சமீப பதிவுகள்

கிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

மதீனாவில் இஸ்லாமிய அரசுக்கு கீழ் ரமலான் எவ்வாறு இருந்தது மற்றும் முஸ்லிம்கள் அப்போது அதனை எவ்வாறு கழித்தார்கள்? மேலும் இந்த புனித மாதத்திற்கான தயாரிப்பை ரசூலுல்லாஹ் ﷺ அவர்களும் அவர்களுக்கு பின்னர் அவர்களுடைய தோழர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள்? அவர்கள் இப்போது நாம் கழித்துக் கொண்டிருப்பதை போன்று கழித்தனரா மேலும் இப்போதுள்ள நாடுகள் செய்து வருவதை போன்று செய்தனரா அல்லது அதில் பெரிய மாற்றம் ஏதேனும் இருந்ததா? இது போன்ற கேள்விகள் பலருடைய மனதில் எழுந்திருக்கலாம், இன்ஷா அல்லாஹ் அதற்கான பதிலை வழங்குவதற்கு நாம் முயற்சிப்போம்.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் ரமலான் கடமையாக்கப்பட்டது. ரசூலுல்லாஹ் ﷺ மதீனாவிற்கு ஹிஜ்ரத்தை மேற்கொண்ட பிறகு ஏற்படுத்திய ஒரு இஸ்லாமிய சூழலானது முந்தைய முஸ்லிம்களுக்கு நோன்பின் மாதத்துடைய ஒரு தனித்தன்மை வாய்ந்த அனுபவத்தை பெற்றுத் தந்தது. அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்தனர் மேலும் அதனுடைய அழைப்பு பணிக்காக வேண்டி அவர்கள் மதிப்புமிக்கதாக கருதியவற்றை தியாகம் செய்தனர். நோன்பு கடமையான போது, நன்மைகளை இரட்டிப்பாக பெறுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக கருதினர் மேலும் அனைத்து நிலையிலும் அவர்கள் அதிகப்படியான பங்களிப்பை செய்தனர்.

அவர்கள் கடுமையாக உழைத்தனர் மேலும் அவர்கள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்; அதாவது இரவில் நின்று வணங்கியும் பகல் முழுவதிலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டும், பாவமன்னிப்பு கோரியும், தஹ்லீல் மற்றும் தக்பீர் செய்து அல்லாஹ்வை புகழ்ந்தும் மற்றும் அதிக அளவு தாராளப்பண்பை வெளிப்படுத்தியும்; அவர்கள் அல்லாஹ் ﷻ வின் நற்கூலியை கோரியவர்களாக மறைவாகவும் வெளிப்படையாகவும் தங்களுடைய நேரங்களை கழித்தனர், மேலும் அவர்கள் ஜிஹாது புரிவதற்கான அல்லாஹ் ﷻ வின் அழைப்பிற்கு அதைவிட்டு விலகியவர்களாக அல்லாமல் நன்மையை உலகெங்கும் பரவச்செய்யும் விதமாக அதை நோக்கி விரைந்து செல்வார்கள். ரசூலுல்லாஹ் ﷺ, ஒரு தேசத்தின் தலைவராக, இந்த கட்டுப்படுதல் மற்றும் தியாக உணர்வு எனும் வாய்ப்பை பயன்படுத்தி தங்களால் இயன்ற அளவுக்கு பல படையெடுப்புகளுக்காக பல படைகளை அனுப்பி வைத்தார்கள். அல்லாஹ் ﷻ வின் பாதையில் தன்னை தியாகம் செய்வதை காட்டிலும் ஒருவர் எவ்வாறு தனது கட்டுப்படுதலை நிரூபிக்க முடியும், மேலும் அதற்கான கூலியை விட வேறு என்ன இருக்க முடியும், வணக்க வழிபாடு என்னும் பெயரில் அந்த சில நாட்களில் இவற்றை விட்டு தவிர்ந்திருப்பதற்கு ஆக ரமலான் என்பது வெற்றியின் மாதமாகும் அதில் தான் சைஃப் அல்-பஹ்ர் படையெடுப்பு நடத்தப்பட்டது மற்றும் மாபெரும் பத்ரு யுத்தம் மற்றும் இதர யுத்தங்களும் நடத்தப்பட்டன.

இதன் காரணமாக, நபித்தோழர்கள் (அல்லாஹ் ﷻ அவர்களை பொருந்திக் கொள்வானாக) அல்லாஹ்வை அஞ்சுதல் (தக்வா) என்பது பற்றி நன்கு விளங்கி வைத்திருந்தனர். மேலும் அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தும் அவன் தடுத்தவற்றிலிருந்து தவிர்ந்து இருந்தும் தங்களுடைய வாழ்க்கையை நடத்தினர், மேலும் நன்மையான காரியங்களை விரைவாக செய்தும் மற்றும் தீமையான காரியங்களை விட்டு தவிர்ந்தும் வந்தனர், மேலும் அவர்கள் தக்வாவின் உயர்நிலையிலான இறையச்சத்தை (வரா’) அடையும் வரை ஹராமான விஷயங்களில் ஈடுபட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பல ஹலாலான காரியங்களையும் தவிர்த்து வந்தனர். இதேபோன்று குலஃபா அர்- ராஷிதீன்களுடைய (நேர்வழி பெற்ற கலீஃபாக்கள்) அல்லாஹ் ﷻ அவர்களை பொருந்திக் கொள்வானாக, காலகட்டத்திலும் நடைபெற்றது, பின்பு இந்த பாங்கு கலீஃபாக்களின் நிழலில் அதனை தவறான முறையில் நடைமுறைப்படுத்தியதன் காரணத்தாலும் பின்பு இஸ்லாமிய ஆட்சிமுறை முழுமையாக தகர்க்கப்பட்டது வரை ஒரு காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தும் மற்றொரு காலத்தில் தாழ்மையடைந்தும் வந்தது.

நாம் இப்போது வாழ்ந்து வருவதோ முஸ்லிம்களுடைய வாழ்வியலில் இஸ்லாம் நடைமுறையில் இல்லாத நிலையிலான வாழ்வை நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம். இது அடிப்படையில் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த ரமலானுக்கு முற்றிலும் மாறுபட்ட நிலையில் வாழும் நிலையில் இருக்கின்றோம். நமது தன்மைகளில் முந்தய இஸ்லாமிய சூழலை நாம் கொண்டிருப்பதே நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கண்ணியமிகு கிலாஃபத்தான, இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கான தேவையை நிறைவேற்றுவதற்கான ஆதாரமாக விளங்குகிறது, அது நம்மை நமது ஆரம்ப நிலைக்கு அதாவது புனிதங்கள் பாதுகாக்கப்படும் மற்றும் ஒவ்வொரு இல்லத்துக்கும் (களிமண் அல்லது துணியால் செய்யப்பட்ட) அல்லாஹ் ﷻ வுடைய தீனை பரவச்செய்வதற்காக வேண்டி ஜிஹாதுக்கு அழைப்பு விடப்படும் அருள் நிறைந்த மாதத்தின் நன்மையை அனுபவிக்கும் நிலைக்கு மீண்டும் கொண்டு செல்லும்.

நம்மில் ஒவ்வொருவரும் இஸ்லாமிய சூழலை ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் சமூகத்தை பாதுகாப்பதற்காகவும் அரசு கொண்டிருக்கும் பங்கு குறித்து உணர்ந்திருப்போம், மேலும் அனைத்து இடங்களிலும் ஹராம் பரவியுள்ளதை நாம் கண்டு வருகிறோம், ரமலானில் மட்டுமல்லாமல் அழிவை ஏற்படுத்தி வரும் நாடுகள் மக்களை அவர்களுடைய தீன் மற்றும் நம்பிக்கையிலிருந்து அந்நியமாக்கும் எதையும் கொண்டு வருவதற்கு தயங்குவதில்லை; அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை நீக்கியும், அதற்கு இடையூறுகள் ஏற்படுத்தியும் மற்றும் அதை திரித்தும் அதனோடு நல்லொழுக்கத்தை அழித்து விடவும் மேலும் மக்களுடைய மனதில் ஊண்றியிருக்கும் வெட்கம் மற்றும் பக்தி மற்றும் அல்லாஹ்வின் மீதான அச்சத்தை நிர்வாணம், ஆபாசம், தீயொழுக்கம், ஒழுக்கக்கேடு மற்றும் விபச்சாரம் மற்றும் இதுபோன்றவற்றை நோக்கி அழைக்கும் இழிவான தொலைக்காட்சி தொடர்கள் மூலமும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிகப்படுத்துவதன் மூலம் அழிப்பதற்காக வேண்டி அதன் மீது உறுதியான போர் ஒன்றை புரிந்து வருகின்றனர்.

மக்களை திசைதிருப்பும் மற்றும் அவர்களுடைய மனதை வலுப்படுத்தும் ஈமானுடைய சூழலை விட்டும் மற்றும் அல்லாஹ் ﷻ அவர்களுக்கு தயார் செய்து வைத்திருப்பதின் பக்கம் ஏக்கம் கொண்டிருப்பதை விட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நோக்கத்தை கொண்டு மதிப்பில்லாத விஷயங்களின் பக்கம் பில்லியன் கணக்கில் விரயமாக்கி வருகின்றனர். அதற்கு மாறாக, ஏழைகள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், அவ்வாறே அவர்களுக்கு உணவு கிடைக்குமே ஆயின் தங்களுடைய வயிரை குறைந்த அளவிலான உணவைக் கொண்டு நிரப்பும் நிலையிலேயே இருக்கின்றனர். தேசங்கள் ரமலான் களியாட்டங்களில் மில்லியன் கணக்கில் செலவழித்து வருகின்றனர் மேலும் மேற்குலகு முஸ்லிம்களுடைய சொத்துக்களை விரயம் செய்வதற்கு அனுமதிக்கின்றன. ஹலாலான முறையில் வாழ்வது கடினமாக இருப்பதாலும் ஹராமான முறையில் வாழ்வது எளிதாக இருப்பதாலும் மற்றும் அதற்கான வழிவகைகளை எளிதாக்கியுள்ளதாலும் முஸ்லிம்கள் தேவைகள், ஆசைகள் மற்றும் சோர்வு, துயர் நிலை எனும் மத்தளத்துக்கு இடையில் சிக்கியுள்ளனர்.
ஆகவே, நாம் நோன்பு பிடிக்கிறோம் ஆனால் அதேவேளையில் மதசார்பின்மையின் கருத்துக்களும் அதன் சட்டங்களும் நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருவதை கண்டு வருகிறோம், மேலும் அரசியல் அமைப்பு, பொருளாதார அமைப்பு, சமூக அமைப்பு மற்றும் இஸ்லாமிய வாழ்வியல் முறையின் இதர அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே அல்லாஹ் ﷻ வின் பொருத்தத்தையும் மற்றும் ஒரு கண்ணியமான வாழ்க்கையையும், சுகத்தையும் மன அமைதியையும் பெற முடியும் என்றும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதன் காரணத்தால் அதன் வேதனையை உணர்ந்தவர்களாக நாம் இருக்கின்றோம், நாம் அதன் வேதனையை உணர்கிறோம் ஆனால் அதற்கான வலி நிவாரணியாக அவைகளை அதற்குரிய இடத்தில் மீண்டும் வைப்பதற்கும் அல்லாஹ் ﷻ வுக்கு முன்னால் தமது பாவத்தை நீக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளவர்களாகவும் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய ஹதீஸின் அர்த்தத்தை உண்மையில் உணர்ந்தவர்களாக: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالقَابِضِ عَلَى الجَمْرِ» “மக்களுக்கு ஒருகாலம் வரும் அதில் தன் தீனில் நிலைத்திருப்பது நெருப்பு கங்கை கையில் பிடித்திருப்பது போல கடினமானது” [திர்மிதி]

தனது இறைவனுடைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கிலாஃபத்தினால் உருவாக்கப்படும் இஸ்லாமிய சூழல் மற்றும் அவனை வணங்குவதற்காக மக்களை அது ஊக்கப்படுத்தும் செயலானது முஸ்லிம்களை அவர்களுடைய இறைவனுடைய சட்டத்தின் பக்கம் திருப்புவதற்கும் அவனுக்கு அடிபணிவதற்கும் நல்லடியார்களின் கூட்டத்தில் அவர்களை இணைத்து வைப்பதற்கும் இன்றியமையாததாக இருக்கின்றது.

பொதுவான பாரம்பரியமானது இதயங்களில் ஒரு விந்தையான விளைவை ஏற்படுத்துகின்றது மேலும் அவர்களிடையே அதுவொரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம்களுடைய வரலாற்றை காணும் ஒருவர் இஸ்லாமிய வாழ்வியல் முறையை காண்பதற்கு இஸ்லாத்தை கொண்டு சமூகத்தை உருக்குவதில் அரசு கொண்டிருக்கும் முக்கியமான பங்கையும் மேலும் அதனை அதன் கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் நல்லொழுக்கங்கள் ஆகியவற்றில் மூழ்கடிப்பதற்கான முக்கியத்துவத்தையும் மற்றும் ஷரீ’ஆவின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்தையும் அறிந்து கொள்வார். உதுமான் (ரலி) கூறியதை போன்று, “குர்’ஆனால் நீக்க இயலாததை சுல்தானின் அதிகாரத்தால் நீக்கிவிடலாம்”.

வேறு விதத்தில் கூறுவதானால், குர்’ஆனை விட இஸ்லாத்தின் அதிகாரமானது மக்கள் தடுத்தவற்றை செய்வதை விட்டு தடுக்கின்றது ஏனெனில் “சில” மக்கள் ஈமானில் பலவீனமாக இருப்பார்கள் மேலும் அவர்கள் குர்’ஆனில் உள்ள தடை செய்துள்ள கட்டளைகளால் தாக்கம் அடைந்திருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்கள் அதை செய்வதை பார்க்கும்போதும் அதற்கான தண்டனை வழங்கப்படும் என்பதை அறியும் போதும்; அவர்கள் அவற்றிலிருந்து தவிர்ந்தும் அச்சமுற்றும் இருப்பார்கள்; கிலாஃபத்தில் பல நூற்றாண்டுகளில் வெகு சிலரே வெளிப்படையாக தவறுகளை புரிந்தது இதற்கு ஆதாரமாக விளங்குகிறது.

அழிவை ஏற்படுத்தும் இன்றைய அரசுகள் ஹராமுக்கு வழிவகைகளை ஏற்படுத்துவதும் மற்றும் அவர்கள் புரிந்து வரும் இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக போரானது பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கும் ஒரு பகுதியினரை உருவாக்கியுள்ளது, அவர்கள் வெளிப்படையாக அல்லாஹ் ﷻ வுக்கு மாறு செய்பவர்களாக இருக்கின்றனர் மேலும் அனைத்து ஹராமான காரியங்களை செய்வதற்கு தயங்க மாட்டார்கள் மேலும் அவர்கள் ஆணவத்துடன் அனைத்து வகையான தீங்கை நோக்கியும் அல்லாஹ் ﷻ வுக்கு கோபமூட்டும் அனைத்து விஷயங்களின் பக்கமும் அழைப்பு விடுத்தவர்களாக இருக்கின்றனர்.

இதுபோன்ற பலர் இருப்பது என்பது அது (தெய்வீக காரணம்) நிலை கொண்டிருக்கும் சமயத்திலும் அது இல்லாத சமயத்திலும் விளக்கப்பட்ட சட்டத்தோடு சூழ்ந்திருக்கும் தெய்வீக காரணத்தை (இல்லா) போன்றதாகும். ஷரீ’ஆ சட்டங்களை தடை செய்வது ஹராமை அனுமதிப்பது மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறையின் பக்கம் ஊக்குவிப்பது ஆகியவை அந்த மக்களின் மனநிலைகளையும் ஆன்மாக்களையும் எரியூட்டியது அது அவர்களை அவர்களுடைய தீனிலிருந்து பிரிக்கும் நிலைக்கு தள்ளியது; இதில் பலர் அறியாமையில் இருக்கின்றனர் மேலும் அவர்களுடைய தீன், அதன் ஆட்சிமுறை மற்றும் கருத்துக்களின் உண்மையை அறியும்போது அவர்கள் அதிலிருந்து மீண்டு அல்லாஹ் ﷻ விடத்தில் பாவமன்னிப்பு கோருவார்கள் என நாம் நம்புகிறோம்.

Comments are closed.