சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 13.06.2018

தலைப்புச்செய்திகள்

• ‘அரசியல்’ காரணமாக பள்ளிவாசல்களை மூடவுள்ளது ஆஸ்திரியா

• கந்தில் மீது போரை துவக்கியுள்ளார் எர்துகன்

• ஆப்கானின் போர் நிறுத்த ஒப்பந்தம்

• ஊடகத்தின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார் சிசி

விவரங்கள்

அரசியல்’ காரணமாக பள்ளிவாசல்களை மூடவுள்ளது ஆஸ்திரியா

ஆஸ்திரியாவின் அதிபர், செபாஸ்டியன் குர்ஸ் இஸ்லாமிய அரசியலின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமது தேசம் ஏழு பள்ளிவாசல்களை மூடியுள்ளதாகவும் பல இமாம்களை வெளியேற்றியுள்ளதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பானது துருக்கிய அரசுக்கு நெருக்கமான இஸ்லாமிய அமைப்பான ஏடிஐபி முதலாம் உலகப்போரின் போது நடந்த கேல்லிபோலி யுத்தத்தை போன்று மறு அரங்கேற்றம் செய்ததற்கு பின்பு வெளிவந்தது. இது முதலாம் உலகப்போரில், உதுமானிய பேரரசு அடைந்த வெற்றிகளில் ஒன்றாகும், இது கூட்டணிப் படைகளை அதன் தலைநகரான காண்ஸ்டாண்டிநோபுளை நோக்கி முன்னேறிச் செல்வதை விட்டு தடுத்தது. அதிபரின் கடந்த தேர்தல் பிரச்சாரமானது பெரும்பாலும் குடயேற்றம் குறித்தான கவலை மற்றும் முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது ஆகியவையை மையப்படுத்தியே இருந்தது. அவருடைய பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி (ஓ.வி.பி) வலதுசாரி சுதந்திர கட்சியுடன் (எஃப்.பி.ஓ)கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உறுப்பினராக துருக்கி ஆக வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையை ஐரோப்பிய கூட்டமைப்பு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று குர்ஸ் விரும்புகிறார் – இந்த நிலைப்பாடு துருக்கிய அதிபர் எர்துகனை கோபமடையச்செய்தது. நாட்டிலுள்ள 260 இமாம்களில் 60 இமாம்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என ஆஸ்திரிய அரசு கூறியது, அதில் 40 பேர் துருக்கிய அரசுக்கு நெருக்கமான இஸ்லாமிய அமைப்பான ஏடிஐபி யை சார்ந்தவர்கள்.

கந்தில் மீது போரை துவக்கியுள்ளார் எர்துகன்

ஈராக்கின் கந்தில் மற்றும் சீன்ஜார் பகுதிகளில் துருக்கிய படைகள் ஜூன் 11 அன்று பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை துவக்கியுள்ளதாக துருக்கிய அதிபர் ரஜப் தய்யிப் எர்துகன் அறிவித்தார். அஃப்ரினில் நடத்தியதற்கு இணையானது என்று சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கையின் நோக்கமானது துருக்கியை பொறுத்தவரை இந்த பகுதியானது தீவிரவாத நடவடிக்கைக்கான மூலமாக தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக குர்திஸ்தானிய தொழிலாளர் கட்சியை கந்திலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக வேண்டி நடத்தப்பட்டதாகும் என எர்துகன் கூறினார்.

அது சிரியாவின் வடக்கு பகுதியில் பல மாதங்களாக நிலவிய பதற்றத்திற்கு பின்பு அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கா பி.கே.கே வுடன் இணைந்து செயல்பட்டு வரும் பின்னணியில் நடைபெற்றதாகும். சில மாதங்களுக்கு முன்னர் தான் பயங்கரவாத அமைப்பு என துருக்கி கருதும் பி.கே.கே வுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை தொடுக்கவிருப்பதாக எர்துகன் எச்சரித்ததற்கு பிறகு துருக்கி தனது இராணுவத்தை சிஞ்ஜாரில் நிறுத்துவதிலிருந்து ஈராக் தடுத்தது.

ஆப்கானின் போர் நிறுத்த ஒப்பந்தம்

பெருநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்யப்போவதாக தாலிபான் அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி போர் நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்ததற்கு பின்பு வெளியானது. அஷ்ரப் கனி அறிவித்த போர் நிறுத்தமானது தாலிபானிடம் அமைதிக்கான விரிவான திட்டத்தை தனது அரசு முன்வைத்த பிறகு முஸ்லிம் நாள்காட்டியில் மிகவும் புனிதமிகு காலங்களில் ஒன்றுடன் ஒருங்கே நடைபெறும் விதத்தில் எட்டு நாட்களுக்கு நீடித்திருப்பதாக இருந்தது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் படி, நாடு முழுவதிலும் 20 ஆப்கானிய இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் மேற்கொண்ட நேர்காணலின் அடிப்படையில் இந்த வார்த்தை தந்திரமாக உபயோகப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் ஆறு பேர் மட்டுமே இந்த போர் நிறுத்தம் பற்றி அறிந்திருந்தனர், அதுவும் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டதாக கூறினர். மற்றவர்கள் அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறினர். மீண்டும் இது 17 ஆண்டுகளாக தான் அடைந்து வரும் தோல்விக்கு பிறகு அமெரிக்கா இந்த இடத்தை ஆக்கிரமிக்கவும் வெற்றி ஒன்றை பெறுவதற்கான மற்றுமொரு முயற்சியாக தெரிகிறது.

ஊடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் சிசி

5,000 அல்லது அதற்கு அதிகமாக உறுப்பினர்களை கொண்ட சமூக வலைத்தள கணக்குகளை கொண்டவர்கள் உட்பட அனைத்து செய்திகள் வெளியிடும் இணையதளங்களும் அரசு ஊடக ஒழுங்குமுறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் மற்றும் அவர்களுடைய பொருளாதார மற்றும் நிதி அறிக்கைகளை எகிப்திய அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என மூன்று புதிய ஊடக கட்டுப்பாடுகளுக்கு எகிப்திய பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. முன்மொழியப்பட்ட இந்த சட்டங்களானது நாட்டிற்குள் ஊடகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதிக்கின்றது மேலும் 5,000 மற்றும் அதற்கு மேலும் உறுப்பினர்களை கொண்ட குழுக்கள் அல்லது தனிநபர்களின் பதிவு செய்யப்படாத கணக்குகளை மூடுவதை அல்லது அழுத்தம் கொடுப்பதை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கத்துக்கு வழங்குகிறது. எகிப்திய அதிபர் அப்தல் ஃபத்தாஹ் அல்- சீசி மார்ச் மாதம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், ஹொஸ்னி முபாரக்கிற்கு கீழ் அனுபவித்ததை விட அதிக அளவிலான சர்வாதிகாரவாதம் எழுச்சியடைந்துள்ளதை எகிப்து கண்டு வருகிறது.

Comments are closed.