சமீப பதிவுகள்

அதிகமான பெண்களை பாரளுமன்ற உறுப்பினராக கொண்ட துருக்கியால் பெண்களுக்கு நீதி வழங்கும் அமைப்பை தர இயலாது…!!!

செய்தி :

ஜூன் 9 , 2018 பி.பி.சி வெளியிட்ட செய்தியில், கடந்த 81 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெண்களை அதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக துருக்கி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளிலும் பெண்கள் பிரிவு இருக்கின்றது, மேலும் தேர்தல் பிரச்சாரங்களில் அதிகமாக பெண்கள் பங்குபெறுகின்றனர். 1990களில் “டான்சு சில்லர்” துருக்கியின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி வகித்தார். இருப்பினும் அச்சமயம் பாராளுமன்றத்தில் குறைந்த பெண் உறுப்பினர்களே இருந்தனர்.

கருத்து :

சர்வதேச அளவிலுள்ள ஜனநாயகத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமஉரிமை மறுக்கப்படுகிறது. ஆண்கள் செய்யும் அதேவேளைகளுக்கு பெண்களுக்கு குறைந்த ஊதியமே கிடைக்கிறது, மேலும் பெண்கள் அதிகமான எண்ணிக்கையிலிருப்பினும் வேலையில் பதவி உயர்வு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். ஏப்ரல் 3 , 2018 , பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் பிரிட்டன் நாட்டிலுள்ள அதிகமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகுபாடோடு நடத்தப்பட்டுள்ளனர். எவ்வாறு அவர்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டு பாராளுமன்றத்திலும் கவனம் செலுத்த முடியும் எனும் கேள்விகளுக்கு உள்ளாகின்றனர். இன்னும் பாலியல் குற்றச்சாட்டுகளும் அதிகம் இடம் பெறுகின்றன”.

ஐரோப்பிய யூனியனிடம் போட்ட ஒப்பந்தம் படி தன்னுடைய எல்லைகளை அடைத்து அதிகமான எண்ணிகையில் தஞ்சம்புகுவதற்காக வரும் பெண்களையும் குழந்தைகளையும் வரவிடாமல் அடைத்துள்ளது. இந்த கொள்கை பாராளுமன்ற பெண்கள் எண்ணிக்கையால் மாறப்போவதில்லை. துருக்கி நாட்டில் பெருவாரியாக குடும்ப பிரச்சனைகள் உள்ளன மேலும் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் இந்த மத சார்பற்ற அரசியல் சட்டங்களால் ஏற்படுவன. பாராளுமன்றத்தில் நுழையும் பெண்கள் இந்த அமைப்பையே பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர், இதன் மூலம் இறை சட்டங்களை நிராகரிக்கின்றனர் எனவே பெண்களுக்கு உரிய கடமையை அவர்களால் செய்ய முடியாது.

கிலாஃபா அமைப்பு முறை மட்டுமே பெண்களுக்குண்டான இறைவனால் அருளப்பட்ட உரிமையை கொடுக்க முடியும். எனவே பதவியிலிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அர்த்தமற்றது, ஏனெனில் இஸ்லாமிய அமைப்பில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமே தவிர இயற்றப்படாது. அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
[ அல் குர்ஆன் 12 :40 ]

எனவே முஸ்லிம்களாகிய நாம் பெண்களின் எண்ணிக்கையெனும் இந்த பொய்யான அளவுகோலை விடுத்தால் மட்டுமே நம்மையும் மற்ற மனித சமுதாயத்தையும் இஸ்லாம் எனும் மிகப்பெரிய அமைப்பின் மூலம் உயர்த்த முடியும், இதில் பதவியில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் சரியே. இந்த அமைப்பு முறையே மக்களை முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும் ஏனெனில், இது முழுமையாக இறைவனால் அருளப்பட்ட சட்டம் , எனவே குறிப்பிட்ட உயரடுக்கு மக்களுக்கு சேவை செய்யாமல் உண்மையை பாதுகாத்து , மனித சட்டங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும்.

இம்ரானா முஹம்மத்

Comments are closed.