பொழுதும் பலஸ்தீன மக்களுக்கு உண்டு. எனினும் இந்த மக்களுக்கு நம்முடைய கண்ணீரை விடவும் இந்த மக்களின் துயரத்தை துடைத்தெறிய கூடிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கிணங்க முஸ்லிம்களின் உயிர், உடமை மற்றும் மானத்தை காக்கக்கூடிய இஸ்லாமிய அரசியல் தலைமையை நிறுவி, இஸ்லாமிற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த மக்களை மீட்டெடுப்பது தான் நிச்சயமாக இவர்கள் முஸ்லீம் உம்மத்திடம் எதிர்பாக்கும் ஒன்றாக இருக்கிறது.

 

மேற்குலக சிந்தனைகளை பிரச்சாரம் செய்யும் அமெரிக்கா தான் இவ்வுலகின் மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடு!

உலகில் எந்த நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு குண்டு துளைக்காத ஆடை அணியப்பட்டு பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்?

இதற்கான பதிலை அமெரிக்காவில் வெளிவரும் கார்டியன் (Guardian) பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை சொல்கிறது:
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு குண்டுகள் துளைக்க முடியாத ஆடை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகளை உள்ளூர் நிறுவனம் ஒன்று பென்சில்வேனியாவில் உள்ள St. Cornelius பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பை பூர்த்தி செய்ததற்கு நினைவு பரிசாக தந்துள்ளது.

அந்த ஆய்வு கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் நடந்த கருத்து கணிப்பில் 57% டீனேஜ் வயதினர் மற்றும் 63% பெற்றோர்கள் தாங்கள் சார்ந்த பள்ளியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பல உயர் சேதம் ஏற்படுத்துவது தொடர்கதையாகிவருகிறது. பள்ளி மாணவர்கள் மத்தியிலான துப்பாக்கி கலாச்சாரம் பெருகுவது பெற்றோர்களையும் சமுக ஆர்வலர்களையும் மிகவும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

வாழ்வியல் குறித்து இறைநிராகரிப்பை அடிப்படியாக கொண்ட மேற்கத்திய கலாச்சாரம், சமூகத்தோடு ஒன்றாத சுயநல விரும்பிகளை உருவாக்கி சமூகத்தில் நிம்மதியை குலைத்துவிட்டிருக்கிறது.மக்களுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக அவர்கள் கூறும் தனி மனித சுதந்திரம் என்பது, உண்மையில் சமூகத்தில் உள்ள உயர்வான கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு தம் மனம் விரும்பியதை செய்யும் சுயநல போக்கையே அவர்களின் உள்ளங்களில் விதைத்துள்ளது. மதசார்பின்மை என்னும் தரங்கெட்ட சிந்தனையை கொண்டிருக்கும் மேற்குலகிற்கு இவ்வுலகில் மற்ற நாடுகளில் உள்ளவற்றை சரிசெய்வதற்கு எத்தகைய அருகதையும் அறவே இல்லை என்பது வெளிப்படையான உண்மை. மேற்குலகிடம் இருக்கும் மித மிஞ்சிய நல்ல சிந்தனைகளும் இஸ்லாமிய கிலாஃபா இவ்வுலகின் வல்லரசாக இருந்தபோது முஸ்லீம்களை பார்த்து தங்களை வடிவமைத்து கொண்டவை தான். வரலாற்றை உற்று நோக்கினால், இஸ்லாமின் ஆளுகையின் கீழ் இஸ்லாமின் சிறந்த வாழ்வியலை கண்டு அந்நிய சமூகங்கள் தங்களின் வாழ்வியலை தாங்களே திருத்திக்கொண்டன. இஸ்லாமிய வாழ்வியல் அன்றைய ஐரோப்பாவில் உயர்வானதாக பார்க்கப்பட்டது. அங்கு வாழ்த்த பல அறிஞர்களின் கூற்றுகள் இதற்கு சான்றாக உள்ளன.

இஸ்லாமிய வாழ்வியலின் பால் திரும்பி இஸ்லாமை அடிப்படையாக கொண்ட அரசை நிறுவுவது முஸ்லிம்களுக்கு நீதத்தையும் நிம்மதியான வாழ்வையும் தருவதோடல்லாமல் இவ்வுலகில் மதசார்பற்ற மனோஇச்சையின் அடிப்படையிலான முதலாளித்துவ சிந்தனைகளை வேரறுத்து மனித சமூகம் மனிதாபிமானம், நீதி, நெறி மற்றும் ஆன்மீக சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு தன் தற்கால நிலையிலிருந்து மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்ஷா அல்லாஹ் அத்தகைய காலம் வெகு தொலைவில் இல்லை!

Comments are closed.