சமீப பதிவுகள்

புரட்சிகள் நடைபெறுவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் கிலாஃபத் இருப்பது கடமையானது…!!!

இஸ்லாமிய சட்டங்களை (ஷரீ’ஆ) நடைமுறைப்படுத்துவதையும் இஸ்லாமிய அழைப்பை உலகெங்கிலும் ஏந்திச்செல்வதையும் உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவான தலைமையாக இருக்கக்கூடிய கிலாஃபத்தை நிறுவுவதையும் அல்லாஹ் ﷻ நம் மீது கடமையாக்கி இருந்தாலும், ஒரு கலீஃபா இல்லாமல் மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்க முடியும் என்றும், அதற்கு மேல் இருப்பதற்கான அனுமதியை ஷரீ’ஆ நமக்கு அளிக்க மறுத்திருந்த நிலையில், நாம் இப்போதுவரை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயரிடம் இருந்து வந்த மனிதனின் மூளையிலிருந்து உருவான மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மதசார்பின்மையால் ஆளப்பட்டும், அதேவேளையில் நமது அன்றாட வாழ்வில் அல்லாஹ் ﷻ வுடைய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையிலும் வாழ்ந்து வருகிறோம்.

ஓ முஸ்லீம்களே…!!!

கலீஃபா ஒருவரை நியமிப்பது உலகின் அனைத்து நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் மீது கடமையாகும். அதனை நிறுவுவது என்பது ஒரு கடமையாகும் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடையாது. தொழுகை, ஜகாத் மற்றும் இதர கடமைகளை போன்று அதை புறக்கணிப்பது என்பது அல்லாஹ் ﷻ வின் கடுமையான தண்டனையை பெற்றுத்தரும் மாபெரும் பாவங்களில் ஒன்றாகும். இந்த கடமையானது அஷ்-ஷாம் அல்லது முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட இதர புரட்சிகளுக்கும் எவ்விதமான தொடர்பையும் கொண்டது அல்ல, மாறாக அது அந்த புரட்சிகள் நடைபெறுவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயக் கடமையாகும். இது கடமைகளில் மகத்தான காரியமாகும், அதேபோல் இது கடமைகளின் கிரீடமாகும்.
கிலாஃபத்தை நிறுவும் கடமைக்கான ஆதாரங்கள் குர்’ஆன், சுன்னா மற்றும் இஜ்மா அஸ்- சஹாபா (சஹாபாக்களின் ஒருமித்த கருத்து) வில் உள்ளன.

குர்’ஆனிலிருந்து இதற்கான ஆதாரம், ரசூலுல்லாஹ் ﷺ வை குறிப்பிட்டு அல்லாஹ் ﷻ கூறுகிறான்:

﴿فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ﴾

“ஆகவே (நபியே!) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்.”
(அல்குர்ஆன் : 5:48)

மேலும் அல்லாஹ் ﷻ கூறுகிறான்:

﴿وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ﴾

“(நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள்.”
(அல்குர்ஆன் : 5:49)

சுன்னாவிலிருந்து இதற்கான ஆதாரம், நாஃபி’யிடமிருந்து முஸ்லிம் அறிவித்ததாவது: ரசூலுல்லாஹ் ﷺ கூறியதை தான் செவியுற்றதாக உமர் அவர்கள் என்னிடம் கூறினார்கள்:  «مَنْ خَلَعَ يَدًا مِنْ طَاعَةٍ، لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ لَا حُجَّةَ لَهُ، وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ، مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً»“எவரேனும் தமது   கழுத்தில்  (கலீஃபாவின்)   பைஅத்   இல்லாத நிலையில்  மரணம் அடைவாரேயானால்  அவர்  ஜாஹிலிய்யத்தின் மரணத்தை அடைந்தவராவார்”   (இப்னு உமர் (ரலி), முஸ்லிம்)

கலீஃபாவின் பைஅத்தை  கழுத்தில் பெற்றிருப்பதை (கலீஃபாவிற்கு பைஅத் செய்வதை)  ஒவ்வொரு முஸ்லிமிற்கும்  அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கட்டாயமாக்கி  இருக்கிறார்கள். கலீஃபா ஒருவர் இருக்கும் பட்சத்தில் மட்டும் தான் ஒருவர் கழுத்தின் மீது பைஅத்தை கொண்டிருக்க முடியும், அந்த பைஅத்தானது கலீஃபாவுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.
ரசூலுல்லாஹ் ﷺ கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அல்- அ’ராஜ் அவர்களும், அல்- அ’ராஜ் அவர்களிடமிருந்து முஸ்லிம் அறிவித்ததாவது: «إِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ، يُقَاتَلُ مِنْ وَرَائِهِ، وَيُتَّقَى بِهِ» “இமாம் என்பவர்  கேடயம்  ஆவார்.  அவர்  பின்னால் நின்று (மக்கள்) போர்புரிவார்கள். இன்னும் அவரைக்கொண்டே தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்”

சஹாபாக்களின் ஒருமித்த கருத்தை பொறுத்தவரை, அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக, இறைத்தூதர் ﷺ அவர்களின் மரணத்திற்குப் பின்னர் கலீஃபா ஒருவரை  நியமிக்கவேண்டும் என்பதில் அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்த கருத்து  (இஜ்மா) கொண்டிருந்தார்கள். இதனடிப்படையில் அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களை தேர்வு செய்தார்கள், பின்னர் உமர் (ரலி), பின்னர் உஸ்மான் (ரலி), பின்னர் அலீ (ரலி) என ஒவ்வொருவர் இறந்த பின்னர் அடுத்தவரை கலீஃபாவாக நியமித்தார்கள். இறந்தவர்களை தாமதமின்றி அடக்கம் செய்வது  ஃபர்ளு என்ற போதும், இறைத்தூதர் ﷺ அவர்களை நல்லடக்கம் (தஃபன்) செய்யவேண்டியது  கட்டாயம் என்ற போதும்,  அந்தப்பணி முழுமையாக   முடிவடைவதற்குள்   வேறுபணியில் ஈடுபடுவது ஹராம்  என்றபோதும்,  ஸஹாபாக்கள் கலீஃபாவை தேர்வுசெய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள். அவர்களின்  உடலை தஃபன் (நல்லடக்கம்) செய்வதை தாமதப்படுத்தி,  தங்களுக்குள்  ஓர் அமீரை நியமனம் செய்ய முயற்சித்த  செயல், கலீஃபாவை நியமனம் செய்வது கட்டாயக்கடமை என்ற ஸஹாபாக்களின் இஜ்மா மூலம் அழுத்தமான  முறையில் வெளிப்படுகிறது. கிலாஃபத்தை நிலைநாட்ட வேண்டிய மகத்தான கடமை தான் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை இரண்டு முழு இரவுகளுக்கு தாமதப்படுத்திய நிலையில் கலீஃபா ஒருவரை நியமனம் செய்யும் காரியத்தில் ஈடுபட செய்தது.
சஹாபாக்கள் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதிலும் கலீஃபா இருக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்தை கொண்டிருந்தனர், சில சமயம் யார் கலீஃபாவாக வர வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமை கொண்டிருந்தாலும், அது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுடைய மரணத் தருவாயில் ஆகட்டும் அல்லது எந்தவொரு கலீஃபாவின் மரணத் தருவாயில் ஆகட்டும் அவர்கள் ஒருபோதும் கலீஃபா ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததில்லை. அது உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு மரணத்தருவாயில் இருந்த போது நடைபெற்றவையும் நமக்கு தெளிவாக காட்டுகிறது, உமர் (ரலி) மூத்த ஸஹாபாக்களில் உஸ்மான்  இப்னு அஃப்ஃபான்(ரலி), அலீ இப்னு அபூதாலிப்(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஃதுஇப்னு அபீவக்காஸ்(ரலி), ஜுபைர்(ரலி), தல்ஹா(ரலி) என ஆறு பேர் கொண்ட குழுவை நியமித்தார்கள், மூன்று நாட்களுக்குள் கலீஃபாவை நியமிப்பதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் கருத்துவேற்றுமைக்கு காரணமானவர்கள் கொல்லப்படவேண்டும் என்ற உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். மேலும் அபூ தல்ஹா அல்-அன்சாரி அவர்களுடைய தலைமையில் ஐம்பது நபர்களை நியமித்து கலீஃபா நியமனத்தில் கருத்துவேற்றுமைக்கு காரணமானவர்களை கொல்வதற்கு ஆணையிட்டார்கள்.

ஓ அஷ்- ஷாமிலுள்ள முஸ்லிம்களே…!!!

கிலாஃபத் வீழ்த்தப்பட்ட நாளிலிருந்து, குஃப்பாரிய காலனியாதிக்கவாதிகளின் நேரடி ஆக்கரமிப்பின் கீழும், அதனோடு முஸ்லிம்களுக்கு எதிராக தங்களுடைய காலனியாதிக்க எஜமானர்களை காட்டிலும் அதிக அளவிலான அடக்குமுறையை பிரயோகித்து வரும் கைப்பாவை ஆட்சியாளர்களின் கீழும், மேலும் தங்களுடைய முன்னோர்களின் பாதையை பின்பற்றிச் செல்லும் குழுக்களின் தலைவர்களை கண்டவாறும் நாம் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகிறோம். உண்மை என்னவென்றால் நாம் கிலாஃபத்தை கொண்டிருந்தோமேயானால் இந்த பயங்கரமான முதலாளித்துவம் முஸ்லிம்களையும் மனித குலத்தையும் இந்த ஒரு நூற்றாண்டுக்கு மூழ்கடித்திருக்காது.

ஓ அஷ்- ஷாமிலுள்ள முஸ்லிம்களே…!!!

இந்த புரட்சியின் வெற்றியும், மேலும் அஷ்- ஷாமுடைய கொடுங்கோலனையும் மேலும் முதுகெலும்பில்லாத பகை உள்ளம் கொண்ட அதன் மதசார்பற்ற அரசை வெற்றிகரமாக அப்புறப்படுத்துவதற்கு நாம் அல்லாஹ் ﷻ விடம் திரும்ப செல்வதும், வெற்றியையும் அவனிடம் நாடுவதும், உதவியும் ஆதரவும் அவனிடமிருந்து வருவது மட்டுமே, மற்றும் அவனுடைய ஏவல்களை புரிவதும் அவன் விலக்கியதிலிருந்து விலகியிருப்பதும் தவிர்க்க முடியாததாகும். குறிப்பாக உலகம் முழுதும் நம்மை தாக்கிய பிறகும், நாம் கூறுகிறோம்: அல்லாஹ் ﷻ வை தம் புறத்தில் கொண்டிருப்பவருக்கு எதிராக நிற்கக்கூடிய சக்தி எவரிடம் உள்ளது? மேலும் அல்லாஹ் ﷻ வை தம் புறத்தில் கொண்டிருக்காதவருக்கு ஆதரவாக நிற்கக்கூடிய சக்தி எவரிடம் உள்ளது? ஹிஸ்புத்தஹ்ரீரில் நாங்கள் அல்லாஹ் ﷻ வுக்கு மட்டுமே அஞ்சி உண்மையை கூறியவர்களாக நமது உம்மத்தின் மக்களுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாக தொடர்ந்து இருப்போம். ஆகவே, இதன் காரணமாக நாங்கள் எப்போதும் அலைகடலென கேள்விகள், அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம், கடந்த முறை நாம் நடத்திய இத்லிப் ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு மதசார்பின்மைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது நாம் காணும் இறுதி தாக்குதல் கிடையாது. எனினும், இது அல்லாஹ் ﷻ வின் கருணையால் நமது பலத்தையும் உறுதியையும் அதிகரிக்கத் தான் செய்திருக்கின்றது, மேலும் நாம் சத்தியத்தை மேலும் பற்றிப்பிடித்தவர்களாகவும், வெற்றியையும் அதிகாரத்தையும் அளிப்பதாக அல்லாஹ் ﷻ அளித்த வாக்குறுதியை நினைத்து இன்பமுற்றவர்களாகவும் இருக்கின்றோம்.

ஓ அஷ்- ஷாமுடைய மக்களே…!!!

ஒருங்கிணைந்து வாருங்கள் வந்து உங்களுக்கிடையே நபித்துவ வழிமுறையில் கிலாஃபத்தை நிறுவுவதற்கு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் உங்களுடைய இறைவனிடத்தில் அவனை மட்டுமே வணங்குவதற்கும் அவனுடன் வேறு எதனையும் கூட்டுச் சேர்த்து வணங்குவதிலிருந்து தவிர்ந்திருக்கவும் மேலும் அவனுடைய சட்டங்களை நிலைநாட்டுவதற்கும் அவனை ﷻ தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருப்பதற்கும் உறுதிமொழி ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் ﷻ மட்டுமே இறையாண்மையின் அதிபதி, தான் நாடுபவர்களுக்கு அவன் இறையாண்மையை வழங்குகிறான் மற்றும் அவன் நாடுபவர்களிடமிருந்து இறையாண்மையை பறித்தும் விடுகிறான்.

﴿عَسَى رَبُّكُمْ أَنْ يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ﴾

“உங்களுடைய இறைவன் உங்களுடைய எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும். உங்களுடைய நடத்தை எவ்வாறு இருக்கின்றது என்பதை அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்” என்று கூறினார்.

(அல்குர்ஆன் : 7:129)

Comments are closed.