சமீப பதிவுகள்

செய்திப்பார்வை 22.06.2018

தலைப்புச் செய்திகள் 
1. ஐரோப்பாவில் முஸ்லீம் விரோத உணர்வு அதிகரித்து வருகிறது

2. வர்த்தக யுத்தம் அதிகரிக்க அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை குறைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

3. அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானை இன்னும் அறிவிப்பில் உள்ளது என்பதை நினைவூட்டுகிறார்.

செய்தி விவரம்:

1. ஐரோப்பாவில் முஸ்லீம் விரோத உணர்வு அதிகரித்து வருகிறது

இஸ்லாம், தங்கள் பார்வை மற்றும் கலாச்சாரத்துடன் ‘இணக்கமற்றது’ என்று
ஐரோப்பியர்கள் பெருமளவில் நம்புகிறார்கள் என்று ஒரு ஆய்வில் காட்டப்பட்டுள்ளது.  கிட்டதட்ட15 மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பொது மக்கள் தொகையில் 42% மக்கள், தமது மதிப்பு மற்றும் கலாச்சாரத்தில் இஸ்லாம் அடிப்படையிலேயே பொருந்தாது என்று ஒப்புக்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கிடையில், 17 சதவித ஐரோப்பியர்கள் ஒரு யூத நபரை தனது குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றனர். ஐரோப்பிலுள்ள கிருஸ்துவத்தை பின்பற்றுபவர்கள், பின்பற்றாதவர்கள் மற்றும் மத சார்பற்றவர்களுக்கிடையே மாறுபட்ட அரசியல் அணுகுமுறைகளை தெரிந்துக்கொள்ள Pew ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்பட்டது.

மொத்தம் 25,000 பேர் 2017 ஆம் ஆண்டு ஏப்ரலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை வாக்கெடுப்பு செய்தனர். கிருஸ்துவத்தை பின்பற்றுபவர்கள் குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை தேவாலயத்தில் செல்பவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது அனைத்து குழுக்களில் பெரும்பாலோர் மற்ற கலாச்சாரங்கள் மற்றும் மதங்களை ஏற்றுக்கொண்டதாகக் காட்டியபோதும், அதே சமயத்தில் கிருஸ்துவர்களில் சகிப்புத்தன்மை குறைவாக கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் தன் நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதிப்பு உயர்ந்தது என்று எண்ணுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

பிரிட்டனில், தேவாலயத்தில் செல்லும் 45 சதவிகிதம் கிறிஸ்தவர்கள், 47 சதவிகிதம் கிருஸ்துவத்தை பின்பற்றாதவர்கள் மற்றும் 30 சதவிகிதம் மத சார்பற்றவர்கள், “இஸ்லாம் அடிப்படையில் தங்களது மதிப்பு மற்றும் கலாச்சாரத்துடன் பொருந்தாது என்று கூறியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

பிரான்சில், தேவாலயத்தில் கலந்துகொள்ளும் கிருஸ்தவர்களின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அல்லது 72 சதவீதம், பிரஞ்சு மூதாதையர் ‘உண்மையில் பிரெஞ்சு’ ஆக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒப்புக்கொண்டனர்.மேலும், 52% பின்பற்றாத கிருஸ்துவர்களும், 43% மதசார்பற்றவரும் இதே விஷயத்தை ஒப்புக்கொண்டனர்.
2.3 மில்லியன் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைந்த பின் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று ஐரோப்பிய எல்லை கட்டுப்பாட்டு நிறுவனம் Frontex கருத்துப்படி தெரியவந்துள்ளது.

ஜெர்மனி மற்றும் இத்தாலி உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றங்களுக்கு எதிரான பின்னடைவு மற்றும் தேசியவாத அரசியல் கட்சிகள் ஆதரவைப் பெற்றுள்ளன.
பன்முக கலாச்சாரம் கொண்ட அசௌகரிய உணர்வுகள் மேற்கு ஐரோப்பிய சமுதாயங்களில் வெளிப்படையாக உள்ளன, “என்று ஆராய்ச்சியாளர்கள் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவின் எல்லைகளை முஸ்லிம்கள் நுழையாமல் இருக்க அவை மூடுவோம் என்று மக்களிடம் கூறி அவர்களை ஆர்வமூட்டி வாக்குகளை பெற தீவிர வலதுசாரி வேட்பாளர்கள் பிரச்சாரங்கள் விடுக்கின்ற மேற்கு ஐரோப்பாவில் உள்ள யூதர்களைப் பற்றிய மனப்பான்மை பற்றி இந்த அறிக்கை கேள்வி எடுத்தது எடுத்துக்காட்டாக, மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இத்தாலியில் 36 சதவீதம் மக்கள் யூதர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதைப் பெரிய பிரச்சனைப் போல் பரப்பிக்கொண்டிருக்கின்றனர், என்று இந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டனர். அதேப் போன்று சுவீடனில் 11% மக்களும் ஒப்புக்கொண்டனர். இத்தாலியில் உள்ள அனைத்து பதிலளித்தவர்களில் நாளில் ஒரு பங்கு கிருஸ்துவர் மற்றும் மதபின்பற்றாதவர்கள் ஒருங்கிணைந்து ஒரு யூதரை குடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினர். இதே பதில் பிரிட்டனில் 23%, ஆஸ்திரியாவில் 21% மற்றும் ஜெர்மனியில் 29% காணப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லீம்களை எதிர்ப்பது யூத எதிர்ப்புக்கு மேலானதாக உள்ளது. ஒரு முஸ்லிமை குடும்ப உறுப்பினராக அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டதற்கு, இத்தாலியில் 43% ,, பிரிட்டனில் 36%, ஆஸ்திரியாவில் 34%, மற்றும் ஜெர்மனியில் 33% ஏற்கமுடியாது என்றனர்.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் ”முஸ்லிம் பெண்கள் தங்களை மறைத்து அணியும் புர்கா போன்ற ஆடைகளை அணிய தடை செய்யப்பட வேண்டுமா” என்று விவாதிக்கப்பட்டது. இதற்கு இத்தாலியில் 30%. பெல்ஜியத்தில் 28%, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் 24% மக்கள் தடை செய்யவேண்டும் என்று பதிலளித்தனர்.

மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 15 நாடுகளில், 22 சதவீத மக்கள் இந்த இருந்தது. முஸ்லீம் பெண்கள் தங்கள் முகங்களை மறைக்காத வரை, மதச்சார்ந்த ஆடைகளை அணிந்துக்கொள்ளலாம் என்று பதிலளித்தனர். இந்த கணக்கெடுப்பில் 2.7யிலிருந்து 3.3 % வரை தப்புகள் இருக்கலாம் என்று Pew கூறியது. [ஆதாரம்: Daily Mail]

பல நூற்றாண்டுகளாக, ஐரோப்பா இஸ்லாமை எதிர்த்தது மேலும் ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கும் அனைத்து முயற்சிகளையும் தவிர்த்தது.

தற்போதைய கருத்து கணிப்பு, ஐரோப்பியர்கள் இஸ்லாமை நோக்கி தீமை, மதவெறி மற்றும் தீவிர வெறுப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படுகின்ற தங்கள் இயல்பான நிலைகளில் திரும்பி வருகிறார்கள் என்று குறிக்கின்றது.

2. வர்த்தக யுத்தம் அதிகரிக்க அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை குறைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

 சீனத் தொழில்துறை செயல்களை முன்வைத்து வியாழனன்று ராய்ட்டர்ஸ் அறிவித்த செய்தியில், தற்போதைய வர்த்தக அழுத்தங்களின் காரணமாக அமெரிக்காவிலிருந்து வரும் எண்ணெய் மீது போடப்பட்ட இறக்குமதி கட்டணத்தைத் தவிர்க்க, சீன எண்ணெய் வாடிக்கையாளர்கள் வரும் செப்டம்பரிலிருந்து அமெரிக்க எண்ணெயை வாங்குவதை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

சீன பொருட்கள் மீது புதிய கட்டணத்தை அமெரிக்கா விதிக்க உள்ளது என்று டொனால்ட் டிரம்ப் கூறியதுடன், அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்பு இறக்குமதிகளில் 25 சதவிகிதம் இறக்குமதி வரி அதிகரிக்க சீனா அச்சுறுத்தியது. இதனால் கடந்த சில நாட்களிலிருந்தே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக பதட்ட நிலை அதிகரித்து வருகின்றது. கச்சாப் பொருட்களை ஏற்றுமதியின் தொலைவு, தூரத்தின் காரணமாக வழக்கமாக முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கு முன்பே அமெரிக்க எண்ணெய் சரக்குகளை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆர்டர் செய்வதை வரும் செப்டம்பரிலிருந்து தவிர்க்க கவனம் செலுத்துகின்றனர். அதேப்போன்று ஆசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சீனாவின் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் வாடிக்கையாளரான சீன அரசு நிறுவனத்தின் சினோபெக்கின் ஒரு உயர் வர்த்தக நிர்வாகி ராய்ட்டர்சிடம் (Reuters) கூறும்போது, ஜூலை மாத ஏற்றுமதிக்கு அதன் வழக்கமான தொகுதிகளை வைத்துள்ளது, ஆனால் காலப்போக்கில் முன்பதிவுகளுக்கு உறுதியளிக்க முடியாது என்று கூறினார். எதிர்கால கொள்முதல் (ஆகஸ்ட் ஏற்றுமதியில் இருந்து) முன்னேற்றங்கள் சார்ந்து இருக்கும், “என்று நிர்வாகி குறிப்பிட்டார்.

கனடாவுக்கு பிறகு சீனா தான் அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் வாங்கும் வாடிக்கையாளர் ஆகும் என்று EIA தரவு காட்டுகிறது.கடந்த ஆறு மாதங்களில் இரண்டு மாதங்களின் அமெரிக்க ஏற்றுமதி தரவில், சீனாவிற்கு அமெரிக்க ஏற்றுமதிகள் அக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 ல் கனடாவின் ஏற்றுமதி அளவை விட அதிகமாகும். ராய்ட்டர்ஸுடன் பேசிய சினோபெக்கின் ஆதாரங்களின்படி, அமெரிக்க எண்ணெய்க்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது சீனாவுக்கு சுலபமானது என்று செய்தியும் மறுபுறத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை குழுவான வூட் மேக்கென்சீயின் ஆய்வாளர்களின் கருத்துப்படி, “சீனாவைப் போல் ஒரு மாற்று சந்தை கண்டுபிடிக்க கடினமாக இருப்பதை அமெரிக்கா கண்டறிகிறது.” என்ற செய்தி கிடைத்துள்ளது. சீனாவின் தனியார் சுத்திகரிப்பாளர்கள் அமெரிக்க சரக்குகளை வாங்குவதற்கு பதிவு செய்ய கவனமாக இருக்கின்றன அவை மிகப்பெரிய வாடிக்கையாளர்களாக இல்லையெனறாலும், சில அமெரிக்க கச்சா எண்ணெய்கள் வழக்கமான தனியார் சுத்திகரிப்புக்கு பொருத்தமாக இல்லை என்ற காரணத்திற்காக.

பொதுவாக teapots என அறியப்படுகின்ற சீனாவின் சுயாதீன சுத்திகரிப்பாளர்கள் அடுத்த சில மாதங்களுக்கு அமெரிக்க எண்ணெய் விநியோகத்தை எதிர்பார்க்கவில்லை, என்று S & P Global Platts ஆய்வு சுட்டிகாட்டியது. “சீனா-அமெரிக்கவின் வர்த்தக யுத்தத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற நிலை, துறைகளின் கதவை மூடிவிட்டது,” என்று ஒரு பீஜிங் சார்ந்த கச்சா எண்ணெய் வர்த்தகர் Plattsயிடம் கூறினார். [ஆதாரம்:OilPriceCom]]

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக யுத்தம் ஒரு முழு அளவிலான யுத்தமாக மாறும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பக்கமும் இவை தேர்ந்தெடுக்கும் பொருட்கள் அதிகபட்ச சேதம் விளைவிக்கும் அளவில் உள்ளன. அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சீனாவின் நடவடிக்கை மூலோபாயமானது, இதனால், அமெரிக்காவுடன் மோதும் சீனாவின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

3. அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானை இன்னும் அறிவிப்பில் உள்ளது என்பதை நினைவூட்டுகிறார்.

அமெரிக்கா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முன்னேற்றத்தின் சில அறிகுறிகளைக் காட்டியும். பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பயங்கரவாதச் சரணாலயங்களை அகற்றப்பட வேண்டும் என்ற அறிவிப்பில் என்று அமெரிக்கா நினைவூட்டியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபர் உதவி துணை செயலாளர் அலைஸ் ஜி இந்த நினைவூட்டலை தெரிவித்தார். புதன்கிழமை அன்று காங்கிரஸ் விசாரணையில், வாஷிங்டன் பயங்கரவாதத்தை அகற்ற பாகிஸ்தானின் தேவையை பற்றி குறிப்பிட ஒருபோதும் தவறியதல்ல என்ற கருத்தை மீண்டும் வெல்ஸ் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் புத்தாண்டு தின செய்தியில், டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை கவனத்தில் கொண்டு கூறும்போது, அமெரிக்காவிடமிருந்து பில்லியன்கணக்கான டாலர்களை வாங்கிக்கொண்டு அதே நேரத்தில் கொல்லவேண்டிய பயங்கரவாதிகளை
அடைக்கலம் தருகிறது என்று குற்றஞ்சாட்டியது. இந்த கருத்தின் சில நாட்களுக்குப் பின் பாகிஸ்தானுக்கு இரண்டு பில்லியன் டாலரை விட அதிகமான பாதுகாப்பு தொகையை வாஷிங்டன் நிறுத்தி வைத்தது.ஆப்கானிஸ்தானில் தோல்வியுற்றதற்காக இஸ்லாமாபாத்தை குற்றம்சாட்ட வேண்டாம் என்று வாஷிங்டன் வலியுறுத்திய குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் நிராகரித்தது.
அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு பாகிஸ்தானைக் கைப்பற்றுவதற்கான கொள்கை வெற்றிகரமாக இல்லை என்று “ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க கொள்கை” பற்றிய வெளியுறவுக் குழுவின் சபைக்கு முன்பாக தன் சாட்சியத்தில் Ms வெல்ஸ் ஒப்புக் கொண்டார். சில நேர்மறையான மாற்றங்கள் பாகிஸ்தானிடம் இருந்தாலும், (டிரம்ப் நிர்வாகத்தின்) தெற்காசிய மூலோபாய அறிவிப்பின் பிறகு பத்து மாதங்கள் கடந்தும் பாகிஸ்தான் நாம் பார்க்க விரும்பும் நிலைத்த அல்லது தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதை நாம் இதுவரை பார்க்கவில்லை என்று அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ஒரு முக்கிய பங்கு மற்றும் சட்டபூர்வமான நலன்களை கொண்டுள்ளது என்றும், “எந்தவொரு சமாதான நடவடிக்கைகளின் போது இதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என அமெரிக்க விரும்புகிறது” என்றார். அமெரிக்க பாகிஸ்தானின் நலன்களைப் பற்றி மட்டும் அறிந்திருக்கவில்லை, மேலும் இஸ்லாமபாதுடன் அதன் அக்கறைக்கு உடன்பட்டு வேலை செய்ய தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தான் சமாதான முயற்சிகளுக்கு கூடுதலான உறுதியான ஆதரவை ஊக்குவிப்பதும் அதே நேரத்தில், பாகிஸ்தானுடன் இந்த கவலையைத் தீர்க்க பேச்சுவார்த்தைகள் நடத்தவும்” அமெரிக்காவின் நோக்கம் என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் முன்னோடிகள் எடுத்த அதே முடிவுக்கு டிரம்ப் நிர்வாகம் வந்துள்ளது என்று அவரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது – இது ஒரு விரும்பத்தக்க வெற்றிப்பெறாத யுத்தமாகும். [ஆதாரம்: Dawn]

வழக்கம் போல், அமெரிக்க ஆட்சியாளர்கள் போரை இழக்கும்போது மற்றவர் மீது குற்றம் சாட்டிகிறார்கள். இருப்பினும், பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள் இதை பயன்படுத்தி அமெரிக்க கோரிக்கைகளை நிராகரித்து அவர்களை வீழ்த்த முடியாத ஒரு பலவீன மனதைக் கொண்டுள்ளனர்.

Comments are closed.