சமீப பதிவுகள்

அல்லாஹ் ﷻ வின் நேசத்தை பெற்ற முத்தகீன்கள் யார்?

அல்லாஹ் ﷻ கூறுகிறான்,

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ)

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.

(அல்குர்ஆன் : 2:183)

தனி நபர்களாக, நமது வாழ்வில் அது கல்வி, வேலை, வீடு, நமது குடும்பம் அல்லது குழந்தைகள், அல்லது நமது வாழ்வில் இதர அம்சங்களாகட்டும் அவற்றில் நாம் நாள்தோறும் அடைய வேண்டிய இலக்குகளை கொண்டிருப்போம். ஆனால் ரமலானில் நாம் அடைய விரும்பும் இலக்கு என்ன மற்றும் நமது வாழ்வில் மீதமுள்ள நாட்களில் அந்த இலக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? மேலுள்ள வசனத்தில், அல்லாஹ் ﷻ நோன்பு பிடிப்பதற்கான நோக்கம் தக்வாவுடைய மக்களாக ஆக வேண்டும் என்பதற்காகத் தான் என்று கூறுகிறான். அவ்வாறெனில் தக்வா என்றால் என்ன? மேலும் எவ்வாறு நாம் அல்- முத்தகூனுடைய மக்களில் ஒருவராக ஆகுவது?

நிச்சயமாக, முத்தகூனாக ஆகுவது தான் ஒவ்வொரு முஸ்லிமுடைய இலக்காக இருக்க வேண்டும், ஏனெனில் இவர்களை தான் அல்லாஹ் ﷻ நேசிக்கிறான் மேலும் அவர்களுக்கு தான் உதவியையும், கருணையையும், மன்னிப்பையும், மகத்தான கூலியையும் சுவனத்தையும் வழங்குவதாகவும் அதேவேளையில் தீங்குகளிலிருந்து பாதுகாப்பதாகவும் மேலும் நற்காரியங்களை புரிவதற்கு உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளான். இவர்களை தான் அவன் ﷻ தனது அவ்லியாவாக விவரித்துள்ளான். அல்லாஹ் ﷻ கூறுகிறான்,

(إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ)

“நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.”
(அல்குர்ஆன் : 67:12)

(لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ)
“(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: “இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 3:15)

 (بَلَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَّقِينَ)

“(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான்.

(அல்குர்ஆன் : 3:76)

(وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا * وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا)

“(தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான்.
அன்றி, அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ்தான் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)

(அல்குர்ஆன் : 65: 2-3)

(إِنَّهُمْ لَن يُغْنُوا عَنكَ مِنَ اللَّهِ شَيئًا وإِنَّ الظَّالِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَاللَّهُ وَلِيُّ الْمُتَّقِينَ)
“நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்கு யாதொரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்களுள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ், இறை அச்சமுடைய பரிசுத்தவான்களுக்கு நண்பன்.”
(அல்குர்ஆன் : 45:19)

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِ وَيَجْعَل لَّكُمْ نُورًا تَمْشُونَ بِهِ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ)

“ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.”
(அல்குர்ஆன் : 57:28)

நிச்சயாமாக, உண்மையான ஒரு நம்பிக்கையாளருக்கு அல்- முத்தகூனாக ஆவது தான் அவருடைய பேராவலாக இருக்க வேண்டும். ஆனால் முத்தகீன்கள் என்றால் யார்; அவர்களுடைய குணங்களும் பண்புகளும் என்ன?

தொழுகையிலும் பள்ளிவாசல்களிலும் அதிக நேரத்தை செலவழிக்கக் கூடியவரை அல்லது அதிகப்படியான திக்ரு மற்றும் துஆக்களை செய்பவரை, அதிகமான அளவில் நோன்பு பிடிக்கக் கூடியவரை, மதத்தை பிரதிபலிக்கும் உடையை உடுத்துபவரை அல்லது குறைந்த அளவிலான வாழ்வாதரங்களோடு திருப்தி கொண்டு வாழ்ந்து வருபவரை நாம் தக்வா உடையவராகவும் அல்லது இறைநம்பிக்கை உடையவராகவும் நாம் கருதலாம். இவ்வாறான கண்ணோட்டத்தை நாம் கொண்டிருப்போமேயானால், இதுபோன்ற செயல்களை மேற்கொள்வதில் தான் அதிக நேரத்தை நாம் செலவிடக்கூடும் அல்லது தக்வாவை அடைந்து கொள்வதற்காக வேண்டி இது போன்ற செயல்களை புரிவதில் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொள்வதை காணலாம். எனினும், தக்வா என்றால் இது தான் என்று இஸ்லாம் வரையறுத்துள்ளதா?
ஒரு சமயம் உமர் இப்னு அல்- கத்தாப் (ரலி) அவர்கள் உபய் இப்னு க’அபிடம் (ரலி): தாங்கள் தக்வாவை எங்ஙனம் விவரிப்பீர்கள் என்று வினவினார்கள்? அதற்கு உபய் அவர்கள், “தாங்கள் எப்போதாவது முற்கள் படர்ந்த பாதை ஒன்றில் நீள அங்கியை அணிந்தவாறு கடந்து சென்றதுண்டா? என கேட்டார்கள், “ஆம்” என்று உமர் அவர்கள் பதிலளித்தார்கள். “அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று பின்பு உபய் வினவினார்கள், “நான் எனது ஆடையை அந்த முட்களில் படாதவாறும் அல்லது கிழிந்துவிடாதவாறும் எனது உடலில் இறுக்கமாக சுற்றிக் கொள்வேன் பிறகு அந்த பாதையை மிகவும் கவனமாக கடந்த செல்வேன்” என்று உமர் பதிலளித்தார்கள். “இது தான் தக்வா” என்று உபய் பதிலளித்தார்கள்.

ஆகவே தக்வா என்பது நமது வாழ்வு நெடுகிலும் பாவங்களில் விழுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வகையில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கடந்து செல்வது தான். இது அல்லாஹ் ﷻ இருக்கின்றான் என்ற உயர் நிலையிலான உணர்வும் நமது அனைத்து செயல்களையும் காரியங்களையும் உருவகப்படுத்தும் ஞானமும் ஆகும், மேலும் அது நம்மை அவனுடைய அனைத்து ஏவல்களை நிறைவேற்றுவதற்கும் மற்றும் அவனுடைய அனைத்து விலக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கும் ஊக்குவிக்கக் கூடியதாக இருக்கின்றது.

‘தக்வா’ எனும் வார்த்தை ‘வாகியா’ எனும் வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும், மொழியியல் ரீதியில் அது ஒருவரை பாதுகாத்துக் கொள்வது என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இஸ்லாத்தின் பழம்பெரும் அறிஞரான அல்- ஹாஃபித் இப்னு ஹஜர் அல்- அஸ்கலானி, தக்வா என்பது நமக்கும் அல்லாஹ்வுடைய தண்டனைக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் தடுப்பை போன்றது என்று விவரித்துள்ளார்கள்.

ஆகவே, தக்வாவை உடைய ஒருவர் அல்லாஹ் ﷻ வை பற்றிய உணர்வையும் அவன் ﷻ மீது அச்சத்தையும் நிலையாக கொண்டிருப்பார் அது அந்த ஆணையோ அல்லது பெண்ணையோ அவர்களுடைய ரப்பின் கோபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய கேடயமாக விளங்கும் – இந்த அச்சமானது அவர்களை அவர்களுடைய வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் அவனுடைய ﷻ சட்டங்களுக்கும் வரையறைகளுக்கும் முழுமையான அளவில் கீழ்படியும் அவனுடைய ﷻ விசுவாசமான அடியான்களாக ஆக்கும்.

சூரா ஆல இம்ரான், வசனம் 102ல், அல்லாஹ் ﷻ கூறுகிறான்,

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنتُم مُّسْلِمُونَ)

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.”

ரசூலுல்லாஹ் ﷺ, அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள் என்று குறிப்பிட்டுள்ள இந்த வசனத்தை விளக்கும் போது, «أَنْ يُطَاعَ فَلَا يُعْصَى، وَيُشْكَرَ فَلَا يُكْفَرُ، وَيُذْكَرَ فَلَا يُنْسَى» “அவனுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் மற்றும் ஒருபோதும் அவனுக்கு கட்டுப்படாமல் இருக்க வேண்டாம்; அவனுக்கு நன்றி கூற வேண்டும் மற்றும் நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம்; மேலும் அவனை நினைவு கூர வேண்டும் எனவும் ஒருபோதும் அவனை மறக்கக் கூடாது” எனவும் கூறினார்கள்.

பழம்பெரும் அறிஞர்கள் தக்வாவை உடைய மக்கள் (அல்- முத்தகூன்) எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ் ﷻ எவற்றையெல்லாம் தடுத்திருக்கின்றானோ அவற்றிலிருந்து தம்மை தவிர்த்துக் கொண்டவர்களாகவும் மற்றும் அல்லாஹ் ﷻ எவற்றையெல்லாம் ஏவியிருக்கின்றானோ அவற்றை நிறைவேற்றியவர்களாவர் என்று கூறியுள்ளார்கள். சூரா அல்- ஹஷ்ர் வசனம் 18ல், அல்லாஹ் ﷻ கூறுகிறான்.

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்…” இந்த வசனம் குறித்து, இப்னு கஸீர், “அல்லாஹ் தன்னை அஞ்சும் படி நம்மை கட்டளையிடுகின்றான், இது அவன் ஏவியதை செய்வதையும் மற்றும் அவன் கண்டித்துள்ளவற்றிலருந்து தவிர்ந்து இருப்பதும் அடங்கும்…” என்று கூறினார்கள். அறிஞர் அல்- ஹசன் அல்- பஸரி, “தக்வாவுடைய மக்கள் (அல்- முத்தகீன்) யார் என்றால் எவர் அல்லாஹ் ﷻ தடுத்துள்ளதை விட்டு தவிர்ந்து மற்றும் அவன் கட்டளையிட்டுள்ள செயல்களை செய்வதும் ஆகும்” எனக் கூறினார். மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற கலீஃபாவான உமர் இப்னு அப்துல் அஜீஸ் “தக்வா என்பது பகல் முழுவதும் நோன்பு வைப்பதிலும் இரவு முழுவதும் தொழுகையில் இருப்பதும் கிடையாது. மேலும் அவை இரண்டையும் ஒன்று சேர்த்து கடைபிடிப்பதிலும் கிடையாது. மாறாக, தக்வா என்பது அல்லாஹ் ﷻ ஹராம் ஆக்கியுள்ளதை விட்டு தவிர்ந்திருப்பதும் மற்றும் அல்லாஹ் ﷻ கடமையாக (ஃபர்த்) ஆக்கியுள்ளதை நிறைவேற்றுவதும் ஆகும். இதை ஒருவர் நிறைவேற்றி விட்டால், பிறகு அல்லாஹ் ﷻ அந்த மனிதருக்கு நன்மையானவற்றை வழங்குவான்” என கூறினார்கள்.

ஆகவே, முத்தகீன்கள் என்பவர்கள் அல்லாஹ் ﷻ வின் மீதான அவர்களுடைய கடமையை நிறைவேற்றுவதில் கவனமாக இருப்பார்கள் மற்றும் அவர்களுடைய அனைத்து செயல்களிலும், பிரச்சனைகளிலும் மற்றும் ஆன்மீகம், நன்னடத்தை, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் போன்று வாழ்வின் அனைத்து துறைகளிலும் அவனுக்கு ﷻ கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஒருமுறை தொழுது கொண்டிருந்தவர்களை பார்த்து, “உங்களில் ஒருவர் தனது தலையை அதிகப்படியான அளவில் உயர்த்துவதை கொண்டும் தாழ்த்துவதை கொண்டும் என்னை ஏமாற்றி விட முடியாது. இந்த [உண்மையான] மார்க்கம் என்பது அல்லாஹ் ﷻ வுடைய மார்க்கத்தில் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருப்பதாகும் மற்றும் அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து தவிர்ந்திருப்பதும் மேலும் அல்லாஹ் ﷻ அனுமதித்த மற்றும் தடுத்தவற்றிற்கு தகுந்தவாறு செயல்படுவதும் ஆகும்” என கூறினார்கள்.
ஆக….

– தக்வாவை உடைய ஒருவர் வெறுமனே தொழுகையையும் நோன்பையும் மட்டும் பேணுபவராக இருக்க மாட்டார் மாறாக தனது கணவர், மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உறவினர் ஆகியோரிடம் இரக்கம் காட்டக்கூடியவராகவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளை வழங்குபவராகவும் இருப்பார்;

– தக்வாவை உடைய ஒருவர் வெறுமனே இரவு முழுவதும் நின்று வணங்கக்கூடியவராகவும், குர்’ஆனை ஓதுபவராகவும் திக்ர் செய்யக்கூடியவராகவும் மற்றும் உபரித் தொழுகைகளை தொழுதவராகவும் மட்டும் இருக்கமாட்டார் மாறாக அவர் இஸ்லாம் வரையறுத்துள்ள படி உடையை உடுத்துபவராகவும் மற்றும் சமூக வாழ்வில் எதிர் பாலினத்தினரிடம் தொடர்பு கொள்ளும்போது இஸ்லாம் வரையறுத்துள்ள அளவுகோலை பேணுபவராகவும் இருப்பார்;

– தக்வாவை உடைய ஒருவர் வெறுமனே சதகாவை கொடுப்பவராக இருக்க மாட்டார் மாறாக அவருடைய வியாபாரத்திலும் பண விஷயத்திலும் – வட்டியை விட்டு தவிர்ந்திருப்பவராகவும் மற்றும் இஸ்லாமிய பொருளாதார ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவராகவும் இஸ்லாத்தின் பிரகாரம் செயல்படக் கூடியவராக இருப்பார்;

– தக்வாவை உடைய ஒருவர் வெறுமனே தொழுகை விரிப்பில் அல்லது பள்ளிவாசலில் மட்டும் காலத்தை கழித்தவராக சிரியா, பாலஸ்தீனம், மியான்மர் மற்றும் இதர பகுதிகளில் நமது உம்மத் கொல்லப்பட்டு வருவதை கண்டு மவுனம் கடைபிடிப்பவராக இருக்க மாட்டார் மாறாக அல்லாஹ் ﷻ கட்டளையிட்டுள்ள படி அந்த அட்டூழியங்களுக்கு எதிராக குரலெழுப்பி அடக்குமுறைக்கு எதிராக போரடக்கூடியவராக இருப்பார்;
– மேலும் தக்வாவை உடைய ஒருவர் வெறுமனே தொழாத, நோன்பு வைக்காத அல்லது தன்னை முறையாக மறைத்துக் கொள்ளாதவரை குற்றம் பிடித்தவராக மட்டும் இருக்க மாட்டார் மாறாக அவர் இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனது (ஆண் அல்லது பெண்) குரலை எழுப்பியவராகவும்; அவர்களுடைய ஊழல்கள் மற்றும் நமது தேசங்களில் குஃப்ரிய அமைப்புகளின் நடைமுறைப்படுத்துதலுக்கு எதிராக பேசக்கூடியவராகவும்; மேலும் அவர் அல்லாஹ் ﷻ கட்டளையிட்டுள்ள படி நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபத்தை நிறுவி நமது முஸ்லிம் நிலப்பரப்புகளில் அல்லாஹ் ﷻ வின் சட்டத்தை கொண்டு ஆட்சி புரிவதற்கான அழைப்புப்பணியை மேற்கொள்பவராக இருப்பார்.

இறுதியாக, தக்வா என்பது அல்லாஹ் ﷻ வுடைய திருப்பொருத்தத்தை அடைவதற்கான கதவு மற்றும் சுவனத்தின் கதவுகளை திறக்கக்கூடிய திறவுகோலை போன்றதாகும் – ஆனால் எந்தவொரு திறவுகோலை போன்றும், அந்த திறவுகோலின் அனைத்து பற்களும் அந்த பூட்டில் சரியாக பொருந்தாத வரை அந்த கதவை திறப்பது சிரமமாகும். அதேபோன்று, முஸ்லிம்களாகிய நமக்கு நாம் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் நாம் கடைபிடிக்கும் அனைத்து சட்டங்களிலும் அல்லாஹ் ﷻ வுக்கு கட்டுப்படாத வரை சுவனத்தின் கதவுகளை திறப்பதென்பது கடினமான காரியமாகும். ஒவ்வொரு இஸ்லாமிய சட்டத்தையும் நடைமுறைபடுத்தும் அல்லாஹ் ﷻ வின் ஆட்சியமைப்பான கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதன் மூலம் மட்டுமே, இந்த உம்மத்தினால் நமது ரப்புடைய ﷻ கட்டளைகளுக்கு முழுவதுமாக கட்டுப்பட்டு வாழ முடியும்.

ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்,

«كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ، إِلاَّ مَنْ أَبَى»‏‏.‏ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى؟ قَالَ: ‏«مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى»

“நிராகரித்தவர்களை தவிர என்னை பின்பற்றுபவர்கள் அனைவரும் சுவனத்தில் நுழைவார்கள்”. அவர்கள் கூறினார்கள், “ஓ அல்லாஹ்வின் தூதரே! நிராகரிப்பவர்கள் யார்? அதற்கு அவர்கள் ﷺ கூறினார்கள், “எவரொருவர் என்னை பின்பற்றுகிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார், மேலும் எவரொவர் என்னை பின்பற்றவில்லையோ அவர் தான் நிராகரித்தவராவார் (அதில் நுழைவதற்கு).”

Comments are closed.