சமீப பதிவுகள்

இரண்டாம் உலகப்போருக்கு பின் அமைந்த உலக ஒழுங்கு இனிமேல் நீடிக்காது மற்றும் டிரம்ப்புடைய பொருளாதார தேசியவாதம் போருக்கு இட்டுச்செல்லும் என ஜெர்மனியும் பிரான்சும் எச்சரித்துள்ளன…!!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாத துவக்கத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பின் மீது ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரியை விதித்தார், அதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது $3.3 பில்லியன் அளவுக்கு வரியை விதிக்கும் திட்டத்திற்கு ஜூன் 14 அன்று ஏகமனதாக ஆதரவு தெரிவித்தன. அதற்கு அடுத்த நாள், டிரம்ப் ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடையை குறைப்பதற்கான பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்பதற்காக வேண்டி பிரஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரனை அழைத்தார், ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கான ‘வாயிலை மூடிவிட்டது’. ஐரோப்பிய கூட்டமைப்பு கவுன்சிலின் தலைவர் டொனால்டு டஸ்க் ஐரோப்பிய கூட்டமைப்பு “வர்த்தக தாராளமயமாக்கல் குறித்து நமது அமெரிக்க நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளது ஆனால் ஸ்டீல் மற்றும் அலுமினியத்தின் மீதான வரிகள் மீது வரம்பற்ற விலக்குகளை அளிக்க அமெரிக்கா முடிவெடுத்தால் மட்டுமே” என கடந்த மாதம் கூறினார், இது ஐரோப்பிய கூட்டமைப்பையும் அமெரிக்காவையும் “அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதனுடைய வர்த்தக கூட்டாளிகள் என இருதரப்பினருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தாராளமய, நியாயமான மற்றும் விதிகளின் அடிப்படையிலான வர்த்தக அமைப்பிலிருந்து உலகை மேலும் தூரமாக்கும்” ஒரு வர்த்தக பழிவாங்கும் நடவடிக்கையின் சுழற்சியின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளது என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பும் அமெரிக்காவும் தங்களுக்கிடையே வருடந்தோரும் $1 டிரல்லியனுக்கும் அதிகமான அளவில் வர்த்தகத்தை மேற்கொள்கின்றன, இது உலகளவில் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு வர்த்தக உறவுகளில் மிகப்பெரியதாகும், டிரம்ப்புடைய சமீபத்திய வரி விதிப்பானது இந்த வர்த்தக மற்றும் இராஜாங்க உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற ஜி7 மாநாடு இரு அதிபர்களுக்கு இடையே நடைபெற்ற கொடூரமான கைகுலுக்கும் போட்டியில் பிரான்ஸ் அதிபர் டிரம்ப்புடைய கையில் தென்படும் அளவிலான அடையாளத்தை ஏற்படுத்திய நிலையில் மிகவும் பதற்றத்துடன் முடிவடைந்தது. குறிப்பாக மேக்ரன் மீது கடுமையான சொற்பிரயோகங்களை டிரம்ப் பயன்படுத்தினார், மேலும் அவர் பிரதம மந்திரி ஜஸ்டின் டுரூடோவின் மீதும் கடுமையான சொற்பிரயோகங்களை பயன்படுத்தினார், அவரை “நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்” என்று குறிப்பிட்டார் அதேவேளையில் வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவர்ரோ டுரூடோவுக்கு “நரகத்தில் பிரத்யேகமான இடம் ஒன்று உண்டு” என கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்வதை விட அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளிடத்தில் வரிகளை விதித்து அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் வேலைவாய்ப்புகளையும் சொத்துக்களையும் அமெரிக்காவுக்கு திரும்பவும் கொண்டு வருவேன் என டிரம்ப் உறுதியளித்திருந்தார், இந்த வாக்குறுதி அவரை 2016ல் அதிபராக தேர்ந்தெடுக்க செய்தது. தற்பொழுது அமெரிக்காவுக்கான இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் டிரம்ப் வர்த்தக பற்றாக்குறையை குறைத்து மீண்டும் அமெரிக்காவை சிறப்படையச் செய்வேன் எனும் அவருடைய வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார். இதற்கிடையில், அமெரிக்காவின் நண்பர்களும் எதிரிகளும் அமெரிக்கா தரும் அழுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக ஒருவருக்கொருவர் அதன் மீது வரிகளை விதிக்க அணிதிரண்டுள்ளனர். ஐரோப்பிய கூட்டமைப்பினால் ஒப்புக்கொள்ளப்பட்ட $3.3 பில்லியன் மிதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரிவிதிப்பு அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது, மேலும் இதுகுறித்து உலக வர்த்தக மையத்திடம் ஐரோப்பிய கூட்டமைப்பு புகார் செய்துள்ளது. அமெரிக்கா, அது கொண்டிருக்கும் அகந்தைக்கு அளவேயில்லை, ஐரோப்பிய கூட்டமைப்பின் புகாரை உலக வர்த்தக மையம் ஆதரித்தால் அதிலிருந்து வெளியேறப்போவதாக கூறியுள்ளது, அதேவேளையில் ஐரோப்பிய கூட்டமைப்பு அமெரிக்கா தனது நிலையிலிருந்து பின்வாங்கவில்லை என்றால் இரண்டாம் கட்டமாக $4.3 பில்லியன் மதிப்பிலான வரிகளை விதிக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற கசப்பான ஜி7 மாநாட்டில் டிரம்ப் தனது மனதை மாற்றிக்கொண்டு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்ததால் அந்த விஷயத்தில் ஒப்புக்கொள்வதற்கு தலைவர்கள் போராடியதை நாம் கண்டது போன்று அமெரிக்கா தனது வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மற்றும் இகழ்ச்சிகளின் மூலம் உலக அரங்கிலிருந்து தன்னை வேகமாக தனிமைப்படுத்தி வருகிறது. பிரான்ஸ் அதிபர் மேக்ரன் “பொருளாதார தேசியவாதம் போருக்கு இட்டுச்செல்லும், இதுதான் 1930களில் நடந்தது” என எச்சரித்தார், அதேவேளையில் ஜெர்மானிய அயலுறவு அமைச்சர் ஹீகோ மாஸ் இரண்டாம் உகப்போருக்கு பின் அமைந்த உலக ஒழுங்கு “இனிமேல் நீடிக்காது” என எச்சரித்தார். அமைரிக்காவுடனான உறவை மறுவறையறை செய்ய வேண்டும் என மாஸ் கோரிக்கை விடுத்தார்: “டிரம்ப்புடைய தனிமைப்படுத்தும் கொள்கையானது உலகளவில் மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இன்று ‘அமெரிக்க முன்னுரிமை’க்கு ‘ஒன்றுபட்ட ஐரோப்பா’ என்பது அதற்கு நாம் தரும் பொதுவான பதிலடியாகும்”.

எனினும், ஜெர்மானிய மொத்த விற்பனை, வெளிநாட்டு வர்த்தக மற்றும் சேவைகளுடைய கூட்டமைப்பின் (பிஜிஏ) நிர்வாக இயக்குநர், ஜெரார்டு ஹேண்ட்கே, ஜெர்மனி அளவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் அதிக அளவிலான இந்த வரிவிதிப்பின் மூலம் பாதிப்படையவில்லை, ஜெர்மனி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது: ” இந்த பின்னணியில், வெவ்வேறு தேசிய நலன்களை கொண்டுள்ள 27 உறுப்பினர்களை ஐக்கிய கூட்டமைப்பில் அணிதிரட்டுவது என்பது மிகவும் கடினமான காரியம்” என்று ராய்டர்ஸிடம் கூறினார்.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரண்டு நிர்வாகத்திலும் அதிபருடைய பொருளாதார ஆலோசகர்களின் கவுன்சிலில் இடம்பெற்ற பதினைந்து முன்னாள் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் முதன்முதலாக இந்த வரிவிதிப்பை முன்வைத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக கடிதம் ஒன்றை எழுதினர்: “அமெரிக்கா ஏற்கனவே ஸ்டீல் இறக்குமதி தொடர்பாக எதிர் மற்றும் குவித்து வைத்தலுக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட வரிவிதிப்பை கொண்டுள்ளது… கூடுதல் வரிவிதிப்பானது தோழமை நாடுகளுடன் நாம் மேற்கொண்டு வரும் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்; இதற்கு முன்னர் அதிபர் புஷ்ஷுக்கு கீழ் ஸ்டீலுக்கு விதிக்கப்பட்ட அவசரகால வரியின் போது இந்த பிரச்சனைகள் உணரப்பட்டன” மேலும் “கூடுதல் வரிவிதிப்பானது அமெரிக்க பொருளாதாரத்தில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்.” அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், டிரம்ப்புடைய பொருளாதார தேசியவாதத்தின் தர்க்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்: “நாம் நுணியில் இருக்கின்றோம். இதை நாம் செய்தோம் என்றால் வருத்தப்பட வேண்டியிருக்கும், வெளிநாட்டவர் நம்மை சிதைக்கிறார்கள் என்ற அனுமானம் உள்ளது. அது முட்டாள்தனமானது”.

Comments are closed.