சமீப பதிவுகள்

டிரம்ப் மற்றும் கிம் இடையேயான உச்சி மாநாடு, சமாதானத்தையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துவதற்க்காக அல்ல

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் ஆகியோர் 12 ஜூன் உச்சி மாநாட்டிற்கு சிங்கப்பூர் சென்றனர். வடகொரியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதில் 11 அமெரிக்க ஜனாதிபதிகள் எப்படி தோல்வியடைந்தார்கள் என்பதை, அல் ஜெசிரா இணையதளத்தில் வெளியான ஒரு கருத்துக் கட்டுரையில்:- கொரிய தீபகற்பத்தில் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் அமெரிக்கா தொடர்ச்சியாக பணிபுரிந்த உண்மை பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வெளியான கருத்துக்கள்:- பிரபலமான கருத்துக்கு மாறாக, ஜூன் 12-மற்றும் எந்தவொரு அடுத்த கூட்டங்களிலும் மாநாட்டிலும் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-அனுக்கும் இடையேயான பிரச்சனை வட கொரியாவின் அணுவாயுதங்களுக்கு விதிக்கும் தடை அல்ல. பியோங்யாங்கின் அனு ஆயுதங்கள் இனி தயாரிக்கப்படமாடாது என்ற விஷயம் ஏற்கனவே தெளிவாக உள்ளது.

இருப்பினும், எது கேள்விகுறியாக இருக்கிறது என்றால், வட கொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதா இல்லையா என்பது தான். பியோங்யாங் அதன் அணுசக்தி ஆயுதங்களை முடக்கவும், அகற்றவும் முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் எந்தவொரு நேர்மையான அர்ப்பணிப்புடனும் இல்லாமல் ஒருதலைப்பட்ச அணுசக்திக்கு அமெரிக்கா வலியுறுத்துவதாக இருந்தால் அது அவ்வாறு செய்யாது. புகழ்பெற்ற அமெரிக்க இராஜதந்திரி ஜார்ஜ் கென்னன் கூறினார்:- தேசிய பாதுகாப்பு போன்ற கொள்கை கருத்துக்கள், மற்றவர்களின் பாதுகாப்பு தேவைகளுக்கு அதே சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காமல் இருப்பதென்பது, தார்மீக நிந்தனைக்கு தன்னைத் திறந்து வைக்கிறது.

இந்த அர்த்தத்தில், கொரிய தீபகற்பத்திற்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கான அமெரிக்க தோல்வியின் வரலாற்றுப் பதிவு சோர்வடையாததாகும். தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள் பியோங்யாங்கிற்கு ஏற்கத்தக்க பாதுகாப்பு ஏற்பாட்டை வழங்குவதற்கும், உத்தரவாதமளிக்காமலும் ஒரு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்து, விலகிவிடுகின்றன.

சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரின் சமீப கருத்துக்கள், இது திட்டமிட்ட உச்சிமாநாட்டின் தற்காலிக இடைநீக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. வாஷிங்டனில் இத்தகைய மனப்பான்மைகள் தொடர்கின்றன என்பதை இது காட்டுகிறது.இது 64 ஆண்டுகளுக்கு முன்னர் சமரசத்திற்கு எதிரான கருத்தியல், சித்தாந்த நிலைப்பாடு மற்றும் மோதல் ஆகியவற்றிற்கு அமெரிக்க பேச்சுவர்த்தையாளர்கள் திரும்பியுள்ளதை காட்டுகிறது.

கருத்து:-

டிரம்ப்பை வேறுபடுத்திக் காட்டிய ஒரே விஷயம், அவருடைய முன்னோடிகளிலிருந்து, அரசியலில் அவருடைய தன்னலமற்ற அனுபவமேயாகும்; இல்லையெனில் அவர் ஈரானில், அல்லது சுங்கவரி, அல்லது சீனா அல்லது வட கொரியா விஷயங்களை பொறுத்தவரை, அவர் அமெரிக்க கொள்கையை பின்பற்றியிருப்பார், குறைந்தபட்சம் ஒருதலைப்பட்சமான பதிப்பிற்கு உண்மையுடன் ஒத்துப் போயிருப்பார்.

அமெரிக்காவின் செயல்கள் பெரும் மூலோபாய நோக்கங்களுடன் உள்ளன. கொரிய தீபகற்பத்தில் பிரச்சனையை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா தான் உருவாக்கியது.மேலும் அதே அமெரிக்கா தான் கொரியப் பிரச்சினையை ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்திருக்கிறது.

வடகொரியாவுடன் ஒரு போரை நிலைநிறுத்திக்கொள்வது, அமெரிக்காவிற்கு அதன் இராணுவத்தை தென் கொரியாவின் பகுதியில் நிலைபெற செய்வதற்கு நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. மேலும் இது ஜப்பானில் அமெரிக்காவின் முக்கியமான இராணுவ தளத்தை வைப்பதற்கு வடகோரியவுடனான போரை பயன்படுத்திக்கொள்கிறது.
மேற்கத்திய பசிபிக்கின் அமெரிக்க இராணுவமயமாக்கல் இரண்டு நோக்கங்களை கொண்டதாகும்:
முதலில் அமெரிக்கா அதன் தனியார் நீர்நிலையாய் கருதுகிற பசிபிக் பெருங்கடலைப் பாதுகாப்பதற்காகவும்.இரண்டாவதாக சீன மற்றும் ரஷ்ய எல்லைகளை ஆக்கிரமிக்கவும், அதன்மூலம் கிழக்குப்பகுதி விரிவாக்கத்தை எதிர்த்துப் போராட முடியும் என்பதற்க்காகவும் தான்.டிரம்ப்பிற்கு கொரிய பிரச்சினையை தீர்க்கும் நோக்கம் இல்லை;அமெரிக்காவை இலக்காகக் கொள்ளும் கொரிய ICBM களை அகற்றுவதற்கு அவர் முயல்கிறார், மேலும் சீனா மீதான வட கொரியாவின் பொருளாதார சார்பு நிலையை குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ள விஷயங்கள் மூலம்
பொருளாதார நலன்களை எளிதாக்குவது அமெரிக்காவிற்கு நன்மை பயக்கும்.

அமெரிக்க அரசியல் மனப்பான்மை அதன் முதலாளித்துவ சித்தாந்தத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அது கிறிஸ்தவ மேற்குவின் தீய மதச்சார்பற்ற தன்மையிலிருந்து ,
தன்னல பொருள்வாத நாத்திகத்தின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுடன் செய்துகொண்ட சமரசத்தின் அடிப்படையில் பிறந்தவை. இது தேசிய அளவில் ஒரு ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு மொழிபெயர்ப்பதுடன், முழு கிரகத்தையும் சுரண்டப்படுவதைத் எதிர்பார்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்குள், இந்த சாத்தானிய மேற்கத்திய சித்தாந்தம் உலகின் பல்வேறு இருத்தலியல் அச்சுறுத்தல்களின் அழிவை இந்த உலகிற்கு கொடுத்துள்ளது : அணு, உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், பொருளாதார, நிதி, என பட்டியல் தொடர்கிறது.ஆனால், எல்லாவற்றையும்விட மிகப்பெரிய குற்றம் எதுவென்றால், மேற்குலகம், வரலாற்றை மறைத்தது தான், இஸ்லாமியக் காலத்தில் ஆயிரம் ஆண்டுகாலம்
நிலவிய சமாதானத்தையும் நீதிகளையும் மறைகிறது.
கிலாபத் (கலிபா) அரசு உலகளாவிய அளவில் வல்லரசாக திகழ்ந்தது மற்றும் அது அறிவையும், வளத்தையும், உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளையும்
உலகின் எல்லா மக்களுக்கும் கொடுத்த விஷயத்தை மறைக்க நினைக்கிறது அமெரிக்கா.
இப்படிப்பட்ட இஸ்லாமிய யுகம் தான் மேற்கத்திய நாகரிகத்திற்கான முன்னேற்றத்திற்கும் சீன நாகரிகத்திற்கான வளரச்சிக்கும் சூழ்நிலைகளை ஏற்படுதித்தந்தது.
ஆனால் மேற்குலகம் அதன் கிறிஸ்தவத்தை கைவிட்டு, இந்த உலகத்தின் பொருளாசையை முற்படுத்தியது, இறுதியில் அமெரிக்கா சீனாவின்
அமைதியான இருப்பை கலைக்கும் வன்னமாக, சோவியத் யூனியனுக்கு ஒரு சீன எதிர்வினையை அமெரிக்கா பயன் படுத்துவதற்க்காகவும், சீனாவை ஒரு இராணுவவாத பாதையில் அது வஞ்சகமாக வைக்கிறது. இப்போது அதே சீன எதிர்விளைவு அமெரிக்காவின் முன்னணி உலகளாவிய கவலையாக ஆகிவிட்டது.

பொருள்சார் மதச்சார்பற்ற முதலாளித்துவ மேற்குகளால் மேலாதிக்கம் செய்யப்படும் வரையில் உலகம் சமாதானமாக இருக்காது. அல்லாஹ் (சுபு) அனுமதியை கொண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வழிமுறையின் படி இஸ்லாத்தைத் தழுவி, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, முழு உலகிற்கும் அதன் ஒளியைக் கொண்டு சென்று பின்னர் உலகின் மோதல்களைத் தகர்த்து, அடிப்படை பொருள்முதல்வாதத்தை நிராகரிக்கும் ஒரு நாகரிகத்தை புத்துயிர் அளிப்பதோடு ஆன்மீகத்தை அதன் அஸ்திவாரமாக கொண்டு இயங்கக்கூடிய மேலும்
கீழ்க்காணும் குர்ஆனின் உன்னதமான அத்தியாயத்திற்கு ஒத்துப் போகும்
.இஸ்லாமிய கிலாஃபா ராஷிதாவின கீழ் தான் இந்த முழு மனித சமூகமும் நிம்மதியையும் அமைதியையும் பெரும்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا كُونُوا قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلْقِسْطِۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَئَانُ قَوْمٍ عَلَىٰٓ أَلَّا تَعْدِلُواۚ ٱعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰۖ وَٱتَّقُوا ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகவும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.(சூரா மாயிதா 5:8)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
«اتَّقُوا دَعْوَةَ الْمَظْلُومِ وَإِنْ كَانَ كَافِرًا فَإِنَّهُ لَيْسَ دُونَهَا حِجَابٌ»
ஒடுக்கப்பட்டவர்களுடைய விண்ணப்பத்திலிருந்து ஜாக்கிரதையாயிருங்கள், அவர் ஒரு காஃபிர் ஆக இருந்தாலும், அவருக்கும் இறைவனுக்கும் இடையே எந்த திரையும் இல்லை. “

இந்த வசனமும் ஹதீஸும் தான், பைசாண்டியியம் சாம்ராஜ்ஜியத்தில் உள்ள உதுமானிய கிலாபாவை ஒருபுறத்திலும், ரோமனிய சர்ச்சை மற்றுமொரு பக்கத்தில் சந்தித்து எதிர்கொண்டபோது, ​​’பாப்பல் திஹார விட துருக்கிய டர்பன் சிறந்தது’ என கூறினர்

Comments are closed.