சமீப பதிவுகள்

எரிவாயுவின் விலையேற்றமானது பொருளாதாரத்தை மேலும் மோசமடையச் செய்யும்…!!!

கிலாஃபத்தில் எரிவாயு பொதுச்சொத்தாக கருதப்படும் மேலும் பொருளாதாரத்திற்கு உதவும் வகையிலான விலையை கொண்டு அது விநியோகிக்கப்படும் எண்ணை மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் எரிவாயுவின் விலையை 46 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த ஆணையம் அடித்தட்டு பிரிவில் இருப்பவர்களான வீட்டு உபயோக மற்றும் வணிகத்தை மேற்கொண்டிருக்கும் நுகர்வோருக்கு 186 சதவீத அளவுக்கு எரிவாயுவின் விலையை ஏற்றுவதற்கும் இயந்திரத் தொழில், சிமெண்ட், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, எரிசக்தி மற்றும் வர்த்தக துறை போன்ற இதர துறைகளின் மீது 27 முதல் 31 சதவீத அளவுக்கு விலையேற்றுவதற்கும் தீர்மானித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் இவ்விரு பயன்பாட்டு பொருட்களிலிருந்து அதிக நிதி தேவைப்படுகின்றது என பரிந்துரைக்கப்பட்ட இந்த விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது மேலும் செயல்பாட்டில் இருக்கும் பல்வேறு திட்டங்களையும் இதர செலவினங்களையும் மனதில் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஹிஸ்புத்தஹ்ரீரின் பாகிஸ்தானிய விலாயா எரிவாயுவின் விலையேற்றத்தை கடுமையாக எதிர்க்கிறது மேலும் அதை முழுமையாக நிராகரிக்கிறது. ரூபாயின் மதிப்பை குறைத்ததின் காரணமாக ஏற்பட்ட பணவீக்கத்தினால் வீட்டுஉபயோக நுகர்வோர் அதிக சுமையை சுமந்து வரும் வேளையிலும் உள்ளீட்டு செலவு (அடக்க விலை) அதிகரிப்பின் மூலம் வெளிநாட்டு பொருட்களுடன் போட்டி போட முடியாத அளவுக்கு தங்களுடைய பொருட்களின் திறன் பாதிப்படைந்துள்ளதாகவும், உள்நாட்டு பொருளாதாரத்துக்கு இந்த எரிவாயுவின் விலையேற்றம் சிரமங்களை கொடுக்கும் என்றும் தொழில்துறையும் விவசாய துறையும் ஏற்கனவே குறை கூறி வருகின்றன. பாகிஸ்தானில் அது அரசியல் சார்ந்த அல்லது இராணுவ சார்ந்த அரசாங்கம் என தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் முதலாளித்துவ பொருளாதார காரணங்களை சுட்டிக்காட்டி எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலையை எப்போதும் உயர்த்தியே வந்துள்ளன. மேலும் 2018 தேர்தலுக்கு பின் யார் வந்தாலும் அவரும் இந்த பாரம்பரியத்தையே தொடர்வார் என்பதில் சந்தேகமேயில்லை ஏனெனில் அரசியல்வாதிகளானவர்கள் ஜனநாயகத்துக்கு வாதாடுபவர்களாக இருக்கின்றனர் மேலும் முதலாளித்துவத்தை தவிர வேறு எந்த செயலாக்க அமைப்பையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.

பாகிஸ்தானுடைய முஸ்லிம்களுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் கிலாஃபத்துடைய ஆட்சியமைப்பு தேவையுடையதாக இருக்கின்றது அது இஸ்லாமிய கட்டளைக்கு ஏற்றவாறு எரிவாயுவை பொது சொத்தாக அறிவிக்கும்.
ரசூலுல்லாஹ் ﷺ கூறினார்கள்,
«الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ الْمَاءِ وَالْكَلَإِ وَالنَّارِ»
“முஸ்லிம்கள் நீர், மேய்ச்சல் நிலம் மற்றும் நெருப்பு என மூன்று விஷயங்களில் பங்குதாரர்கள் ஆவார்கள்.” (அஹமது).

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ‘நெருப்பு’ என்பது தொழிற்சாலை, இயந்திரங்கள் மற்றும் ஆலைகளில் எரி பொருட்களாக உபயோகப்படுத்தப்படும் எரிவாயு மற்றும் நிலக்கரி என அனைத்து வகையான எரிசக்திகளையும் குறிக்கின்றது. ஆகவே இஸ்லாம் எரிவாயுவை பொது சொத்தாக அறிவித்து மக்களின் சார்பாக அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய அனுகூலங்களை மக்களுக்கு வழங்குவதற்கும் அரசின் மீது கடமையாக ஆக்கியுள்ளது.

ஆக, நபித்துவ வழிமுறையிலான கிலாஃபத்தானது எரிவாயுவை வீட்டு உபயோகத்திற்கும், வணிகத்திற்கும், தொழில்துறை மற்றும் விவசாயத்திற்கும் இவர்களின் மீது சுமையை ஏற்படுத்தாதவாறும் மாறாக பொருளாதார சக்கரத்தை வேகமாக சுழற்றும் வகையிலும் தயாரிப்பு பொருட்களின் உற்பத்தி செய்யும் செலவை குறைத்து அந்த பொருட்களின் போட்டித்திறனை அதிகரிக்க உதவும் வகையிலும் அதன் விலையை நிர்ணயித்து விநியோகம் செய்யும். ஆனால் இது ஜனநாயகத்தை ஒழித்து கிலாஃபத்தின் செயலாக்க அமைப்பை நிலைநாட்டினால் மட்டுமே நடைபெறும். இன்று கிலாஃபத்தை நிலைநாட்டுவது என்பது இஸ்லாமிய கடமையானது மட்டும் கிடையாது மாறாக அது பொருளாதாரத்தை அழிவிலிருந்து காப்பதற்கும் மீண்டும் அதை முன்னேற்ற பாதையில் செலுத்துவதற்கும் தேவையுடையதாக இருக்கின்றது. மேலும் நிச்சயமாக அல்லாஹ் ﷻ மற்றும் அவனுடைய தூதர் ﷺ அவர்களுடைய கட்டளைகளை பின்பற்றுவது நமது நல்வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கின்றது.

﴿إِنَّمَا كَانَ قَوْلَ ٱلْمُؤْمِنِينَ إِذَا دُعُوۤاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُواْ سَمِعْنَا وَأَطَعْنَا وَأُوْلَـٰئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ﴾

“எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் “நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்” என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இத்தகையவர்கள்தாம் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள்.”
(அல்குர்ஆன் : 24:51).

Comments are closed.