சமீப பதிவுகள்

தனிமனித சுதந்திரம் மற்றும் சமத்துவக்குழுவின் அறிக்கையானது அல்லாஹ் ﷻ வின் விதிகளின் மீது தொடுக்கப்பட்ட போராகும்…!!!

ஹிஸ்புத்தஹ்ரீர் துனீசிய விலாயத்தின் தகவல் தொடர்பு அலுவலகத்தின் மகளிர் பிரிவை சார்ந்த நாங்கள்:

தனிமனித சுதந்திரம் மற்றும் சமத்துவக்குழுவின் அறிக்கையும் திருமணத்தில் மஹரை ஒழிப்பது, குடும்பத் தலைவர் யார் என்று தேர்ந்து எடுப்பதில் சுதந்திரம் வழங்குவது, பரம்பரை சொத்தை சமபங்கு விகிதத்தில் பெற்றுக்கொள்வது, விதவைக் கோலத்தில் (இத்தா) இருக்கும் காலத்தை ஒழிப்பது, மற்றும் புரட்சிகரமாகவும் போர்புரிவாகவும் கருதப்படும் இன்னபிற முன்மொழிதல்களும் அல்லாஹ்வின் விதிகளின் மீது தயாரிக்கப்பட்ட மற்றும் வேண்டும் என்றே தொடுக்கப்பட்ட போராகும் என்பதை தெளிவு படுத்துகிறோம்…

இந்த குழுவின் காரியமானது “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதாக” கூறி, 2011ல் CEDAW ஒப்பந்தத்திலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தியது மற்றும் 2017ல் ஓரினச்சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை அனுமதிக்கும் சட்டங்களை அங்கீகரித்தது போன்று மேற்கத்திய சொல்லிற்க்கு இணங்க செயல்படுத்தப்படும் தொடர் காரியங்களில் ஒன்றாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆதலால் நாங்கள்:

அவர்கள் செயல்படுத்த விரும்பும் இந்த குற்றச்செயலானது மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறோம்; அது அவர்களுடைய மதத்திற்கு அடிப்படையாக உள்ள கொள்கைக்கும் ஷரீ’அத்திற்கும் முரணானதாக உள்ளது மேலும் அதனை மறுத்தோ அல்லது அது குறித்து தவறான விளக்கத்தையோ அளிப்பதென்பது அதன் மீது புரியும் அத்துமீறலாகும் அதனை இந்த முஸ்லிம் தேசத்தில் உள்ள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அல்லாஹ்வின் விதிகளை மீறும் இந்த குழுவின் முன்மொழிதல்களை நாம் எதிர்கொள்வோம் எனவும், மேலும் இதுபோன்ற சட்டங்களை எதிர்ப்பதற்கும் அதனை உம்மத்தின் கொள்கையிலிருந்து வெளிவந்துள்ள சட்டங்களை கொண்டும், ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வாக்களித்ததை போன்று நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான நேர்வழி பெற்ற கிலாஃபத்தின் நிழலின் கீழ் பெண்கள், குடும்ப மற்றும் ஒட்டுமொத்த உம்மத்தின் அந்தஸ்தை மறுசீரமைக்கும் ஆட்சியமைப்பை கொண்டும் மாற்றியமைக்க பாடுபட வேண்டும் என்றும் உங்களை ஊக்குவிக்கிறோம்.
அல்லாஹ் ﷻ கூறுகிறான்:

﴿أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِّقَوْمٍ يُوقِنُونَ﴾

“அறியாமைக்காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?”
(அல்குர்ஆன் : 5:50)

Comments are closed.