சமீப பதிவுகள்

ஆப்கானிஸ்தானில்  அமெரிக்கப் இருப்பை சட்டபூர்வமாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள்  எங்களுக்கு வேண்டாம்…!!!

செய்தி:-

ஜூன் 12, 2018 அன்று, பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் (chief of army staff general-CAOS) கமர் ஜாவிட் பஜ்வா, ஆப்கானிஸ்தானுக்கு அதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் தனது காபூல் பயணத்தின்போது பஜ்வா பேச்சுவார்த்தை செய்தார். CAOS சமீபத்தில், சமாதான முன்னெடுப்புகளில் ஆப்கானிய அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார், குறிப்பாக புனித மாதமான ரமாதானைப் பொறுத்தமட்டில், அந்த நடவடிக்கைகள் இன்னும் நிரந்தரமாக அதிகரித்து, இறுதியாக ஒரு உறுதியான சமாதானத்திற்கு வழிநடத்தும் என்று  விரும்புகிறோம் என்பதாக கூறினார்.காமன்வெல்த் மாநாட்டில் பேசிய ஜெனரல் ஜான் நிக்கல்சன், அமெரிக்கா / நேட்டோ படைகள் வெற்றிபெற்று, அமைதியான, உறுதியான ஆப்கானிஸ்தானை உருவாக்குவதை பாகிஸ்தான் விரும்புகிறது என ISPR குறிப்பிட்டது.

கருத்து:-

ஆப்கானிஸ்தானில் சில ஆயிரம்  முஜாஹிதீன் கைகளில் அமெரிக்காவின் தோல்வியும், அவமானமும் ஒரு தெளிவான நீல வானில் சூரிய ஒளியின் பிரகாசத்தை போல தெளிவாக இருக்கிறது.தொடர்ச்சியான அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, வாஷிங்டன் ஆப்கானிய எதிர்ப்பான தாலிபான்களை, அமெரிக்கா தன்னுடைய  கைப்பாவை ஆட்சியை ஏற்க கட்டயப்படுத்தும் விஷயத்தில் தோல்வியடைந்துள்ளது. கட்டாயமாக்கி தோல்வியடைந்தது. ஆப்கானிய எதிர்ப்பை (தாலிபான்களை) பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா தனது பாகிஸ்தானின் இராணுவ தலைமையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.இந்த பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசியல் தீர்வுக்கும், ஆப்கானிஸ்தானில் ஒரு நிரந்தரமான அமெரிக்க இருப்பை சட்டபூர்வமாக்குவதற்கு இது உதவும்.எவ்வாறிருந்த போதினும், அமெரிக்கா தனக்கு மிகவும் அவசியமானது என்று எதை கருதுகிறதோ அதை அடையவில்லை.டிரம்ப்பின் 2018 ஆம் ஆண்டின் முதல் ட்வீட்டில் இது வெளிப்படையானது, அதில் அவர் அறிவித்தார் “கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அவர்கள் எங்கள் தலைவர்களை முட்டாள்களாக எண்ணுகொண்டு  எங்களுக்கு பொய்களையும் ஏமாற்றத்தையும் தவிர வேறொன்றும் தரவில்லை, ” மிகச் சிறந்த முயற்சிகள் இருந்த போதினும், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமை அமெரிக்க நோக்கங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று இந்த ட்வீட் தெரிவிக்கிறது.

ஆயினும்கூட, பாகிஸ்தானின் அரசியல் மற்றும் இராணுவ தலைமைகள் அமெரிக்க நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சிகளையே தொடர்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அணுகுமுறையை அமெரிக்காவுக்கு வழங்கிய விஷயம்  பற்றி முஸ்லிம்களிடம் புகார் செய்யும் அதே வேளையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இருப்பை தக்கவைத்து பாதுகாக்க  ஒரு அரசியல் தோற்றத்தை கொடுக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.உண்மையில், ஆப்கானிய மண் இந்தியா மற்றும் ஏனைய பாகிஸ்தானிய எதிர்ப்பு சக்திகளால்  அமெரிக்க ஆதரவின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக
ஒரு வான்வெளி (ட்ரோன்) தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் உள்ள  TTP இன் ஒரு முக்கிய தலைவர் சமீபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே, அரசியல் மற்றும் இராணுவத் தலைமை பாகிஸ்தானை பாதுகாப்பதில் நேர்மையாக இருந்திருந்தால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இருப்பை ஒருங்கிணைப்பதற்கான  முயற்சிகளில் அவர்கள் ஒருபோதும் பணியாற்றி ஆதரித்திருக்க மாட்டார்கள். கொடூரர்களின் (சிலுவையுத்தகாரர்களின்) வெற்றியை விரும்பும் விஷயத்தை வெளிப்படையாக காட்டாமல், மாறாக நேர்மையான தலைமை என்பது ஆப்கானிய எதிர்ப்புடன் சேர்ந்து இந்த பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கு கைகோர்த்திருக்கும்.

சமாதானமும் பாதுகாப்பும் அமெரிக்க முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் ஒருபோதும் எட்டப்பட முடியாது. நம்முடைய பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மை மற்றும் அழிவுக்கான மூல காரணமான அமெரிக்காவை நம்முடைய பிராந்தியத்தில் இருந்து  வெளியேற்றுவதன் மூலம் மட்டுமே அது உறுதி செய்யப்பட முடியும். உலகின் ஆறாவது மிகப்பெரிய இராணுவம் மற்றும் ஒரு அணுசக்தி ஆயுதங்களை உடைய நாட்டின் தளபதி ஜெனரல் (COAS),  வெளிப்படையாக அமெரிக்க வெற்றிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் செயல் மிக வருத்தம் அளிக்கிறது. சமாதானமும் பாதுகாப்பும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளை வலுப்படுத்துவதன் மூலம் அடைய முடியாது.இல்லை! இல்லை! அமைதி மற்றும் பாதுகாப்பு எதிரிகளை எதிர்கொள்வதன் மூலமாக
மட்டுமே  பாதுகாக்கப்படும்.

அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

ٱلشَّهْرُ ٱلْحَرَامُ بِٱلشَّهْرِ ٱلْحَرَامِ وَٱلْحُرُمَٰتُ قِصَاصٌۚ فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْۚ وَٱتَّقُوا ٱللَّهَ وَٱعْلَمُوٓا أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ

(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்கு புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு  ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(2:194)

எனவே, தீர்க்கதரிசன முறையின் வரவிருக்கும் கிலாஃபத்தின் கலீஃபா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வெற்றியின் விருப்பத்தை வெளிப்படுத்த மாட்டார்.அதற்கு பதிலாக, அவர் அல்லாஹ்வின் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவார், முஸ்லிம் இராணுவம் மற்றும் நேர்மையான முஜாஹிதீன்களுக்கு எங்கள் மண்ணிலிருந்து எதிரிகளை அகற்ற கட்டளையிடுவார். எனவே அதற்க்காக  நாம் தீவிரமாக உழைப்பு செய்ய வேண்டும்.

Comments are closed.