சமீப பதிவுகள்

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட உரிமை என்ற போர்வையில் உள்ள முதலாளித்துவம்…!!!

செய்தி :

சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானால் கட்டவிழ்த்து விடப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் பழமைவாத ராஜ்ஜியத்தில் பல அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வருகின்றன. இதில் பெண்களுக்கு கிடைக்கப்படும் சலுகைகள் மற்ற அம்சங்களைவிட முக்கியம் வாய்ந்ததாகும். இது ஏனெனில் கிட்டத்தட்ட பல சகாப்தங்களாக பெண்களை நடத்தும் விதத்தில் மற்ற உலகை விட சவூதி அரேபியா வேறுபட்டு இருந்து வந்துள்ளது.
தலை முக்காடுவிற்க்கு நடுவே பெண்களின் முடிகள் வெளியில் தெரிய ஆரம்பித்திருகின்றன. ஆண் பெண் பிரித்து வைக்கப்படும் இடங்கள் குறைந்திருகின்றன. பெண்களின் வாழ்க்கை விவகாரங்களில் வலுக்கட்டாயமாக நுழைவதை விட்டும் அரசு பின் வாங்கியிருக்கின்றது. ஜூன் 24 லிருந்து பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கபடுவார்கள், (Source: washingtonpost)

கருத்து:
சவூதி அரேபியாவின் ‘2030 தொலைநோக்கு’ என்ற திட்டத்தை அமெரிக்க கைப்பாவை முகம்மது பின் சல்மான் தொடங்கி வைத்ததிலிருந்து சவூதி அரசை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அதன் நலன்களை பதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர் எடுக்கக்கூடிய திட்டங்கள் முஸ்லிம் பெண்களையும் அவர்களின் தரங்களையும் சமூகத்தில் பாதிக்க கூடியதாக இருக்கிறது.
இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் சட்டங்கள் மூலம் எடுக்கப்பட்ட மனைவி மற்றும் தாய் என்ற முதன்மை பாத்திரங்களை இனி முஸ்லீம் பெண்கள் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக இளைய சமுதாயங்கள் (பெண்கள்) தாங்கள் வேலையை அடிப்படையாக கொண்ட ஒரு வாழ்க்கைமுறைக்கு மாறிகொண்டிருகின்றனர். அதிலும் குறிப்பாக 100 சதவீதம் வெளிநாட்டு உரிமைகளுக்கு திறந்திருக்கும் சில்லறை தொழில்களில் இவர்களின் எண்ணிக்கை கூடிவருகின்றது. இதன் விளைவாக, தொழிலாளர் சந்தையில் இளம் பெண்களின் பங்களிப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கும். தொழிலாளர் அமைச்சகத்தால் (the Ministry of Labor) வெளியிடப்பட்ட தரவு (Data) இந்த வியத்தகு போக்கை பிரதிபலிக்கின்றது. தனியார் துறையில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 2010 ல் 50,000 ஆகவும், 2014 ல் 400,000 ஆகவும் , 2017 ல் 600,000 ஆகவும் அதிகரித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகத்தின் முந்தய துணை அமைச்சர் அப்துல் வாஹித் அல் ஹுமைத் கூறுகையில் “வேலையின்மை பிரச்சனை பெண்கள் மத்தியில் தான் இருக்கின்றது…இதற்கு முக்கிய காரணம் சமூக பாரம்பரியமாகும்.. தொழில் அமைச்சகம் மட்டும் வேலையின்மை சிக்கலை தீர்க்க முடியாது… இதற்கு குடும்பங்கள், பள்ளிகள், தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகிறது” என கூறினார். முஸ்லிம் பெண்களை தொழில் சந்தைகளில் சேர்பதற்குண்டான சமூக பிரச்சாரத்தை குறிக்கும் விதமாக துணை தொழில் அமைச்சராக ஒரு பெண் அமர்த்தப்பட்டுள்ளார். . தமாதர் பின்த் யூசுப் அல் ரமா அரசின் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் முஸ்லிம் பெண்மணியாவார்.
சவுதி அரேபியா மற்றும் அதன் ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களின் இராஜதந்திரமின்மை அது அவர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக இருந்தாலும் சரி அல்லது பிரித்தானிய கைப்பாவைகளாக இருந்தாலும் சரி மேலும் அவர்களின் சுகபோக வாழ்க்கை, எண்ணை சார்ந்த பொருளாதாரம் போன்றவைகள் நாட்டையும் உம்மத்தின் சொத்தையும் திவாலாக்கி விட்டன. இதன் விளைவாக, பெண்கள் வேலைக்கு செல்ல இப்போது அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவளின் மதிப்பை பணம் சம்பாதிப்பதுடன் சமம் செய்கின்றனர். வீட்டு வேலை மற்றும் வெளிவேலை என்ற இரு சுமைகளையும் அவளிடம் செலுத்துகின்றனர். தாய்மைக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்துள்ளனர். பெண்களை அவர்களின் குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதை தடுக்கின்றனர். வருங்கால சந்ததிகளை வளர்த்தெடுக்கும், கல்வி போதிக்கும் முக்கிய பொறுப்பிலிருந்து அவர்கள் திசை திருப்பப்படுகின்றனர்,
எனவே, முதலாளித்துவம் பெண்களுக்கு விலை குறியிட்டை (price tag) பொருத்தியுள்ளது. இதனால் அவர்களை பொருளாதாரத்திற்கு அடிமைகளாக ஆக்கியுள்ளது. பணம் சம்பாரிக்கும் ஒரு பொருளாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர்.
MBS தலைமையில் நடத்தப்படும் சவூதி ஆட்சியின் கண்மூடித்தனமான கண்ணோட்டத்தாலும், அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய காலனியாதிக்கத்தாலும் சவூதி முஸ்லீம் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவர். சவூதி அரேபியாவின் முஸ்லீம் பெண்களுக்கு உண்மையான கண்ணோட்டமும் மற்றும் தீர்வும் நம் நேசத்திற்குரிய நபி (ஸல்) காட்டிய வழியில் தான் இருக்கின்றது. அதை நாம் திரும்ப கொண்டுவர வேண்டும், நபிவழியில் நேர்வழிபெற்ற கிலாஃபா ராஷிதாவை நாம் மறு நிர்மாணம் செய்ய வேண்டும்.
﴿أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىَ شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ﴾
“யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.” [9:109]

Comments are closed.